.

Sunday, December 24, 2006

(வால்) நட்சத்திரம்

(மீள்)அறிமுகம்
வலைப்பதிவு துவங்கி ஒரு வருடம் ஆகிறது. நூத்தி சில பதிவுகள், சில பரிசுகள், பல பாராட்டுக்கள், அப்பப்ப ஏச்சுக்கள் என வருடம் ஓடினதே தெரியவில்லை. தமிழ் பதிவுக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பதே மறந்துவிட்டது. நண்பர்
ஜோவின் உதவி மடல்களை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

முதலில் துவங்கியது ஒரு
ஆங்கிலப் பதிவு. ரெம்ப கஷ்டப்பட்டு அதில் சில பதிவுகள் அப்பப்ப போட்டுவிடுகிறேன். (அட பத்து பதிவத் தாண்டிடுச்சுங்க). அடுத்ததாக நான் அப்பப்ப நினைத்து வியப்புறும் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் துவங்கினேன். மொத்தம் 23 பதிவுகளே, ஆனாலும் எனக்கென்று ஒரு அறிமுகத்தை, அடையாளத்தை தந்த பதிவுகள். முட்டம் எனும் ஒரு கிராமத்தின் வெளிச்சத்தில் எனக்கு கொஞ்சம் பெயர் தேடிக்கொண்டேன் எனச் சொல்லலாம். தினமலரின் 'டாட் காம்' பக்கத்தில் இடம் கிடைத்தது. திரு செயமோகன் அவர்களின் மடலும், நண்பர்களின் பாராட்டும் மேலும் எழுதத் தூண்டியது.

அடுத்தது
பைபிள் கதைகள். அது துவங்கிய வேகத்தோடேயே முடங்கிக் கிடக்கிறது. அநியத்துக்கு டைம் கெடச்சா அத தொடரலாமுன்னு இருக்கேன்.

பத்தாம் வகுப்புக்குப் பின் நான் மறந்து, விட்ட தமிழ் என்னில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறதென்பது எனக்கு ஆச்சர்யமான விஷயம். இணைய எழுத்தாளர்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இன்றைக்கு பல நண்பர்களை இந்த வலைத்தளம் பெற்றுத்தந்துள்ளது. அனைவருக்கும் இந்த நடசத்திர மகிழ்ச்சியில் பங்குண்டு என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அறிவுஜீவிகள், உணர்வுக் கொழுந்துகள், நடுநிலை நாயகர்கள்.
வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட சமூக நிகழ்வை அல்லது சமூகவியல் கூற்றுக்களை விவாதிப்பவர்களை மேல் குறிப்பிட்ட மூன்று குறிச் சொற்களுக்குள் அடக்கிவிடலாம். இவர்கள் நடத்தும் ஒரு கற்பனை(?) உரையாடல்.

"அன்பு நண்பர்களே வணக்கம்."

"டேய் நீ என்ன ஜாதி, என்ன மதம். ஒன்னப்பத்தி தெரியாதா. ஒங்க அப்பா பாட்டங்காலத்துல... "

"அட இருப்பா அவர் வணக்கந்தானே சொன்னாரு."

"சில கலாச்சார விளைவுகளாலத்தான் இப்படி இவர் ஆயிட்டாரு. பல ஆயிரம் காலமாக மனிதம் எத்தனை மாற்றங்களைக் கண்டிருக்கிறது. எத்தனையோ பல உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறது பல பொய்கள் மெய்யாயிருக்கின்றன மெய்கள் பொய்யாயிருக்கின்றன. ஆண்டாண்டு காலமாக மனிதனின் மூளை சலவை செய்துவரப்படுகிறது."

"எங்க மூளை சலவை செய்து வெளுப்பாக வைக்கப்பட்டுள்ளது ஒங்க மூளைதான் வெளுக்காத அழுக்காயிருக்குது."

"இப்ப நீங்க ரெண்டுபேரும் எத வச்சிகிட்டு சண்டபோடுறீங்கன்னே தெரியல. சமாதானமா போங்க. ஹாப்பி கிறிஸ்மஸ்."

"கிறீஸ்மசா? கிறீஸ்துன்னு ஒருவர் பிறக்கவேயில்ல தெரியுமா? எல்லாமே புருடா... எல்விஸ் ப்ரஸ்லி இதப் பத்தி பக்கம் பக்கமா எழுதியிருக்கார். ராபர்ட் கென்னடி இதச் சொன்னதால கொல்லப்பட்டாரு. ஆதாம் ஏவாள் இருந்தாங்கன்னா நம்பலாம் ஆனா இயேசு கிறீஸ்து இருந்தார்னு நம்பும்படியா ஆதாரம் எதுவுமே இல்ல."

"என்ன சொல்றீங்க. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால வாழ்ந்ததாச் சொல்ற இயேசு இல்லைன்னு ஊர்ஜிதமாயிடுச்சா? அப்ப அதுக்கும் முன்னால இருந்த கடவுள்கதியெல்லாம் என்னவாகும்? மதம், கடவுளெல்லாம் நம்பிக்கை சம்பந்தமான விஷயமில்லையா? உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா அந்த விஷயம் பொய்யாத்தான் தெரியும்."

"அதத்தான் நாங்களும் சொல்றோம்ல? எங்க கடவுள் உண்மையில்லன்னு நீங்க சொன்னா உங்க கடவுளும் உண்மையில்லண்ணு நாங்க சொல்வோம்."

"இயேசு இருந்ததும் உறுதியாகல்ல, இல்லைங்கிறதும் உறுதியாகல்லன்னு வச்சுக்கலாமா?"

"அதெப்டி? திருச்சபை உலகத்த ஏமாத்தியிருக்குது. பல கலாச்சாரங்கள் அழிஞ்சிருக்கு."

"யோவ் மனுச வரலாத்துல எத்தனையோ கலாச்சாரங்கள யார்யாரெல்லாமோ அழிச்சிருக்காங்க். திருச்சபை ஒரு மத அமைப்பா மட்டுமில்ல மாபெரும் அரசியல் அமைப்பா இருந்துச்சு. இவுங்க செய்த ஆன்மீகத் தப்பையும் அரசியல் தப்பையும் போட்டு கொழப்பாதீங்க. இந்தியாவுலகூட பல கலாச்சாரங்கள் மதத்தின் பெயரால ஒண்ணாயிருக்கு."

"அப்ப திருச்சபை தப்பே செய்யலியா?"

"எத்தனையோ செஞ்சிருக்கு. பலதையும் திருத்தியிருக்கு. அவனவன் தப்ப அவனவனே திருத்திக்கட்டுமே?"

"அப்பாவி மக்கள ஏமாத்தி மதம் மாத்துறது சரியா?"

"யார யார் எந்த விதத்துல ஏமாத்துனாலும் அது தப்புத்தான்."

"அடுத்த மதமெல்லாம் சாத்தான் மதம்னு சொல்றது சரியா?"

"அது அவங்க நம்பிக்கை."

"அதத்தான் நாங்க எதிர்க்கிறோம். இயேசுவ எங்களுக்குப் பிடிக்கும் ஆனா ஏசு பேரால ஏமாத்துறவன கொளுத்துவோம்."

"டாப்பிக் ரெம்ப தெச மாறிப் போகுதே. ப்ளீஸ் இப்டி வெட்டியா பேசுறது வுட்டுட்டு கல்விக்கு ரூ60000 கேட்கும் பெண்ணுக்கு உதவுங்களேன்."

"கல்விக்கு 60000 ?அந்தப் பெண் படிக்கலியா?"

"எம் எஸ் ஸி படிச்சிருக்காங்க. உதவலைன்னா தற்கொல செஞ்சிருவாங்க."

"அடப் பாவமே. எங்க எப்ப யாருக்கு பணம் அனுப்புறது. தற்கொல செஞ்சாச்சா செய்யப் போறாங்களா? எப்டி எப்டி இது?"

"ஏன் இப்டி அவசரப் படுறீங்க? அவங்க ஏற்கனவே எம்.எஸ்.ஸி படிச்சிருக்காங்க எங்கையாவது வேல பார்த்துக் குடுங்க"

"யோவ் இப்போ அவங்களுக்குத் தேவ மீன் துண்டு. மீன் பிடிக்க அவங்களே கத்துக்குவாங்க."

"60000 வச்சு 60 பேருக்கு மீந்துண்டு தரலாமே?"

"என்னையா இவன். இவனத் திட்டி பதிவு போட்டத்தான் சரியாவான்போல."

"நீங்க சொல்ற லாஜிக்கும் புரியுதுங்க. எனக்கு ஒரு ஐடியா தோணுது. இந்தக் காச அந்தப் பொண்ணு கடனா வாங்கிக்கணும். அந்தக் கடன அது வேலைக்கு சேர்ந்ததும் முடிஞ்சவரை திருப்பித் தர முயற்சி செய்யணும், கொடுத்தவங்களுக்கில்ல, இன்னொரு ஏழைக்கு. இது நல்ல ஐடியா இல்ல?"

"யோசிக்கலாம்."

"போங்கையா உங்க லாஜிக்கும் நீங்களும். உதவி செய்யுங்க இல்லன்னா ஒதுங்கிப்போங்க."
இதுல யார் அறிவு ஜீவி யார் உணர்ச்சி பிழம்பு யார் நடுநிலமை நாயகம்னு நீங்களே முடிவுபண்ணிக்கங்க.

பட்டியல்
இதுவர நான் போட்ட சில பதிவுகள்ள உருப்படியான சிலத என்
100வது பதிவுல தொகுத்திருக்கேன் ஒரு எட்டு போய் முடிஞ்சா படிச்சுட்டு வாங்க. வார்ப்புருவுல ஏதோ தவறாயிடுக்கிறதால என்னுடைய சைட் பார் கீழ போயிடுச்சு (எக்ஸ்ப்ளோரர்ல) அதையும் போய் பாருங்க. 100வதுக்கப்பறம்போட்ட சில உருப்படியான பதிவுகள் கேழே பட்டியல் போட்டுள்ளேன்.

அமைதி அமைதி

புள்ளியியல் ராஜாவுக்கு பின்னூட்டம் வருமா?

உறவுகள்(சிறுகதை)

சுதந்திரம்

திண்ணையில் - தமிழோவியத்தில்

மான்ஸ்டர் - சிறுகதை

'திரவ'வாதமும் தீவிர சிரிப்பும்

நிலவில் நாளை..

லிஃப்ட் - சிறுகதை

இளையக் கன்னி

த'சாவு'தாரம்

தீட்டு

ஒருநாள் கழிந்தது.

சுவையான தகவல்

விடுதலை - சிறுகதை

விடுதலை

ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

மரணதண்டனைப் பதிவுகள்

தீபாவளி வாழ்த்துக்கள்

தேன்கூடு பெட்டகம்

சொர்க்கம் இலவசம்

இ.இ.ஆ முதல் பரிசு எனக்கே எனக்கே

பகுத்தறிவாளனுக்கான பதிவு

போக்கர் ஆடுவது எப்படி?

டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு...

சிரி சிரி கிறீஸ்மஸ்

ஆங்கிலம் பேசலாம் வாங்க!

வருத்தம்
விழாக்கால சலுகையில் தமிழ்மணம் நட்சத்திரமாக மதி முன்பே தேர்ந்தெடுத்திருந்தாலும், தமிழ்மணம் இதை உறுதிப்படுத்துவதில் பலத்த தாமதம் ஏற்பட்டுவிட்டது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம். இன்று ஆறு மணி அளவிலேயே எனக்கு அறிவிப்பு வந்தது. இந்த தாமத்திற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தபோதும் இதை இங்கே தெரிவித்தால் இந்தப் பதிவு ஏன் இப்படி அவசரத்தில் எழுதுனதுபோல இருக்குண்ணு நினைக்கிறவங்களுக்கு பதில் கிடைக்கலாம். தமிழ்மணம் குழு தந்த நட்சத்திர வாய்ப்புக்கு நன்றி.

வாழ்த்துக்கள்
கிறீஸ்துமஸ் பற்றி சிறப்பாய் ஏதாவது எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். அவசர பதிவானதால் இப்போதைக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். அதான் ஒரு முழு வாரம் இருக்கே இன்னும் நிறைய பேசுவோம்.

இப்பத்தான் சர்ச்சிலேர்ந்து திரும்பினேன்.

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

73 comments:

நாமக்கல் சிபி said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் அலெக்ஸ்..
இந்த நட்சத்திரம் சூரியனாய் வளர வாழ்த்துக்கள்

Anonymous said...

கிருஸ்மஸ் வாழ்த்துகள் சிறில்.

ramachandranusha(உஷா) said...

வாங்கைய்யா வாங்க :-)

Anonymous said...

கலக்குங்க சிறில், உங்க கிட்ட இன்னும் எதிர் பார்க்கிறோம்.

Anonymous said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சிறில்.. நட்சத்திர வாரத்திற்கும் :)

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சிறில்.

Anonymous said...

Alex,

Merry Christmas :)

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர நட்சத்திர வாழ்த்துக்கள் :)

Anonymous said...

நட்சதிரத்திற வாரம் சிறக்க
வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு / கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

Kanags said...

நத்தார் புதுவருட வாழ்த்துக்களுடன் சேர்த்து முக்கியமாக நட்சத்திர வாழ்த்துக்கள்!

கதிர் said...

வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ். இந்த வாரத்தை தேன் போன்ற சுவையான வாரமாக தாருங்கள்

டிபிஆர்.ஜோசப் said...

நட்சத்திர மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சிறில்..

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் சிறில்.

தமிழ்மண விண்மீன் வாரத்திற்கும் வாழ்த்துகள்.

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள் பல.

சிறில் அலெக்ஸ் said...

//வாங்கைய்யா வாங்க :-) //

அதான் வந்துட்டோம்ல...?
:)

சிறில் அலெக்ஸ் said...

//கலக்குங்க சிறில், உங்க கிட்ட இன்னும் எதிர் பார்க்கிறோம். //

இன்பா.. புரியுது..முதல் பதிவே சொதப்பிடிச்சுல்ல :)

சிறில் அலெக்ஸ் said...

//Merry Christmas :)//

Thank you

//லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர நட்சத்திர வாழ்த்துக்கள் :) //

அட! இதச் சொல்லிச் சொல்லியே மக்கள கவுத்துட்றீங்கப்பா

சிறில் அலெக்ஸ் said...

வெட்டிப்பயல், மு. கார்த்திக்கேயன், நிர்மல், பொன்ஸ், ஜோசப் சார், ராம், குமரன்,சுந்தர், கனக்ஸ், தம்பி, சேதுக்கரசி...நன்றி.

ramachandranusha(உஷா) said...

சிறில், சிலசமயம் வீட்டுல ஒண்ணுமே இருக்காது. இருப்பதை வைத்து காய்ந்துப் போன வெங்காயத்தை அரிந்துப் போட்டு, பழுத்துப் போன மிளகாயைக் கிள்ளிப் போட்டு குழம்பு வைப்போம்,. ஆனா சுவை, இதுப் போல சாப்பிட்டதே இல்லை என்று நற்சான்றிதழ் கிடைக்கும்.
ஆனால். வீட்டுக்கு வி.ஐ.பி வாராங்கன்னு பார்த்து பார்த்து சமைப்போம். எல்லா சாமான்கள் போட்டும் சுவை சுமாராகத்தான் வந்திருக்கும். எதுக்கு இவ்வளவு ராமாயணம் என்றால் காஷிவலாய் எழுதிய அறிமுகப் பதிவு நல்லாவே இருக்கு :-)

சிறில் அலெக்ஸ் said...

//அறிமுகப் பதிவு நல்லாவே இருக்கு :-) //

எல்லாரும் பார்த்துக்கிடுங்கப்பா.. உஷாகிட்டையே பாஸ்மார்க் வ்வாங்கிட்டேனுங்க.

:)

வஜ்ரா said...

வால் நட்சத்திரத்திற்கு வா"ல்"த்துக்கள்!!

ஜெயஸ்ரீ said...

கிறிஸ்மஸ் மற்றும் நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் சிறில்.

சிறில் அலெக்ஸ் said...

//வால் நட்சத்திரத்திற்கு வா"ல்"த்துக்கள்!!//
நன்றி வஜ்ரா.

நன்றி ஜெயஸ்ரீ.

மதுமிதா said...

(வால்) நட்சத்திர வாழ்த்துகள் சிறில்:-)

தருமி said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

கிறித்துமஸ் விழா வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எப்படி நம்ம 3 இன் 1 !!

G.Ragavan said...

வாழ்த்துகள் சிறில். கிருஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த நட்சத்திர வாரம் ஒங்களுக்குக் கிருஸ்துமஸ் பரிசுதான். இந்த வாரம் இனிய வாரமாக அமைய என்னுடைய வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் [GK] said...

சிறில் நட்சத்திரம் - பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது... இருக்கிறது.

இரண்டாம் முறையாக நட்சத்திரமா ?

சின்னக்குட்டி said...

நட்சத்திரத்திற்கு சின்னக்குட்டியின்
வாழ்த்துக்கள்

சிறில் அலெக்ஸ் said...

//வாழ்த்துகள் சிறில். கிருஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த நட்சத்திர வாரம் ஒங்களுக்குக் கிருஸ்துமஸ் பரிசுதான். இந்த வாரம் இனிய வாரமாக அமைய என்னுடைய வாழ்த்துகள்.//

நன்றி ராகவன்.
கிறிஸ்துமஸ் வரலன்னா நமக்கு நட்சத்திர அந்தஸ்து வந்திருக்காதுபோல. :)

சிறில் அலெக்ஸ் said...

//சிறில் நட்சத்திரம் - பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது... இருக்கிறது.

இரண்டாம் முறையாக நட்சத்திரமா ? //

:) நிஜமா கேக்கிறீங்களா இல்ல நக்கலா..

இதுதாங்க முதல்முறை.

சிறில் அலெக்ஸ் said...

//நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

கிறித்துமஸ் விழா வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எப்படி நம்ம 3 இன் 1 !!

//

கலக்கிட்டீங்களே.
நன்றி நன்றி நன்றி...(என்னோட 3 இன் 1 - :)

Anonymous said...

மொதல்லெ போட்ட மடல் வந்து சேந்துச்சான்னு தெரியலெ

நண்பா,

வாழ்த்துக்கள்.

கலக்குங்க.

வெளிகண்ட நாதர் said...

என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்!

சல்மான் said...

// வலைப்பதிவில் ஒரு குறிப்பிட்ட சமூக நிகழ்வை அல்லது சமூகவியல் கூற்றுக்களை விவாதிப்பவர்களை மேல் குறிப்பிட்ட மூன்று குறிச் சொற்களுக்குள் அடக்கிவிடலாம்.//

வரும்போதே முடிவோடு ஒரு வந்துவிட்ட மாதிரி தெரியுது.
:))

வாழ்த்துக்கள்

சிறில் அலெக்ஸ் said...

வாங்க மஞ்சூர் எப்படி இருக்கீங்க?
உங்க முந்திய மடல் கிடைக்கல. வாழ்த்துக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்!//

நன்றி வெளிகண்டநாதர்.

சிறில் அலெக்ஸ் said...

//வரும்போதே முடிவோடு ஒரு வந்துவிட்ட மாதிரி தெரியுது.
:))

வாழ்த்துக்கள் //

சல்மான் நமக்கு ஆட இடம் குடுத்திருக்காங்க ஆடித்தான் பாப்போமே.

சாத்வீகன் said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்

Unknown said...

சிரில்,

கிறிஸ்துமஸ் தினத்தன்று துவங்கும் உங்கள் நட்சத்திர வாரம் புத்தாண்டு தினத்தன்று நிறைவுறுகிறது.வாவ்...

நட்சத்திர+கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Sud Gopal said...

இந்நாள் வரை உங்கள் பதிவுகளைப் படித்து வந்த போதிலும் பின்னூட்டியதில்லை.சோம்பேறித்தனம்தான் காரணம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ???

நட்சத்திர வார வாழ்த்துகள்...

Merry Christmas :)

கால்கரி சிவா said...

நட்சத்திர மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மணியன் said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் படைப்புக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்றமுறையிலும், உங்கள் தமிழோவிய சிறப்பு படைப்புகளையும் கொண்டு இந்த வாரம் இனிமையாக இருக்கும் என எதிர்நோக்குகிறேன்.

மலைநாடான் said...

சிறில்!

அவசரப்பதிவெனினும், தங்கள் எழுத்தின் தனித்துவம் தெரிகிறது. பாராட்டுக்கள். இனிய நத்தார், நட்சத்திர வாழ்த்துக்கள்.

நன்றி!

முத்துகுமரன் said...

நட்சத்திர வாழ்த்துகள் சிறில்

Anonymous said...

சிறப்பான நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள் சிறில்.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சுந்தர்

சிறில் அலெக்ஸ் said...

//நட்சத்திர வார வாழ்த்துக்கள் //
நன்றி சாத்வீகன்

சிறில் அலெக்ஸ் said...

//சிரில்,

கிறிஸ்துமஸ் தினத்தன்று துவங்கும் உங்கள் நட்சத்திர வாரம் புத்தாண்டு தினத்தன்று நிறைவுறுகிறது.வாவ்...

நட்சத்திர+கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். //

அதான் நான் சொல்லிட்டேனே விழாக்காள சலுகையாக வந்த நட்சத்திரம்னு.. :)

வாழ்த்துக்கு நன்றி.

மொத்தத்துல வருடத்தின் கடைசி நட்சத்திரமானதுல சந்தொஷம்னாலும் இப்டி கிறிஸ்துமஸ் அதுவுமா கம்ப்யூட்டர்ல மாயுரீங்களேன்னு திட்டு வாங்கிட்டோம்ல..

:)

சிறில் அலெக்ஸ் said...

//இந்நாள் வரை உங்கள் பதிவுகளைப் படித்து வந்த போதிலும் பின்னூட்டியதில்லை.சோம்பேறித்தனம்தான் காரணம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ???

நட்சத்திர வார வாழ்த்துகள்...

Merry Christmas :) //

சுதர்சன் கோபால் இனியா வார்த்தைகளுக்கு ரெம்ப நன்றி.

உங்களுக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

//நட்சத்திர மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்//

நன்றி சிவா. உங்களுக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள். உங்க கொண்டாட்டங்களைப்பற்றி படிச்சேன்.
வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

//இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் படைப்புக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்றமுறையிலும், உங்கள் தமிழோவிய சிறப்பு படைப்புகளையும் கொண்டு இந்த வாரம் இனிமையாக இருக்கும் என எதிர்நோக்குகிறேன். //

மணியன் மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//சிறில்!

அவசரப்பதிவெனினும், தங்கள் எழுத்தின் தனித்துவம் தெரிகிறது. பாராட்டுக்கள். இனிய நத்தார், நட்சத்திர வாழ்த்துக்கள்.

நன்றி! //

மலைநாடன் நன்றி. உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

//நட்சத்திர வாழ்த்துகள் சிறில் //

ரெம்ப நன்றி முத்துக்குமரன்.

இனிய விழாக்கால வாழ்த்துக்கள்.

கப்பி | Kappi said...

நட்சத்திர, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சிறில்!

Anonymous said...

வாழ்த்துக்கள் சிறில்....

முதல் பதிவிலேயே நட்சத்திரம் பயங்கரமா மின்னுது?... :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சிறில்.

Anonymous said...

சிறில் அலெக்ஸ்!
இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்

சிறில் அலெக்ஸ் said...

நன்றி கப்பி பய.

சிறில் அலெக்ஸ் said...

//வாழ்த்துக்கள் சிறில்....

முதல் பதிவிலேயே நட்சத்திரம் பயங்கரமா மின்னுது?... :)//

பயங்கரமா மின்னுனா சீக்கிரம் அணைஞ்சிடும்னு சொல்வாங்களே?

:)

சிறில் அலெக்ஸ் said...

//நட்சத்திர வாழ்த்துக்கள் சிறில்//

நன்றி செந்தில் குமரன்

சிறில் அலெக்ஸ் said...

//சிறில் அலெக்ஸ்!
இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்//

நன்றி யோகன்.
உங்களுக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள்.

arunagiri said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

பழைய செமினாரி ஸ்டூடண்ட் நீங்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. அதிலிருந்து வெளி வந்து இத்தனை வருடங்கள் ஆகிய பின்னரும், எளிய விஷயமான பிறர் நம்பிக்கை மதித்தல் என்ற விஷயத்தில்,
"அடுத்தவன் கடவுளை சாத்தான் என்று சொல்வதைத் தவறு" என்று வெளிப்படையாய் நேரடியாய் உங்கள் பாத்திரங்கள் சொல்ல முடியாமல் போவதற்கு எந்த அளவுக்கு இந்த மதக்கல்வி காரணமாய் இருக்கிறது சிறில்?

எனது கணிப்பு சரியானால், சில வருடங்களில் நீங்கள் மீண்டும் தீவிரமதப்பிடிப்புடன் களத்தினில் செயல்படத் தொடங்குவீர்கள் என்றே நினைக்கிறேன். (அப்படி ஆனவர்களைப்பார்த்தும் இருக்கிறேன்)

அதுசரீ, அறிவுஜீவிகள், உணர்வுக் கொழுந்துகள், நடுநிலை நாயகர்கள்- இவற்றில், நீங்கள் யார் சிறில்?

உணர்வுக் கொழுந்தாய் உள்ளே இருந்தும், நடுநிலை நாயகராய் எழுதி அறிவுஜீவியாய் அடையாளம் காணப்பட ஆசைப்படுகிறவரோ? :)

சிறில் அலெக்ஸ் said...

//நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.//
ரெம்ப நன்றி அருணகிரி.

//பழைய செமினாரி ஸ்டூடண்ட் நீங்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. அதிலிருந்து வெளி வந்து இத்தனை வருடங்கள் ஆகிய பின்னரும், எளிய விஷயமான பிறர் நம்பிக்கை மதித்தல் என்ற விஷயத்தில்,
"அடுத்தவன் கடவுளை சாத்தான் என்று சொல்வதைத் தவறு" என்று வெளிப்படையாய் நேரடியாய் உங்கள் பாத்திரங்கள் சொல்ல முடியாமல் போவதற்கு எந்த அளவுக்கு இந்த மதக்கல்வி காரணமாய் இருக்கிறது சிறில்? //

அருணகிரி நேரடியாய்/மறைமுகமாய் என இதில் எதுவுமேயில்லை. நான் நேரடியாக எதுவும் எழுதாமலிருந்திருந்தால் இதைச் சொல்லலாம். இந்த இடத்தில் அது தேவையில்லாதிருந்தது.

இந்தமாதிரி அடுத்தவர் என்ன எழுதினாலும் குறையாகவே காண்பது எந்த கல்வியின் விளைவு சார்?

//எனது கணிப்பு சரியானால், சில வருடங்களில் நீங்கள் மீண்டும் தீவிரமதப்பிடிப்புடன் களத்தினில் செயல்படத் தொடங்குவீர்கள் என்றே நினைக்கிறேன். (அப்படி ஆனவர்களைப்பார்த்தும் இருக்கிறேன்)//

ரெம்ப தப்பான கணிப்பு. அப்படி நான் செய்தாலும் தப்பேயில்ல. உங்க கடவுளை உங்களுக்குப் பிடிக்குமோ அத்தனை அளவு எனக்கும் பிடிக்கும். பிடிச்சிருக்கணும்.

களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிலரால் ரெம்ப எளிதில் அடுத்தவரை குறைசொல்ல முடிகிறதே எப்படி?

//அதுசரீ, அறிவுஜீவிகள், உணர்வுக் கொழுந்துகள், நடுநிலை நாயகர்கள்- இவற்றில், நீங்கள் யார் சிறில்?//

தெரியலியே... எல்லாம்னு வச்சுக்கலாமா?

//உணர்வுக் கொழுந்தாய் உள்ளே இருந்தும், நடுநிலை நாயகராய் எழுதி அறிவுஜீவியாய் அடையாளம் காணப்பட ஆசைப்படுகிறவரோ? :)//

அருமையா எழுதுறீங்க ஆனா என்னத் தூண்டிவிட்டு வேடிக்கப் பாக்க நினைக்கிறீங்களோன்னு தோணுது.

நீங்க சொன்னது எல்லாருக்கும் பொருந்தும் சிலர் உள்ளே அறிவு ஜீவியா இருப்பாங்க வெளியே கொழுந்தா கொதிப்பாங்க.. அது அவங்கவங்க கையாளுற விஷயத்த பொறுத்து மாறலாம்.

ம்ம்ம் உள்ளே நான் உணர்ச்சிகொழுந்தா இருக்கலாம் ஆனா எந்தவிதமான உணர்ச்சிகள் என்பது உங்களுக்குப் புரியாது.

நான் வேஷம் போட்டாலும் நல்லவன் வேஷம்தானே போடுறேன் அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க அருணகிரி.

:)

arunagiri said...

"இந்தமாதிரி அடுத்தவர் என்ன எழுதினாலும் குறையாகவே காண்பது எந்த கல்வியின் விளைவு சார்?"

அடுத்தவர் என்ன அடுத்தவர்? உங்கள் எழுத்தைப்பற்றித்தான் எழுதினேன், அதையே பேசுவோமே. நான் வெளிச்சம் போட எண்ணியது தொடர்ந்து உங்கள் எழுத்துகளில் வெளிப்படும் விவிலியக் கிறித்துவத்தில் உருக்கொண்ட அப்பட்டமான பிற மத எதிர்ப்பு என்கிற நிலையையே. கற்ற கல்வி அல்ல, சில கல்விகளை நான் கற்காமல் போனதே இவை என் கண்களுக்குத் தெரிய காரணமாய்ப் போயிருக்கலாம்.

"ரெம்ப தப்பான கணிப்பு. அப்படி நான் செய்தாலும் தப்பேயில்ல".

Amen. My case rests. :)

"களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிலரால் ரெம்ப எளிதில் அடுத்தவரை குறைசொல்ல முடிகிறதே எப்படி?"

எளியவை என நீங்கள் நினைக்கும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள அழிவுகளையும் இழப்புகளையும் அவர்கள் அறிந்திருப்பதால் இருக்கலாம். எல்லா "அடுத்தவரும்" எல்லா நேரங்களிலும் விமர்சிக்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன். சில நேரங்களில் சில "அடுத்தவர்கள்" விமர்சிக்கப்படத்தான் வேண்டும் என்றும் நம்புகிறேன்.

"என்னத் தூண்டிவிட்டு வேடிக்கப் பாக்க நினைக்கிறீங்களோன்னு தோணுது"

புரியவில்லை. "...எல்லாம்னு வச்சுக்கலாமா", என நீங்கள் சொன்னதைத்தானே வழிமொழிந்திருக்கிறேன்? இதில் என்ன தூண்டிவிடல் இருக்கிறது?

"நான் வேஷம் போட்டாலும் நல்லவன் வேஷம்தானே போடுறேன் அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க அருணகிரி".

சிரில், அவசரத்தில் எழுதிவிட்டீர்களோ? நீங்கள் எழுதிய வரிகளை மீண்டும் படித்துப்பாருங்கள். நல்லவனாய் இருப்பவன் நல்லவனாய் வேஷம் போட அவசியம் இல்லை. வேஷங்களிலேயே ஆபத்தான வேஷம் நல்லவனாய் வேஷம் போடுவதுதான். நீங்கள் அவ்வாறு நல்லவராய் வேஷம் போடுவதாய் நான் சொல்லவுமில்லை.

என்னைப் பொறுத்தவரை மனிதரில் நல்லவர் கெட்டவர் என்ற கூறுபோடலில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. உங்களிடம் உள்ள நல்ல தன்மையை வணங்குகிறேன்.
அழுத்தமான விவிலியக் கிறித்துவப் பிடிப்பாளராகவும், பிற மத எதிர்ப்பாளராகவும் இருக்கும் நீங்கள் நடுநிலைமையாளர் போல் தோற்றமளிக்க முற்படும் போலித்தனத்தை எதிர்க்கிறேன். அவ்வளவுதான்.

சிறில் அலெக்ஸ் said...

//அழுத்தமான விவிலியக் கிறித்துவப் பிடிப்பாளராகவும், பிற மத எதிர்ப்பாளராகவும் இருக்கும் நீங்கள் நடுநிலைமையாளர் போல் தோற்றமளிக்க முற்படும் போலித்தனத்தை எதிர்க்கிறேன்.//

இத நீங்கதான் அவசரப் பட்டு எழுதிட்டீங்களோன்னு தோணுது.

இன்னுமொரு சந்தேகம் உண்மையிலேயே உங்களுக்கு என்மேல இருக்கிற அக்கரையில இந்தப் பின்னூட்டங்களப் போடுறீங்களா இல்ல எப்படிடா இவன் விவிலியத்தப் பத்தி பேசலாம்ணு போடுறீங்களா?

நான் ஒருபோதும் மத்த மதங்கள இழிவா பேசுனதில்ல. இதுக்கு ஆதாரம் இருந்தா சொல்லுங்க மாத்திப்பேன்.

கடவுள், மதம் பத்தி பல பதிவுகள் போட்டிருக்கேன் போய் படிச்சுட்டு சொல்லுங்க.

எப்போதுமே யாரையும் புண்படுத்தாம எழுதணும், இருக்கணும்னுதான் எழுதுறேன். ரெம்ப டீப்பா யோசிச்சு நீங்களே புண்பட்டுட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

சரி. நீங்க ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க. உங்க குமுறலுக்கு நான் நேரடி காரணமில்லை என நினைக்கிறேன். அதுவரைக்கும் சந்தோஷம்.

எனக்கு தீவிர விவிலிய பார்வை இருகு என்பதை நீங்க விமர்சிக்க தகுதியானவரா? உங்களுக்கு தீவிர மத பார்வை இருக்குதே?

நான் வேஷத்தோடையோ வேஷமில்லமலோ நல்லவனா நடந்துக்கிறதுல எல்லாருக்கும் நன்மையே தவிர தீமையில்லையே. நான் வேஷத்த கலைச்சுட்டேன்னா நீங்க என்ன கெட்டவனா சொல்லலாம் தப்பேயில்ல.

உங்க எழுத்துக்களையும் என் எழுத்தையும் ஒப்பிட்டு பார்த்து சொல்லுங்க உண்மையிலேயே யாரு மதத் துவேஷம் செய்றாங்கன்னு.

நீங்க நல்லவன் கெட்டவன்னு பிரிக்காமலேயிருக்கலாம் ஆனா நான் பொதுவா எல்லாரும் நல்லவங்கன்னு நினைக்கிறவன்.

அழுத்தமான விவிலிய பிடிப்பாளராயில்லாம நான் இந்துவா மாறிட்டாதான் நீங்க சந்தோஷப் படுவீங்கன்னா இப்போதைக்கு என்னால அது முடியாதே.

உண்மையில் என்னை விமர்சிக்கும் உங்க நோக்கம் எனக்கு புரியல ஏன்னா நான் மதத் துவேஷம் பண்ணவுமில்ல இயேசுதான் பெரிய தெய்வம்னு சொன்னதுமில்ல. இதுக்கு ஆதாரமிருந்தா சொல்லவும்.

உங்களமாதிரிப் பட்டவங்களுக்குப் பயந்துகிட்டு நான் எதுவும் சொல்லமப் போயிருவேன்னு நினச்சீங்கன்னா அதுவும் தப்பு. எனக்குப் பட்டத சொல்லியே தீருவேன்.

மற்றபடி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. வாழ்க வளமுடன். :)

arunagiri said...

"உங்களுக்கு என்மேல இருக்கிற அக்கரையில இந்தப் பின்னூட்டங்களப் போடுறீங்களா இல்ல எப்படிடா இவன் விவிலியத்தப் பத்தி பேசலாம்ணு போடுறீங்களா?"

உங்கள் மேலுள்ள அக்கறையில் என்றே சொல்லலாம். இறைவனின் மேல் பிடிப்பற்ற விதமாய் 'கடவுள் நம்பிக்கையெல்லாம் பெரிதாகக்கிடையாது' என்று சொல்லும் நீங்களே விவிலிய மத நூல் குறித்து பிடிப்புடன் எழுதுவதில் உள்ள முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற அக்கறையில்தான் எழுதினேன்.

பிற கடவுளர்களை சைத்தான்கள் என்றும், பிற மத நம்பிக்கையாளர்களைப் நரகத்தீயில் விழும் பாவிகள் என்றும் மத மாற்றத்தைத் தன் சமயக்கடமையாகவும் கொண்டும் செயல்படுபவர்களை (நீங்கள் இல்லை) அவர்களுக்குப் புரியும் வழியில் எதிர்ப்பது அவசிய நியாயம் என நம்புகிறேன். இது தற்காப்பே ஒழிய துவேஷம் அல்ல என நினைக்கிறேன். உங்களுக்கு துவேஷம் போல் தெரிந்தால், மாவோ சொன்னது போல நம் ஆயுதம் என்னவென்று தீர்மானிப்பது நாமல்ல என்ற, நீங்கள் ஏற்கனவே அறிந்த, கூற்றையே உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

"எனக்கு தீவிர விவிலிய பார்வை இருகு என்பதை நீங்க விமர்சிக்க தகுதியானவரா? உங்களுக்கு தீவிர மத பார்வை இருக்குதே?"

உங்களுக்கு தீவிர விவிலியப்பார்வை இருக்கிறது என்பதை நான் குறை சொல்லவேயில்லை. மதப்பிடிப்பற்றவர்போல் பல நேரங்களில் உங்களை அடையாளம் காட்டும் போக்கை மட்டுமே இத்தனை பதில்களிலும் சுட்டியிருக்கிறேன்.

என்னுடைய இந்துத்தனத்தை நான் முழுமையாக அங்ஙனமே வெளிக்காட்டி என் சமுதாய அரசியல் அவதானிப்புகளைப் பதிக்கிறேன்.

உங்களுக்குத் தீவிர விவிலியப்பார்வை உண்டு என இப்போது வெளிப்படையாக நீங்களே சொல்லி விட்டதால், இது குறித்து இனி பேச மாட்டேன். (அதாவது நீங்கள் மதச்சார்பற்றவர், கடவுள் பிடிப்பற்றவர் என்ற அடையாளத்தில் எழுதாதவரை).

"அழுத்தமான விவிலிய பிடிப்பாளராயில்லாம நான் இந்துவா மாறிட்டாதான்..."

அப்படியெல்லாம் இல்லை சிரில், மதத்திலிருந்து வெளிவந்த லிபரலாக நீங்கள் உங்களை அடையாளப்படுத்தினாலும் அழுத்தமான விவிலியப்பிடிப்பு உங்களுக்கு உண்டு என்று வெளிக்காட்டவே இதை எழுதினேன். அத்தகைய பிடிப்பு உங்களுக்கு உள்ளது என நீங்களே ஒப்புக்கொண்ட பிறகு, all I want to say is: Amen.

மற்றொன்றையும் சொல்லி விடுகிறேன். அழுத்தமான விவிலியப்பிடிப்பு உள்ளவரை இறையை அடைய பல்வழி உண்டு என்று நம்பும் இந்துவாய்
ஒருவர் இருக்க முடியாது. இந்துவாய் உள்ளவர் யேசுவையும் கடவுளாய் ஏற்றாலும், அழுத்தமான விவிலியப் பிடிப்பு கொண்டு விட்டால், இந்துவாய் இருக்க முடியாது. ஆனால், அழுத்தமான விவிலியப்பிடிப்பை விட்ட மறுகணமே - கேள்விகள் நிறைந்த சிந்தனையுடனும், திறந்த மனதுடனும்- அவர் இந்துவாகத்தான் வாழத் தொடங்குகிறார்.

"உங்களமாதிரிப் பட்டவங்களுக்குப் பயந்துகிட்டு நான் எதுவும் சொல்லமப் போயிருவேன்னு நினச்சீங்கன்னா அதுவும் தப்பு. எனக்குப் பட்டத சொல்லியே தீருவேன்".

என்ன வார்த்தை சொல்கிறீர்கள் சிரில்? பயமுறுத்தி எழுதவிடாமல் செய்யும் "பண்பு" வேறிடம் சார்ந்தது. கனவில் கூட அத்தகைய கருத்தியல் வன்முறையை நினைக்காதவன் நான். தாராளமாய் உங்கள் கருத்துக்களை நீங்கள் பதிய வேண்டும். அதனை வரவேற்கிறேன். அழுத்தமான விவிலியப்பார்வை உங்களுக்கு உண்டு என நீங்களே தெளிவாய்ச் சொல்லியமைக்கு என் நன்றிகள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் (ஸ்மைலி போட்ட கிண்டல் இல்லை, உண்மையாகவே).

சிறில் அலெக்ஸ் said...

சரி இப்ப உங்க நோக்கம் புரிஞ்சிடுச்சு. என்னுடைய விவிலியப் பார்வை எப்படிப்பட்டது என்பதை பல பகதிவுகளில் சொல்லியிருக்கேன். நிச்சயமா விவிலியத்துல இருக்கும் எல்லாம் எல்லா காலத்துக்கும் ஒத்துப் போனது என்று சொல்லமாட்டேன். அதை எந்த மதமும் சொல்ல இயலாது என்பதே என் கருத்து. நம்பிக்கையின் அடிப்படையில்தான் மதக் கோட்பாடுகளோ மதநூல்களோ முழுத்ஹாக அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும், படமுடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதையும் என் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.

எனக்கு அதிகம் தெரிந்த வேத புட்ஹ்தகம் விவிலியம்தான். அதில் இருக்கும் நல்லவைகளை மட்டுமே விவரிக்கின்றேன் மேற்கோளிடுகின்றேன். மற்றவற்றை தகவலாகவே தருகின்றேன்.

என் பைபிள் கதைகள் பதிவின் முன்னுரையை நீங்க படிச்சா (அத நான் நிஜமாத்தான் சொல்றேண்ணு நம்பினா) புரியும்.

நான் விவிலியம் சொல்லும் எல்லாத்தையும் நம்பும் வெள்ளை ஆடை கிறீத்தவனும் அல்ல அல்லது சமூகத்தையும் மதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளும் ஆளும் அல்ல.

கடவுள் பற்றிய கேள்விகளை மட்டும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு சாமான்யன்.

உங்க பின்னூட்டங்களுக்கு நன்றி ஏனோ எனக்கு உங்கள் பின்னூட்டத்தால நன்மை கிடச்சமாதிரி தெரியல. :(

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
:)

வஜ்ரா said...

//
நான் வேஷம் போட்டாலும் நல்லவன் வேஷம்தானே போடுறேன் அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க அருணகிரி
//

//
//அதுசரீ, அறிவுஜீவிகள், உணர்வுக் கொழுந்துகள், நடுநிலை நாயகர்கள்- இவற்றில், நீங்கள் யார் சிறில்?//

தெரியலியே... எல்லாம்னு வச்சுக்கலாமா?
//


சிறில்,
நீங்க சொன்னத நீங்களே படிச்சுப் பார்த்தீங்களா ?

என்ன எழுதுனீங்க ?

அருணகிரி பதிலும் உங்கள் பதிலும் படிச்சுப் பார்த்ததுல அவரு ஒண்ணு தெள்ளத்தெளிவா கேட்குறது புரியுது.

நீங்க கிருத்தவர் விவிலியப்பார்வை கொண்டவர் அதன் நோக்கில் தான் என் பார்வை உள்ளது என்று ஒத்துக் கொள்ளாமல் "நல்லவன் வேஷம் தானே போடுறேன்" னு கொழந்த மாதிரி சொல்லிகிட்டு!

அருணகிரி கேள்வியை ஆங்கிலத்தில் rephrase செய்தால் இது தான் கிடைக்கிறது. நான், நான் கேட்பது போலவே நேராக கேட்டுவிடுவது போல் rephrase செய்துவிடுகிறேன்.

If you are bold enough what prevents you from telling "yes, i am a christian and my views are biased towards christianity" ?

Why do you want a Centrist, Secularist, intellectual tag ?

சிறில் அலெக்ஸ் said...

வஜ்ரா,
முதலில் அருணகிரியின் நோக்கம் எனக்கு சரியா தெரியல. எனவே கொஞ்சம் உணர்ச்சி கொழுந்தாயிட்டேன்னு வச்சுக்குவோம்...

பைபிள் நான் அதிகம் படித்த ஒரு விஷயம். அதிலிருந்து நான் மேற்கோள் காட்டுறதுக்கும் நான் நல்ல கிறீத்தவரா இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. இப்ப நான் அதிகமா ஷேக்ஸ்பியர படிச்சிருந்தா அவரத்தான் அடிக்கடி சுட்டியிருப்பேங்கிற மாதிரி.

என் கருத்துக்களை முடிந்தவரை நடுநிலமையாத்தான் வைக்கிறேன்.

என் கருத்துக்களை கிறீத்துவ கருத்துக்களா நினைக்கிறது சரியில்லைன்னு நினைக்கிறேன்.
அதனாலத்தான் அருணகிரி சொல்றத ஏற்க மறுக்கிறேன்.

நான் அவருக்கு சொன்னதுபோல நாமெல்லாருமே உணர்ச்சி பிழம்பாவும், நடுநிலமையாகவும், அறிவு ஜீவியாகவும் செயல்படுறோம். நான் அதிகமா ஒரு நிலைய எடுத்துக்கிறேன் அவ்வளவுதான்.

To be frank it is very infortunate that one's views are taken with consideration to his caste religion and background.

இனியும் என்ன செஞ்சா மக்கள் சந்தோஷப் படுவாங்கன்னு எனக்குத் தெரியல.

:)

வஜ்ரா said...

//

To be frank it is very infortunate that one's views are taken with consideration to his caste religion and background.
//

Nobody is asking you to do so. And nobody will question this if you say... frankly, YES, MY VIEWS ARE BIASED. Instead of wanting the CENTRIST, SECULARIST, INTELLECTUAL tag.

I always say that. YES, I AM A HINDU and my views are biased. I never want to be intellectual, centrist, athieist, secularist etc.,

BUT, ALL VIEW POINTS ARE NECESSARY to get a wholisitic picture which the reader should interpret by himself.

//
நான் அவருக்கு சொன்னதுபோல நாமெல்லாருமே உணர்ச்சி பிழம்பாவும், நடுநிலமையாகவும், அறிவு ஜீவியாகவும் செயல்படுறோம். நான் அதிகமா ஒரு நிலைய எடுத்துக்கிறேன் அவ்வளவுதான்.
//

இல்லை சிறில். நான் என்றுமே நடுநிலைவாதி என்று சொல்லிக் கொண்டதில்லை. சொல்லிக் கொள்ளவும் விரும்பவில்லை.

என்னைப் பொருத்தவரை யாருமே நடுநிலையாளர் அல்லர்.

எல்லோருக்கும் ஒரு bias இருக்கு. அதை ஏற்க மறுப்பது போலியான சிந்தனா வியாதிக்கு அடித்தளம்.

நீங்களும் இதற்கு அடிமையாகவேண்டுமா ?

I still ask you, why do you want the tag of centrist secularist at all for God's sakes. If you say my views are based on biblical stories and good things from christian bible. Automatically it is biased.

Any opinion by definition is biased. And to claim otherwise is an act of futility.

சிறில் அலெக்ஸ் said...

Vajra,
'Any opinion is biasd', is a sweeping statement. We do have standards on what is a biased opinion and what is not.

If a judge rules in favor of one over the other would that be bias?

If he quotes a verse from the Bible is that Bias?

The mere fact that I am quoting a few stories and verses from bible and making a Centrist point does not make me Biased. Like I told you, if I had read Shakespear well, I would have quoted him more.

I have not claimed to be anything. I have accepted that I have taken various stands but my aim is always to be in the middle.

I am not a strong Christian to go behind everyone trashing Christianity. I would do so if the guy sounds blatantly stupid.

Even when I answer back I give out facts that I know(just like you do).

Arunagiri made some statements that hurt me initially.

Still I don't agree with him saying reading the bible is not good enough. That should hold good for any religious book.

I have even claimed in my blog once that we are all Hindus.

You should know who is biased and who is not...

I do not write all the time about Christ or Christianity

I do not call other religion as nonsense.

I have appreciated aspects of other religions several times. And have defended their rights too.

I don't think this is bias Vajra.
When you say all opinions are biased it is more on a philasopical level than in reality.

I have no control over what you/or anybody else thinks of me. I am what I am.

On a philosophical level, to you, I am what you think I am.

:)

வெற்றி said...

சிறில்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நன்றி வெற்றி.

சிறில் அலெக்ஸ்