.

Friday, October 06, 2006

ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

"மனிதன் எங்கிருந்து வந்தான்?" என்பது ஒரு அசாதரணக் கேள்வி. எல்லாக் காலத்திலுமே கேட்கப்பட்டுள்ள முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதன் மறுபக்கம் "மனிதன் எங்கே போகப் போகிறான்?" என்பது. இந்த இரண்டிற்கும் விடைகாண்பதற்கு அறிவியலும் ஆன்மீகமும் இரு வழிகளாய் திகழ்ந்திருக்கின்றன. திகழ்கின்றன.

இன்னும் முழுமையான விடைகள் கிடைக்காத பட்சத்தில் பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றதைக் காணலாம்.

ஆன்மீகப் பதில்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ளப் படவேண்டும். நம்பிக்கை வைத்து எந்தக் கதையையும் உண்மை எனலாம். ஆனால் பரிணாமக் கொள்கை மற்றும் அது தொடர்ந்து/சார்ந்து வளர்ந்து வரும் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் சில கருத்துக்களைத் தந்துள்ளது. தந்துகொண்டிருக்கிறது.

இது முழுமை பெற்ற அறிவியல் அல்ல என்பவர்களுக்கு ஆன்மீக ரீதியிலான கதைகள் அறிவியலே அல்ல என்பதைப் புரிந்துகொள்வதில் என்னக் கவலை எனத் தெரியவில்லை.

படைத்தலின் அறிவியலை (Creation Scince) சிலர் ஆராய்ந்து வருகின்றனர். இது எப்படி என்றால் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் முயற்சி.

Intelligent Design என்று ஒரு கொள்கை அமெரிக்காவில் பிரபலம். அதாவது அறிவியல், உயிரினங்கள் தாமாகவே பரிணாம வளர்ச்சி அடைந்தன எனச்சொல்லுவதை மறுத்து கடவுள்தான் இந்த மாற்றத்தை நிகழ்த்தினார் எனச் சொல்வது. இயற்கை இத்தனை குழப்பமாக, முற்றும் அதனை அறிய முடியா வண்ணம் வடிவமைக்கப் பட்டிருப்பது ஏதோ ஒரு 'அறிவு'பூர்வமான மூலத்தினாலேயே. என்பது போன்ற வாதங்களை இவர்கள் வைக்கிறார்கள். Natural Theology என்பது இதன் முன்னோடி எனச் சொல்லலாம்.

பக்கம் பக்கமாய் எழுதப் பட்டிருக்கும் Intelligent Design மற்றும் Natural Theology புத்தகங்களில் அறிவியல் சான்றுகளை விட அனுமானங்களும், சாதுர்யமான ஒப்பீடுகளுமே தரப் பட்டுள்ளன.

ஆதாம் ஏவாளின் கதையும்கூட ஒரு ஒப்பீட்டுக் கதைதான். முதலில் ஒளிதான் உருவாகியிருக்கவேண்டும் என கணித்திருக்கிறார்கள். மனிதன் வாழத் தகுந்த சூழல் வந்தபின்னரே மனிதன் உருவாகியிருக்கக் கூடும் என்பதையும் உணர்ந்து கதை சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த 'ஒளி உண்டாகட்டும்' எனச் சொல்லி ஒளியை உருவாக்குவதுதான் Big Bang எனச் சொல்பவர்களும் உண்டு. காலத்துக்கேற்ப புனிதப் புத்தகங்களிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் விளைகின்றன, விளைவிக்கப் படுகின்றன. இதை மிகவும் உற்சாகமாய் செய்பவர்கள் கத்தோலிக்க திருச்சபையினர். அறிவியலை நிராகரிக்க முடியாதென்பதை உணர்ந்தே (அத்தகைய நிலையில் இன்றைய திருச்சபை இல்லை) இவர்கள் பைபிளின் கதைகளை அறிவியல் படுத்த முயல்கிறார்கள்.

ஆதாம் ஏவாள் கதைகள் அபிரகாமிய மதங்களின் மூலக் கதைகளே அல்ல என்பதும் அவை அந்தக் காலத்தில் பல்வேறு கலாச்சாரங்களில் வாய் வழி சொல்லப்பட்டு வந்த கதைகள் என்பதையும் ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. கத்தோலிக்க கிறித்துவமும் இதை ஒப்புக்கொண்டுள்ளது ஆனால் அவற்றின் உட்பொருட்கள் நம்பத்தகுந்தவையாக பொருள்கொள்ளப்படுகின்றன இன்றும்.

ஆதாம் ஏவாள் கதைகள் இப்போது பைபிளில் தரப்பட்டிருக்கும் வகையிலேயே பல ஓட்டைகளைக் கொண்டுள்ளன (குரான் எப்படித் தந்திருக்கிரது எனத் தெரியவில்லை). இதை தருமியும் பதித்துள்ளார்.

எனக்கு எப்போதுமே உலக துவக்கம்/ படைப்பு பற்றி இந்து மதம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அறியும் ஆவல் உண்டு. இந்த முயற்சியில் நான் படித்த சில கதைகளுக்கும் ஆதாம் ஏவாள் கதைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. ஆன்மீகக் கதைகளுக்கு எப்பொழுதுமே நேரடிப் பொருள் தரப் படுவதில்லை. அதன் உட்பொருட்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த வார டைம் பத்திரிகை பரிணாம அறிவியலில் கண்டுள்ள தற்போதைய முன்னேற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதுதான் கவர் ஸ்டோரி. பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது பரிணாம அறிவியல் என்பதில் சந்தேகமே வேண்டாம். மில்லியன் ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வுகள் எந்தவித வெளிப்படையான ஆதாரங்களுமின்றி எங்கேயாவது புதைந்து கிடக்கும் சில படிமங்களைக் கொண்டு கண்டுபிடிப்பதென்பது நம்பமுடியாததாகத் தோன்றலாம் ஆனால் சாத்தியமாயிருக்கிறது. இயற்கை தன் பாதைகளை மூடி மறைத்திருக்கிறது, ஆனால் அங்காங்கே சில தடயங்களை விட்டுச் சென்றுள்ளது. நம் ஜீன்களிளுள்ள இயக்கமற்ற/பயனற்ற சில பகுதிகளை ஆராய்ந்தால் நம் பரிணாமப் பாதையில் தெளிவு பிறக்கும் என நம்ப்பப் படுகிறது.

மனிதன் மற்றும் குரங்குகள் ஒரே மூலத்திலிருந்த வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதில்லாமல் மனிதனும் குரங்குகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தனர் என்பதே தற்போதைய நம்பிக்கை.

மதங்கள் உருவாகி ஆயிரக் கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன. அவை தரும் பல கருத்துக்கள் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்பவையாக இருந்திருக்கலாம். ஆனால் என்றும் அவைதான் (அப்படியே) உண்மை என நம்புவது கடினம்.

தலைமுறை தலைமுறையாய் நம்மில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதையே பரிணாம வளர்ச்சியின் ஆதாரமாய் எடுத்துக்கொள்ளலாம்.

அறிவியல் ஆன்மீகத்தை மறுக்கிறது என்பதைவிட, 'நாம் அறிந்திருக்கும்' ஆன்மீகத்தை அது மறுக்கிறது எனலாம். கடவுள் பற்றிய நம் தேடலை விரிவுபடுத்த அறிவியல் அழைக்கிறது எனலாம். இதுவரை மதங்கள் சொல்லியிருக்கும் கடவுளை விட இன்னும் பெரியதாய், ரசிக்கத்தக்கதாய் முற்றும் உணரமுடியாததாய் ஒரு சக்தி இருக்கிறது எனும் மாற்றுக் கொள்கையை வகுத்துக் கொள்ள அறிவியல் உதவுகிறது என்பதும் ஒரு மாற்றுப் பார்வையே. நான் பல பதிவுகளில் சொல்லியிருக்கும் ஒரு கருத்து இது.

இறைவனைத் தேடுவதே 'நம்பிக்கை', 'ஆன்மீகம்'. எனக்கு கடவுள் பற்றி எல்லாம் தெரியும் எனச் சொல்வது அவநம்பிக்கையாகப் படுகிறது. அப்படி ஒருவர் கடவுளைப் பற்றி முற்றிலும் தெரிந்துவைத்திருப்பர் என்றால் அவர் உலகின் எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியான அறிவுபூர்வமான விளக்கம் அளிக்கமுடியும். அப்படி ஒருவராலும் இயலாது என்பதைத்தான் இந்து மதம் 'மாயா' என்கிறது. நாம் இறைவனை முற்றிலும் அறியாவண்ணம் மாயா நம் கண்களை மறைக்கிறது. இதையும் அறிவியல்வழி பார்த்தோமானால் இயற்கையை முழுவதுமய் உணர்ந்துகொள்ள மனிதனால் முடியவில்லை. எப்போதும் சில இடைவெளிகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. பல சமூகக் கூறுகள் நம் சிந்தனையை குறுக்கிவிடுகின்றன. பல முன் தீர்மானங்களும் பதிக்கப்பட்ட சங்கதிகளும் நம் சிந்தனையை வழி நடத்துகின்றன.

எனவே அறிவியல்தரும் முடிவுகாள் பொய்யல்ல, அவை கடவுளை நிராகரிப்பவையல்ல மாறாக இன்னும் பெரிதாக்குபவை எனக் கொள்லலாம்.

கடவுள் பற்றிய நம் தேடலை பெரிதாக்கிக் கொள்வோம். சிந்தனை பெரிதாகும்போது வாழ்க்கை இனிதாகிறதே.

(ரெம்ப குழப்பமாயிருந்தா ஏதேனும் ஒருபகுதிய திரும்பப் படியுங்க. கொஞ்சம் அவசரத்துல எழுதிய பதிவு :) )

17 comments:

நிர்மல் said...

நல்ல பதிவு சிறில்

இலவசக்கொத்தனார் said...

கொஞ்சம் குழப்பிட்டீங்க. வாத்தியாரே, நிதானமா படிச்சுப் பாக்கறேன்.

G.Ragavan said...

:-)))))) சிறில் நல்லா யோசிச்சிருக்கீங்க. ஆனா என்ன சொல்ல வர்ரீங்க? மதத்துக்குள்ளயே கெடக்காத. ஒழுங்கா நீயாவும் சிந்திச்சுப் பாரு. இறைவன் நமக்குக் கொடுத்த கொடை மூளையும் அன்பும். அத ஒழுங்காப் பயன்படுத்து. அவ்வளவுதாங்க. இதவிட வேற வழியில ஆண்டவன அடைய முடியுமான்னா முடியாதுன்னு அடிச்சுச் சொல்வேன். ஆனா பலர் ஒத்துக்க மாட்டாங்க. ஒத்துக்காட்டி என்ன வந்தது. ஒன்னும் வராது.

Anonymous said...

மனிதர்களை படைத்தவன் கடவுள் என்றால் கடவுளை படைத்தவன் யார்?

ravi srinivas said...

Science does not need GOD as a factor in explaining birth of universe or evolution.Religious
thinking is centred on GOD.So the discourse of Science and Religion
need not be complementary.Whether they should be contradictory is
a different question.If you take what religion says as a myth or fable or story and do not raise it to the level of TRUTH or SOLE EXPLANATION then there is no harm.
But religious zealots take what religion says as the TRUTH and deny
all other explantions as heretical
or as false.That is where the trobule starts.

Sivabalan said...

சிறில்
கடவுள் இருக்கிறார் என்கிறீர்களா??? ம்ம்ம்ம்..

பரிணாமத்தின் முக்கியத்துவத்தையே Hijack பண்ணப் பார்க்கிறீர்கள்??

என்னமோ போங்க..

நல்லா எழுதியுள்ளீர்கள்.. நன்றி.

கடைசியில் கடவுளின் இருப்பைப் பற்றி வாசகர்களை குழுப்பிவிட்டீர்கள்.. அல்லது எனக்கு புரியவில்லை என நினைக்கிறேன்

சிறில் அலெக்ஸ் said...

பதிவ முழுதுமா யோசித்தபிறகு எழுதாம எழுத எழுத யோசித்ததில் கொஞசம் குழப்பிட்டேன்னு நினைக்கிறேன்.

நான் சொல்ல வந்தது..

"ஏனோ எனக்கு கடவுளை முற்றிலுமாக மறுக்க இயலவில்லை. அறிவியல் சொல்வதெல்லாம் பொய் என் மதம் சொல்வதுதான் உண்மை என்பதும் முட்டாள்தனமான வாதமாகும். அப்ப அறிவியல் இயற்கையை விளக்கும்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போக வாய்ப்புள்ளதா? இல்லை. ரவி ஸ்ரீனிவாஸ் சொல்றது மாதிரி அறிவியல் ஆன்மீகம் இரண்டும் வேறு தளங்கள். அதை ஒன்றுபடுத்திப் பார்ப்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

கடவுளும் வேணும் அறிவியலும் வேணும் எனும் நிலைப்பாட்டில் எனக்கு என்ன தோணுதுன்னா, அறிவியல் இயற்கைய ஆராய ஆராய கடவுளைப் பற்றிய மலைப்பும் வியப்பும் அதிகமாகலாமில்லையா?

இன்னொன்று, கடவுளை வெறுக்க்கச் செய்வது மதங்கள்தான். இதுல சந்தேகமே இல்ல. இன்றைக்கு நாத்திகர்கள் உருவாவது மதத்தின் பேரில் உள்ள வெறுப்பினால்தான் அதிகம். கடவுள் மேலுள்ள லேபிள்களைக் களைந்துவிட்டு புதிதாய் பார்க்கவேண்டும்னு நினைக்கிறேன்.

(பின்னூட்டமாவது குழப்பமல் இருக்குதா?)

:)

சிறில் அலெக்ஸ் said...

//பரிணாமத்தின் முக்கியத்துவத்தையே Hijack பண்ணப் பார்க்கிறீர்கள்??//

சிவபாலன்,
பரிணாமத்தின் முக்கியம் கடவுள் மறுப்பா? எந்த அறிவியலும் அப்படி இயங்குவதில்லை. ரவிஸ்ரீனிவாஸ் சொல்லியிருக்கிறதப் பாருங்க.

கடவுள் எனும் கான்சப்ட் ரெம்ப வளைந்து கொடுக்கக் கூடியது. அத மதங்கள் வேலிபோட்டு, கட்டம் போட்டு காண்பிக்கலாம்னு முயன்றிருக்காங்க. எவ்வளவு அறிவியல் வளர்கிறதோ அதுக்கும் மேலே கடவுள்ங்கிற கான்சப்ட வளர்க்கலாம், அறிவியல் சொல்லும் அதே அடிப்படையிலேயே வளர்க்கலாம். ஏன்னா அது ஒரு கான்சப்ட்தான்.

நிச்சயம் ஒரு சக்தி இருக்குது இதை நீங்க 'இயற்கை'ன்னு உணர்ந்தால் அறிவியல் 'கடவுள்னு'உணர்ந்தால் ஆன்மீகம்.

இரண்டுக்கும் ஒருகட்டத்துல பெரிய வித்தியாசம் இல்லமப் போயிருது.

நிச்சயம் விவாதத்துக்குரிய விஷயங்கள்.

:)

Sivabalan said...

சிறில் ,

நீங்கள் சொல்ல வரும் விசயம் புரிகிறது..அதாவது கிட்டதட்ட இன்னொரு மதம்... இன்னொரு கடவுள் மாதிரி...அறிவியலை வைத்து உருவாக்கலாம்??? ம்ம்ம்ம்

நீங்க அறிவியல் மூலமா கடவுளை தேடலாம் என்று சொல்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ம்ம்ம்ம்

சிறில் அலெக்ஸ் said...

சிவபாலன்,
வருத்தப் படறதுக்கு என்ன இருக்கு? உங்க நம்பிக்கை என்னவோ அதுல பிடிப்பா மகிழ்ச்சியா இருங்க.

:)

நாங்கெல்லாம் கொஞ்சம் தள்ளாடிகிட்டே இருப்போம். அதெல்லாம் கண்டுக்காதீங்க.

Anonymous said...

Cyril,

ennamo ponga
onnume puriyale!!!
Raghs

கால்கரி சிவா said...

சிறில், மனிதன் தோன்றுவதற்கு முன் இருந்த லூசிபெர் கதை என்ன?

சிறில் அலெக்ஸ் said...

சிவா,
//சிறில், மனிதன் தோன்றுவதற்கு முன் இருந்த லூசிபெர் கதை என்ன? //

லூசிபரின் கதை நேரடியாக (அதன் பெயரை வைத்து ) பைபிளில் சொல்லப்படவில்லை என நினைக்கிறேன்.

கடவுள் கிட்டத்தட்ட தனக்கு நிகராகவும் அழகிலும் அறிவிலும் மிக உயர்ந்ததாகவும் லூசிபர் எனும் சம்மனசை(ஏஞ்சல்) படைத்ததாகவும் அது கடவுளை எதிர்த்து போர் செய்து விண்ணகத்திலிருந்து துரத்தியடிக்கப்ப்பட்டதாயும் கதை சொல்லப்படுகிறது.

இதன் மூலங்களாக இசையாஸ், இசக்கியேல் எழுதிய புத்தகங்களிலிருந்தும் ரெவலேஷன் (திர்வெளிப்பாடு) எனும் புதிய ஏற்பாட்டு புத்தகத்தில் சில பகுதிகளும் காண்பிக்கப் படுகின்றன.

Isaiah 14:12-15; Ezekiel 28:1-19
Revelation 12:7-9.

For Further reading
Isaiah 14:12-15;
12 How you have fallen from heaven,
O morning star, son of the dawn!
You have been cast down to the earth,
you who once laid low the nations!

13 You said in your heart,
"I will ascend to heaven;
I will raise my throne
above the stars of God;
I will sit enthroned on the mount of assembly,
on the utmost heights of the sacred mountain. [a]

14 I will ascend above the tops of the clouds;
I will make myself like the Most High."

15 But you are brought down to the grave,
to the depths of the pit.

Ezekiel 28:1-19 (New International Version)


Ezekiel 28
A Prophecy Against the King of Tyre
1 The word of the LORD came to me: 2 "Son of man, say to the ruler of Tyre, 'This is what the Sovereign LORD says:
" 'In the pride of your heart
you say, "I am a god;
I sit on the throne of a god
in the heart of the seas."
But you are a man and not a god,
though you think you are as wise as a god.
3 Are you wiser than Daniel [a] ?
Is no secret hidden from you?

4 By your wisdom and understanding
you have gained wealth for yourself
and amassed gold and silver
in your treasuries.

5 By your great skill in trading
you have increased your wealth,
and because of your wealth
your heart has grown proud.

6 " 'Therefore this is what the Sovereign LORD says:
" 'Because you think you are wise,
as wise as a god,

7 I am going to bring foreigners against you,
the most ruthless of nations;
they will draw their swords against your beauty and wisdom
and pierce your shining splendor.

8 They will bring you down to the pit,
and you will die a violent death
in the heart of the seas.

9 Will you then say, "I am a god,"
in the presence of those who kill you?
You will be but a man, not a god,
in the hands of those who slay you.

10 You will die the death of the uncircumcised
at the hands of foreigners.
I have spoken, declares the Sovereign LORD.' "

11 The word of the LORD came to me: 12 "Son of man, take up a lament concerning the king of Tyre and say to him: 'This is what the Sovereign LORD says:
" 'You were the model of perfection,
full of wisdom and perfect in beauty.

13 You were in Eden,
the garden of God;
every precious stone adorned you:
ruby, topaz and emerald,
chrysolite, onyx and jasper,
sapphire, [b] turquoise and beryl. [c]
Your settings and mountings [d] were made of gold;
on the day you were created they were prepared.

14 You were anointed as a guardian cherub,
for so I ordained you.
You were on the holy mount of God;
you walked among the fiery stones.

15 You were blameless in your ways
from the day you were created
till wickedness was found in you.

16 Through your widespread trade
you were filled with violence,
and you sinned.
So I drove you in disgrace from the mount of God,
and I expelled you, O guardian cherub,
from among the fiery stones.

17 Your heart became proud
on account of your beauty,
and you corrupted your wisdom
because of your splendor.
So I threw you to the earth;
I made a spectacle of you before kings.

18 By your many sins and dishonest trade
you have desecrated your sanctuaries.
So I made a fire come out from you,
and it consumed you,
and I reduced you to ashes on the ground
in the sight of all who were watching.

19 All the nations who knew you
are appalled at you;
you have come to a horrible end
and will be no more.' "


Revelation 12:7-9.


7And there was war in heaven. Michael and his angels fought against the dragon, and the dragon and his angels fought back. 8But he was not strong enough, and they lost their place in heaven. 9The great dragon was hurled down—that ancient serpent called the devil, or Satan, who leads the whole world astray. He was hurled to the earth, and his angels with him.

bala said...

சிரில்,

நல்ல பதிவு.

அறிவியல் மூலமா ஆன்மீகத்தை அணுக முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது..
ஆன்மீகம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வாகத்தான் இருக்க வேண்டும்.
மாறாக புவி ஈர்ப்பியல் தியரி isaac Newton க்கு முன்பாகவே ரிக் வேதத்திலே சொல்லியிருக்கு,குரான்லெ சொல்லியிருக்கு என்று சொல்வதெல்லம் வெறும் சப்பைக் கட்டு ,புரட்டல்.இது ஒவ்வொரு மதவாதியும் சொல்லும் அற்பப் பெருமை "உலகிலேயே மூத்த குடி தமிழ்க் குடி" போன்றது.

கில்ட்டன் said...

அறிவியலால் அறியப்படும் நம் அறியாமை:

அறிவியல் ஆன்மீகத்தை மறுக்கிறது என்பதைவிட, 'நாம் அறிந்திருக்கும்' ஆன்மீகத்தை அது மறுக்கிறது எனலாம்.

புதியதொரு கருத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது செய்யப்பட வேண்டிய சுய மறுபரிசீலனை:

பல சமூகக் கூறுகள் நம் சிந்தனையை குறுக்கிவிடுகின்றன. பல முன் தீர்மானங்களும் பதிக்கப்பட்ட சங்கதிகளும் நம் சிந்தனையை வழி நடத்துகின்றன.

சிந்திக்கப்படவேண்டிய புதிய கருத்து:
எனவே அறிவியல்தரும் முடிவுகள் பொய்யல்ல, அவை கடவுளை நிராகரிப்பவையல்ல மாறாக இன்னும் பெரிதாக்குபவை எனக் கொள்லலாம்.


வாழ்த்துக்கள் திரு.சிறில்,, உங்கள் கருத்துக்கள் என்னை வெகுவாய் கவர்ந்தன............

சிறில் அலெக்ஸ் said...

கில்டன்,
இந்தப் பதிவை தெளிவாகப் புரிந்து பின்னூட்டம் போட்டிருக்கீங்க. ரெம்ப நல்லா எழுதுறீங்க. சீக்கிரம் ப்ளாக் ஆரம்பிக்கலாம்.

:)

சிறில் அலெக்ஸ் said...

பாலா,
மதங்களில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிர் கருத்துக்களை எப்படியாவது சமாளித்துவிடணும்னு தோணும். தன் நம்பிக்கைதான் தனக்கு அடையாளம்னு நினைக்கிறவங்க எதிர் கேள்விகள தன் சுய அடையாளத்தையே அழிக்கப் பார்க்கும் விஷயமா கருதுறாங்க. அப்போ ஏதாவது சொல்லியே ஆகணுமே.

சிறில் அலெக்ஸ்