.

Monday, July 24, 2006

மரபுடைத்தலின் சிதம்பர இரகசியம்

மரபுகளை உடைத்தெறியத் தூடிக்கிறோம் நம்மில் பலர். புரட்சிகரமான கருத்து, வரவேற்வேண்டிய முயற்சி. ஆனால் யாரின் மரபுகளை நாம் உடைத்தெறியத் துடிக்கிறோம் என்பது பெரிய கேள்வி.

அடுத்தவரின் மரபுகளை உடைத்தெறிந்து நம் மரபுகளைத் திணித்து
நிலைநிறுத்தச் செய்யும் முயற்சிக்குப்பெயர் மரபுடைத்தலா?

மரபுகள் பலவும் சட்டங்களாக்கப்பட்டுள்ளன அவற்றையும் உடைத்தெறியலாமா?
சிதம்பரம் விஷயத்தில் முதல்வர் சொல்லியிருப்பதுபோல சட்டப்படி உரிமை யாருக்கு உள்ளதோ அதை அவருக்குத் தருவதே நியாயமாகும்.

பெரியார் கோவிலுக்குள் நுழைந்து போராடியது சட்டப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கும் பெரும் முயற்சி. அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது.

அடுத்தவர் நமக்குச் செய்யும் தீங்குகளே நமக்குப் பெரிதாய் படுகிறது நாமே நமக்குச் செய்யும் துரோகங்களை நாம் எண்ணிப்பார்க்கும் நாள் எந்நாளோ? நம் வீட்டுக் குப்பையைப் பெருக்கி தெருவில் போடும் பழக்கம் எப்பத்தான் போகுமோ?

தமிழ் ஒரு ஒப்பற்ற மொழி என்பதி சந்தேகமேயில்லை. அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் முக்கால்வாசிபேர் தமிழர்களே. இதில் எத்தனை தமிழ்த்தலைவர்கள் அடக்கம் என்பது ஊருக்கே வெளிச்சம்.

அடுத்தவர் மரபுகளை மாற்றத் துடிப்பவர்கள் தன் மரபுகளை சுய ஆய்வு செய்து களையவேண்டியவற்றை களைந்துவிட்டு வரவேண்டும்.

பலரும் தமிழ் நாடு தனி நாடென்றே நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் தமிழ் பேசிவிட்டால் எவ்வளவு வசதியாயிருக்கும் எனவும் கனவு காணலாம் சிலர்.

குறுகிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து அடையாளப்படுத்துவதிலிருந்து (மனிதர்களாகிய)நாம் விடுதலை பெறவேண்டும். இல்லையென்றால் எல்லையில்லா இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவோம்.

இந்தியர்களுக்கே உரிய குணம் தங்கள் நாட்டைப்பற்றி மிகயாகவும் அடுத்தவர்களைக் குறையாகவும் பேசுவது எனப் படித்திருக்கிறேன். எவ்வளவு உண்மை.

48 comments:

கால்கரி சிவா said...

//குறுகிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து அடையாளப்படுத்துவதிலிருந்து (மனிதர்களாகிய)நாம் விடுதலை பெறவேண்டும். இல்லையென்றால் எல்லையில்லா இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவோம்.
//

அருமை...அருமை...மிக அருமை

சீமாச்சு.. said...

//குறுகிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து அடையாளப்படுத்துவதிலிருந்து (மனிதர்களாகிய)நாம் விடுதலை பெறவேண்டும். இல்லையென்றால் எல்லையில்லா இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவோம்.//

நல்ல அருமையான வரி. சிறில் நல்ல அருமையான கருத்து. இதைத்தான் தாடிக்காரரும் சொன்னார்..

நீங்க நினைக்கிற தாடிக்காரர் இல்லை..

இரவீந்தரநாத தாகூர்.

Where the mind is without fear and the head is held high
Where knowledge is free

Where the world has not been broken up into fragments
By narrow domestic walls

Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection

Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit

Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awak

அன்புடன்,
சீமாச்சு...

சிறில் அலெக்ஸ் said...

சீமாச்சு,
எனக்கும் மிகவும் பிடித்த கீதாஞ்சலிப் பாடல்..

நானே மொழிபெயர்த்திருக்கிறேன்..

VSK said...

//தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் முக்கால்வாசிபேர் தமிழர்களே. இதில் எத்தனை தமிழ்த்தலைவர்கள் அடக்கம் என்பது ஊருக்கே வெளிச்சம்.//


இத்தனை நாட்களாக அருச்சனை என்றாலே வடமொழியில் இறைவன் புகழ் பாடும் பெயர்களே சொல்லப்பட்டு வந்தது!
"தமிழிலும்" அருச்சனை செய்ய வேண்டும் என நியாயமான கோரிக்கை வைத்தார்கள்!
"தமிழிலும்" இனி அருச்சனை செய்யப்படும் என சட்டம் கொண்டு வந்தார்கள்.
"தமிழிலும்" அருச்சனை செய்யப்படும் என பலகை வைத்தார்கள் கோயிலில்.
"தமிழிலும்" அருச்சனை செய்யப்படும் என எழுதி வைப்பது அவலமாயிருக்கிறது எனப் பேசுகிறார்கள் சட்டமன்றத்தில், இன்று!

இட்டிலி சாப்பிட்ட பின் தோசை சாப்பிட்டால், "தோசையும்" சாப்பிட்டதாகத்தானே பொருள்?
இது எப்படி அவலமாகும்?
சத்தம் போடாமல், ஒரு அரசு சுற்றறிக்கையின் மூலம் செய்ய வேண்டியதை சத்தம் போட்டுச் செய்பவர்களே இந்த அரசியல் தலைவர்கள்தாம்!

ஒருவேளை, தமிழில் அருச்சனை செய்தால் ஆட்சிக்குக் கேடுகாலம் என யாராவது ஜோசியக்காரன் சொல்லி, "எப்படி இதை நிறுத்துவது? சரி, பலகையை அகற்றிவிடலாம். யாருக்கும் தெரியாது! தெரிந்தால்தானே தமிழில் அருச்சனை செய்யச் சொல்லப்போகிறார்கள்? என முதலமைச்சர் நினைத்து விட்டரோ என்னமோ?

இதையே பா, ஜ, க, சொல்லியிருந்தால், இந்நேரம் "ஐயோ தமிழை அழிக்கிறானே பாவி" எனக் குய்யோ முறையோவென கோஷம் கிளம்பியிருக்கும்!

மரபு, அதனை உடைப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை!
என் மரபை வழியாக்கு எனும் சண்டித்தனம்தான்!

விவேக் ஒரு பாட்டு பாடுவாரே!
"உன் பணம் அது என் பணம்- அதே
உன் பணம் என் பணம்"ன்னு!

அது போலவே இதுவும்!

கோவி.கண்ணன் said...

//மரபுகளை உடைத்தெறியத் தூடிக்கிறோம் நம்மில் பலர். புரட்சிகரமான கருத்து, வரவேற்வேண்டிய முயற்சி. ஆனால் யாரின் மரபுகளை நாம் உடைத்தெறியத் துடிக்கிறோம் என்பது பெரிய கேள்வி.//

ஒரு பொதுப் பார்வையில் உங்கள் கேள்வி ஞாயமானதுதான். மரபுகளை உடைத்தெறிகிறோம் என்று ஏன் நினைக்கவேண்டும், இழுந்த மரபுகளை மீட்டெடுப்பதாக நினைக்கலாம் அல்லவா ? மீட்டெடுத்தல் என்பது ஆக்ரமிப்பு அகற்றுவது தானே ? ஒன்றை அகற்றாமல் மீட்சி சாத்தியமா ?
இவ்வாறு மரபுகள் காப்பற்றவது வேறு பார்வையில் மற்றொரு மரபை உடைப்பதாக தோன்றுவதும் உன்மைதான். இது உலகம் தோன்றிய நாள் முதலாய் நடந்துவருகிறது. இதை ஞாயம் என்று சொல்லவில்லை.

பிகு : பின்னூட்டம் முதல் பத்திக்கு மட்டும்தான்

சிறில் அலெக்ஸ் said...

//சத்தம் போடாமல், ஒரு அரசு சுற்றறிக்கையின் மூலம் செய்ய வேண்டியதை சத்தம் போட்டுச் செய்பவர்களே இந்த அரசியல் தலைவர்கள்தாம்!//

சிதம்பரப்பிரச்சனைக்கு இலவச இணைப்பு

//இதையே பா, ஜ, க, சொல்லியிருந்தால், இந்நேரம் "ஐயோ தமிழை அழிக்கிறானே பாவி" எனக் குய்யோ முறையோவென கோஷம் கிளம்பியிருக்கும்!//

ஆமா அப்படியும் ஒரு கோணமிருக்குது..

சிரிப்புத்தாங்க வருது

சிறில் அலெக்ஸ் said...

மணியன்,
அழகாய்சிந்திக்கிறீர்கள். மனித வரலாறு எத்தனை காலத்துக்கும் முற்பட்டது, இதில் எத்தனைக்காலம் பின்னால் போய் மீட்டெடுப்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு இனமும் அடிமைப்பட்டிருக்கிறது, அடிமைப்படுத்தியிருக்கிறது,குறைந்த பட்சம் தங்களுக்குள்ளேயாவது சண்டைபோட்டுக்கொண்டுள்ளது இதையெல்லாம் கணக்கில் கொண்டால் மீட்டெடுப்பு செய்துகொண்டேயிருக்கலாம்.

இந்தியாவைப்பொறுத்தவரை சுதந்திரம் பெற்றது ஒரு புதிய துவக்கம், நாமே நமக்காக சட்டங்களை இயற்றும் கடமையும், உரிமையும் வந்தபின் என்னென்ன நடக்கிறது, நடக்கவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அரசகாலப் பகைமையை இன்றும் மனதில் கொள்வோமென்றால் சேர சோழ பாண்டிய நாடாக நம்மைப் பிரித்துக்கொண்டு சண்டை போடவேண்டிவரும்.

பிராமணர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டால் சாதி ஒழிந்து சமுதாயம் உருப்பட்டுவிடுமென்கிறீர்களா?

அப்படி ஒரு காலம் வருந்தால் தெரியும் உண்மையில் நம் தலைவர்களின் சிலரின் குறிக்கோள்கள் என்னவாயிருந்தன என்பதும், சாதி என்பது வெறும் பார்ப்பனர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்பதும்.


இன்னொன்று மரபுகளை உடைக்கவே வேண்டாமென்பது என் வாதமல்ல. நம்மிடமிருந்து இது துவங்க வேண்டுமென நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//At 7:07 PM, சிறில் Alex said...
மணியன்,
அழகாய்சிந்திக்கிறீர்கள்.
//

சீறில், மணியன் யாருங்க ?

எனக்கு போட்ட பின்னூட்டம் போல் உள்ளது, மேலே மணியன் என்று யாரும் பின்னூட்ட மிடவில்லை, போன 'இது புதுசு' பதிவில் கூட இதே குழப்பம் எனக்கு ஏற்பட்டது. மேலெ போடப்பட்டது எனக்கான பின்னூட்டமா ?

மணியன் பனியன் போட்டிருப்பாரா ? :)))

ஜோ/Joe said...

//அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன்.//

சிறில்,
இந்த கீறல் விழுந்த ரெக்கார்டை எப்போது நிறுத்துவீர்களோ தெரியவில்லை .இங்கே யாரும் அடுத்த மொழியை அழித்துத் தான் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என கருதவில்லை .தமிகத்தில் தமிழுக்கு முதல் மரியாதை இருக்க வேண்டும் என நினைக்கிறோம் .இது தவறா ? பொதுமைப்படுத்துவது பற்றி நீங்களே பல முறை பேசி விட்டு தமிழ் ஆர்வலர்கள் எல்லோரும் அடுத்த மொழியை அழித்து தமிழ் மொழியை வாழ்விக்க துடிக்கின்றனர் என்பதும் தவறான பொதுமைப்படுத்துதல் தான் .இதை நீங்கள் உணர்ந்தால் நல்லது .

ஜோ/Joe said...

////குறுகிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து அடையாளப்படுத்துவதிலிருந்து (மனிதர்களாகிய)நாம் விடுதலை பெறவேண்டும். இல்லையென்றால் எல்லையில்லா இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவோம்.
//

அருமை...அருமை...மிக அருமை//

ஆகா என்ன அருமை .வளைகுடா நாட்டில் வசித்த போது கால்கரி சிவா தன்னை இந்தியனாகவும் இந்துவாகவும் அடையாளப்படுத்தாமல் அரபுகளோடு ஒன்றோடு ஒன்று கலந்து அந்த அன்பு மழையில் நனைந்த கதைகளைத் தான் தொடராக படித்தோமே!

குமரன் (Kumaran) said...

ஹிஹி. கோவி.கண்ணன் ஐயா. கோவித்துக் கொள்ளக் கூடாது. எனக்கும் தொடக்கத்தில் உங்களுக்கும் மணியன் ஐயாவிற்கும் இடையே குழப்பம் வந்ததுண்டு. ஒரு வேளை இருவரும் ஒரே மாதிரி பின்னூட்டங்கள் இடுகிறீர்களோ என்னவோ?

இன்னொரு குழப்பம்: வவ்வாலுக்கும் காஞ்சி பிலிம்ஸுக்கும் இடையில். ஆனால் அதுவும் இப்போது இல்லை. :-)

சிறில் அலெக்ஸ் said...

கண்ணன்,
கொவை மணியன் & கோவி கண்ணன் சின்னகுழப்பம்.மன்னிக்கவும்.

ஜோ/Joe said...

//பலரும் தமிழ் நாடு தனி நாடென்றே நினைக்கிறார்கள்.//

மகாராஷ்டிராவிலும் ,கர்நாடகாவிலும் தமிழனுக்கு என்ன வேலை என்று விரட்டியதைப் போல நாங்கள் யாரையய்யா விரட்டினோம் ?

எந்த மாநிலத்திலைய்யா வேற்று மாநிலத்தவரை முதல்வராகவும் ,சூப்பர் ஸ்டாராகவும் ஆக விட்டார்கள் ?

வர வர புனிதப் பசுக்கள் போல பேச ஆரம்பித்து விட்டீர்கள் .வருந்துகிறேன்!

சிறில் அலெக்ஸ் said...

//தமிகத்தில் தமிழுக்கு முதல் மரியாதை இருக்க வேண்டும் என நினைக்கிறோம் .இது தவறா ?//

ஜோ சரியா சொன்னீங்க..இதையே இந்திய நாட்டில் இந்திக்கு முதன்மை வேண்டுமென்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறோம். இந்தியாதான் நாடு,தமிழ் நாடு மாநிலம்தானே.

// பொதுமைப்படுத்துவது பற்றி நீங்களே பல முறை பேசி விட்டு தமிழ் ஆர்வலர்கள் எல்லோரும் அடுத்த மொழியை அழித்து தமிழ் மொழியை வாழ்விக்க துடிக்கின்றனர் என்பதும் தவறான பொதுமைப்படுத்துதல் தான் .இதை நீங்கள் உணர்ந்தால் நல்லது .//

இதை ஒரு வாதமாகத்தான் வைக்கிறேனே தவிரவேறொன்றும்மில்லை. உண்மையில் தமிழை (வீரப்பன்போல) வைத்து அரசியல் செய்பவர்களே அதிகம். இதை தமிழ் ஆர்வலர்கள் எதிர்க்கவேண்டுமென நினைக்கிறேன்.

என் மகன்னுக்கு தமிழ் தவிற வேரெதுவும்சொல்லித்தரவில்லை நான் ஆனா உரிலிருந்து பேசும் எல்லோரும் ஏன் ஆங்கிலம் சொல்லித்தரலன்னு கேட்கும்போது தமிழரிடத்தில் தமிழ் எத்துணை மதிப்புடன் இருக்கிறது எனத் தெரிகிறது. இதுக்கெல்லாம் ஒரு வழிகட்டினாலே போதும்.

சிறில் அலெக்ஸ் said...

//எந்த மாநிலத்திலைய்யா வேற்று மாநிலத்தவரை முதல்வராகவும் ,சூப்பர் ஸ்டாராகவும் ஆக விட்டார்கள் ?//

இதைப் பெருமையாகவா கருதுகிறீர்கள்?
பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறார்கள்,இல்லையா?

புனிதப் பசுவெல்லாமில்லை. கொஞ்சம் யோசித்தால் எப்படி மாயைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறோம் என்பது எல்லோருக்கும் புரியும். அல்லது இப்படிச் சொல்லலாம் வாழ்க்கை பற்றிய என் எண்ணக் கோணம் முற்றிலும்வேறுபட்டதாயுள்ளது.

எல்லோரும் கழுதை மாதிரியோ குதிரை மாதீரியோ மட்டும் சிந்தித்தால் எப்படி, சிலர் பசுமாதிரியும் யோசிக்கவேண்டுமே. :)

ஜோ/Joe said...

//இதையே இந்திய நாட்டில் இந்திக்கு முதன்மை வேண்டுமென்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறோம். இந்தியாதான் நாடு,தமிழ் நாடு மாநிலம்தானே.//

இந்தியா என்பது பல மாநிலங்கள் சேர்ந்த ஒரு கூட்டு அமைப்பு .ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்த வட்டார மொழி இருக்கிறது .அந்தந்த மாநிலங்களில் அந்த மொழிக்கு முதல் மரியாதை இருக்க வேண்டும் . ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்தில் பேசப்படுவதால் இந்திக்கு இந்தியா முழுவதும் முதல் மரியாதை கொடுக்க வேண்டுமென்று அவசியம் இல்லை .ஒருவன் தமிழ்நாட்டுக்காரனாகவும் ,இந்தியனாகவும் இரண்டு பேராய் இருக்க முடியாது .மொழி அவனுடைய பிரதேசம் கலாச்சாரம் சார்ந்தது .நாடு அவனுடைய ராஜ்ஜிய ,அரசியல் சார்ந்தது .ஒற்றை மொழியால் அடையாளப்படுத்தப்படுகிற பல நாடுகளைப் போலல்லாமல் ,இந்தியா பல மொழி பேசும் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரே நிர்வாகத்தில் உருவாக்கப் பட்ட நாடு .அதற்காக அந்தந்த பிரதேச மக்கள் தங்கள் சொந்த மொழியையும் கலாச்சாரத்தையும் உதறி விட்டு பொது முறைக்கு வர வேண்டும் என சொல்வது "இருக்க இடம் கொடுத்தா...." என்று வரும் பழமொழியையே நினைவு படுத்துகிறது.

இந்தியை நீங்கள் தேசிய மொழியாகவே வைத்துக்கொள்ளுங்கள் ஐயா ! தேவையானவர்கள் அதைப் படிக்கட்டும் .தேவையில்லை என்ரு நினைப்பவர்கள் அதைப் படிக்காமல் இருக்கடும்.

ஜோ/Joe said...

////எந்த மாநிலத்திலைய்யா வேற்று மாநிலத்தவரை முதல்வராகவும் ,சூப்பர் ஸ்டாராகவும் ஆக விட்டார்கள் ?//

இதைப் பெருமையாகவா கருதுகிறீர்கள்?
பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறார்கள்,இல்லையா?//

நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
நீங்கள் தான் ஏதோ தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணையாமல் இருப்பது போலவும் மற்றவர்கள் சதா பாரதத்தின் ஒட்டு மொத்த நலனையே கருத்தில் கொள்வது போலவும் சொன்னீர்கள் .நிலமை தலை கீழாகவல்லவா இருக்கிறது என்றால் இதில் பெருமையா என்று கேட்கிறீர்கள் ..நான் என்ன தான் செய்வது?

ஜோ/Joe said...

//என் மகன்னுக்கு தமிழ் தவிற வேரெதுவும்சொல்லித்தரவில்லை நான் ஆனா உரிலிருந்து பேசும் எல்லோரும் ஏன் ஆங்கிலம் சொல்லித்தரலன்னு கேட்கும்போது தமிழரிடத்தில் தமிழ் எத்துணை மதிப்புடன் இருக்கிறது எனத் தெரிகிறது. இதுக்கெல்லாம் ஒரு வழிகட்டினாலே போதும்.//

வழியை வேறு யார் கட்ட முடியும் .நாம் தான் காட்ட முடியும் .நீங்கள் உங்கள் ஊரிலுள்ளவர்களுக்கு வழி காட்டிடிருக்கிறீர்கள் .நானும் அதே போல காட்டியிருக்கிறேன் .இது போல அவரவர் செய்யத்தொடங்கினால் மாற்றம் தானாக வரும் ..உங்கள் மகனுக்கு தமிழ் மட்டும் சொல்லித்தர வேண்டும் என்பதில்லை .அமெரிக்காவில் இருந்தாலும் தமிழையும் சொல்லிக் கொடுக்க மறக்கக் கூடாது .அதை செய்யும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

கோவி.கண்ணன் said...

//பிராமணர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டால் சாதி ஒழிந்து சமுதாயம் உருப்பட்டுவிடுமென்கிறீர்களா?//

இந்த கேள்வியை ஏன் என்னிடம் எழுப்பினீர்கள். நான் எங்கே அப்படி சொன்னேன் ? இது மணியனுக்காக கேட்ட கேள்வியா ? தயவு செய்து தெளியப்படுத்தவும் :)))

ஜோ/Joe said...

//என் மகன்னுக்கு தமிழ் தவிற வேரெதுவும்சொல்லித்தரவில்லை நான் ஆனா உரிலிருந்து பேசும் எல்லோரும் ஏன் ஆங்கிலம் சொல்லித்தரலன்னு கேட்கும்போது தமிழரிடத்தில் தமிழ் எத்துணை மதிப்புடன் இருக்கிறது எனத் தெரிகிறது.//

சிறில்,
ஏன் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கவில்லை என்று கேட்பதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை .தமிழோடு ஆங்கிலமும் தெரிந்திருப்பது நல்லது தான் .உங்கள் உறவினர்கள் தமிழ் சொல்லிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ,ஆங்கிலம் சொல்லிக்கொடு என்று சொல்லியிருந்தால் தான் அது வருந்தத்தக்கது .நீங்கள் இந்தியே சொல்லிக்கொடுங்கள் .தவறில்லை .ஆனால் தமிழை விட்டுவிடாதீர்கள் .இதுவே என் கருத்து.

கோவி.கண்ணன் said...

சீறில்,
உங்களுக்கு மறுமொழி போடனும் என்றால் பின்குறிப்பு போட்டு அதில் 'நான் மணியன் அல்ல' எழுத வேண்டும் போல நினைக்கிறேன்.

பின்குறிப்பு : ஒரே கேள்வியை வேறுபட்ட இரு நபர்கள் கேட்கும் பொழுது, கிடைக்கும் பதில் கேட்கப்படும் ஆளைப் பொருத்து மாறும் :))

ஜோ/Joe said...

சிறில்,
பல மொழிகள் பேசுகின்ற மற்ற நாடுகளுக்கும் நமக்கும் வேறுபாடுகள் உள்ளது .உதாரணமாக சிங்பப்பூர் ,மலேசியாவை எடுத்துக்கொள்ளுங்கள் .இங்கே சீனம் ,மலாய் ,தமிழ் பரவலாக பேசப்படுகிறது .ஆனால் அதற்கு தனித்தனி பிரதேசங்கள் கிடையாது .எல்லா இடங்களிலும் எல்லா மொழியினரும் கலந்து வாழ்கிறார்கள் .ஆனால் இந்தியா அப்படியல்ல .நமது மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது .அவ்வாறு பிரிக்கப்பட்டபோது தவறுதலாக தமிழர் பகுதியான நமது குமரி மாவட்டம் கேரளாவோடு இருப்பதை கண்டித்து அதை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என வெகுகாலம் போராடி நாம் தமிழகத்தோடு இணைந்தோம் என்பது உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

கண்ணன்,
அந்தப் பின்னூட்டம் உங்களுக்கானதுதான். விவாதச் சூழலில் பிரச்சனை பார்ப்பனீயம் பற்றியுமிருந்ததால் அதை எடுத்துச் சொன்னேன். தனிப்பட்ட முறையில் எதுவுமில்லை.

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை ஆனால் அது அரு வசதிக்காகவே என்பதையும் நினைவில்கொள்ளவேண்டியுள்ளது. குறுகிய உணர்வுகளால் விளையும் தீமைகளே அதிகம் என நான் எண்ணுகிறேன்.

குழலி / Kuzhali said...

//தமிழ் ஒரு ஒப்பற்ற மொழி என்பதி சந்தேகமேயில்லை. அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் முக்கால்வாசிபேர் தமிழர்களே. இதில் எத்தனை தமிழ்த்தலைவர்கள் அடக்கம் என்பது ஊருக்கே வெளிச்சம்.
//
சிறில், சிற்றம்பலத்தில் தமிழுக்கு அனுமதி தராமல்(அழித்து) சம்ஸ்கிரத்திற்கு அனுமதி தந்து(காப்பாற்றி) இருப்பது ஒரு பிரச்சினை, தமிழ் தலைவர்களின் தவறுகள் தமிழ் சமுதாயத்தின், தமிழ் மொழியின் தவறுகள் அல்ல.


//மரபுகள் பலவும் சட்டங்களாக்கப்பட்டுள்ளன அவற்றையும் உடைத்தெறியலாமா?//
சட்டமாக்கப்பட்ட மரபுகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், பொதுவாக இல்லாத மரபுகள் சட்டமானால் அதையும் உடைத்தலே சரியாகும். மனுநீதிப்படி யான மரபுகள் இன்று சட்டமாக இல்லை, சட்டம் சம உரிமை தருகின்றது/தரவேண்டும்.


//பெரியார் கோவிலுக்குள் நுழைந்து போராடியது சட்டப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கும் பெரும் முயற்சி. அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது.
//
சிதம்பரம் கோவிலும் தனியார் நிறுவனமும் ஒன்றா?

டீக்ககடை தனியார் ஒருவருக்கு உரிமையானது, அதில் தலித்களுக்கு தனி டம்ளரில் வழங்குவது அந்த தனியாருடைய மரபு என்று அதை அனுமதிக்கலாமா?

இந்திய சமூகத்தில் தீண்டாமை ஒரு மரபுதான், அவைகள் உடைக்கப்பட பிறகு தான் சட்டமானது, சட்டமான பின் உடைக்கப்படவில்லை, உடன்கட்டை ஏறும் வழக்கம் உடைக்கப்பட்ட பின் தான் சட்டமானது, மரபுகள் பொதுவாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அவை உடைக்கப்படவேண்டும், இப்போதே சொல்கிறேன் சமூகம் அதன் தவறுகளை அவ்வப்போது திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் திருத்தப்படாத இந்த தவறுகள் மிகப்பெரிய அழிவிற்கு வழி வகுக்கும்.

ஜோ/Joe said...

//மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை ஆனால் அது அரு வசதிக்காகவே என்பதையும் நினைவில்கொள்ளவேண்டியுள்ளது.//

தவறு சிறில்! வெறும் வசதிக்காக அவை பிரிக்கப்படவில்லை .அந்தந்த பிரதேச மொழி ,கலாச்சாரத்துக்கு தனித்தன்மையும் அங்கீகாரமும் வேண்டும் என்பதற்காகவே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படன .வசதிக்காக பிரிக்கப்பட்டது என்றால் ,70 கீமீ தூரத்தில் மாநிலத் தலைநகரே(திருவனந்த புரம்) இருந்த போது , 600 கி.மீ தூரத்தில் தலைநகரைக் கொண்டுள்ள மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்று உங்கள் ,எங்கள் ஊர்க் காரர்கள் போராட வேண்டிய அவசியமென்ன ?

ஜோ/Joe said...

// குறுகிய உணர்வுகளால் விளையும் தீமைகளே அதிகம் என நான் எண்ணுகிறேன்.//
கண்டிப்பாக .அதில் எப்படி மாற்றுக்கருத்து இருக்க முடியும் .ஆனால் எது குறுகிய கண்ணோட்டம் என்பதில் தான் கருத்து வேறுபாடே .ஊரிலுள்ள குடும்பங்களையெல்லாம் மதித்தாலும் ,நட்போடு இருந்தாலும் ,உங்கள் குடும்பத்தை அதிகமாக நேசிப்பது ,முக்கியத்துவம் கொடுப்பது குறுகிய கண்ணோட்டமா ? .ஊரிலுள்ள அத்தனை தாய்மார்களையும் தெய்வமாக நீங்கள் நினைத்தாலும் உங்கள் தாயை அதற்கு ஒரு படி மேலே தானே வைத்திருப்பீர்கள் ,அது குறுகிய கண்ணோட்டம் ஆகி விடுமா ?

இங்கே தமிழ் உணர்வு கொள்வது குறுகிய கண்ணோட்டம் என்று உங்களோடு ஒத்திசைப்பவர் பலரிடம் 'இந்தியன் என்ற உணர்வும் குறுகிய கண்ணோட்டம் தான்' என்று சொல்லிப்பாருங்களேன் ? ஏன் இந்தியனை விடுத்து உலகன் என்று நினைக்கக்கூடாது என்று நீங்கள் கேட்பீர்களா?

எனக்கு தமிழ் உணர்வும் இருக்கிறது .இந்தியன் என்ற உணர்வும் இருக்கிறது . எப்படி என் குடும்பம் தழைக்க வேண்டும் என நினைக்கிறேனோ அது போல தமிழ் மொழியும் ,இந்திய நாடும் தழைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் .என் குடும்பம் தழைக்க வேண்டும் என்பதற்காக மற்ற குடும்பங்களை கெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லையொ ,அது போல மற்ற மொழிகளும் ,நாடுகளும் நாசமாய் போனால் தான் என் மொழியும் நாடும் தழைக்கும் என்று நான் நினைக்கவில்லை .இது குறுகிய கண்ணோட்டமா?

தருமி said...

இந்தியர்களுக்கே உரிய குணம் தங்கள் நாட்டைப்பற்றி மிகயாகவும் அடுத்தவர்களைக் குறையாகவும் பேசுவது எனப் படித்திருக்கிறேன்.//
சிறில்,
முழுமையாக, சரியாக உண்மைக்கு எதிரான ஒரு கருத்து என்று நினைக்கிறேன். அது நீங்கள் இருக்கும் அமெரிக்காவாக இருக்கட்டும்; இல்லை, அண்டார்டிக்காக இருக்கட்டும். foreign இன்ற மாயை, கனவு, ஆசை; foreign என்றாலே அது ஏதோ ரொம்ப ஸ்பெஷல் அப்டிங்கிற மனப்பான்மைதான் நமக்கெல்லாம் அதிகம் என்பதே உண்மை. இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவது நல்ல விஷயம்.

பிகு : பின்னூட்டம் கடைசி வரிகளுக்கு மட்டும்தான்.
மற்ற கருத்துக்களோடும் உடன்பாடில்லை.it appears to be far one sided! dont lose the neutrality that you showed in some of your earlier posts like the one on religion.

ஓகை said...

//இந்தியர்களுக்கே உரிய குணம் தங்கள் நாட்டைப்பற்றி மிகயாகவும் அடுத்தவர்களைக் குறையாகவும் பேசுவது எனப் படித்திருக்கிறேன். எவ்வளவு உண்மை.//

இது இந்தியர்களின் குணம் மட்டுமில்லை. மனிதர்களின் பொது குணம் என்பதை பல நாட்டவர்களின் பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டிருக்கிறேன்

மற்றபடி உங்கள் எல்லா கருத்துகளும் எனக்கு உடன்பாடே.

மிக அருமையான பதிவு

வஜ்ரா said...

சிறில் அலெக்ஸ்,

அதுக்குள்ளெ. ஒரு நடுனிலைவாதி, உங்கள் கருத்துக்கள் ஒரு பக்கச்சாய்வு உள்ளதாகச் சொல்லியிருக்கிறார்.

தேவையாங்க...இது...!!

திராவகம் பேசும் தமிழர்களுக்கு,

தமிழ் வளர்ச்சிக்கு தமிழை வளர்ப்பதைவிட மாற்று மொழியை அழிப்பதே குறிக்கோளாகிவிட்டது.

சிதம்பரம் விஷயத்தில்,

தமிழ் ஒரு ஊறுகாய்....இவர்கள் கோவிலின் நிர்வாகத்தை அபகரிக்க தமிழை ஊற்காயாகப் பயன் படுத்துகிறார்கள்...

ஜோ வின் கருத்துக்கள்,
I am afraid, is not at all logical. He should go shout in a catholic church to read bible in tamil and tamil only. And probably change his name to a pure tamil name.

sivagnanamji,
தமிழில் பாடக்கூடாது என்று சிதம்பரம் பாவப்பட்ட தீக்ஷிதர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொன்னது ஜூ. வி யில் வெளியாகியிருந்தது...

Its a typical political stunt to take control of the temple by hook or crook.

..
If they want to take control of temple, they should do it in a legal way. I would defenitely support it.

சிறில் அலெக்ஸ் said...

முத்து(குழலி),
//சிறில், சிற்றம்பலத்தில் தமிழுக்கு அனுமதி தராமல்(அழித்து) சம்ஸ்கிரத்திற்கு அனுமதி தந்து(காப்பாற்றி) இருப்பது ஒரு பிரச்சினை, தமிழ் தலைவர்களின் தவறுகள் தமிழ் சமுதாயத்தின், தமிழ் மொழியின் தவறுகள் அல்ல//

தமிழ்தலைவர்கள் தரும் வெற்றிமட்டும் தமிழர்களின் வெற்றியா?

//சட்டம் சம உரிமை தருகின்றது/தரவேண்டும்.//

இதையேத்தான் தீக்சிதர்களும் சொல்லுகிறார்கள். சட்டப்படி யாருக்கு உரிமை இருக்கிறதோ அவர்களுக்கு கோவிலைகட்டுப்படுத்தும் உரிமை இருக்கிறது.

//இப்போதே சொல்கிறேன் சமூகம் அதன் தவறுகளை அவ்வப்போது திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் திருத்தப்படாத இந்த தவறுகள் மிகப்பெரிய அழிவிற்கு வழி வகுக்கும்.//

இதில் தமிழ்சமூகமும் அடக்கம்தானே?

சிறில் அலெக்ஸ் said...

ஜோ/முத்து(குழலி),

உங்கள் கேள்விகள் உங்கள் பக்க நியாயங்களைக்கூறினாலும் எனக்கு சில விஷயங்கள் சரியாப் படல. தமிழ் நாட்டை மொழிவாரியாத்தான் பிரிச்சாங்க அதுனால தமிழர்மட்டும்தான் வாழனும், தமிழருக்கு மட்டும்தான் தமிழ் நாட்டுல உரிமை இருக்குன்னு சொல்லமுடியுமா?

தமிழ்நாட்டில் எங்குபார்த்தாலும் தமிழ்தான் பேசவேண்டுமென்பது சாத்தியமா? திணிப்பில்லையா?

சிதம்பரத்தில் தமிழில் பாடத் தடையில்லை, என்கிறபோது பிரச்சனை கருவறைக்குள் தமிழில்பாடும் வழக்கமில்லை. என்பதுதான். அங்கே ஆங்கிலத்திலும், மலையாளத்திலும்கூடப்பாட அனுமதியில்லை. அதற்கா இவர்கள் தமிழை நீசமொழி எனக் காலில் போட்டு மிதிப்பவர்களாகிவிடுவார்களா?

கோவில் பொதுச் சொத்தாயிருந்தாலும் சட்டப்படி கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பும் உரிமையும் சிலருக்குத்தான் இருக்குது, இது பல கோவில்களிலும் வம்சவளி வருது,சாதிப்படியும் வருது.

சிதம்பரத்தில் எல்லொருக்கும் சமௌரிமை இருக்குதுன்னா நாளைக்கே நான் அங்கே போய் கிறித்துவப் பாடல்களைப் பாட அனுமதிக்கவேண்டுமென்றுசொன்னால் நல்லாயிருக்குமா?

ஏதோ எனக்குத் தெரிந்த சில கருத்துக்கள்.

மெஜாரிட்டி மக்கள்சேர்ந்துகொண்டு ரொரு மைனாரிட்டியின் உரிமையைப் பறிப்பதுபோலத் தோன்றுகிறது.

சட்டப்படி இதில் என்னத் தீர்வு வருகிறதோ அதுவெ நல்ல முடிவாயிருக்கும்.

சிறில் அலெக்ஸ் said...

//சிறில்,
முழுமையாக, சரியாக உண்மைக்கு எதிரான ஒரு கருத்து என்று நினைக்கிறேன். அது நீங்கள் இருக்கும் அமெரிக்காவாக இருக்கட்டும்; இல்லை, அண்டார்டிக்காக இருக்கட்டும். foreign இன்ற மாயை, கனவு, ஆசை; foreign என்றாலே அது ஏதோ ரொம்ப ஸ்பெஷல் அப்டிங்கிற மனப்பான்மைதான் நமக்கெல்லாம் அதிகம் என்பதே உண்மை. இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவது நல்ல விஷயம்.//

தருமி,
இதை என் அமெரிக்க நண்பர்கள் சொல்லியும் கேட்டிருக்கிறேன். சொல்லப்போனால் முன்பெல்லாம்சரளமாக ஒருவரிடம் இந்தியாவையும் அமெரிக்காவையும் (கலாச்சாரத்தை வரலாற்றை) ஒப்பிட்டு பேசுவேன். இதில் நம்மை உயர்த்தியே பேசிப்பழக்கம்.

இதைத்தான் சொன்னேன்.

இது அமெரிக்க இந்தியர்களுக்கு அதிகமுள்ள பழக்கமாய்கூட இருக்கலாம்.

//பிகு : பின்னூட்டம் கடைசி வரிகளுக்கு மட்டும்தான்.
மற்ற கருத்துக்களோடும் உடன்பாடில்லை.it appears to be far one sided! dont lose the neutrality that you showed in some of your earlier posts like the one on religion. //

உங்கள் கருத்துக்கு நன்றி தருமி. உண்மையில் சில கருத்துக்களை வாதங்களாகத்தான் வைக்கிறேன்.

இந்த விஷயத்தில் நடு நிலமை என்பது சட்டஉத்தை நாடுவது, நிலைநிறூத்துவதுதான். அதைச் சொல்லியிருக்கிறேன் (முதல்வரும் அதைத்தான் சொல்யிருக்கிறார்)

சிறில் அலெக்ஸ் said...

யாரோ போலி வந்து இடையில் புகுந்துவிட்டார். இவர் கொஞ்சம் சாதுவான பொலியானதால் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டிருந்தது. கண்டு சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஓகை,
நன்றி.

aathirai said...

கருணாநிதியின் மகனும், பேரனும், கொள்ளுப்பேரனுமே
தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்று சட்டம் போட்டால்
எத்தனை பேர் ஏற்பீர்கள். முக்கியமாக சிறில் அவர்களே,
நீங்கள் ஏற்பீர்களா?

இதே ரேட்டில் போனால் உங்களுக்கு ஆழ்வார் பட்டம்
கூட கிடைக்கலாம்.

உங்களுக்கு இந்த url ஐ பரிந்துரைக்கிறேன்.
http://www.tamilnation.org/heritage/cholarule.htm

-L-L-D-a-s-u said...

//சிதம்பரத்தில் தமிழில் பாடத் தடையில்லை, என்கிறபோது பிரச்சனை கருவறைக்குள் தமிழில்பாடும் வழக்கமில்லை. என்பதுதான். அங்கே ஆங்கிலத்திலும், மலையாளத்திலும்கூடப்பாட அனுமதியில்லை.//

தமிழை உருவாக்கியவர் சிவன் என்ற நம்பிக்கையின்படி, தமிழில் மட்டுமே அங்கு பாடவேண்டும் என்ற மரபு இருந்திருந்தால் , அந்த லாஜிக்கைப் புரிந்துகொள்ளலாம் .

அல்லது, இறைவன் எல்லோருக்கும், எல்லா மொழிகளுக்கும் பொதுவானவன் என்பதால் (இறைவனுக்கு எல்லா மொழியும் புரியும் என்ற நிலையில்) அங்கு கூடியிருக்கும் மக்களுக்கு புரிகின்ற எந்த மொழியிலும், மலையாளம்,. ஆங்கிலம், இந்தி , சமஸ்கிருதம், என எந்த மொழியிலும் பாடலாம் என்ற மரபு இருந்திருந்தால், அந்த லாஜிக்கையும் புரிந்துகொள்ளலாம் . இதுவே நான் விரும்புவதும் .

ஆனால் சமஸ்கிருதம் தான் மரபு என்றால் அந்த மரபை புரிந்துகொள்ளமுடியவில்லை .

// He should go shout in a catholic church to read bible in tamil and tamil only//
You can read bible in Tamil, Telugu , English or even in Sanskrit . ;)

ஜோ/Joe said...

வஜ்ரா,
//I am afraid, is not at all logical.//

நன்றி!
//He should go shout in a catholic church to read bible in tamil//
சந்தேகமென்ன .தமிழகத்தில் தமிழர்கள் அதிகம் செல்லும் தேவாலயத்தில் தமிழில் துருப்பலி வைக்க முடியாது எனும் நிலை வந்தால் கத்துவது என்ன போராட்டமே நடத்த எண்ணுவேன்.


//and tamil only.//
வேறு மொழிகளிலும் இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை.

//And probably change his name to a pure tamil name.//
இது பற்றி பல முறை விளக்கியாகிவிட்டது .மீண்டும் சொன்னால் மட்டும் உமக்கு விளங்கவா போகிறது?


சிறில்,

//ஜோ/முத்து(குழலி),//

இருவருக்கும் பொதுவாக பதில் சொல்லும் போது இருவர் சொன்னதும் ஒரே கருத்தா என தயவு செய்து பார்க்கவும்.

//தமிழர்மட்டும்தான் வாழனும், தமிழருக்கு மட்டும்தான் தமிழ் நாட்டுல உரிமை இருக்குன்னு சொல்லமுடியுமா?

தமிழ்நாட்டில் எங்குபார்த்தாலும் தமிழ்தான் பேசவேண்டுமென்பது சாத்தியமா?//

யாரிடம் கேட்கிறீர்கள் ? நான் எங்கே இப்படி சொல்லியிருக்கிறேன் ? பரந்த மனம் எங்களுக்கும் உண்டு ஐயா!

நான் சொன்னது
//எனக்கு தமிழ் உணர்வும் இருக்கிறது .இந்தியன் என்ற உணர்வும் இருக்கிறது . எப்படி என் குடும்பம் தழைக்க வேண்டும் என நினைக்கிறேனோ அது போல தமிழ் மொழியும் ,இந்திய நாடும் தழைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் .என் குடும்பம் தழைக்க வேண்டும் என்பதற்காக மற்ற குடும்பங்களை கெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லையொ ,அது போல மற்ற மொழிகளும் ,நாடுகளும் நாசமாய் போனால் தான் என் மொழியும் நாடும் தழைக்கும் என்று நான் நினைக்கவில்லை .இது குறுகிய கண்ணோட்டமா?//

இதை நீங்கள் புரிந்து கொண்டது ரொம்ப நல்லாயிருக்கு. நீங்கள் திரும்பத்திரும்ப நான் சொல்லாத்தையெல்லாம் நான் அப்படித்தான் நினைப்பேன் என்ற அனுமானத்திலேயே சொல்லும் போது அலுப்பாக இருக்கிறது .இனிமேல் இது குறித்து உங்களிடம் விவாதிப்பதாக இல்லை .நன்றி!

சிறில் அலெக்ஸ் said...

//அல்லது, இறைவன் எல்லோருக்கும், எல்லா மொழிகளுக்கும் பொதுவானவன் என்பதால் (இறைவனுக்கு எல்லா மொழியும் புரியும் என்ற நிலையில்) அங்கு கூடியிருக்கும் மக்களுக்கு புரிகின்ற எந்த மொழியிலும், மலையாளம்,. ஆங்கிலம், இந்தி , சமஸ்கிருதம், என எந்த மொழியிலும் பாடலாம் என்ற மரபு இருந்திருந்தால், அந்த லாஜிக்கையும் புரிந்துகொள்ளலாம் . இதுவே நான் விரும்புவதும் .
//

நல்ல கருத்து. குறைந்த பட்சம் தமிழை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்கிறது. எல்லா கோவிலகளுக்கும் இந்த புதிய மரபு பொருந்தவேண்டும் என்பதே என் ஆவல்.

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
உங்கள் மனம் புண்படவேண்டும் என எதையும் எழுதவில்லை. சட்டப்படி உரிமையை எல்லோரும் பெறவேண்டும் என நினைக்கிறேன் சொல்லப்போனால் இது மட்டுமேஎன் நிலைப்பாடு. ஆனால் தமிழை/தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் நோக்கத்தை எதிர்க்கிறேன். சில கருத்துக்களை வாதத்துக்காகவே வைக்கிறேன் அதுவும் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஒவ்வாமைக்கு ஒத்துப் போகிறோம், அவ்வளவே.

சிறில் அலெக்ஸ் said...

ஆதிரை,
உங்கள் பதிவிலிருந்து இந்த சுட்டியைப் பார்த்தேன் முழுவதும் படிக்கவில்லை.

சட்டமென்று இருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். ஜனநாயகமென்பது அதுதானே? இதுபோல சட்டங்கள் வராமல் தடுக்கத்தானே பல 'தூண்களை' சனநாயகம் கொண்டுள்ளது.

வம்சாவழி வருவதை 'எல்லாம்' தவிர்க்கமுடியுமா? கோவில் யாருக்குச் சொந்தம் என்பதுதான் கேள்வியானால் அதை நீதிமன்றம்தான்(சட்டம்) முடிவு செய்யவேண்டும்.

நம் நிலத்தில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்றால் அவரை வெளியேற்றுவதற்கு சட்டத்த நாடுவதில்லையா...?

வஜ்ரா said...

..
//and tamil only.//
வேறு மொழிகளிலும் இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை.
..

அப்ப சமஸ்கிருதத்தில் தீக்ஷிதர்கள் பாடினால் தான் என்ன கேடு வந்து நேர்ந்தது, அதுவும் உங்களுக்கு...? தீக்ஷிதர்கள் தான் தமிழில் யார் வேண்டும் என்றாலும் பாடலாம் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்களே?

இல்லை, தீக்ஷிதர்கள் நின்று பாடும் அந்த இடத்திலிருந்து தான் பாடுவேன் என்பது விதண்டாவாதம்...மூடத்தனம், அதை தயவு செய்து சப்போர்ட் செய்யவேண்டாம்...(அதுக்கு சப்போர்ட் தேடத்தான் இந்த தமிழ் stunt).

பிரச்சனை,
தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் அல்ல என்பதை உணருங்கள்...பிரச்சனை இங்கே, தமிழ் தமிழ் என்று கதரவிட்டுவிட்டு, கோவில் உண்டியலிலிருந்து "ஹஜ்" யாத்திரைக்கு எப்படி பணம் எடுக்கலாம் என்று யோசிக்கும் மத்திய கிழக்கு மதங்களின் கூலிப்படை (Pseudo-secularists) எண்ணுவது தான். அதைத் தான் சிறில்.

..
ெரியார் கோவிலுக்குள் நுழைந்து போராடியது சட்டப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கும் பெரும் முயற்சி. அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது.
..

தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
..
//And probably change his name to a pure tamil name.//
இது பற்றி பல முறை விளக்கியாகிவிட்டது .மீண்டும் சொன்னால் மட்டும் உமக்கு விளங்கவா போகிறது?
..
உங்கள் பெயர்காரணம் புரிந்து கொண்டால் மட்டும் எனக்கென்ன நோபல் பரிசா கிடைக்கப் போகிறது..

Thekkikattan|தெகா said...

இங்கு எனது ஐயப்பாட்டை வைப்பதா வேண்டாமா என ஒரு நிமிடம் யோசித்தே முன் வைக்கிறேன்...

இது என்னுடைய சொந்த அனுபவம். நான் நிறைய முறை வட இந்தியா பயணங்கள், சும்மா குருட்டான் போக்கிலே போறதுண்டு. பச்சை பாலாட்டாம். இன்னமும் அப்படித்தான் இருக்கிறேன்.

இருப்பினும் நான் சந்திக்க நேரிட்ட சில கசப்பான அனுபவங்கள் தனிப்பதிவுகளாக பின்னாலில் இடலாமமென்று நினைத்துள்ளேன்.

அவைகள் பெரும்பாலும் நான் வட இந்தியாவில் மொழி தெரியாமல் எப்படி அந்த ஊர் மக்களால் எது போன்ற கேள்விகளும், எது போன்ற விழிப்பு வார்த்தைகளும் பயன் படுத்தப்பட்டன எனக்கெதிராக என்பதே. ஆனால், தென்னிந்தியாவில் அது போன்ற சிரமாங்கள் அவர்களுக்கு கிடையாது என்றே கருதுகிறேன். உ.தா: ஒருவர் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்டால் நிறைய பேர் ஆர்வமாக முன்வந்து தனது மொழித் திறமையை காட்ட முன் வருவார்கள், அது ஹிந்தியே ஆனாலும் கூட.

நிலைமையோ சற்றெ தலைகீழ் இந்தியாவின் பல மாநிலங்களில்.

இரண்டு கட்டங்களில், நான் சிறீலங்காவிலிருந்து வருவதாகவும், மாதராஸி யான்னு ஒரே சிரிப்பாகவும் அவர்களுக்கு இருந்து போனோம்.

சரி சிறில், நீங்க தமிழ் Vs சமஸ்கிரதம் சார்ந்த வரலாறு படித்திருக்கிறீர்களா? இந்த இரு மொழிகளுமே சமகால மொழிகள் (contemporary languages) பல இன்னல்களை சந்தித்தே இந்த மைனாரிட்டி தமிழ் தப்பிப் பிழைத்து வந்திருக்கிறது என்பது தெரிய வரும்.

இன்றைய நடைமுறை ஆங்கில அகராதிகளில் தமிழுக்கு விளக்கம் - ஒரு இறந்து போன இந்திய பிராந்திய மொழி (a dead ancient language). டைவர்சிடி என்பது சில பல நேரங்களில் தொலைந்து போகமல் இருக்க எதிர் நீச்சல் போடுவது இன்றியமையாதது. அதுவும் இன்றுள்ள அன்னிய மொழிகளின் மயக்கத்தில்.

இது ஒரு பொதுவான பார்வைப் புரிதாலே.

கால்கரி சிவா said...

//ஆகா என்ன அருமை .வளைகுடா நாட்டில் வசித்த போது கால்கரி சிவா தன்னை இந்தியனாகவும் இந்துவாகவும் அடையாளப்படுத்தாமல் அரபுகளோடு ஒன்றோடு ஒன்று கலந்து அந்த அன்பு மழையில் நனைந்த கதைகளைத் தான் தொடராக படித்தோமே//

ஜோ, வளைகுடா நாட்டில் அரேபியர்களிடம் கலக்க முயற்சித்து அவர்கள் தூக்கி எறிந்ததால் தான் அந்த தொடர் அது இன்னும் முடியவில்லை தொடரும்....

குறுகிய வட்டதிலிருந்து வராத அரேபியர்களை நான் தாக்குகிறேன்.. தாக்குவேன் அதைப் பற்றி பேச இது இடமில்லை

Machi said...

/மரபுகள் பலவும் சட்டங்களாக்கப்பட்டுள்ளன அவற்றையும் உடைத்தெறியலாமா?
/

தவறான மரபுகள் சட்டமாக இருந்தால் அதை மாற்றுவதில் என்ன பிரச்சனை? மாற்றுவதுதான் முறை.


/அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன்./

யார் அடுத்த மொழியை அழித்து தமிழை காப்பாற்ற சொன்னார்கள் என்று விளக்குவீர்களா?.
தமிழ் நாட்டில் தமிழுக்கு முதலிடம் கொடு என்பது தங்களுக்கு தவறாக தெரிகிறதா? தமிழ்நாட்டில் கேட்காமல் வேறு எங்கு போய் தமிழுக்கு முதலிடம் கொடு எங்கு கேட்பீர்கள்?

/அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது./

அபகரித்து வேறு தனியாரிடம் கொடுக்க சொல்கிறார்களா?

http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm

Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in ANY OTHER language would be entertained.

இதுவே பிரச்சனையின் மூலம். ஏன் தமிழுக்கு அங்கு இடமில்லை?

சிறில் அலெக்ஸ் said...

சன்னாசி,
உங்கள் பின்னூட்டம் படித்தேன் சில கேள்விகளை மற்றவர்கள் ஏற்கனவே கேட்டிருந்தார்கள்.

என்கருத்துக்களை பதிவிலும் பல பின்னூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறேன்.

இதில் வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்கள் கருத்துக்களை தொடர்ந்து வெளியிடலாம்...

நன்றி.

ஜோ/Joe said...

////and tamil only.//
வேறு மொழிகளிலும் இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை.
..

அப்ப சமஸ்கிருதத்தில் தீக்ஷிதர்கள் பாடினால் தான் என்ன கேடு வந்து நேர்ந்தது//

வஜ்ரா,
வார்த்தைகளை அளந்து பேசவும் .சமஸ்கிருதத்தில் பாடக்கூடாது என்று எங்கும் நான் சொல்லவில்லை .தமிழில் பாடவும் தடை இருக்கக்கூடாது என்பதை ஒரு கருத்தாகத் தான் சொல்லியிருக்கிறேன்.முகமூடி பதிவில் என்னுடைய கருத்துக்களை படித்துவிட்டு எங்கே அப்படி சொல்லியிருக்கிறேன் என்று காட்டவும்.

//அப்ப சமஸ்கிருதத்தில் தீக்ஷிதர்கள் பாடினால் தான் என்ன கேடு வந்து நேர்ந்தது//
சமஸ்கிருதத்தில் பாடினால் கேடு வரும் என்று யாரும் சொல்லவில்லை .ஆனால் தமிழில் பாடினால் கேடு வரும் என்று சொன்னவர்களை நீங்கள் கண்டித்ததாக தெரியவில்லை


//அதுவும் உங்களுக்கு...?//
எனக்கு உரிமை இல்லை தான் ஐயா! அதனால் தான் முகமூடியிடம் விளக்கங்களை மட்டுமே கேட்டேன் .அங்கு கிறிஸ்தவ நடைமுறைகள் பற்றிய கேள்விகள் வந்ததால் அதற்கு எனக்கு உரிமையிருப்பதால் பதில் சொன்னேன்.

சிறில் அலெக்ஸ் said...

நண்பர்கள் தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்கவும்..
:)

சிறில் அலெக்ஸ்