Friday, October 13, 2006
தலைப்பு
இந்த வார தலைப்பு 'கோமாளி'.
இந்தத் தலைப்பில் உங்களைப் பத்தி எழுதலாம்.
எப்பவும் சிரித்துக்கொண்டே திரிவானே உங்க நண்பன் அவனப்பத்தி எழுதலாம்.
ஊரெல்லாம் போயி சேட்ட செஞ்சுட்டு அப்பாட்ட 'கோமாளியாடட நீ'ன்னு திட்டு வாங்குவானே தம்பி அவனப் பத்தி எழுதலாம்.
'எனக்கு வாக்களித்தால் இந்த ஊரை டெல்லிக்கு பக்கத்தில் மாற்றிவைப்பேன்'னு வாக்குறுதி தரும் வார்ட்டு கவுன்சிலர் வேட்பாளரைப் பத்தி எழுதலாம்.
'மங்களம் உண்டாகட்டும்' என்பதற்கும் இரட்டை அர்த்தம் தரும் சாமியார்கள், ஏதாவது 'மேனரிசம்' கொண்ட வாத்தியார்கள், கல்யாணவீட்டில் எப்போதும் கலாட்டா செய்யும் மாமா, பக்கத்து சீட்டில் இருக்கும் சக ஊழியர், சதா பெண்களிடம் வழியும் மேலாளர், குழாயடிச் சண்டையை குத்தகைக்கு எடுத்திருக்கும் மாமி, தெருவில் அண்டாவ 'வெச்சு' 'தண்னி' அடித்துவிட்டு வசனம் பேசும் குடிமகன்கள்.
அட லிஸ்ட்டு பெருசாயிடுச்சே.. .எழுதுங்க பார்க்கலாம்.
பி. கு படத்தில் இருப்பது நான் அல்ல
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
19 comments:
நாங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளையும் இப்படி ஒரே தலைப்பில் சுருக்குவதை பா.க.ச. சார்பாக வண்மையாகக் கண்டிக்கிறேன் :)
சிறில்...!
என்னையும் சேர்த்தே
நாகரீக கோமாளிகள் நிறையவே இருக்கிறார்கள்.
எழுதிடுவோம் !
:)
நம்ம தூறலை மழை தலைப்பில் சேர்க்க முடியுமா???
//நாங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளையும் இப்படி ஒரே தலைப்பில் சுருக்குவதை பா.க.ச. சார்பாக வண்மையாகக் கண்டிக்கிறேன் :) //
:)
உங்க கண்டனத்துக்கு நன்றி
:)
GK,
போட்டு தாக்குங்க
// வெட்டிப்பயல் said...
நம்ம தூறலை மழை தலைப்பில் சேர்க்க முடியுமா???
//
என்ன வெட்டிப்பயல் உங்க படைப்ப சேக்காமலா?
நாம போட்டியெல்லாம் நடத்தலைங்க எப்ப வேணும்னா சேத்துக்கலாம்.
:)
கத சூப்பருங்கோ
//நாம போட்டியெல்லாம் நடத்தலைங்க எப்ப வேணும்னா சேத்துக்கலாம்.//
அந்த தைரியத்துலதான் எழுதறதே :-)
மிக்க நன்றி!!!
மங்களம் உண்டாகட்டும்னு ஜோக் சொன்னதும் வாரியார் சொன்ன ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது.
ஒரு திருட்டு சாமியார் இருந்தாராம். அவரு வர்ர பெண்களுக்கெல்லாம் மாதேவா சம்போ கந்தா-ன்னு ஆசி குடுத்தாராம்.
அது என்னடான்னு விசாரிச்சா மாதே வா சமோகந் தா-ன்னு சொன்னாரம். :-))))))))))))))
ராகவன்,
இந்த ஜோக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
சிறில். வலப்பக்கம் எஸ்.கேயின் பாலியல் பதிவுகள்ன்னு போட்டிருக்கீங்களே. அதனை பாலியல் கல்விப் பதிவுகள்ன்னு மாத்திடுங்க. ரெண்டும் ஒரே பொருள் தான் என்றாலும் கல்வி என்பதைச் சேர்த்தால் தனி மரியாதை கூடிவிடுவதைப் போல் தோன்றுகிறது. :-)
நண்பர் சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு,
நீங்கள் இன்று கொடுத்த தலைப்பிற்கு ஒரு பாடலைக் கிறுக்கிப் பதிப்பித்துள்ளேன்
பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
URL: http://devakottai.blogspot.com
நன்றி வணக்கத்துடன்
குமரன்,
சரி செய்துவிட்டேன்.
சுப்பையா சார்
சேர்த்துவிட்டேன்..
கோமாளிக்கும் ஏமாளிக்கும்
மயிரிழைதான் வேறுபாடு
கோமாளி தான் செய்வது
இன்னதெனச் செய்கிறான்
மற்றவரை ஏமாற்றி
அவன் அடிபடுவதில்லை
ஏமாளியோ தன்னையும் வருத்தி
மற்றவரையும் வருத்துவான்
ஏமாளிக்கு கோமாளியே மேல்
என்னமோ போங்க!
ஆடுகள் மோதுவது
கொம்பெனும் திமிரால்
அவரவர்க்கு ஓர் கொம்புண்டு
அதுவும் புரியும் அவர்க்கே
கொம்பைச் சீவிவிட்டு
மோதவிடும் கூட்டம்
இருபக்கமும் உண்டு
இதுதானே உண்மை இங்கு
தனக்கா வலிக்கிறது
அடிபடுவது ஆடுதானே
இதில் இதென்ன உசத்தி
அதென்ன தாழ்த்தி
அத்தனையும் போலி
உணர்வெல்லாம் பொய்யே
உன்னையும் தாண்டி
என்னையும் தாண்டி
புரிதல் எனும் அந்தப்
பெருமையை உணர்ந்தால்
யாரும் இங்கு கோமாளியல்ல
யாரும் இங்கு ஏமாளியல்ல
புரிபவர்க்குப் புரிந்தால்
அதுவே மகிழ்ச்சி!
அவரவர் உறவே
அவரவர்க்கு சத்தியம்
எவர் என்ன நினைத்தால்
எனக்கென்ன போச்சு
உருகிடும் உனை நினைத்து
என்றும் எந்தன் மூச்சு!
சிறில், இதையும் முடிந்தால் உங்கள் பதிவில் சேருங்கள்!
நன்றி.
"பாலியல் கல்வி- பெற்றோருக்கு" பதிவினை உங்கள் இடுகையில் சேர்த்ததற்கு எனது மனமார்ந்த நன்றி, சிறில்!
//பாலியல் கல்வி- பெற்றோருக்கு" பதிவினை உங்கள் இடுகையில் சேர்த்ததற்கு எனது மனமார்ந்த நன்றி, சிறில்! //
SK,
என்ன இப்டி சொல்லிட்டீங்க.. இது போட்டு ரெம்ப நாளாச்சு. உங்களுக்காக மட்டுமல்ல இதுபோல உருப்படியா எல்லோரும் எழுதணும்னு சொல்லவும் அப்டி எழுதுறவங்களுக்கு என் ஆதரவு எப்பவும் உண்டுன்னு வலியுறுத்தவும்தான்.
:)
உங்க கவிதைய சீக்கிரம் பதிவிலிடுகிறேன்.
இந்த
செம்மறியாடுகளால்
பாதிப்பட்டவர்களில்
நானும் ஒருவன்.
ஒரு ஆடு
நாட்டு கறுப்பு ஆடு;
இன்னுமொன்று
தன்னை ஜாதி வெள்ளாடு
என்று நினைத்துக் கொண்டிருக்கும் கொடியாடு.
யாருக்கு வீரம் அதிகம்
என்று அவை
போரிட்டுக் கொண்டிருந்தாலும் உடைவதென்னவோ
கொம்புகள்தான்!
இருபுறமும்
இந்த கண்காட்சியை
தூண்டிவிட
ஏராளமான பார்வையாளர்கள்...
பாதிப்பு
அவற்றின் கொம்புகளையும் தாண்டி பார்வையாளருக்கும்
நேரும்போதுதான்
நமக்கும் வலி
தெரிகிறது!
ஆடுகளை தனித்து
ஆளரவமற்ற
மைதானத்தில் விட்டால்
அவை ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு சாகும்...
போட்டியை நடத்துபவர்களும் தூண்டிவிடுபவர்களும்
வேண்டுமானால்
அங்கு சென்று
ஜல்லியடித்துக் கொள்ளட்டும்... பார்வையாளர்களுக்கு
எந்த பாதிப்பும்
வராது.
நல்லா சொல்லியிருக்கீங்க கருப்பு.
நன்றி.
நல்ல தலைப்புதான் :-))
***
இதோ இந்த இடுகையை எமது தளத்தில் வெளியிட்டிருக்கிறோம்.. இதையும் சேர்த்து விடுங்கள், நன்றி !!
Post a Comment