.

Saturday, October 07, 2006

இலையுதிர் காலம் ஆரம்பம்

அமெரிக்காவில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் நான்கு காலங்களிலும் ஏற்படும் உணரத்தக்க, இரசிக்கத்தக்க சூழ்நிலை மாற்றங்கள். அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. நம்ம ஊரில் கவிஞர்கள்மட்டும்தான் இலையுதிர் காலம் பார்க்கிறார்கள்.

பச்சையிலிருந்து...
கிளிப்பச்சையாகி
மஞ்சளாகி
பழுப்பாகி
குப்பையாகி
அழுகி உரமாகி
தன் தாய்மரத்துக்கே
உணவாகும்
தியாகச் செம்மல்கள் இந்த இலைகள்.

தன் உயிரைக் காக்க
உடையைக் களையும்
மானங்கெட்ட மரங்கள்.
இதனால்தான்
தமிழ் நாட்டு மரங்கள்
இலை உதிர்ப்பதில்லையோ?

(ஒரு வாக்கியத்த உடைத்துப் போட்டால் கவிதையாகிவிடுகிறதில்ல?)

வெளியே வாக்கிங் சென்றபோது செல்போனில் சுட்ட படங்கள்.
ஜன்னலுக்கு வெளியே

தனிமரம்
காலம் மாறிப் போச்சு
இன்னும் இருக்குது பச்சை

இன்னும் இருக்குது ஆகாயம்

நீல நயனங்களில் ..நீண்ட கனவு


நிறம் மாறும் இலைகள்



















4 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//தன் உயிரைக் காக்க
உடையைக் களையும்
மானங்கெட்ட மரங்கள்.
இதனால்தான்
தமிழ் நாட்டு மரங்கள்
இலை உதிர்ப்பதில்லையோ?//

சிறில் ...!

உடைமாற்றும் முன் நாம் அவிழ்த்துப் போட்டுவிட்டு ஒரு குளியல் போட்டு
சுறுசுறுப்பாகி புதிய உடை அணிந்து கொள்வதில்லையா ?

மரங்கள் மட்டும் விதிவிலக்கா ? தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம், நாமும் குளிப்பதில்லை. மரமும் இலை உதிர்ப்பதில்லை !

:))

Anonymous said...

// ஒரு வாக்கியத்த உடைத்துப் போட்டால் கவிதையாகிவிடுகிறதில்ல //

என்ன சார் கவிதை எழுதுற ரகசியத Public'a சொல்லிடீங்க ? :-)

Anonymous said...

பச்சையிலிருந்து...
கிளிப்பச்சையாகி
--
Should be swapped

Boston Bala said...

'அலைபாயுதே'வில் வரும் பாடலை நினைவூட்டும் காலம்.

சிறில் அலெக்ஸ்