.

Saturday, July 29, 2006

ஈராக். பென்சிலில்.

"இன்னைக்கு வெதச்சா ...." (தேவர் மகன்)

வீடு நோக்கி ஓடுகின்ற..??

கால்களை உடைத்துவிட்டு....


கனியிருக்கக் காய் கவரமாட்டார் புஷ்

அரசனின் புத்தாடை.

பாபா

வஜ்ரா

Friday, July 28, 2006

வஞ்சப் புகழ்ச்சி

அமெரிக்காவில் ஆட்டோக்கள் இல்லை என்கிற தைரியத்தில் ஸ்டீவன் கோல்பேர் அதிபர் புஷ்ஷை தாளிக்கும் உரை. பலர் பார்த்திருக்கலாம். இந்தமாதிரி உரைகளை 'ரோஸ்ட்' என்பார்கள். நம்ம ஊர்ல 'வறுத்தெடுப்பது'.

இதை பார்க்கும்போது முதலில் தோன்றுவது 'நம்ம ஊர்ல...' எனும் சிந்தனைதான்.

யரலவழல

கஞ்சிக்கு வழியில்லாமல், ஆங்கிலத்தில் பெயர் வைத்து தமிழ் படம் எடுத்துக் கொண்டிருந்த தமிழ் படத் தயாரிப்பாளர்களுக்குக் காதில் தேன் கொண்டு ஊற்றியிருக்கிறார் முதல்வர். தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்காம்.

தமிழ் வளர்ப்பில் எத்துணை முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் அரசு இழக்கும் பணத்தைக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயன்றிருக்கலாம், அல்லது தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வண்ணமோ, வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலோ ஈடுபட்டிருக்கலாம்.

குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம்.

இலவச அரசியலில், பண்ணையார்களுக்கு கடன் தள்ளுபடியும், தண்ணீர் விற்பனைக்கு இலவச மின்சாரமும் தந்துதவ யாரிடம் வசூலிக்கப்போகிறார்கள்? ஆட்சியாளர்கள் நடத்தும் வியாபரங்களிலுருந்தும், வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் பங்குகளை விற்றும் பண உதவி செய்வார்களோ என்னவோ.

தமிழில் பெயரை மாற்றிக்கொள்பவர்கள் கெசட்டில் அறிவிக்க கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது (440லிருந்து ரூ. 50 ஆக). தன் சொந்தப் பெயரை தமிழில் ஒருவர் மாற்றிவைத்துக் கொள்வாரானால் அவருக்கு அரசு ரூ. 50 வழங்கவேண்டும். அதுதான் தமிழ் வளர்க்கும் வழியாயிருக்கும். (நான்கூட என் பெயரை கலைஞர் தாசன் என மாற்றிக்கொள்வேன்.... இல்லை ரூ.50க்காக பெயரை மாற்ற முடியாது).

திரைப் படங்களுக்குச் சலுகை வழங்குவதைப் போலவே
வியாபாரக்கூடங்களுக்கும் வழங்கலாமே. 'நாடார் அண்ட் சன்ஸ்' மாற்றி 'நாடாரும் மகன்களும்' என வைக்கவும் 'நாயுடு ஹால்' 'நாயுடு (தமிழா?) அரங்கமாகவும்' மாறும். இதன் மூலம் சன் டி.வி கூட பெரிய பலனை அடையும்.

தமிழில் சினிமா பெயர் வைப்பதால் என்ன சாதிக்கப் போகிறார்கள்?

இந்தியாவில் 28 மாநிலங்கள் இருக்கின்றன 1652 தாய்மொழிகள் இருக்கின்றன எதை வளர்ப்பது எதை விடுப்பது. 'தமிழ் நாட்டில் புழக்கத்திலுள்ள எல்லா மொழிகளும் அதன் இலக்கியங்களும் பாதுகாக்கப்படும்', என்பதுதான் சனநாயகம்.

தமிழை வைத்து அரசியல் செய்துகொண்டு தமிழைக் காக்கிறோம் எனும் மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிரூக்கிறோமோ எனத் தோன்றுகிறது.

அடுத்தது என்ன மம்மி டாடி எனச் சொல்லாமல் அம்மா அப்பா எனக் கூறும் பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் இலவசமா?

சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர், சுப்ரீம் ஸ்டார்கள் எனப்படும் நடிகர்களுக்குத் தடை வந்தாலும் வரும்.

தலைப்பு? அடுத்து வரப்போகும் படத்தின் பெயர்தான்.

<<<<<<<<<<<உள்ளலின் பதிவு.>>>>>>>>

Wednesday, July 26, 2006

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து

அமெரிக்காவில் வருடத்திற்கு 1.5 மில்லியன் (15,00,000) நோயாளிகளுக்கு தவறான மருந்து வழங்கப்படுகிறதாம். டாக்டர்களின் கையெழுத்தை மருந்துக்கடைக்காரர் தவறாகப்புரிந்து கொள்வதால் நடைபெறும் தவறுகளும் இதில் அடக்கம். இவர்களுக்கு மாற்று சிகிச்சை அளிக்க ஆகும் செலவு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (நன்றி:டைம்ஸ்).

இப்பொதெல்லாம் கணிணியில் ஏற்றி மின்னணு வடிவில் மருந்துச்சீட்டை நீங்கள் விரும்பிய கடைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

நம்ம ஊரில் நிலமை எப்படியோ?

வலைப்பதிவு டாக்டர்கள் யாரேனும் ஏன் டாக்டர்கள் 'விக்சைக் கூட சுத்தி சுத்தி எழுதுகிறார்கள்' (நன்றி:விவேக்) எனச் சொல்ல முடியுமா?

Tuesday, July 25, 2006

மேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்

சற்று முன் வந்த செய்தி(ஜூலை 25 2006 9:20PM). இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஐ.நா சபை பார்வையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலுமிருவர் காணாமல் போயிருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும், புஷ் பாணியில்,தீவிரவாதிகளை கொல்கிறேன் பேர்வழி என்று கொன்று குவிக்கிறது,இஸ்ரேல். இப்போது ஐ.நா சபை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பது பிரச்சனையில் இஸ்ரேலின் பக்கத்தை கொஞ்சம் வலுவிழக்கச் செய்திருக்கிறது.

கோஃபி ஆனன் இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்றிருக்கிறார்(Attack "apparently deliberate," U.N. head says-CNN). இஸ்ரேல் இதை மறுத்துள்ளது (Israel's U.S. envoy outraged by Annan comment - CNN).

அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேல், ஐ.நாவெல்லாம் இவர்களுக்கு ஒரு பெரிய விஷயமா?

Monday, July 24, 2006

கலைக்குச் சிலை

சிவாஜி கணேசன் ஒரு மாபெரும் நடிகர் என்பதில் ஒரு சிலருக்கு எப்பவுமே சந்தேகம் இருக்கிறது. இது பெரிய உயிர்போகிற விஷயமொன்றில்லை என்றாலும் சினிமா இரசிகன் என்கிற முறையில் எரிச்சலூட்டுகிறது.

மிகைப்படுத்தும் நடிகர்(ஓவர் ஆக்டிங்) என எளிதில் இவருக்கு சான்று வழங்குபவர்கள் நடிப்பு என்றாலே மிகைப்படுத்துதல் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

நாடகங்கள் படமாக்கப்பட்ட காலகட்டத்திலே, முடமாய், முட்டாளாய், கம்பீர அரசனாய் கோழையாய், பனக்காரனாய் ஏழையாய், கோமாளியாய், ஏமாளியாய் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்.

இவருக்கு தமிழகம் முழுவதும் சிலை வைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மரபுடைத்தலின் சிதம்பர இரகசியம்

மரபுகளை உடைத்தெறியத் தூடிக்கிறோம் நம்மில் பலர். புரட்சிகரமான கருத்து, வரவேற்வேண்டிய முயற்சி. ஆனால் யாரின் மரபுகளை நாம் உடைத்தெறியத் துடிக்கிறோம் என்பது பெரிய கேள்வி.

அடுத்தவரின் மரபுகளை உடைத்தெறிந்து நம் மரபுகளைத் திணித்து
நிலைநிறுத்தச் செய்யும் முயற்சிக்குப்பெயர் மரபுடைத்தலா?

மரபுகள் பலவும் சட்டங்களாக்கப்பட்டுள்ளன அவற்றையும் உடைத்தெறியலாமா?
சிதம்பரம் விஷயத்தில் முதல்வர் சொல்லியிருப்பதுபோல சட்டப்படி உரிமை யாருக்கு உள்ளதோ அதை அவருக்குத் தருவதே நியாயமாகும்.

பெரியார் கோவிலுக்குள் நுழைந்து போராடியது சட்டப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கும் பெரும் முயற்சி. அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது.

அடுத்தவர் நமக்குச் செய்யும் தீங்குகளே நமக்குப் பெரிதாய் படுகிறது நாமே நமக்குச் செய்யும் துரோகங்களை நாம் எண்ணிப்பார்க்கும் நாள் எந்நாளோ? நம் வீட்டுக் குப்பையைப் பெருக்கி தெருவில் போடும் பழக்கம் எப்பத்தான் போகுமோ?

தமிழ் ஒரு ஒப்பற்ற மொழி என்பதி சந்தேகமேயில்லை. அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் முக்கால்வாசிபேர் தமிழர்களே. இதில் எத்தனை தமிழ்த்தலைவர்கள் அடக்கம் என்பது ஊருக்கே வெளிச்சம்.

அடுத்தவர் மரபுகளை மாற்றத் துடிப்பவர்கள் தன் மரபுகளை சுய ஆய்வு செய்து களையவேண்டியவற்றை களைந்துவிட்டு வரவேண்டும்.

பலரும் தமிழ் நாடு தனி நாடென்றே நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் தமிழ் பேசிவிட்டால் எவ்வளவு வசதியாயிருக்கும் எனவும் கனவு காணலாம் சிலர்.

குறுகிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து அடையாளப்படுத்துவதிலிருந்து (மனிதர்களாகிய)நாம் விடுதலை பெறவேண்டும். இல்லையென்றால் எல்லையில்லா இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவோம்.

இந்தியர்களுக்கே உரிய குணம் தங்கள் நாட்டைப்பற்றி மிகயாகவும் அடுத்தவர்களைக் குறையாகவும் பேசுவது எனப் படித்திருக்கிறேன். எவ்வளவு உண்மை.

Friday, July 21, 2006

சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

எங்கு பார்த்தாலும் சிதம்பரதில் தமிழில் பாடுவது குறித்த சூடான விவாதங்கள். பதிவுகள் பல பல செய்திகளையும் கோணங்களையும் தந்தாலும் முகமூடியின் பதிவும், 100சில பின்னூட்டங்களும் பிரச்சனையை முழுமையாய் அலசியிருக்கின்றன.

உண்மையில் நம்(பதிவர்கள்) மத்தியிலிருக்கும் பிரிவினை மனப்பாங்குகளின் காரணத்தால் இந்த விஷயத்தைப் பற்றி எந்த கருத்தையும் வெளிப்படுத்த எனக்கு தயக்கமிருந்தது. இருப்பினும் சில பதிவுகளில் பின்னூட்டமிட நேர்ந்தது.

என் தயக்கத்தை உறுதி செய்யும் வண்ணம் முகமூடியின் பதிவில் ஜோவின் பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டமிட்ட ஒரு பெயரிலி நம்மை வம்புக்கிழுத்துள்ளார்.

இவரின் முதல் நோக்கமென்ன, கிறித்துவர்கள் இந்து பிரச்சனைகளை விவாதிக்கக் கூடாது என்பதே. உண்மையில் சிதம்பர பிரச்சனை ஒரு சமூக பிரச்சனையாக (திரிக்கப்பட்டு?) கையாளப்பட்டுவருகிறது. 'தமிழ்' பிரச்சனை எனத்தான் இது அறியப்படுகிறது. இருந்தாலும் ஜோ, சிறில் எல்லாம் மூடிக்கிட்டு இருக்கணும்.

முகமூடியின் பதிவில் நான் எந்த பின்னூட்டமும் இடாதபோது என்னை கிறித்துவ அடிப்படைவாதி என முத்திரை குத்தி வம்புக்கிழுத்த பெயரிலியை வன்மையாக கண்டிக்கிறேன்.

அவருக்குத்தான் அவர் பெயரிலி ஆனால் அவர் யாரென்பது அவரின் பின்னூட்ட்டங்களில் எளிதாய் தெரிகிறது.

ஜொவின் பின்னூட்டங்கள் நாகரீகமாய், பிரச்சனைபற்றி எல்லோருக்கும் எழும் சில கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தார் என்பதும் ஒரு போதும் அவர் யாரையும் இழிவாய் பேசவில்லை என்பதும் அவரை அந்தப்பதிவிலேயே பாராட்டியிருக்கும் மற்ற பதிவர்களின் (முகமூடி உட்பட) பின்னூட்டங்கள் சொல்லும்.

சிதம்பரம் பிரச்சனையில் என் கருத்து என்ன? எல்லா நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன. கல்வி நிலையங்கள் முதல் நம் வீடுவரை எழுதப்படாத விதிகள் பல நியமத்திலுள்ளன. இவை அந்தந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லொருக்கும் செம்மையாய் சென்றடைய உதவுகின்றன என்பதே உண்மை.

தீக்சிதர்களைப்போல நானும் உள்ளே சென்று ஓதுவேன் என இவர் கேட்பது மொழி பிரச்சனையாகத்தெரியவில்லை. வீம்பாகத்தான் தெரிகிறது. மொழி பிரச்சனை என்றால் இது தமிழில் வழிபாடு நடத்தாத, நடத்த அனுமதிக்காத எல்லா கோவில்களுக்கும் பொருந்துமே, ஏன் சிதம்பரத்தில் மட்டும் போராட்டம்?

முகமூடி கேட்பதுபோல் சர்ச்சில் ஃபாதருக்குப்பதில் ஒரு கிறித்துவரே போய் நாந்தான் பூசைவைப்பேன் எனக் கேட்பது முட்டாள்தனமில்லையா?

மதங்கள் என்பதே கடவுளைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுப்பாட்டு வளையம்தானே. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லையென்றால் அந்த மதத்தில் நாம் இல்லை என்றுதான் பொருள்.

தமிழ் வளர்ச்சி தேவைதான் ஆனா அதையே ரெம்ப அதிகமா எல்லா விஷயங்களிலும் புகுத்துவது ஏனோ நமக்கு தமிழ், தமிழர் பற்றிய தாழ்வு மனப்பன்மையக்காட்டுதோன்னு தோணுது.

எந்த கலாச்சாரமும் அழியும், புதுமைபெறும். இறப்பு எப்படி மனிதனுக்கு நிச்சயமோ அதுபோலத்தான், சில கலாச்சாரங்கள் சிதையும், மருவும், மாறும். இறப்பும், அழிவும் எத்தனை நல்லவிஷயங்கள் என்பது நடராசரின் பேரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

'சிவா', அழிக்கும் கடவுள். அவரின் பெயரின் அர்த்தம் 'மங்களம்'. அழிக்கும் கடவுளுக்கு மங்களமானவர் என எப்படிப் பெயர் வந்தது? பழையன அழியும்போதுதான் புதியன தோன்றும். அதுக்காக தமிழை அழிப்போம் எனச் சொல்லவில்லை, ஆனால் தமிழ் மெல்லச் சாகிறதென்றால் அதை நிம்மதியாகச் சாகவிடுவதே மேல் என நினைக்கிறேன்.

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் வரவேற்க்கத்தக்கதே ஆனால் எல்லா சாதியினரும் எல்லா கோயிகளிலும் முதன்மையான பூசைகள் செய்யலாம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது. அது ஒருசாரருக்கு நன்மமசெய்கிறோம் எனநினைத்து மற்றவர்களின் உரிமைகலை பறிப்பதுபோலாகும்.

பல இந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி நியாயமாகப் படுகிறது. ஏன் இந்து மதம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது? மதம் அரசிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். உண்மையில் தங்கள் வழிபாட்டு முறைகாளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை வேறெந்த மதமும் ஏற்றுக்கொள்ளுமா?

சரி விஷயத்துக்குவருவோம். நம் அனானியின் பின்னூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்(சிரித்துக்கொண்டே). இதே அனானி தூண்டப்படாமலே பிற மதங்களைத் தாக்கியிருக்கிறார் தன் பின்னூட்டங்களில். ஆனால் மத்தவங்கள அடிப்படைவாதின்னு நினைத்தமாட்டிலே எழுதிட்டுப்போவாரு.

எனக்கு ஒரே கேள்வி... எப்படி நாம் இப்படி சிந்திக்க கத்துக்கொண்டோம்?
நான் சார்ந்த எதுவுமே கேள்விகளுக்கும், குறைகூறுதலுக்கும் அப்பாற்பட்டது எனநினைக்கிறோமே. ஏன்.. எப்படி? கேள்வி எனக்கும்தான்.

Tuesday, July 04, 2006

சிக்காகோ தாவரவியல் பூங்கா - IV








சிக்காகோ தாவரவியல் பூங்கா - III

சிக்காகோ தாவரவியல் பூங்கா - II
சிக்காகோ தாவரவியல் பூங்கா - I

சிக்காகோ தாவரவியல் பூங்கா - III






சிக்காகோ தாவரவியல் பூங்கா - II

சிக்காகோ தாவரவியல் பூங்கா - I

சிக்காகோ தாவரவியல் பூங்கா - II







சிக்காகோ தாவரவியல் பூங்கா - I

சிக்காகோ தாவரவியல் பூங்கா - I








சிவபாலன் சொன்னதன்பேரிலும், டி.வி பார்த்து போரடித்துவிட்டதாலும் நேற்று கிளம்பி வீட்டிலிருந்து 20 நிமிட தூரத்தில் இருக்கும் சிக்காகோவின் தாவரவியல் பூங்கா போனபோது எடுத்த படங்கள்.

சிறில் அலெக்ஸ்