.

Wednesday, May 31, 2006

இது எப்டி இருக்கு - ரஜினி புகை(க்காத) படங்கள்









கீழே போட்டு மிதிப்போம்

தனிமை இருள் நீக்க
சிந்தனைச் சுடர் இருக்கு
அந்த மின்மினி சிகரட்டின்
சிறு வெளிச்சம் இனிஎதற்கு

புண்பட்ட மனம் ஆற்ற
பண்பட்ட நட்பு போதும்
வெண்குழல் ஊதும்போது
புண் புரையோடிப் போகும்

இளமை அழிக்கும் புகை
இனிமை குலைக்கும் புகை
இனிமேல் நமக்குப் பகை
இனிமேல் நமக்குப் பகை

உதடு கள் நடுவே
உபத்திரம் இருக்குதே
உடலினை கெடுக்குதே
உயிரினை சுருக்குதே

வெள்ளாடை போர்த்தி அது
சொல்வதுவும் புரியலியா
உள்ளே உன் உறுப்பெல்லாம்
கரிவதுவும் தெரியலையா

இன்றே முடிப்போம்
இந்த வெள்ளையனின் கதையை
பெறுவோம் மீண்டும் ஒரு சுதந்திரம்
அந்த கடைசி சிகரட்டை கீழே போட்டு மிதிப்போம்.

Friday, May 26, 2006

காலையில் கேட்டது

காலையில் எழுந்ததும் க்ரியேட்டிவ் நொமாடில், (நமது MP3 ப்ளேயர்) 'Play any track' என சொடுக்கினேன்.

'மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழக் கூடுமோ....' பாலு குரல் கொடுத்தார்.

அதுக்கென்னாங்கறீங்களா? இன்று என் திருமண நாள்.

அடுத்து Phil Collins வந்தார்... 'You always have to hear both sides of the story...' எதுக்கு சொல்றாருன்னு புரிந்தது.

Garfunkal குரல் கொடுத்த 'Bridge over troubled water' அடுத்தபாடல்.

காலையிலேயே அருமையான அனுபவம். இதுக்கு அடுத்ததா பல குத்து வெட்டு பாடல்கள்னு வச்சுக்குவோம். இருந்தாலும் ஒரு திருமண நினைவு நாளில் இப்படி அருமையான மூன்று பாடல்களை எதோச்சையா நொமாட் வழங்கியது இனிமை.

'Bridge over troubled water' வரிகள் அருமையா இருக்கும் கீழே பார்க்கவும்.. பாடல் சுட்டி இன்னொரு பதிவில்.

When you're weary, feeling small,
when tears are in your eyes, I’ll dry them all.
I'm on your side, oh,
when times get rough and
friends just can't be found,
like a bridge over troubled water,
I will lay me down.
Like a bridge over troubled water,
I will lay me down.

When you're down and out,
when you're on the street,
when evening falls so hard, I’ll comfort you.
I'll take your part, oh,
when darkness comes and
pain is all around,
like a bridge over troubled water,
I will lay me down.
Like a bridge over troubled water,
I will lay me down.

Sail on silver girl,
sail on by.
Your time has come to shine,
All your dreams are on their way.
See how they shine, oh
and when you need a friend,
I'm sailing right behind
Like a bridge over troubled water,
I will ease your mind.
Like a bridge over troubled water,
I will ease your mind.

Thursday, May 25, 2006

நான் பாஸ் ஆயிட்டேன்....

+ 2 தேர்வில் என நினைக்கவேண்டாம்..

தேன்கூடு/தமிழோவியம் நடத்திய போட்டியில் என் கதைக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

ஓட்டுப் போட்ட நண்பர்களுக்கும்(?!) தமிழோவியம் மற்றும் தேன்கூடு அமைப்பாளர்களுக்கும் நன்றி.

மதுமிதா

வலைப்பதிவர் பெயர்: சிறில் அலெக்ஸ்

வலைப்பூ பெயர் : தேன்

சுட்டி(url) :

http://theyn.blogspot.com/
http://bblk.blogspot.com/
http://muttom.blogspot.com/

ஊர்: வாழ்ந்த இடங்கள் முட்டம், திருப்பத்தூர்(வ. ஆ), சென்னை. தற்போது சிக்காகோவில்

நாடு: அவ்வப்போது அமெரிக்கா; எப்போதும் இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வேலை நேரம் போர் அடித்து நெட்டில் சுற்றியதில் தற்செயலாய் கண்டுபிடித்தது. 'கடற்புறத்தான்' ஜோவின் உதவியுடன் தொடர்ந்தது

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : டிசம்பர் 30, 2005

இது எத்தனையாவது பதிவு: 117


இப்பதிவின் சுட்டி(url): http://theyn.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: "தெரியலயே", நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும். உண்மையில் 'நேரப்போக்குக்காகவும் தமிழ் எழுதிப்பழகவும்' என வைத்துக்கொள்ளலாம். ஏன் தொடர்ந்து எழுதுகிறீர்கள் எனக் கேட்கமாட்டீர்களே?

சந்தித்த அனுபவங்கள்: மொத்தத்தில் நல்ல அனுபவங்களே.

பெற்ற நண்பர்கள்: நிறையபேர். சட்டுன்னு நியாபகம் வரும் சில பெயர்கள் ஜோ, பாஸ்டன் பாலா, கால்கரி சிவா, ஜி. இராகவன், சமுத்ரா, குமரன்(பக்தி), மதி கந்தசாமி, வஜ்ரா ஷங்கர், தேவ்... இவுங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியாது நான் இவங்களை நண்பர்களாய் நினைக்கிறேன். பெயர் சொல்லாத நண்பர்கள் பலரும் உண்டு.

கற்றவை: பல பதிவுகளிலிருந்து பல விஷயங்கள்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ரெம்பவே அனுபவித்தேன் (நல்ல அனுபவம்தான்)

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து படிக்கணும்; தொடர்ந்து பதிக்கணும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பிறந்தது - முட்டம்
படித்தது - கார்மல் (நாகர்கோவில்), டான் போஸ்கோ(திருப்பத்தூர்)
கல்லூரி - லயோலா(சென்னை) 5 வருடம் B. Com மற்றும் MBA.
வேலை - கணிணித் துறை (மென்பொருள்)
இது போதும்பா

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
"அடுத்தவன் உனக்கு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாயோ அதையே அடுத்தவனுக்கு நீ செய்." - இயேசு

"எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும்" - கீதை

Thursday, May 18, 2006

மலர்களில் ஆடும் இளமை புதுமையே

ஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட துலிப் பூக்களின் படங்கள்.








Wednesday, May 17, 2006

பூ பூக்கும் மாதம்

ஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட சில 'துலிப்' பூ படங்கள்.



ஒரு சில நாட்களே (அதிகம் இரு வாரங்கள்) வாழும் இந்தச் செடிகளில்தான் எத்தனை அழகு.



இன்னும் சில அடுத்த பதிவில்....

Friday, May 12, 2006

2060 தேர்தல்

நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். worldmovies கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். தியாகராஜ பாகவதர் என்கிற யாரோ ஒரு பழம் பெரும் நடிகர், இவனுக்கு அவர்மேல் உயிர். என் தாத்தா அவரைப்பற்றி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். இவன் நக்கலாய் பேசுகிறானா இல்லை உண்மையிலேயே புகழ்கிறானா என பலமுறை சந்தேகித்திருக்கிறேன்.

அவனே என்னை அழைத்தான்,"வணக்கம் செந்தமிழ், நலமா?".

அவன் ஆங்கிலத்தில் கேட்பதை தமிழில் மொழிமாற்றியது என் 'இன்டர்ப்ரெட்டர்-VII'.

"நலம் லாங்டன், நீ எப்படி?".

"பெரிதாய் ஒன்றுமில்லை." சலித்துக்கொண்டான்.

"2021ல் முடிந்த மின்னணு புரட்சி பற்றி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாயே முடிந்துவிட்டதா?"

"நீதித்துறையில் மின்னணு இயந்திரங்கள் எப்படி குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடித்து தண்டிக்கின்றன என்பதை படித்துக்கொண்டிருக்கிறேன்."

"ஓ... ஜஸ்டிஸ்-IV-U. வடிவமைத்தது இந்தியர்தான் தெரியுமா?"

"ம். தெரியும். முன்பெல்லாம் பொய்சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இயந்திரம் பயன்பட்டதாம், ஆனா 'ஜஸ்டிஸ்' குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா இல்லையா என துல்லியமாக சொல்லிவிடும்."

"மூளையை ஏதோ நாவல் படிப்பது போல படித்துவிடும் திறன் இருக்குதே சும்மாவா?".

"சரி உங்கள் ஊரில் தேர்தல் எனக் கேள்விப்பட்டேன். துளசி சொன்னாள்."

"ஆமாம்."

"எங்கள் ஊர்போல தானியங்கும் அரசாங்கம்தானா அங்கேயும்?"

"அவ்வளவுதூரம் மனிதர்களை நாங்கள் மறந்துவிடவில்லை லாங்டன்.", சிரித்தான்,"எங்கள் ஊரில் இன்னும் மக்களாட்சிதான்."

"அப்படீன்னா ஓட்டுப்போடும் முறையா? இந்த பழைய முறைகளெல்லாம் ஒழிந்துவிட்டது என நினைத்தேன். வல்லரசு இந்தியா, அங்கே இன்னும் இந்த முறைகள் இருப்பது ஆச்சரியம்."

இன்டர்ப்ரெட்டரில் காசுவல் மோட் (Casual Mode) தட்டி அளவை அதிகரித்தேன், தூயதமிழில் விவாதிக்க இது ஒன்றும் இலக்கியமில்லையே.

"லாங்டன், உங்கள் ஊரில் 90% எந்திரங்கள் ஆட்சி பொறுப்பிலுள்ளன இங்கே 30% என வைக்கலாம். முழுமையாக எந்திர ஆட்சி இன்னும் இங்கே சாத்தியமாகவில்லை. பழமைவாதம் இந்தியாவில் மலிவான பொருள். உனக்கே தெரியும் சாதியை ஒழிப்பதற்கு நாங்கள் பட்டபாடு."

"போனமாதம் அதைப்பத்தி சொன்ன நியாபகமிருக்கு. சரி இப்போ 70% ஆட்சியாளர்கள எப்படி, ஓட்டுப்போட்டா தேர்ந்தெடுக்கிறீங்க?"

காசுவல் மோட் செட்டிங் சரியில்லை இன்னும் அவன் பேசுவது என் பேர்போல 'செந்தமிழாய்' ஒலித்தது.

"இல்ல லாங்டன் ஓட்டெல்லாம் இல்ல. 2023 ல, மின்னணு புரட்சிக்குப்பின்னால அரசு அலுவல்கள் பலவும் கணிணிகள் செய்ய ஆரம்பித்தன. இதில் பல ரோபோக்களும்.

ஒரு கணிணி முன்னால போய் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது பதிவு செய்யலாம், சட்ட ஒழுங்கு முழுவதும் கணிணிமயம். சூப்பர் ஜி.பி.எஸ் வந்தபிறகு டிராபிக் முதல் திருட்டுவரை எல்லாமே செயற்கைகோள் கண்காணிப்பில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

வரவு செலவு திட்டமெல்லாம் கணிணிகளே தீட்டுகின்றன. இந்தவருடம் மழை எப்படியிருக்கும், விளைச்சல் எப்படி வரும் என்பதும், ஏற்றுமதி இறக்குமதி வியாபார எதிர்பார்ப்புக்கள் எளிதில் கணக்கிடப்படுகின்ற. இதனால் கணிணி போடும் பட்ஜட்டில் குறைந்த அளவே துண்டு விளுகிறது.

அரசாங்கத்திலிருக்கும் மனிதர்கள் கணிணிக்குத் தேவையான மென்பொருள் திருத்தங்கள் மற்றும் மேன்பாடுகளை அலசுகிறார்கள். தொகுதி முன்னேற்றத்தை பார்வையிடுவதும், புதிய சட்டங்கள் கொண்டுவருவதும்தான் இவர்களின் சில பொறுப்புக்கள்."

"செந்தமிழ், எங்கள் ஊரிலிருந்த பழைய அமைப்புத்தானே அது. ஆனால் தேர்தல் எப்படி நடக்குதுன்னு சொல்லேன்."

"ஓ...தேர்தல் என்று பெரிதாய் ஒன்றுமில்லை அந்தந்த தொகுதிக்கு யார் சிறந்த பிரதிநிதி என்பதை கணிணியே தேர்வு செய்கிறது. எல்லோரின் தகுதியும் திறனும் மதிப்பிடுமளவுக்கு நம்மை பற்றிய செய்திகளை கணிணியில் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஊரில் இது பழைய தொழில்நுட்பம்."

"நல்ல யுக்தி. கணிணியே தேர்ந்தெடுப்பது அருமை."

"லாங்டன், மின்னணு மயமான இயந்திர வாழ்க்கையில் எளிதில் விரக்தியாகிவிடுகிறது. மூன்று வருடம் வேலை இல்லாமல் அரசு தரும் காசில் உயிர்வாழ்கிறேன். உனக்குத் தெரியுமே."

"ம்..."

"தற்கொலை செய்யலாம் என்றிருக்கிறேன்."

"என்ன...ஏய் என்ன சொல்ற."

"கடைசியா நாயர் டீகடை சாட் ரூம் வந்து நண்பர்களிடம் விடைபெறலாமென வந்தேன். நீ மட்டும்தான் கிடைத்தாய். கேத்தி மற்றும் சில்வியாவிடம் சொல்லிவிடு. வருகிறேன்"

லாங்டன் சப்தமாய் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாட்ரூமிலிருந்து வெளியேறினேன். வாங்கிவைத்திருந்த மூளைக் கொல்லி (Brain Killer) பாட்டிலை கையிலெடுத்தேன். எந்த வருத்தமுமில்லை. வாயருகே கொண்டு சென்றேன்.

"பீப்...பீப்"

சாகப்போகும் நேரம் கை கணிணியில் செய்தி. தானாகவே வாசித்தது.

"வணக்கம் செந்தமிழ் செல்வராஜ். வாழ்த்துக்கள் நீங்கள் இந்தமுறை கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்"

கையில் வெறுமையான விஷக் குப்பியை பார்த்தேன், சிரிப்புத்தான் வந்தது.

சிறில் அலெக்ஸ்