.

Wednesday, July 26, 2006

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து

அமெரிக்காவில் வருடத்திற்கு 1.5 மில்லியன் (15,00,000) நோயாளிகளுக்கு தவறான மருந்து வழங்கப்படுகிறதாம். டாக்டர்களின் கையெழுத்தை மருந்துக்கடைக்காரர் தவறாகப்புரிந்து கொள்வதால் நடைபெறும் தவறுகளும் இதில் அடக்கம். இவர்களுக்கு மாற்று சிகிச்சை அளிக்க ஆகும் செலவு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (நன்றி:டைம்ஸ்).

இப்பொதெல்லாம் கணிணியில் ஏற்றி மின்னணு வடிவில் மருந்துச்சீட்டை நீங்கள் விரும்பிய கடைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

நம்ம ஊரில் நிலமை எப்படியோ?

வலைப்பதிவு டாக்டர்கள் யாரேனும் ஏன் டாக்டர்கள் 'விக்சைக் கூட சுத்தி சுத்தி எழுதுகிறார்கள்' (நன்றி:விவேக்) எனச் சொல்ல முடியுமா?

20 comments:

கோவி.கண்ணன் said...

//வலைப்பதிவு டாக்டர்கள் யாரேனும் ஏன் டாக்டர்கள்//

ஒரு டாக்டர் இருக்கிறார் அவர் எஸ்கே'ப் ஆகாமல் வந்து பதிலளிப்பார் என்று நான் ப்ரஸ்கிரிப்ஷன் தருகிறேன் :))

Anonymous said...

கண்ணன்,
எல்லா டாக்டர்களும் எச்கேப் ஆகிட்டாங்கபோலிருக்கே

கோவி.கண்ணன் said...

அனுப்புகிறேன் :)

VSK said...

நான் மிகவும் ரசித்துப் பார்க்கும் ஒரு 'க்ளிப்' அது.
இங்கு விஜய் டி.வி. யில் அனேகமாக தினமும் போடுவார்கள் அதை!
அதிலும் அந்த விடலைப் பையன்[விவேக் அஸ்ஸிஸ்டன்ட்]தையத்தக்கான்னு குதிப்பானே, அது படு தமாஷ்!

அது இருக்கட்டும்!

இங்கு அமெரிக்காவில் ப்ரிஸ்க்ரிப்ஷன் என்று எழுதிக் கொடுப்பது ஒரு அரிதான நிகழ்வு!
அனேகமாக அனைத்து நோயாளிகளும் ஒரு ஃபார்மஸியைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பர்.
அவர் கையில் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்தாலும், எங்களது அலுவலகத்தில் இருந்து எமது செயலர் அந்த குறிப்பிட்ட ஃபார்மஸியை தொலைபேசியில் அழைத்து அல்லது ஃபேக்ஸ் மூலம் அனுப்பியே மருந்துகள் வழங்கப் படுகின்றன.
'தவறான மருத்துவமுறை [ ] என்ற ஒன்றும் இங்கு மருத்துவர்களை மிகவும் பயமுறுத்தி, துன்புறுத்துவதால், இதில் தவறு நிகழ அதிகம் வாய்ப்பில்லை.
எனவே, என்னால் இந்தக் குற்றச்சாட்டைப் புரிந்து கொள்ள முடிய வில்லை.

மணியன் said...

அடடா, பிரிஸ்கிரிப்ஷனின் ட்ரான்ஸ்கிரிப்ஷன் நம்மூரிலே நடக்கிறதே, அதுவும் ஒரு காரணமோ ?

சிறில் அலெக்ஸ் said...

SK,
(sry no tamil)

I recently got two prescriptions, both handwritten.

சிறில் அலெக்ஸ் said...

//அடடா, பிரிஸ்கிரிப்ஷனின் ட்ரான்ஸ்கிரிப்ஷன் நம்மூரிலே நடக்கிறதே, அதுவும் ஒரு காரணமோ ? //

The cnfusion is because of the handwriting being misunderstod by thepharmasist. Time says.

கோவி.கண்ணன் said...

சிறீல்,
எஸ்கேப் ஆகாமல் வந்துவிட்ட டாக்டர் யார் என்று தெரிகிறதா ?
:))

VSK said...

Cyril,
I really can't understand this. You must be having insurance and your preferred pharmacy. We usually call in the pharmacy after giving out a prescription for your record or other purposes.

And, the pharmacist is required to call mu office if he is unsure.

still mistakes could happen

If you dont have a PP, then we have to give in a prescription in your hands. Mistakes could have happened there. But, now there is a reling that the prescription should be legible and preferably in capitals. May be these incidents could have been the eye-opener!

Pl. give me the date of this TIMES issue.
May be there is a libel here!!
I'll share it with you!!
:)

சிறில் அலெக்ஸ் said...

SK,
Current issue of TIME says this
----
1.5 million Average number of patients injured a year by medication errors of health professionals, including doctors' bad handwriting

$3.5 billion Annual cost of treating those drug-related injuries
----
I had written wrongly .. :(

சிறில் அலெக்ஸ் said...

தெரிகிறது கண்ணன்.

நன்றி எஸ்.கே. பொதுவாக டாக்டர்களத்தான் சூ பண்ணுவாங்க நீங்களே லைபிள் கெட்டா எப்படி?

இப்ப நாந்தான் லைபிள்தரணும்.

பதிவை திருத்திவிடுகிறேன்.

VSK said...

I think it talks about "INJURIES" like tripping, traffic accidents, etc. due to wrong dosage information, or medicine and the treatment cost for the same.

I will refer the issue and will get back to you.
Could you be more specific asto the date of issue and the topic to save time? Thanks.

உங்கள் நண்பன்(சரா) said...

//ஒரு டாக்டர் இருக்கிறார் அவர் எஸ்கே'ப் ஆகாமல் வந்து பதிலளிப்பார் என்று நான் ப்ரஸ்கிரிப்ஷன் தருகிறேன் :)) //


கோவி.. உம்முடைய குசும்பு நாளுக்கு நாள் அதிகமாகின்றது, குறிப்பாக SK-யுடம் மோதும் உமது பின்னூட்டங்கள்,

ஆமா... SK ஆயிரம் பேரைக் கொன்றால் தான் அரை வைத்தியனாமே...
நீங்கள் எப்படி அரையா..?அல்லது முழு வைத்தியனா..? பதில் கவிதையாக இருந்தால் சிறப்பு...



அன்புடன்...
சரவணன்.

G.Ragavan said...

அங்கயுமா இப்பிடி...கிழிஞ்சது போங்க...

வீட்டுக்கு வீடு வாசப்படி
இதயங்கள் ஆசைப்படி....

சிறில் அலெக்ஸ் said...

SK.
Issue dated July 31,2006

'THE WAY OUT' cover.
page20, Under section 'Numbers'.

This is the page with Cartoons.

சிறில் அலெக்ஸ் said...

//வீட்டுக்கு வீடு வாசப்படி
இதயங்கள் ஆசைப்படி.... //

ஆசைப்படியா..? :)

கோவி.கண்ணன் [GK] said...

//ஆமா... SK ஆயிரம் பேரைக் கொன்றால் தான் அரை வைத்தியனாமே...
நீங்கள் எப்படி அரையா..?அல்லது முழு வைத்தியனா..? பதில் கவிதையாக இருந்தால் சிறப்பு...//

எஸ்கே சார் சார்பாக,

பைத்தியங்கள் வையித்தியத்தை நோயாக்கிய பழமொழி
ஆயிரம் பேரைக் கொன்றால் அவன் அரை வைத்தியனென்பது
பைத்தியமும் நீக்கும் வைத்தியத்தின் பழையமொழியிது
ஆயிரம் வேரைக் கொண்டால் அவன் அரை வைத்தியன்

அரைகுறை யென்று ஆக்கிவைத்த பழமொழிகளை
அரைகுறை வைத்தியனைப் போல் அரைவிட்டும்
அறைவிட்டும் அறவே துறத்தி, வைத்தியம் அறமெயென
அறைந்து கூறி அருஞ்சொற் பொருள் கூறுவீர்!

கோவி.கண்ணன் said...

விளக்கம் : ஆயிரம் விதமான வேர்களை கண்டு கொண்டிருந்தால் அந்த காலத்தில் வைத்தியம் பாதி அளவிற்கு தெரிந்திருக்கும் என்ற பொருளில் 'ஆயிரம் வேரைக் கண்டால் அவன் அரை வைத்தியன்' என்று சொல்லிவந்தார்கள். அதாவது அரை சித்த வைத்தியன். பல்வேரு மரப்பட்டைகளையும், வேர்களயும், மூலிகைகளையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்

சிறில் அலெக்ஸ் said...

//ஆயிரம் வேரைக்...//
கலக்கிட்டீங்கோ(வி) கண்ணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

பாடல் அருமை,
அதை விட அதற்க்கான விளக்கம் அருமையோ அருமை!!!

கோவி, கலக்குறீங்க!!!
வாழ்த்துக்கள்...


என்ன ஆச்சு SK-க்கு இப்பொல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிற மாதிரித் தெரியுது, நாட்ல தான் இருக்கிறாரா? இல்லை எதாவது காட்டுல வேற(ர)த் தேடுறாரா...?



அன்புடன்...
சரவணன்.

சிறில் அலெக்ஸ்