.

Monday, October 30, 2006

bundle of greens - கட்டு கட்டு கீரக் கட்டு

போன பதிவில் இது என்ன என சில ஆங்கில வரிகலைத் தந்து கேட்டிருந்தேன் கட்டு கட்டு கீரக்கட்டு பாட்டுத்தேன் அது.

பல நேரங்களில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரிஜினல் பாடலைவிட ரசிக்கத்தக்கதாய் இருக்கும். இட்ந்தப் பாடலின் மொழிபெயர்ப்பும் அது போலவே. பாட்டப் போட்டுட்டு கீழே ஓடும் துணைதலைப்புக்களை (sub-titile - இது நம்ம மொழி பெயெர்ப்புங்கோய்) பார்க்க மறந்துடாதீங்க.


Sunday, October 29, 2006

இது என்ன

Bundle of greens
invigorating embrace
Uproot me, my love

You'll ask for the greens and
invigorating embrace
Take a flight into bliss, my dear

Take me to a lonley place
kiss me and have me
Butt me like in a
taming the bull game, my dear

Bundle of grass
blindfold the calf
clear off
with your wares, my dear

Shall I give in
discarding my shyness?
come my dear packet of crackers
I'll buy a single racket for you

Come my dear super market
I'll buy a bumper ticket from you.


மேலேயுள்ள வரிகளை அடையாளம் தெரிகிறதா?
விடை அடுத்த பதிவில்.

பசி-சுப்பையா சார் கவிதை

பசி---------------SP.VR. சுப்பையா
பணம்
உள்ளவனுக்குத்
தெரிந்த 'பசி'
நிதியமைச்சர்
ப.சி!

கன்னிமாராவிற்குள்
காலடி வைப்பவனுக்கு
அங்கிருக்கும் நூல்களால்
ஏற்படுவது
அறிவுப் பசி!

கலங்கவைக்கும் நிகழ்வுகளை
எழுதியவுடன்அடங்குவது
கவிஞனின்
உள்ளத்துப் பசி!

கட்சிவிட்டு
கட்சிதாவச் செய்வது
அரசியல்வாதியின்
அகோரப்பசி
பதவிப் பசி!

நான்கு லார்ஜிற்குப் பின்
வரும் பசி
பாருக்குப்
போகிறவனுக்குப்
பழகிவிட்ட பசி!

உறவு பேதமின்றி
எந்தப் பெண்ணுமே
அழகாகத் தெரிவது
நெறிகெட்ட மனிதனின்
நிலையில்லாதகாமப் பசி

பதிவைப்
போட்டுவிட்டுக்
காத்திருப்பவனுக்கு
ஏற்படுவது
பின்னூட்டப் பசி!

என்னய்யா
பெரிய பின்னூட்டம்
என்றிருப்பவனுக்கு
என்றுமே வராது
ஏக்கப் பசி!

பாதி உணவோடு
இலையை மடக்குபவனுக்கு
ஏற்படுவது
என்றும் அவனோடுள்ள
அஜீரணப் பசி!

ஒரு வேளை
உணவிற்குத்
தவமிருப்பவனுக்கு
ஏற்படுவது
உண்மையான பசி!

Thursday, October 26, 2006

பசி - சுப்பையா சார் தந்த தலைப்பு

இந்த வார தலைப்பு திரு சுப்பையா ஆசிரியர் தந்தது.

'பசி'.

பசி என கூகிளாண்டவரிடம் சொல்லி முறையிட்டபோது அவர் தந்த சுட்டிகள் சில..

நிலாச்சாரல் - சிறுகதை - சுகந்தி

மழை, பசி, கலாம் - இராமநாதன்

பசி கவிதை - கோவி.கண்ணன்(GK)

பசி கவிதை நிலவு நண்பன்

கட்டுரை - தியோ

புதுமை.காம் - கட்டுரை - ஏ.ஜே. ஞானேந்திரன்

பசி என்றொரு உணர்வு.-கட்டுரை-சரவ்

தீராப்பசி-தமிழோவியம்-கட்டுரை-எஸ். ராமகிருஷ்ணன்


'பசி' தலைப்பில் விருந்து வைக்க அழைக்கிறோம்.

காதல் ஒரு பசி
பார்வை விருந்தானது

காமம் ஒரு பசி
கூடல் மருந்தானது

ஞானம் வேண்டி பசி
தேடலே விடையானது

நட்புக்காக பசி
நாடலில் குறை தீர்ந்தது

செல்வம் தேடி பசி
உழைப்பில் நிறைவானது

எங்கே பசி இருக்குதோ
அங்கேயே மருந்தும் இருக்குது
விருந்தும் இருக்குது.

பசியும் நன்றே.
பிணங்களுக்குத்தான் பசிப்பதில்லை.

Saturday, October 21, 2006

என்ன நடக்குது அங்க

ஹலோ!

திடீர்னு இந்தியாவுல இருக்கிற யார்கூடவாவது பேசணும்னு ஆச வந்துடுச்சு..
.

இங்க மணி அதிகாலை 1:47 (சிக்காகோ நேரம்) . பின்னூட்டமாவோ. தனிமடலிலோ யார் முதல்ல தொலைபேசி எண் தருகிறார்களோ அவர்களோடு பேசலாம் என நினைக்கிறேன்.

யாராவது வருகிரார்களா பாப்போம்...

நிஜமாங்க..... தொலைபேசிஎண்ணை அனுப்புங்க..

Friday, October 20, 2006

தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் - இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் - இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்

பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் - குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.

பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Wednesday, October 18, 2006

தேன்கூடு பெட்டகம்

thenkoodu.com டெலிஷியஸ் எனும் சேவை பற்றி முன்பு பதிவுகள் எழுதியிருந்தேன். எத்தனைபேர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் தெரியவில்லை.

தேன்கூடு குழுமம் 'பெட்டகம்' எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு பிடித்த சுட்டிகளை குறிச் சொற்களோடு சேகரித்து பயன்படுத்த உதவும் சேவை. டெலிஷியசை மிஞ்சும் ஒரு அருமையான பயனோடு வந்துள்ளது(பின்னர் இதைச் சொல்கிறேன்).

இதன் அடிப்படை பயன் என்ன?
Favorites என உங்கள் உலவியில்(Browser) சுட்டிகளை சேகரிக்க ஒரு வசதி அதைப் போல பெட்டகத்தில் உங்களுக்கு பிடித்த சுட்டிகளை சேகரிக்கலாம்.

இதுபோல ஏற்கனவே Favourites சேகரிக்கும் தளங்கள் இருக்கின்றனவே? முக்கிய வித்தியாசம் சுட்டிகளுக்கு குறிச்சொற்களை வழங்க முடிகிறது. மேலும் சில குறிப்புக்களோடும் சுட்டிகளை சேர்க்கலாம்.

குறிச்சொற்கள்னா?
Tags என அழைக்கப்படுகின்றன. ஒரு சுட்டி சொல்லும் சேதிக்கேற்ப, அதை பல சொற்களால் வகைப்படுத்தமுடிகிறது. உதாரணமாக 'தேன்' எனும் இந்தப் பதிவகத்துக்கு சிறில்அலெக்ஸ் தேன் வலைப்பதிவு சிறுகதை கவிதை சமூகம் கட்டுரை என குறிச் சொற்களை சேர்க்கலாம். இப்படி பல தொடர்புள்ள பதிவுகளை குறிச் சொர்களின்கீழ் வகைப்படுத்தலாம்.

பெரிய சுட்டிக்குவியலில் சிறுகதைகளைத் தேடவேண்டுமானால் சிறுகதை எனும் குறிச் சொல்லை சுட்டினால் போதுமானது. அதன் கீழிருக்கும் எல்லா சுட்டிகளும் பட்டியலிடப்படும்.

பெட்டகத்தில் என்ன சிறப்பு?
பெட்டகத்தில் நீங்கள் சேகரிக்கும் சுட்டிகளை உங்களுக்கென தனிப்பட்டதாகவும்(Private) பொதுவானதாகவும்(Public) அல்லது உங்களை கவனித்துக்கொண்டிருப்பவர்கள் (People watching your list) மட்டும் பார்க்க இயன்றதாகவும் வகைப்படுத்தலாம். இந்த சேவை புதியதாக உள்ளது. (Compared to Delicious).

'தனி' சுட்டிகள் சிவப்புக் கோட்டால் குறியிடப் படுகின்றன. ஆரஞ்சு நிறத்தில் 'கவனிப்பவர்களுக்காக' என வகைப்படுத்தப்பட்டவை குறியிடப்படுகின்றன. 'பொது' சுட்டிகள் குறியிடப் படவில்லை.

எப்படி பயன் படுத்துவது?
தேன்கூட்டில் அல்லது பெட்டகத்தில் பயனாளராக பதிவுசெய்துகொள்ளுங்கள். பெட்டகத்தில் நுழையுங்கள். பார்வையாளராய், அங்கே ஏற்கனவே சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் சுட்டிகளைக் காணலாம். குறிச்சொல் தொகுப்பை பயன்படுத்தலாம்.

'குறியத்தை சேர்க்க' எனும் பகுதிக்குச் சென்று உங்கள் சுட்டிகளை சேர்க்க ஆரம்பிக்கலாம்.

உங்கள் சொந்த சுட்டித் தொகுப்பைக் காண 'தேடுக' எனும் பகுதியில் 'என் குறியம்' என்பதை தேர்ந்தெடுத்து 'தேடுக' எனவும்.
pettagam.com
பெட்டகத்தின் உள் நுழையாமல் சுட்டிகளை சேகரிப்பதெப்படி?
'குறியத்தை சேர்க்க' எனும் பகுதியில் 'Post To பெட்டகம்' எனும் சுட்டியை உங்கள் உலவியின் favorites-ல் சேர்த்துக்கொண்டு(right click and add to favourites), பெட்டகத்தில் சேர்க்கவேண்டிய வலைப்பக்கத்திலிருந்து இந்த favorites சுட்டியை சுட்டி எளிதில் பெட்டகத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே del.icio.us பயனாளராயிருப்பவர்களுக்கு...
டெலிஷியஸில் சேகரிக்கப்பட்டிருக்கும் சுட்டித் தொகுப்பை எளிதில் பெட்டகத்தின் உளேற்றமுடிகிறது. 'குறியத்தை சேர்க்க' எனும் பகுதியில் கீழே, 'Import bookmarks from del.icio.us' எனும் சுட்டியை சுட்டினால் இதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

என் உலவியின் Favorits-ஐ சேர்க்கமுடியுமா?
முடியும். 'குறியத்தை சேர்க்க' என்மு பகுதியில் கீழே இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. கவனிக்க: இப்படி செய்யும்போது Private ஆகச் சேர்ப்பது நல்லது. நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் சுட்டிகளை பின்னர் பெட்டகத்தினுள் நுழைந்து Public-ஆக மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே நான் சேர்த்த சுட்டியை திருத்தவோ வேறு குறிச்சொற்களை சேர்க்கவோ வாய்ப்புண்டா?
நீங்கள் சேகரித்த சுட்டிகளை திருத்த அல்லது நீக்க வசதி உண்டு. ஒவ்வொரு சுட்டிக்கும் கீழே சுட்டிகள் தரப்பட்டுள்ளன.

அடுத்தவர் சேர்த்திருக்கும் சுட்டியை எனதாக்க முடியுமா?
ஆம். Copy எனும் சுட்டியை சுட்டி உங்களுக்குத் தேவையான குறிச் சொற்களோடு சேகரிக்கலாம்.

பிற பயனர்களை 'கவனிப்பது' எப்படி?
முகப்பிலுள்ள சுட்டித் தொகுப்பில் பயனாளர் பெயரை சுட்டி அவரது 'பொது' தொகுப்புக்களை பார்க்கலாம். அங்கே வலப்பக்கத்தில் 'கவனிப்பில் சேர்க்க' என்பதைச் சுட்டினால் அந்தப் பயனரின் 'பொது' சுட்டிகளும் 'கவனிப்பில் இருப்பவர்களுக்கு மட்டும்' என வகைப்படுத்தப்பட்ட சுட்டிகளையும் காண முடியும்.

முடிந்தவரை பெட்டகத்தை பயன்படுத்த தேவையானவற்றை சொல்லிவிட்டேன்.

இதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். கவனத்தில் கொள்ளவேண்டியவை சில.

குறிச்சொற்களை சேர்க்கும்போது முடிந்தவரை ஏற்கனவே இருக்கும்
குறிச் சொற்களை பயன்படுத்துவது நல்லது.

குறிச் சொற்கள் Space (ஒற்றை இடைவெளி) கொண்டு தனிப்படுத்தப்
படுகின்றன. 'சிறில் அலெக்ஸ்' என்பது சிறில் எனும் ஒரு குறிச் சொல்லாகவும் அலெக்ஸ் எனும் ஒரு குறிச்சொல்லாகவும் சேர்க்கப்படும். இவற்றை 'சிறில்அலெக்ஸ்' எனவோ அல்லது சிறில்_அலெக்ஸ் என்பது போலவோ சேர்ப்பதுதான் சரியாகும்.

பொதுவானவை என சேகரிக்கப்படும் சுட்டிகளை கவனத்துடன் சேர்க்கவும்.

குறிச் சொற்களை சரியாக தேந்தெடுப்பது அவசியம்.

உருப்படியானவற்றை மட்டுமே பொதுவில் வைக்க வேண்டுகிறேன். பெட்டகத்தின் சேவையை சிறப்படையச் செய்வது பயனீட்டாளர்கள் கையில்தான் இருக்கிறது.
நல்ல சுட்டிகளை 'பொதுவில்' செகரிப்பதன்மூலம் இதை கிட்டத்தட்ட 'பூங்கா' போன்ற ஒரு இதழாகவே இதை பயன்படுத்த முடியும்.

நண்பர்களை கவனிப்பில் வைப்பதன்மூலம் அவர்களின் சுட்டிகளைப் பார்க்க இயலும் (அவர் உண்மையிலேயே நண்பரா பகைவரா எனவும் கண்டுகொள்ளலாம் :)

வலைப்பதிவுகளுக்கேயான சேவையல்ல இது என்பதை நினைவில் கொள்க.
எந்தவித சுட்டியையும் இதில் சேகரிக்கலாம். ஆங்கிலத் தளங்களுக்கான சுட்டிகளை தமிழ் குறிச் சொற்களோடு சேர்த்துவைக்கலாம்.

பெட்டகம் தந்துள்ள தேன்கூட்டுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சில கருவிகளையும் மேம்பட்ட பயன்களையும் அவர்கள் தருவார்கள் என நம்புகிறேன். தேன்கூட்டின் புதிய வடிவம் பாராட்டும்படியுள்ளது.

என்ன, பெட்டகத்தை நிரப்பத் தயாரா?

தொடர்புள்ள சுட்டிகள்

http://pettagam.thenkoodu.com (or) http://pettagam.com

தேன்கூடு அறிவுப்பு

Monday, October 16, 2006

கோமாளி-கவிதை-SK

கோமாளி தலைப்பில் எஸ்.கே பின்னூட்டமாய் எழுதிய கவிதை..


கோமாளிக்கும் ஏமாளிக்கும்
மயிரிழைதான் வேறுபாடு

கோமாளி தான் செய்வது
இன்னதெனச் செய்கிறான்

மற்றவரை ஏமாற்றி
அவன் அடிபடுவதில்லை

ஏமாளியோ தன்னையும் வருத்தி
மற்றவரையும் வருத்துவான்

ஏமாளிக்கு
கோமாளியே மேல்
என்னமோ போங்க!

ஆடுகள் மோதுவது
கொம்பெனும் திமிரால்

அவரவர்க்கு ஓர் கொம்புண்டு
அதுவும் புரியும் அவர்க்கே

கொம்பைச்
சீவிவிட்டு
மோதவிடும் கூட்டம்

இருபக்கமும் உண்டு
இதுதானே உண்மை
இங்கு

தனக்கா வலிக்கிறது
அடிபடுவது ஆடுதானே

இதில் இதென்ன
உசத்தி
அதென்ன தாழ்த்தி

அத்தனையும் போலி
உணர்வெல்லாம் பொய்யே

உன்னையும் தாண்டி
என்னையும் தாண்டி

புரிதல் எனும் அந்தப்
பெருமையை உணர்ந்தால்

யாரும் இங்கு கோமாளியல்ல
யாரும் இங்கு
ஏமாளியல்ல

புரிபவர்க்குப் புரிந்தால்
அதுவே மகிழ்ச்சி!

அவரவர்
உறவே
அவரவர்க்கு சத்தியம்

எவர் என்ன நினைத்தால்
எனக்கென்ன போச்சு

உருகிடும் உனை நினைத்து
என்றும் எந்தன் மூச்சு!

Friday, October 13, 2006

காலப் பெட்டகம்

Yahoo! காலப் பெட்டகம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. அக்டோபர் பத்து முதல் நவம்பர் எட்டு வரைக்கும் யாஹூ பயனர்களிடம் பல மின்னணு மூலத்தகவல்களை சேகரித்து வருங்காலத்திற்கு மின்னணு தகவல் தொகுப்பாய் சேர்த்துவ்வைக்கும் சேவை.

எழுத்து, சப்தம், ஓவியம், நிழற்படம் என பல வடிவங்களில் beauty, fun, faith, hope, now, past, sorrow, you, love, anger போன்ற தலைப்புக்களின் கீழ் நீங்கள் தரவிரும்பும் தகவல்களைத் தரலாம்.

முயன்று பாருங்கள்.


பதிவர்களைக் கவரும் யாஹூ பீட்டா


புதிய யாஹூ பீட்டா(Beta) மின்னஞ்சல் சேவை பழைய சேவையை தூக்கிச் சாப்பிட்டு மென்று துப்பும் வகையில் அமைந்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே அதன் புதிய வடிவமைப்பு நம்மை கவர்கிறது. முகப்பிலேயே தற்போதைய முக்கிய செய்திகளைப் பெறமுடிகிறது. Tab வடிவமைப்பில் பல விண்டோக்களை ஒன்றாய் வைத்து வேலை செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது இன்னொரு வசதி.

Yahoo Calander வெகு நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாகூ நாட்குறிப்புக்களை பயன் செய்யாதவர்கள் இனிமேல் முயற்சி செய்யலாம்.

முகவரி தொகுப்பு எளிதில் வகைப்படுத்தவும் பயன்படுத்தவும் ஏதுவாக மாற்றப்பட்டுள்ளது.

வலைப்பதிவர்களுக்கான சிறப்பம்சம் என்னவென்றால் RSS feed பெறும் வசதி உள்ளது. இதன்மூலம் உங்கள் விருப்பமான பதிவுகளை யாஹூ மெயிலிலேயே படித்துக்கொள்ளலாம்.

தேனை சேர்ப்பதில் பிரச்சனை இருந்தது. எனவே feedburner.com மூலம் சுட்டு அந்த சுட்டியை சேர்த்ததும் சரியானது. நீங்களே உங்களுக்கு பிடித்த சில பதிவுகளை மட்டும் சேர்த்து ஒரு மினி திரட்டி வைத்துக்கொள்ளலாம். Google Reader இதை மெயிலுடன் இணைக்காமல் தனி சேவையாய் தந்துள்ளது. இங்கே தமிழ்மணம்(thamizmanam.com) மற்றும் தேன்கூட்டையும்(thenkoodu.com) இணைத்து வாசிக்கலாம் இல்லை உங்களுக்குப் பிடித்த பதிவுகளள மட்டும் தொகுத்துப் பார்க்கலாம்.
தமிழ்மணம் தேன்கூடு தரும் சேவைகளுக்கு இவை மாற்றல்ல என்பதை கூற விரும்புகிறேன். அவை கூகுள்போல என்றால் இது நாம் உலவியில் சேர்க்கும் ஃபேவரிட்ஸ் போல.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்களுக்கே அழைப்பின்பேரில் யாஹூ இந்த பீட்டா சேவையை தந்துள்ளது.

மின்னஞ்சல் தொகுப்பு


பாபாவின் ஈ-தமிழ் பதிவு யாஹு மெயிலுக்குள்ளே

தலைப்பு


இந்த வார தலைப்பு 'கோமாளி'.

இந்தத் தலைப்பில் உங்களைப் பத்தி எழுதலாம்.
எப்பவும் சிரித்துக்கொண்டே திரிவானே உங்க நண்பன் அவனப்பத்தி எழுதலாம்.

ஊரெல்லாம் போயி சேட்ட செஞ்சுட்டு அப்பாட்ட 'கோமாளியாடட நீ'ன்னு திட்டு வாங்குவானே தம்பி அவனப் பத்தி எழுதலாம்.
'எனக்கு வாக்களித்தால் இந்த ஊரை டெல்லிக்கு பக்கத்தில் மாற்றிவைப்பேன்'னு வாக்குறுதி தரும் வார்ட்டு கவுன்சிலர் வேட்பாளரைப் பத்தி எழுதலாம்.

'மங்களம் உண்டாகட்டும்' என்பதற்கும் இரட்டை அர்த்தம் தரும் சாமியார்கள், ஏதாவது 'மேனரிசம்' கொண்ட வாத்தியார்கள், கல்யாணவீட்டில் எப்போதும் கலாட்டா செய்யும் மாமா, பக்கத்து சீட்டில் இருக்கும் சக ஊழியர், சதா பெண்களிடம் வழியும் மேலாளர், குழாயடிச் சண்டையை குத்தகைக்கு எடுத்திருக்கும் மாமி, தெருவில் அண்டாவ 'வெச்சு' 'தண்னி' அடித்துவிட்டு வசனம் பேசும் குடிமகன்கள்.

அட லிஸ்ட்டு பெருசாயிடுச்சே.. .எழுதுங்க பார்க்கலாம்.பி. கு படத்தில் இருப்பது நான் அல்ல

Monday, October 09, 2006

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு - மீள்பதிவு

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு ஒரு அறிவுப்பு மற்றும் வேண்டுகோள். நண்பர் ஒருவர் கன்னியாகுமரி சுற்றுலா பற்றிய வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார். இலாப நோக்கின்றி இயங்கும் இந்த தளத்தில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் பற்றி பல தகவல்களைத் தந்துள்ளார்.

http://kanyakumari.50webs.com/

உங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதி அவருக்கு அனுப்பலாம். ஏற்கனவே நீங்கல் ஏதாவது பதித்திருந்தாலும் அவருக்கு அனூப்பினால் அவர் அந்தத்தளத்தில் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளார்.

அவரது மின்னஞ்சல் முகவரி capeinfo @ rediffmail.com (Without spaces).

கன்னியாகுமரி மாவட்ட பதிவர்களாயிருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவாய் இருத்தல் அவசியம்.

பொளந்து கட்டுங்க மக்களே.

Saturday, October 07, 2006

இலையுதிர் காலம் ஆரம்பம்

அமெரிக்காவில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் நான்கு காலங்களிலும் ஏற்படும் உணரத்தக்க, இரசிக்கத்தக்க சூழ்நிலை மாற்றங்கள். அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. நம்ம ஊரில் கவிஞர்கள்மட்டும்தான் இலையுதிர் காலம் பார்க்கிறார்கள்.

பச்சையிலிருந்து...
கிளிப்பச்சையாகி
மஞ்சளாகி
பழுப்பாகி
குப்பையாகி
அழுகி உரமாகி
தன் தாய்மரத்துக்கே
உணவாகும்
தியாகச் செம்மல்கள் இந்த இலைகள்.

தன் உயிரைக் காக்க
உடையைக் களையும்
மானங்கெட்ட மரங்கள்.
இதனால்தான்
தமிழ் நாட்டு மரங்கள்
இலை உதிர்ப்பதில்லையோ?

(ஒரு வாக்கியத்த உடைத்துப் போட்டால் கவிதையாகிவிடுகிறதில்ல?)

வெளியே வாக்கிங் சென்றபோது செல்போனில் சுட்ட படங்கள்.
ஜன்னலுக்கு வெளியே

தனிமரம்
காலம் மாறிப் போச்சு
இன்னும் இருக்குது பச்சை

இன்னும் இருக்குது ஆகாயம்

நீல நயனங்களில் ..நீண்ட கனவு


நிறம் மாறும் இலைகள்குமரி மாவட்ட பதிவர்களுக்கு

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு ஒரு அறிவுப்பு மற்றும் வேண்டுகோள். நண்பர் ஒருவர் கன்னியாகுமரி சுற்றுலா பற்றிய வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார். இலாப நோக்கின்றி இயங்கும் இந்த தளத்தில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் பற்றி பல தகவல்களைத் தந்துள்ளார்.

http://kanyakumari.50webs.com/

உங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதி அவருக்கு அனுப்பலாம். ஏற்கனவே நீங்கல் ஏதாவது பதித்திருந்தாலும் அவருக்கு அனூப்பினால் அவர் அந்தத்தளத்தில் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளார்.

அவரது மின்னஞ்சல் முகவரி capeinfo @ rediffmail.com (Without spaces).

கன்னியாகுமரி மாவட்ட பதிவர்களாயிருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவாய் இருத்தல் அவசியம்.

பொளந்து கட்டுங்க மக்களே.

Friday, October 06, 2006

மரணதண்டனைப் பதிவுகள்

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை 'தேன்' தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.

ஜெயபாலின் கவிதை - மரணம் தண்டனையா?

கொஞ்சம் லைட் ரீடிங் - எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார்.

மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா

அவர் வைக்கும் கேள்விகள்

அபு மூகையின் ஆதரவு - பொதுவாக இஸ்லாமியப் பதிவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக பதிவிடுவதில்லை எனும் எண்ணத்தை மாற்றும் பதிவு. தேச பக்தியும் வெளிப்படுகிறது இவரின் வார்த்தைகளில்.

ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த
நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!


ஆணித்தரமாகச் சொல்கிறார்.

நுனிப்புல் உஷாவின் எண்ணம் - மரண தண்டனைக்கு எதிராக சில கருத்துக்களை வைக்கிறார். எதையும் வாதமாக தீர்மானமாகச் சொல்லாமல் சில காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க
யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

சிந்திக்கப்படவேண்டிய கேள்வி.

பிரபு ராஜதுரையின் அலசல் - பிரபு ராஜதுரை எனும் வழக்கறிஞர் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தை அலசுபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு.

ஆனால் தண்டனைக்கான் காரணங்களை முன் வைக்கும் உச்சநீதிமன்றம் முதலாவதாக கூறுவதான, ‘குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதின் மூலமே சமுதாயத்தின் பொதுவான மனநிலையினை திருப்திப்படுத்த இயலும் (the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender)’ என்பது அபாயகரமான ஒரு போக்கு என்பது எனது பணிவான கருத்து. இரண்டாவதாக கூறும் ‘சதியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதே, நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் (The challenge to the unity, integrity and sovereignty of India by these acts of terrorists and conspirators, can only be compensated by giving the maximum punishment)’ என்பதும் தகுந்த காரணமில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் இறுதியில் அளித்துள்ள ‘ஏற்கனவே சரணடைந்துள்ள ஒரு போராளி மீண்டும் நாட்டுக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபடுவதினால், சமுதாயத்தினை சீர்குலைக்கும் ஒரு சக்தியாக கருதி அவர் வாழ்வு முடிக்கப்படவேண்டும்’ என்ற காரணமே சரியானதாக இருக்க இயலும் என எண்ணுகிறேன். எனெனில்
முதலிரண்டு காரணங்களிலும் பழிவாங்குதலே வெளிப்படுகிறது. மூன்றாவது காரணமே தடுத்தல் மற்றும் எச்சரித்தல் வகையில் வருகிறது. திருத்துதலுக்கு மரண தண்டனையில் வாய்ப்பில்லை!
பொதுவாக குற்றம் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளி
என்று தீர்க்க முடியும். ஆயினும், சில சமயங்களில் மனதிற்குள் சின்னதாக ஒரு ஐயப்பாடு இருக்க வாய்ப்புண்டு. அவ்விதமான நிலைகளில் மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பழிவாங்குதல் மற்றும் தண்டனை அல்லாமல் தடுத்தல் அல்லது எச்சரித்தல் போன்ற காரணங்களுக்காவே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இல்லை, அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்றால், வருமான வரி ஏய்ப்பு, பத்திர பதிவில்
சொத்து மதிப்பினை குறைத்துக் காட்டி முத்திரைக் கட்டண ஏய்ப்பு போன்ற வெள்ளை காலர் குற்றங்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். வரி கட்டுபவர்கள் ஒழுங்காக அதை கட்டி அரசிடம் போதுமான பணமிருந்திருந்தால், எல்லையில் பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கலாம். அப்சல் அந்தப்பக்கம் உள்ள காஷ்மீரத்துக்கு ஓடிச்சென்று பயிற்சி எடுத்து பின்னர் திரும்புவதை தடுத்திருக்கலாம் அல்லது தில்லியில் கொசு மருந்தாவது கூட கொஞ்சம் அடித்திருக்கலாம்...ஆக வெள்ளை காலர் குற்றங்களாலும் மரணங்கள் நிகழ்கின்றன, ஏன் பின்னர் பாகுபாடு?


நீதி வழங்கலை முன்வைத்து அருமையான அலசல். (இவரின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன - கவனிக்கத்தக்க பதிவர்)

நல்லடியாரின் எதிர்வாதம் - அப்சலின் கேசை விவரிக்கும் பதிவு அபு மூகையின் பதிவுக்கு நேரெதிர் எனச் சொல்லலாம். பிரபு ராஜதுரை சொல்லும் சில தகவல்கலை இவரும் சொல்கிறார். அவரைப் போலவே வேறொரு குற்றத்தைக் காட்டி அவர்களுக்கு தண்டனை எப்போது எனக் கேட்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க. போன்ற மதவாத அரசியல் கட்சிகள் வழக்கம்
போல் இப்பிரச்சினையில் அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர். குற்றவாளி அப்ஷல் தூக்கிலிடப்பட வேண்டும்; நாட்டின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தனஞ்சய் சட்டர்ஜி என்ற காமக் கொடூரனுக்கு
மரண தண்டனை உறுதி செய்யப்பட்டபோது,மனித உரிமை அமைப்புகள் குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையில்லை; அதிகபட்சம் ஆயுள் தண்டனையே போதும் என்று குரலெழுப்பினார்கள். ஆனால், அப்ஷல் விசயத்தில் அவர்கள் மெளனம் காப்பதாகவே அறிய முடிகிறது. இதில் யாரெல்லாம்
குற்றவாளிக்கு ஆதரவாகவோ அல்லது நியாயமாகவோ குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் தேசத் துரோகப் பட்டம் வழங்கப்படும் என்பதால் அனேகமாக மெளனம் காக்கிறார்கள்.


சில நியாயமான கேள்விகள்.

செல்வனின் சாடல் - செல்வன் வழக்கமான உணர்ச்ச்சிவசத்துடன் அப்சலின் தண்டனை நிறைவெற்றப் படவேண்டுமென்கிறார். பிறநாடுகளின் நிலமை இந்தியாவில் இல்லையாதலால் மரணதண்டனை இங்கே செயல்படுத்தப்படவேண்டும் என்பது இவரின் வாதம்.

இந்த மாதிரி சமூகத்தில் மரண தண்டனை தேவையில்லை. அவன் கால் மேல் கால் போட்டு கொண்டு புனித பிம்ப வேசம் கட்டி உலகத்துக்கு "மரணதண்டனை தப்பு" என உபதேசம் செய்வான். லிஸ்பனில் தினமும் 10 குண்டு வெடிக்கும் சூழ்நிலை இருந்தால் அவன் மரணதண்டனை மட்டுமல்ல, சித்ரவதையையே கூட கொண்டுவருவான்."ஐரோப்பாவை பார்" என முழக்கமிடும் அறிவுசீவிகள் அங்கிருக்கும் சூழலுக்கும் இங்கிருக்கும் சூழலுக்கும் வித்யாசம் தெரியாதவர்களல்ல . இங்கே மரண தண்டனை ரத்து செய்தால் அடுத்த வினாடி என்ன நடக்கும்? ஒரு நாலு வருஷம் இந்த அப்சல் ஜெயிலில் இருப்பான். அப்புறம் தீவிரவாதிகள் ஒரு விமானத்தை கடத்துவார்கள். உடனே இந்த அறிவுசீவிகள் "தீவிரவாதியை விடுதலை செய்" என ஒப்பாரி வைப்பார்கள்.

அதிகபடியான உணர்ச்சிவசம்.

பிரபு ராஜதுரையின் கருத்துக்கள் மிகவும் நியாயமானதாகப் படுகிறது. மரணதண்டனையே வேண்டாம் என்பது என் வாதமல்ல. சில கேடுகட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவே வேண்டும். அதேசமயம் சட்டம் எல்லோருக்கும் சமமானதாய் செயல்படவும் வேண்டும். சட்டத்தின் கடமை பழிவாங்குவதல்ல.

பின்சேற்கைகள்

பாபா தந்த சில சுட்டிகள்

1. மெய்கீர்த்தி: அப்சலை தூக்கில் போடுவது தான் சரி

2. E-Tamil : Points to ponder against Capital Punishment

3. கண்ணோட்டம்- KANNOTTAM: மரண தண்டனையா, மன்னிப்பா ?

4. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! - ROSAVASANTH :: பொதுப்புத்தி

5. முத்து(தமிழினி) - அப்சலை தூக்கில போடுங்கடா

6. கோவி.கண்ணன்(GK) - மரண தண்டனை, கோட்சே, இஸ்லாம், ஒரிசா பாதிரியார்!

7. அஃப்சல் மரண தண்டனை --- சில எண்ணங்கள் - என்றென்றும் அன்புடன் பாலா

8. அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்! - நா. ஜெயசங்கர்

9. குழலி - நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்

10. லக்கிலுக் - 1

11. லக்கிலுக் - 2

12. we the people

13. பெனாத்தல் சுரேஷ்

14. ராஜபாட்டை.

15. சிந்தாநதி

16. வலை

17. யெஸ். பாலபாரதி

ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

"மனிதன் எங்கிருந்து வந்தான்?" என்பது ஒரு அசாதரணக் கேள்வி. எல்லாக் காலத்திலுமே கேட்கப்பட்டுள்ள முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதன் மறுபக்கம் "மனிதன் எங்கே போகப் போகிறான்?" என்பது. இந்த இரண்டிற்கும் விடைகாண்பதற்கு அறிவியலும் ஆன்மீகமும் இரு வழிகளாய் திகழ்ந்திருக்கின்றன. திகழ்கின்றன.

இன்னும் முழுமையான விடைகள் கிடைக்காத பட்சத்தில் பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றதைக் காணலாம்.

ஆன்மீகப் பதில்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ளப் படவேண்டும். நம்பிக்கை வைத்து எந்தக் கதையையும் உண்மை எனலாம். ஆனால் பரிணாமக் கொள்கை மற்றும் அது தொடர்ந்து/சார்ந்து வளர்ந்து வரும் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் சில கருத்துக்களைத் தந்துள்ளது. தந்துகொண்டிருக்கிறது.

இது முழுமை பெற்ற அறிவியல் அல்ல என்பவர்களுக்கு ஆன்மீக ரீதியிலான கதைகள் அறிவியலே அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில் என்னக் கவலை எனத் தெரியவில்லை.

படைத்தலின் அறிவியலை (Creation Scince) சிலர் ஆராய்ந்து வருகின்றனர். இது எப்படி என்றால் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் முயற்சி.

Intelligent Design என்று ஒரு கொள்கை அமெரிக்காவில் பிரபலம். அதாவது அறிவியல், உயிரினங்கள் தாமாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தன எனச்சொல்லுவதை மறுத்து கடவுள்தான் இந்த மாற்றத்தை நிகழ்த்தினார் எனச் சொல்வது. இயற்கை இத்தனை குழப்பமாக, முற்றும் அதனை அறிய முடியா வண்ணம் வடிவமைக்கப் பட்டிருப்பது ஏதோ ஒரு 'அறிவு'பூர்வமான மூலத்தினாலேயே. என்பது போன்ற வாதங்களை இவர்கள் வைக்கிறார்கள். Natural Theology என்பது இதன் முன்னோடி எனச் சொல்லலாம்.

பக்கம் பக்கமாய் எழுதப் பட்டிருக்கும் Intelligent Design மற்றும் Natural Theology புத்தகங்களில் அறிவியல் சான்றுகளை விட அனுமானங்களும், சாதுர்யமான ஒப்பீடுகளுமே தரப் பட்டுள்ளன.

ஆதாம் ஏவாளின் கதையும்கூட ஒரு ஒப்பீட்டுக் கதைதான். முதலில் ஒளிதான் உருவாகியிருக்கவேண்டும் என கணித்திருக்கிறார்கள். மனிதன் வாழத் தகுந்த சூழல் வந்தபின்னரே மனிதன் உருவாகியிருக்கக் கூடும் என்பதையும் உணர்ந்து கதை சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த 'ஒளி உண்டாகட்டும்' எனச் சொல்லி ஒளியை உருவாக்குவதுதான் Big Bang எனச் சொல்பவர்களும் உண்டு. காலத்துக்கேற்ப புனிதப் புத்தகங்களிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் விளைகின்றன, விளைவிக்கப் படுகின்றன. இதை மிகவும் உற்சாகமாய் செய்பவர்கள் கத்தோலிக்க திருச்சபையினர். அறிவியலை நிராகரிக்க முடியாதென்பதை உணர்ந்தே (அத்தகைய நிலையில் இன்றைய திருச்சபை இல்லை) இவர்கள் பைபிளின் கதைகளை அறிவியல் படுத்த முயல்கிறார்கள்.

ஆதாம் ஏவாள் கதைகள் அபிரகாமிய மதங்களின் மூலக் கதைகளே அல்ல என்பதும் அவை அந்தக் காலத்தில் பல்வேறு கலாச்சாரங்களில் வாய் வழி சொல்லப்பட்டு வந்த கதைகள் என்பதையும் ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. கத்தோலிக்க கிறித்துவமும் இதை ஒப்புக்கொண்டுள்ளது ஆனால் அவற்றின் உட்பொருட்கள் நம்பத்தகுந்தவையாக பொருள்கொள்ளப்படுகின்றன இன்றும்.

ஆதாம் ஏவாள் கதைகள் இப்போது பைபிளில் தரப்பட்டிருக்கும் வகையிலேயே பல ஓட்டைகளைக் கொண்டுள்ளன (குரான் எப்படித் தந்திருக்கிரது எனத் தெரியவில்லை). இதை தருமியும் பதித்துள்ளார்.

எனக்கு எப்போதுமே உலக துவக்கம்/ படைப்பு பற்றி இந்து மதம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அறியும் ஆவல் உண்டு. இந்த முயற்சியில் நான் படித்த சில கதைகளுக்கும் ஆதாம் ஏவாள் கதைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. ஆன்மீகக் கதைகளுக்கு எப்பொழுதுமே நேரடிப் பொருள் தரப் படுவதில்லை. அதன் உட்பொருட்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த வார டைம் பத்திரிகை பரிணாம அறிவியலில் கண்டுள்ள தற்போதைய முன்னேற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதுதான் கவர் ஸ்டோரி. பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது பரிணாம அறிவியல் என்பதில் சந்தேகமே வேண்டாம். மில்லியன் ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வுகள் எந்தவித வெளிப்படையான ஆதாரங்களுமின்றி எங்கேயாவது புதைந்து கிடக்கும் சில படிமங்களைக் கொண்டு கண்டுபிடிப்பதென்பது நம்பமுடியாததாகத் தோன்றலாம் ஆனால் சாத்தியமாயிருக்கிறது. இயற்கை தன் பாதைகளை மூடி மறைத்திருக்கிறது, ஆனால் அங்காங்கே சில தடயங்களை விட்டுச் சென்றுள்ளது. நம் ஜீன்களிளுள்ள இயக்கமற்ற/பயனற்ற சில பகுதிகளை ஆராய்ந்தால் நம் பரிணாமப் பாதையில் தெளிவு பிறக்கும் என நம்ப்பப் படுகிறது.

மனிதன் மற்றும் குரங்குகள் ஒரே மூலத்திலிருந்த வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதில்லாமல் மனிதனும் குரங்குகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தனர் என்பதே தற்போதைய நம்பிக்கை.

மதங்கள் உருவாகி ஆயிரக் கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அவை தரும் பல கருத்துக்கள் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்பவையாக இருந்திருக்கலாம். ஆனால் என்றும் அவைதான் (அப்படியே) உண்மை என நம்புவது கடினம்.

தலைமுறை தலைமுறையாய் நம்மில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதையே பரிணாம வளர்ச்சியின் ஆதாரமாய் எடுத்துக்கொள்ளலாம்.

அறிவியல் ஆன்மீகத்தை மறுக்கிறது என்பதைவிட, 'நாம் அறிந்திருக்கும்' ஆன்மீகத்தை அது மறுக்கிறது எனலாம். கடவுள் பற்றிய நம் தேடலை விரிவுபடுத்த அறிவியல் அழைக்கிறது எனலாம். இதுவரை மதங்கள் சொல்லியிருக்கும் கடவுளை விட இன்னும் பெரியதாய், ரசிக்கத்தக்கதாய் முற்றும் உணரமுடியாததாய் ஒரு சக்தி இருக்கிறது எனும் மாற்றுக் கொள்கையை வகுத்துக் கொள்ள அறிவியல் உதவுகிறது என்பதும் ஒரு மாற்றுப் பார்வையே. நான் பல பதிவுகளில் சொல்லியிருக்கும் ஒரு கருத்து இது.

இறைவனைத் தேடுவதே 'நம்பிக்கை', 'ஆன்மீகம்'. எனக்கு கடவுள் பற்றி எல்லாம் தெரியும் எனச் சொல்வது அவநம்பிக்கையாகப் படுகிறது. அப்படி ஒருவர் கடவுளைப் பற்றி முற்றிலும் தெரிந்துவைத்திருப்பர் என்றால் அவர் உலகின் எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியான அறிவுபூர்வமான விளக்கம் அளிக்கமுடியும். அப்படி ஒருவராலும் இயலாது என்பதைத்தான் இந்து மதம் 'மாயா' என்கிறது. நாம் இறைவனை முற்றிலும் அறியாவண்ணம் மாயா நம் கண்களை மறைக்கிறது. இதையும் அறிவியல்வழி பார்த்தோமானால் இயற்கையை முழுவதுமய் உணர்ந்துகொள்ள மனிதனால் முடியவில்லை. எப்போதும் சில இடைவெளிகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. பல சமூகக் கூறுகள் நம் சிந்தனையை குறுக்கிவிடுகின்றன. பல முன் தீர்மானங்களும் பதிக்கப்பட்ட சங்கதிகளும் நம் சிந்தனையை வழி நடத்துகின்றன.

எனவே அறிவியல்தரும் முடிவுகாள் பொய்யல்ல, அவை கடவுளை நிராகரிப்பவையல்ல மாறாக இன்னும் பெரிதாக்குபவை எனக் கொள்லலாம்.

கடவுள் பற்றிய நம் தேடலை பெரிதாக்கிக் கொள்வோம். சிந்தனை பெரிதாகும்போது வாழ்க்கை இனிதாகிறதே.

(ரெம்ப குழப்பமாயிருந்தா ஏதேனும் ஒருபகுதிய திரும்பப் படியுங்க. கொஞ்சம் அவசரத்துல எழுதிய பதிவு :) )

Wednesday, October 04, 2006

del.icio.us - மீண்டும் சரியானது

பதிவொன்றில் del.icio.us ல் எப்படி நமக்கு பிடித்த பதிவுகளையும் பிற சுட்டி (URL) களையும் சேகரித்து ஒழுங்குபடுத்த இயல்கிறது எனப் பதித்திருந்தேன்.

அந்த நேரம் del.iciou.us ல் இருந்த தொழில் நுட்பக் கோளாறால் ஆங்கிலமல்லாத குறிச்சொற்களை கையாளுவதில் இருந்த பிரச்சனை தற்போது சரியாகிவிட்டது. பதிவின் வலக்கையில் இருக்கும் பட்டையில் கீழே இந்தப் பகுதியைக் காணலாம்.

இந்தப் பகுதியில் தொகுக்க விரும்பும் பதிவுகளுக்கு 'pp' எனூம் குறிச் சொல்லை சேர்த்துவிடுகிறேன். இதனால் மற்ற சுட்டிகளிலிருந்து இவற்றை வேறுபடுத்தி தொகுக்க முடிகிறது.

என் வார்ப்புருவில் உள்ள 'ஸ்க்ரிப்ட்' முன்னரே உருவாக்கியது. இன்னும் டெலிஷியச்ஸில் ஆங்கிலமல்லாத குறிச்சொல் தொகுப்பிலிருந்து ஸ்க்ரிப்ட் உருவாக்குவதில் பிரச்சனையுள்ளது.

வெட்டிப்பயல் தந்த தலைப்பு

வாரம் ஒரு தலைப்பு 'தேன்' பதிவில் தரப்படுகிறது. இந்த வாரம் வெட்டிப்பயல் தந்த தலைப்பு 'மழை'. ஆசிரியர் சுப்பையா ஐயா ஏற்கனவே கவிதை வரைந்துவிட்டார். உங்கள் படைப்புக்களையும் சேர்த்து பட்டியலிட இங்கே பின்னூட்டமிடலாம் இல்லை தனிமடலில் அனுப்பலாம்.

'மழை'

சிறில் அலெக்ஸ்