.

Thursday, September 07, 2006

த'சாவு'தாரம்

தசாவதாரம் பற்றிய போலி செய்திகள் பல வந்துகொண்டிருக்கின்றன. உலக நாயகன் 'மன்றம் சாரா' ரசிகர்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல் சில உண்மைத் தகவல்களைத் தருகிறோம்.

'பட்டை' பிரம்மச்சாரி கமல். வயதாகிவிட்டது, (இந்தியன் தாத்தா வேஷம்). தன் வாரிசு இந்த உலகத்தில் பிறக்கவேண்டும் என நினைக்கிறார். ஒரு விந்து வங்கியில் சென்று தன் விந்துவை தானம் செய்கிறார் இதற்கு நடக்கும் போராட்டத்தில் தாத்தா இறந்து போகிறார்.

இந்த விந்துவை வைத்து ஆராய்ச்சி செய்யும் சைண்டிஸ்ட் இன்னும் வயதானவர். அவருக்கு அல்ஸ்தைமர் இருப்பதால் கை ஆடும். இந்தக் கை ஆட்டத்தில் கமல் தாத்தாவின் வித்தை தவறாக விதைத்துவிட பல கமல்கள் உருவாகிறார்கள்.

படத்தில் மொத்தம் 9பது கமல்கள்தான். அப்போ தசவதாரம்? ஒன்பதில் ஒருவருக்கு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி. 'கடவுள் பாதி மிருகம் பாதி' மாதிரி. இதை நுட்பமாக காண்பிக்க அவரின் வலைப் பதிவில் அவரே வாசகராய் பின்னூட்டம் போடுவதுபோல காட்சியமைப்பு. நிலமை முத்திப்போய் ஒரு கட்டத்தில் அவரே தனக்குப் போலியாய் ஒரு வலைப்பதிவாளரர உருவாக்குகிறார். போலிக்கும் நிஜ கமலுக்கும் நடக்கும் போராட்டம் க்ரைம் த்ரில்லராய், ஆளவந்தான்போல.

இன்னொரு கமல் ஹிட்லரின் நாஜி தத்துவங்களால் ஈர்க்கப்படுகிறார். மீசை வளராத நோய் இவருக்கு இருப்பதால் கஷ்ட்டப்பட்டு ஹிட்லர் மீசையை மூக்குக்கு கீழ் பச்சை குத்துகிறார். க்ளைமாக்சில் இவர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு தாடியை பச்சைக் குத்திக்கொண்டு வரும் காட்சி நெஞ்சை உருக்கும்.

எல்லா கமலும் ஒன்றாய் வரும் காட்சி கம்ப்யூட்டர் க்ராபிக்சில் 'கட் அண்ட் பேஸ்ட்' எனும் புதிய யுக்தி கொண்டு செய்யப்பட்டுள்ளது.

எல்லா பாத்திரங்களும் தங்களின் தந்தை யார் எனத் தேடுவதே கதை. கடைசியில் அந்த டெஸ்ட் ட்யூபை கண்டுபிடித்தார்களா என்பதே கதையின் முடிச்சு.

ஹே ராம் கெட் அப்பில் வரும் கமல், காந்தி தேசப் 'பிதா' என்பதைக் கேள்விப்பட்டு தனக்கும் அவர்தான் தந்தை என வாதாடப் போகிறார். காந்தி கோபத்தில் இவரை ஆள்வைத்து சுடச் சொல்கிறார். அப்படிச் சுடும்போது குறிதவறி குண்டு காந்திமேல் பாய்ந்து...(மீதியை வரலாறு புத்தகத்தில் படிக்கவும்) இதன் மூலம் பல வரலாற்று குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை நிலைநாட்டச் செய்வது கமலின் ஐடியாவாம்.

'பத்து பத்தா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ' எனும் பாடல் ரஜினியின் 'எட்டு எட்டா' என்பது தப்புக்கணக்கு என நிரூபிக்குமாம்.

தஸவதாரத்தில் புஷ் அவதாரமும் உண்டாம். இவர் தன் வீட்டு தண்னித் தொட்டி உடடந்து வீட்டு மக்கள் அவதிப் படுவதைப் பார்க்காமல் பக்கத்து வீட்டுக்காரனின் வீட்டிலிருந்து எண்ணை எப்படி திருடலாம் என யோசித்துக்கொண்டிருப்பாராம்.

எல்லா தகவல்களையும் தந்துவிட்டால் படம் பார்க்கும்போது போர் அடிக்குமே...அதனால வுடு ஜூட்டு.

pinகுறிப்பு: ஆபீசில் ரெம்ப போர் அடிக்குதுங்கோ.

18 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//தஸவதாரத்தில் புஷ் அவதாரமும் உண்டாம். இவர் தன் வீட்டு தண்னித் தொட்டி உடடந்து வீட்டு மக்கள் அவதிப் படுவதைப் பார்க்காமல் பக்கத்து வீட்டுக்காரனின் வீட்டிலிருந்து எண்ணை எப்படி திருடலாம் என யோசித்துக்கொண்டிருப்பாராம்//

சிறில்...!
அதுக்குள்ள என் கதையை யாரோ திருடிட்டாங்க !

http://kaalangkal.blogspot.com/2006/09/1.html

Sivabalan said...

Ha Ha Ha ...

கலக்குங்க...

G.Ragavan said...

// எல்லா தகவல்களையும் தந்துவிட்டால் படம் பார்க்கும்போது போர் அடிக்குமே...அதனால வுடு ஜூட்டு.

pinகுறிப்பு: ஆபீசில் ரெம்ப போர் அடிக்குதுங்கோ. //

அதுக்காக இப்படியா ஹா ஹா ஹா

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//'பத்து பத்தா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ' எனும் பாடல் ரஜினியின் 'எட்டு எட்டா' என்பது தப்புக்கணக்கு என நிரூபிக்குமாம்.//

சிறில், எப்படிங்க இதெல்லாம்? எப்படிங்க ;-)
யாருப்பா அங்கே ரசிகர் மன்றத்துல மிச்சம் மீதி யாராச்சும் இருந்தா வந்து இந்த சிறிலை கொஞ்சம் கவனிங்கப்பா...

அப்பறம் நாயகிகள பற்றி ஒண்ணுமே இல்லையே உங்க விமர்சனத்துலே? பேசும் படம் போல நாயகி இல்லாப் படமா? :-):-)

சிறில் அலெக்ஸ் said...

//சிறில்...!
அதுக்குள்ள என் கதையை யாரோ திருடிட்டாங்க !//

இதெல்லாம் பாலிவுட்ல சகஜமப்பா

சிறில் அலெக்ஸ் said...

//அதுக்காக இப்படியா ஹா ஹா ஹா //

என்ன செய்ய.. சீரியஸ் பதிவுகளா படிச்சுப் படிச்சு இன்னும் போர்

சிறில் அலெக்ஸ் said...

//சிறில், எப்படிங்க இதெல்லாம்? எப்படிங்க ;-)
யாருப்பா அங்கே ரசிகர் மன்றத்துல மிச்சம் மீதி யாராச்சும் இருந்தா வந்து இந்த சிறிலை கொஞ்சம் கவனிங்கப்பா...//

ஐயா, சிக்காகோவுல ஆட்டோ எல்லாம் கிடையாதே..

//அப்பறம் நாயகிகள பற்றி ஒண்ணுமே இல்லையே உங்க விமர்சனத்துலே? பேசும் படம் போல நாயகி இல்லாப் படமா? :-):-) //

தஸ்சுல கிஸ் இல்லாமலா?

கப்பி பய said...

இங்கயும் ஹீரோயினி இல்லயா :(

Pradeep said...

நானும் ஒருவேளை இது தான் கதையோன்னு ரசிச்சி படிக்க ஆரம்பிச்சிட்டேன்யா..

என்னா குசும்பு உங்களுக்கு!

சிறில் அலெக்ஸ் said...

கப்பி பய,
ஒரு கமல் நடிக்கும் படத்துலேயே ஹீரோயின் டம்மி, அப்ப பத்துக் காமல் படத்துல?

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

அடப்பாவி மக்கா சிறில். தலைவரை இப்படி ஓட்றது உங்களுக்கே நல்லாருக்கா? பத்துல ஒண்ணு சிகாகோ வந்து உங்களை 'கவனிக்கப்' போகுது பாத்துக்குங்க! :-)

சொல்ல முடியாது. இப்ப தமிழ்ச் சினிமா உலகில் இருக்கற கதைப் பஞ்சத்துல இந்த மாதிரி எடுத்தாலும் எடுப்பானுங்க - கெரகம் புடிச்சவனுங்க!

வே.வி. படம் பாத்த கோவமோ?

சரி விடுங்க!

சிறில் அலெக்ஸ் said...

சுந்தர்,
தலைவர்தானேன்னு ஒரு சுதந்திரம் எடுத்து ஓட்டவேண்டியதுதான்.

நமக்கு ரெம்ப பிடிச்சவங்கள ஓட்டுறதுதான் எனக்கு ரெம்ப்ப பிடிக்கும்.

வே. வி இன்னும் பாக்கல. கமல் போஸ்ட்டரப் பார்த்தாலே 'அட போஸப் பாருடா'ன்னு ஜொள்ளுவேன் நான் .. அதனால வே. வி எப்படி இருந்தாலும் பார்த்து பாராட்டுவேன்..

:)

துளசி கோபால் said...

வீட்டுலே ஒக்காந்து, அப்புறம் ஒட்டல்லே ரூம் போட்டு ஒக்காந்துன்னு இருந்த மக்கள்ஸ் இப்படி
ஆபீஸிலேயும் ஒக்காந்து 'யோசிக்கறாங்க'ன்னு புரிஞ்சு போச்சுங்கோவ்.:-))))))))))

இப்படிக்கு
அடுப்படியில் ஒக்காந்து யோசிக்கும் அக்கா!

சிறில் அலெக்ஸ் said...

துளசி அக்கா.. பொழுதுன்னு ஒன்னு இருக்கே அது போகவே மாட்டேங்குது.

எல்லா பாசன்ங்களும் என்னடா எப்ப பாத்தாலும் இந்த ஜொலேபி ஃபாண்ட்ல டைப் அடிக்கிறியேன்னு கேட்க ஆரம்பிச்சுட்டானுக.

எப்ப ரவுண்டு கட்டி அடிக்கப் போறானுவளோ தெரியல..

அடுப்படியில உக்காந்து ரெம்ப யோசிக்காதிங்க.... அந்தா பால் கொதிக்குது பாருங்க.

:)))

SK said...

அ...ப்டித்தான்!
அப்படியே போட்டுத் தாக்குங்க சிறில்!

அது வரைக்கும் "தசையை அவுத்த அவதாரம்னு" போடாத வரைக்கும், கமல் ரசிகர்கள் உங்களுக்கு ஆட்டோ அனுப்ப மாட்டாங்க!
தைரியமா ஆடுங்க!

சிறில் அலெக்ஸ் said...

//அது வரைக்கும் "தசையை அவுத்த அவதாரம்னு" போடாத வரைக்கும், கமல் ரசிகர்கள் உங்களுக்கு ஆட்டோ அனுப்ப மாட்டாங்க!
தைரியமா ஆடுங்க!//

கமல் ரசிகர்கள் ஆட்டோ அனுப்பணும்னா நானே எனக்கு ஆட்டொ அனுப்பினாத்தான் உண்டு. அதுவும் ஒருவகை ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி..

ரசிகன் பாதி விமர்சகன் பாதி கலந்து செய்த கவுஜை நான்

ஜோ / Joe said...

கமல் ரசிகராய் இருந்து கொண்டு இப்படி கமலை ஓட்டுவது -ஸ்பிளிட் பெர்சனாலிட்டிக்கு இந்த கேரக்டரையே வச்சுக்கலாம் போல..ஹி..ஹி.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

SK

//அது வரைக்கும் "தசையை அவுத்த அவதாரம்னு" போடாத வரைக்கும்,//

வலைப்பதிவு அகராதியில் இருக்கும் 'சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறது'ங்கறதுக்குச் சரியான உதாரணம் கிடைச்சிருச்சு! :-)

சிறில் அலெக்ஸ்