.

Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Friday, May 25, 2007

RSS தான் சிறந்தது - 1

பதிவர்களே. RSS பற்றிய பல பதிவுகளை படித்திருப்பீங்க. இது இன்னுமொரு RSS பதிவு என்றில்லாமல், பதிவுகளை எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் RSS எப்படி பயனுள்ளதாக அமைகிறது எனப் பார்க்கும் பதிவு.

இந்த சொதப்பல் பில்ட் அப் ஒரு பராபரப்பை உண்டாக்கத்தான். இந்தப் பதிவின் நோக்கம் உங்களுக்கென நீங்களே ஒரு திரட்டியை உருவாக்க என்ன வேண்டும் என்பதைச் சொல்வதே. ஒரு கேள்வி பதில் வடிவத்துல சொல்லட்டுமா?

எனக்கே நான் திரட்டி செய்ய இயலுமா? ஆமாங்க ஆமா.

ஏன் தனி திரட்டி?
எல்லாம் ஒரு பந்தாதான்... மத்த நன்மைகள் உங்களுக்குத் தெரியாதா?

அடிப்படையில என்ன விபரங்கள் தேவை?
நீங்க திரட்ட விரும்பும் பதிவுகளின் சுட்டி அல்லது பதிவின் அல்லது தளத்தின் ்RSS சுட்டி.

இதுக்காக RSSல சேரணுமா? அல்லது இது வேற RSSஆ? இது வேற டெக்னிக்கல் ்சமாச்சாரRSS - Real Simple Syndication (மலையாளியா இருந்தா simble) Rich Site Summary எனவும் இதை வழங்குகிறார்கள். RSS தமிழில் செய்தி ஓடை அல்லது வெறுமனே ஓடை(Feed) என மொழிபெயர்கலாம்(பெயர்்த்திருக்கிறார்கள்)்.

எனக்கு RSS பிடிக்காதே?
RSS இல்லைன்னா ஆட்டம்தான். அதாவது Atom. அது இன்னொரு வகையான ஓடை ஆனா பரவலா RSSதான் பயன்படுத்துறாங்க.

உதாரணமா ஒண்ணு சொல்லுங்களேன்... இப்ப என்னோட பதிவுக்கு RSS ஓடை http://theyn.blogspot.com/feeds/posts/default?alt=rss அல்லது http://theyn.blogspot.com/feeds/posts/default மட்டும் பயன்படுத்தலாம். எல்லா Blogger பதிவுகளுக்கும் இந்த சுட்டி பயன்படும். http://theyn.blogspot.com என்பதுக்கு பதில் உங்களுக்கு விருப்பமான பதிவின் பெயரை போட்டுக்கணும்.

Wordpress feed எப்படி இருக்கும்?
http://balabharathi.wordpress.com/feed/ நம்ம அண்ணன் பால பாரதியின் feed இது.

சரி இந்த சுட்டிய வச்சி என்ன செய்யுறது? நிறைய செய்யலாம்.
1. RSS வாசகக்கருவிகள்/செயலிகள் (Readers) பலதும்்ய இருக்குது அதுல சேர்த்து படிக்கலாம்.
2. புதிய ப்ளாகரின் வார்ப்புருவில் ELEMENTஆக சேர்க்கலாம்
3. உங்க வலைப்பக்கத்தில் தெரியச் செய்யலாம்
4. பல தளங்களில் உள்ள செய்திகளை ஒருங்கிணைத்து ஒன்றாக்கலாம்.

இன்னும் நிறைய செய்யலாம்.

வாசக செயலிகள்(Readers) எப்படி பயன்படுத்துவது? ரெம்ப எளிமையா வேணுமின்னா உங்க கூகிள் மெயில் ஐடிய வச்சுகிட்டு்வச்ச்சிகிட்டு கூகிள் ரீடர்ல போயி பயன்படுத்தி பார்க்கலாம். இத எப்படி ப்பயன்படுத்துவதுன்னு இந்தப்்தப் பதிவப் பாத்து தெரிஞ்சுகுங்க.

ரெம்ப எளிமையா வடிவமைச்சிருக்காங்க. போங்க Feedஅ சேருங்க. படியுங்க.

Firefox உலவி வச்சிருக்கீங்கண்ணா Sageணு ஒரு அருமையான Add-in இருக்குது. இத வச்சி நீங்க விசிட் அடிக்கிற தளங்களில் ஏதாச்சும் Feed (ஓடை) இருக்குதான்னு எளிதில் தேட முடியும்.

இலவச RSS readerகள் எக்கச்சக்கமாயிருக்குதுங்க. கூகிளாண்டவர்கிட்ட கேட்டா அள்ளிக் கொடுப்பார். ஆனா நான் இந்த பதிவு வரிசையில கூகிள் ரீடர வச்சித்தான் உதாரணங்கள் தரப்போறேன்.

ரீடர்ல பதிவுகள எளிதா சேக்கிறதுக்கு என்ன செய்யலாம்? ஒரு எளிய வழி என்னண்ணா OPML என்கிற கோப்ப வச்சி எளிதா சேத்துக்கலாம். OPML என்பது ஓடைகளின் தொகுப்பை கொண்ட கோப்பு(File). இதையும் ரீடர்களிலேந்துதான் பெற இயலும். இல்ல ஏற்கனவே இருக்கிற திரட்டிகள் இதப் பகிர்ந்துகிட்டாங்கன்னா எடுத்துக்கலாம. அல்லது உங்க வலையுலக நண்பரிடம் கேக்கலாம்் (நண்பர்கள் OPML பகிர்ந்துக்க விருப்பப்பட்டால் தெரிவிக்கவும்) என்னோட ஓடை தொகுப்புக்கள் வேணுமின்னா மின்னஞ்சல் செய்யவும் (cvalex @ yahoo .காம்). என்னோடது முழுமையானதில்ல ஆனா 200பதிவுகள் கிட்ட இருக்குது.

பதிவ சேத்தாச்சு அப்புறம்?
கூகிள் ரீடர்லேந்தே உங்க பதிவுகள படிக்க ஆரம்பிக்கலாம். ஆனா அதுக்கும் மேலேயும் சில சூப்பர் விஷயங்களெல்லாம்ம் இருக்குது....

அடுத்த பதிவுல பாக்கலாம்....

அடுத்து வரும் கேள்விகள்
எப்படி ஓடைகளை வகைப்படுத்துவது?
ஓடைகளை ஒருங்கிணைப்பது எப்படி?
நாமே RSS ஓடைகளை உருவாக்குவது எப்படி?
என் ஓடைகளை தெளிவா பார்வையிட இயலுமா?
என் தனி திரட்டி செய்வது எப்படி?

மேலதிக விபரங்களுக்கு

1. விக்கிபீடியா - RSSனா இன்னா நைனா?
2. விக்கிபீடியா - ஆட்ம்னா இன்னாமே?
3. கூகிள் வாசிககாகச்சோல்ல எல்ப்(help)
4. கூகிள் ரீடர் எங்க இருக்குது மாம்ஸ்?

Saturday, January 27, 2007

ஆத்தா நான் பீட்டாவுக்கு மாறிட்டேன்...

வயல் வரப்புல அரைக்கால் சட்டை போட்ட ஹீரோ கையில் ஒரே ஒரு சிலேட் மட்டும் உள்ளடக்கிய மஞ்சள் பையை உயர்த்தி சுத்தியபடியே ஓடி வருகிறார்..

போங்கையா பீட்டாவுக்கு மாறிட்டதச் சொல்ல ஏன் இந்த பில்ட் அப்.

சிலர் அதிக பதிவுகள் இருந்தால் மாறுவது கடினம் என்றிருந்தார்கள். என் பதிவுகளில் தேனில் மட்டும் 197 பதிவுகள் இருந்தன (ஆமமங்க விரைவில் டபுள் செஞ்சுரி) இன்னும் பல பதிவுகளையும் சேர்த்தால் எண்ணிக்கை 300 நெருங்கும். ஆனாலும் என்னால் எளிதில், 10 நிமிடங்களுக்குள்ளாகவே மாற முடிந்தது.

நான் ஏற்கனவே வைத்திருந்த பீட்டா கணக்கிற்கு மாறியதால் எளிதாயிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

முயன்று பாருங்கள்.

முதலில் ஒரு பீட்டா(புதிய) ப்ளாகர் கணக்கை துவங்குங்கள். சோதனை வலைப்பதிவொன்றை துவங்குங்கள். சோதனைப் பதிவிடுங்கள். லாக் அவுட் செய்து வெளியேறுங்க்கள்.

பின்னர் Blogger.com ன் முகப்பில் Switch now எனும் பொத்தானை அழுத்தி கணக்கை மாற்றிக்கொள்ளவும்.

இருந்தாலும் 'விதியாகப் பட்டது வலியது... அதை யாராலும் மாற்ற இயலாது'.

Wednesday, October 18, 2006

தேன்கூடு பெட்டகம்

thenkoodu.com டெலிஷியஸ் எனும் சேவை பற்றி முன்பு பதிவுகள் எழுதியிருந்தேன். எத்தனைபேர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் தெரியவில்லை.

தேன்கூடு குழுமம் 'பெட்டகம்' எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு பிடித்த சுட்டிகளை குறிச் சொற்களோடு சேகரித்து பயன்படுத்த உதவும் சேவை. டெலிஷியசை மிஞ்சும் ஒரு அருமையான பயனோடு வந்துள்ளது(பின்னர் இதைச் சொல்கிறேன்).

இதன் அடிப்படை பயன் என்ன?
Favorites என உங்கள் உலவியில்(Browser) சுட்டிகளை சேகரிக்க ஒரு வசதி அதைப் போல பெட்டகத்தில் உங்களுக்கு பிடித்த சுட்டிகளை சேகரிக்கலாம்.

இதுபோல ஏற்கனவே Favourites சேகரிக்கும் தளங்கள் இருக்கின்றனவே? முக்கிய வித்தியாசம் சுட்டிகளுக்கு குறிச்சொற்களை வழங்க முடிகிறது. மேலும் சில குறிப்புக்களோடும் சுட்டிகளை சேர்க்கலாம்.

குறிச்சொற்கள்னா?
Tags என அழைக்கப்படுகின்றன. ஒரு சுட்டி சொல்லும் சேதிக்கேற்ப, அதை பல சொற்களால் வகைப்படுத்தமுடிகிறது. உதாரணமாக 'தேன்' எனும் இந்தப் பதிவகத்துக்கு சிறில்அலெக்ஸ் தேன் வலைப்பதிவு சிறுகதை கவிதை சமூகம் கட்டுரை என குறிச் சொற்களை சேர்க்கலாம். இப்படி பல தொடர்புள்ள பதிவுகளை குறிச் சொர்களின்கீழ் வகைப்படுத்தலாம்.

பெரிய சுட்டிக்குவியலில் சிறுகதைகளைத் தேடவேண்டுமானால் சிறுகதை எனும் குறிச் சொல்லை சுட்டினால் போதுமானது. அதன் கீழிருக்கும் எல்லா சுட்டிகளும் பட்டியலிடப்படும்.

பெட்டகத்தில் என்ன சிறப்பு?
பெட்டகத்தில் நீங்கள் சேகரிக்கும் சுட்டிகளை உங்களுக்கென தனிப்பட்டதாகவும்(Private) பொதுவானதாகவும்(Public) அல்லது உங்களை கவனித்துக்கொண்டிருப்பவர்கள் (People watching your list) மட்டும் பார்க்க இயன்றதாகவும் வகைப்படுத்தலாம். இந்த சேவை புதியதாக உள்ளது. (Compared to Delicious).

'தனி' சுட்டிகள் சிவப்புக் கோட்டால் குறியிடப் படுகின்றன. ஆரஞ்சு நிறத்தில் 'கவனிப்பவர்களுக்காக' என வகைப்படுத்தப்பட்டவை குறியிடப்படுகின்றன. 'பொது' சுட்டிகள் குறியிடப் படவில்லை.

எப்படி பயன் படுத்துவது?
தேன்கூட்டில் அல்லது பெட்டகத்தில் பயனாளராக பதிவுசெய்துகொள்ளுங்கள். பெட்டகத்தில் நுழையுங்கள். பார்வையாளராய், அங்கே ஏற்கனவே சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் சுட்டிகளைக் காணலாம். குறிச்சொல் தொகுப்பை பயன்படுத்தலாம்.

'குறியத்தை சேர்க்க' எனும் பகுதிக்குச் சென்று உங்கள் சுட்டிகளை சேர்க்க ஆரம்பிக்கலாம்.

உங்கள் சொந்த சுட்டித் தொகுப்பைக் காண 'தேடுக' எனும் பகுதியில் 'என் குறியம்' என்பதை தேர்ந்தெடுத்து 'தேடுக' எனவும்.
pettagam.com
பெட்டகத்தின் உள் நுழையாமல் சுட்டிகளை சேகரிப்பதெப்படி?
'குறியத்தை சேர்க்க' எனும் பகுதியில் 'Post To பெட்டகம்' எனும் சுட்டியை உங்கள் உலவியின் favorites-ல் சேர்த்துக்கொண்டு(right click and add to favourites), பெட்டகத்தில் சேர்க்கவேண்டிய வலைப்பக்கத்திலிருந்து இந்த favorites சுட்டியை சுட்டி எளிதில் பெட்டகத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே del.icio.us பயனாளராயிருப்பவர்களுக்கு...
டெலிஷியஸில் சேகரிக்கப்பட்டிருக்கும் சுட்டித் தொகுப்பை எளிதில் பெட்டகத்தின் உளேற்றமுடிகிறது. 'குறியத்தை சேர்க்க' எனும் பகுதியில் கீழே, 'Import bookmarks from del.icio.us' எனும் சுட்டியை சுட்டினால் இதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

என் உலவியின் Favorits-ஐ சேர்க்கமுடியுமா?
முடியும். 'குறியத்தை சேர்க்க' என்மு பகுதியில் கீழே இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. கவனிக்க: இப்படி செய்யும்போது Private ஆகச் சேர்ப்பது நல்லது. நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் சுட்டிகளை பின்னர் பெட்டகத்தினுள் நுழைந்து Public-ஆக மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே நான் சேர்த்த சுட்டியை திருத்தவோ வேறு குறிச்சொற்களை சேர்க்கவோ வாய்ப்புண்டா?
நீங்கள் சேகரித்த சுட்டிகளை திருத்த அல்லது நீக்க வசதி உண்டு. ஒவ்வொரு சுட்டிக்கும் கீழே சுட்டிகள் தரப்பட்டுள்ளன.

அடுத்தவர் சேர்த்திருக்கும் சுட்டியை எனதாக்க முடியுமா?
ஆம். Copy எனும் சுட்டியை சுட்டி உங்களுக்குத் தேவையான குறிச் சொற்களோடு சேகரிக்கலாம்.

பிற பயனர்களை 'கவனிப்பது' எப்படி?
முகப்பிலுள்ள சுட்டித் தொகுப்பில் பயனாளர் பெயரை சுட்டி அவரது 'பொது' தொகுப்புக்களை பார்க்கலாம். அங்கே வலப்பக்கத்தில் 'கவனிப்பில் சேர்க்க' என்பதைச் சுட்டினால் அந்தப் பயனரின் 'பொது' சுட்டிகளும் 'கவனிப்பில் இருப்பவர்களுக்கு மட்டும்' என வகைப்படுத்தப்பட்ட சுட்டிகளையும் காண முடியும்.

முடிந்தவரை பெட்டகத்தை பயன்படுத்த தேவையானவற்றை சொல்லிவிட்டேன்.

இதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். கவனத்தில் கொள்ளவேண்டியவை சில.

குறிச்சொற்களை சேர்க்கும்போது முடிந்தவரை ஏற்கனவே இருக்கும்
குறிச் சொற்களை பயன்படுத்துவது நல்லது.

குறிச் சொற்கள் Space (ஒற்றை இடைவெளி) கொண்டு தனிப்படுத்தப்
படுகின்றன. 'சிறில் அலெக்ஸ்' என்பது சிறில் எனும் ஒரு குறிச் சொல்லாகவும் அலெக்ஸ் எனும் ஒரு குறிச்சொல்லாகவும் சேர்க்கப்படும். இவற்றை 'சிறில்அலெக்ஸ்' எனவோ அல்லது சிறில்_அலெக்ஸ் என்பது போலவோ சேர்ப்பதுதான் சரியாகும்.

பொதுவானவை என சேகரிக்கப்படும் சுட்டிகளை கவனத்துடன் சேர்க்கவும்.

குறிச் சொற்களை சரியாக தேந்தெடுப்பது அவசியம்.

உருப்படியானவற்றை மட்டுமே பொதுவில் வைக்க வேண்டுகிறேன். பெட்டகத்தின் சேவையை சிறப்படையச் செய்வது பயனீட்டாளர்கள் கையில்தான் இருக்கிறது.
நல்ல சுட்டிகளை 'பொதுவில்' செகரிப்பதன்மூலம் இதை கிட்டத்தட்ட 'பூங்கா' போன்ற ஒரு இதழாகவே இதை பயன்படுத்த முடியும்.

நண்பர்களை கவனிப்பில் வைப்பதன்மூலம் அவர்களின் சுட்டிகளைப் பார்க்க இயலும் (அவர் உண்மையிலேயே நண்பரா பகைவரா எனவும் கண்டுகொள்ளலாம் :)

வலைப்பதிவுகளுக்கேயான சேவையல்ல இது என்பதை நினைவில் கொள்க.
எந்தவித சுட்டியையும் இதில் சேகரிக்கலாம். ஆங்கிலத் தளங்களுக்கான சுட்டிகளை தமிழ் குறிச் சொற்களோடு சேர்த்துவைக்கலாம்.

பெட்டகம் தந்துள்ள தேன்கூட்டுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சில கருவிகளையும் மேம்பட்ட பயன்களையும் அவர்கள் தருவார்கள் என நம்புகிறேன். தேன்கூட்டின் புதிய வடிவம் பாராட்டும்படியுள்ளது.

என்ன, பெட்டகத்தை நிரப்பத் தயாரா?

தொடர்புள்ள சுட்டிகள்

http://pettagam.thenkoodu.com (or) http://pettagam.com

தேன்கூடு அறிவுப்பு

Friday, September 15, 2006

சுவையான தகவல்

del.icio.us ஒரு பயன்மிக்கத் தளம். உங்களுக்குப் பிடித்த சுட்டிகளை -URL- சேகரிக்கவும் ஒழுங்காய் தொகுக்கவும் பயன்படும்வகையில் உள்ளது.

எளிதில் பயனீட்டாளராய் பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள். சிறிய செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள். அது இரண்டு ஐக்கான்களை(Icons) உலவியில் நிறுவுகிறது. இதில் TAG எனும் ஐக்கான் மூலம் நமக்குப் பிடித்த சுட்டிகளை குறிச்சொற்களோடு சேகரிக்க முடிகிறது.


உங்கள் குறிச் சொற்களை மேலும் குழுக்களாய் சேர்க்கமுடிகிறது. படித்ததில் பிடித்த பதிவுகளை உங்கள் வார்ப்புருவின் பகுதியாக சேர்க்க Settings->Link Roll எனும் சுட்டிகளில் சென்று ஸ்க்ரிப்ட்டை உருவாக்கி வார்ப்புருவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போது ஆங்கிலமல்லாத எழுத்துக்கலிலான குறிச் சொற்களை லின்க் ரோல் ஆக்க இயலவில்லை. நான் ஏற்படுத்திய ஸ்க்ரிப்ட் நன்றாக இயங்கி வந்தது இப்போது இயங்கவில்லை. இதை del.icio.us க்கு தெரிவித்திருக்கிறேன் அவர்கள் பதில் நம்பிக்கை தருவதாயுள்ளது.

இன்னும் விரிவாய் தகவல்கள் வேண்டுவோர் பின்னூட்டம் வாயிலாக அல்லது தனி மடலில் கேட்டால் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

என் முந்தைய பதிவு நான் சேகரித்துள்ள சுட்டிகளின் குறிச் சொற்களின் தொகுப்பு.

இன்னுமொரு சுவையான தகவல். டெலிஷியசில் பயனீட்டாளர்கள் நெட்வொர்க் செய்துகொள்ள வசதி உள்ளது இதன்மூலம் ஒருவரின் சேகரிப்பை மற்றவர்களும் பார்த்து பயன்படுத்த முடிகிறது.

del.icio.us ஐ எனக்கு அறிமுகப் படித்திய நண்பருக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ்