.

Thursday, December 20, 2007

nach


nach
Originally uploaded by cvalex
Test

Monday, September 17, 2007

இனிமேல் இங்கே எழுதப்போவதில்லை.

பதிவர்கள் விலகுவதும் விலகியவர்கள் உள்ளே வருவதும் சகஜமாயிருக்கும் இந்த நாட்களில் நானும் ஒரு அறிவிப்போடு இங்க எழுதுறத நிறுத்தப் போறேன். இதுக்கு மேல பில்ட் அப் குடுக்க விரும்பல தனிக்குடித்தனமா போயி cyrilalex.com தளத்துல எழுதலாம்னு இருக்கேன். உங்க ஆசியோட!
எல்லாரும் புதுவீடு புகுவிழாவுக்கு வந்திடுங்க.

என்னுடைய பதிவுகள் சிலவற்றை ஒன்றாக ஒரே தளத்தில் காணும் வசதியை விரைவில் ஏற்படுத்தவிருக்கிறேன்.

பதிவுகளுக்கான புதிய செய்தியோடை : http://cyrilalex.com/?feed=rss2
பின்னூட்டங்களுக்கான புதிய செய்தொயோடை : http://cyrilalex.com/?feed=comments-rss2

அடுத்த பதிவு எப்ப போடுவேன்னு தெரியாது. ஆணியப் புடுங்க சொன்னா பரவாயில்ல இங்க ஆபீஸ்ல சுத்தியலையே புடுங்க சொல்றாங்கப்பா.

தள வடிவமைப்பு சிந்தாநதியும், ரவுசங்கரும் சற்றுமுன்னுக்கு செய்ததிலிருந்து சிறிய முன்னேற்றங்களுடன் நான் ஆக்கியது. தேன், அலைகள் பாறைகள் மணல்மேடுகளுக்கான லோகோ நானே செய்தது. இதுக்கெல்லாம் வீட்ல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிட்டேன்.

மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க.

Wednesday, September 05, 2007

தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?

என் மகனுக்கு தமிழ் சொல்லித் தரலாம் என ஒரு புத்தகம் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தேன். அதுல என்னண்ணா...படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

ட - டயர்
வ - வல்கனைசிங்

ஐ - ஐஸ்கிரீம்
ப - பலூடா

ஏ - ஏரோபிளேன்
ஓ - ஓம்னி பஸ்
கலர் கிளி
கறுப்பு வெள்ளை காகம்
வான்கோழி பிரியாணி சாப்பிட்டதில்லையா இவரு?

Tuesday, September 04, 2007

'சற்றுமுன்' புதுப் பொலிவுடன்

சற்றுமுன் செய்தித் தளம் புதுப் பொலிவுடன் satrumun.com எனும் தனி வலைப்பதிவுத் தளமாக இன்றுமுதல் இயங்குகிறது. புதிய தளத்தில் உங்களுக்கென பயனர் கணக்கை துவங்கிய பின்னர் பின்னூட்டமிடும் வசதிகள் உள்ளன.

தமிழ்மணம் புதிய தளத்தை திரட்டுவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணப் பயனர்கள் நேரடியாக satrumun.com சென்று செய்திகளைப் பெறலாம்.

Monday, August 20, 2007

'ஜன கன மன' வாத்திய இசை

சர்வேசனின் ஜன கன மன நேயர் விருப்பத்திற்கு என்னுடைய Casioவில் வாசித்து பதித்த வாத்திய இசை.

Get this widget | Share | Track details

Saturday, August 11, 2007

Rush Hour 3 - No rush

அமெரிக்கத் திரையரங்கில் சிவாஜிக்கு அடுத்தபடியாக வரிசையில் நின்று பார்த்தபடம் ரஷ் ஹவ்ர் 3. படத்தில் கதை எனப் பெரிதாய் ஒன்றுமில்லை. எதிர்பாராத திருப்பங்களுமில்லை. வழக்கமாக ஜாக்கிசான் படங்களுக்கு் ரூம் போட்டு கதை எழுதும் பழக்கமில்லை எனத் தெரியுமென்பதால் இதில் பிரச்சனையில்லை. ஆனா் படத்தில் பழைய ஜாக்கிசான் இல்லவே இல்லை. பழசான ஜாக்கிதான் இருக்கிறார்.

சண்டைக்காட்சிகள் மிகவும் சாதாரணமானதாயுள்ளன. அவ்வப்போது வெடிக்கிறது க்ரிஸ்டக்கரின் காமெடி. சிவாஜிக்கும் ரஷ் அவர் 3க்கும் சிவாஜிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை(வரிசையில் நிற்பதை் தவிர்த்து).

வயதான ஹீரோக்கள். பழக்கப்பட்ட கதை. காமெடியனின் அதீத ஆதிக்கம். ஹீரோவே காமெடியனாவது. அங்கவை சங்கவைபோல இனம்சார்ந்த கிண்டல்கள். இன்னும் பல.

இனம்சார்ந்த கிண்டல்களுக்கு அமெரிகாவில் எதிர்வினைகள் அதிகம் இருப்பதில்லை. இங்கே ஈர்க்குச்சி விளக்குமாறு இல்லாததால்கூட இருக்கலாம்.

படம் காமெடி கலாட்டா. ஏனோ, ஜாக்கியின் பழைய படங்களை பார்க்கவேண்டும் என்கிற ஏக்கத்தை தவிற வேறெதுவும் தாக்கமில்லை.

பழைய ஜாக்கி சான் படத்தொகுப்பு

Wednesday, August 08, 2007

'சற்றுமுன்...'் மின்னஞ்சல் சேவை

சற்றுமுன் செய்தித் தளம் ஒரு மின்னஞ்சல் சேவையை செய்துவருகிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தால் சற்றுமுன் செய்திகள் தினம் காலை (இந்திய நேரம்) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்.

சற்றுமுன் தளத்தின் இடதுபக்கப் பட்டையில் இதற்கான குறும்பெட்டி ஒன்றுள்ளது. இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்து சேவையைப் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

ஏற்கனவே 70 பேர் இதில் கலந்து பயன்பெறுகிறார்கள். தேன் பதிவின் இடப்பக்கத்திலும் இதற்கான குறும்பெட்டியைக் காணலாம்.

தமிழ் செய்திகளை மின்னஞ்சல் மூலம் வழங்கும் ஒரே சேவை சற்றுமுன்னாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். (இல்ல இது ரெம்ப டூ மச்சா?:)))

Tuesday, August 07, 2007

பட்டறையில் பங்குகொள்ளாததன் சோகங்கள்

தமிழ் பதிவர் பட்டறை எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்பதை அதை குறித்த பதிவுகள் செய்திகள் மூலம் தெரிந்துகொள்ள இயல்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னால் பங்களிக்க இயலவில்லையே எனும் ஏக்கம் இப்போதைக்குப் போகாது. தமிழ் இலக்கிய வட்டம் போல பதிவர் வட்டம் என ஒன்று தெளிவாக உருவாகியுள்ளதன் வெளி அடையாளமாக இந்தப் பட்டறையை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. பட்டறையில் கலந்துகொண்டவர்கள் துவங்கியிருக்கும் பதிவுகளைப் பார்க்கையில் இன்னும் இந்த வட்டம் விரிந்து இணையத் தமிழ் சிறப்படையச் செய்யும் என்பது தெளிவாகிறது.

வேலைப் பழு அதிகமாயிருப்பதால் பதிவுலகில் கவனமில்லை. மொத்தம் 3 ப்ராஜக்ட்களில் வேலைசெய்துகொண்டிருக்கிறேன்... கூடவே ஆஃப்ஷோர் வேறு. (எவனோ கண்ணு போட்டுட்டான்).

மீதமிருக்கும் பதிவுலக வேலைகள்
1. சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பது
2. சற்றுமுன்னை விரிவு செய்து புதுப்பிப்பது
3. புதிய குழுப் பதிவு ஒன்றை ஆரம்பிப்பது (சர்ப்ரைஸ்)
4. சிகாகோவில் பட்டறை நடத்துவது குறித்து திட்டமிடுவது

எப்ப செய்வேனோ தெரியல.

நம்ம பட்டறையில் பட்டையை கிளப்பிய அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டும். ஊடகங்களுக்கும், மக்களுக்கும் நம் இருப்பினை வெளிச்சம் போட்டு காட்டியது உங்கள் உழைப்பு. இன்னும் தொடர்வோம்...

Thursday, August 02, 2007

பட்டறைக்கு தோள் கொடுப்போம்

பதிவர் பட்டறைக்காக பல தோழர்கள் கடுமையாக உழைக்கின்றனர். இதன் பலன்களை நாம் அனைவரும் அனுபவிக்கப் போவது உறுதி.

இல்லையென்றே ஆனாலும், பதிவர் பட்டறைக்கு நம் ஆதரவைத் தெரிவிக்க பதிவுலகைச் சாராத வெளி ஆதரவாளர்களின் தளங்களின் சுட்டியை உங்கள் பதிவுகளில் தரலாம், அவற்றைச் சென்று பார்வையிடலாம். இதனால் தற்போதைய ஆதரவாளர்கள் நிறைவு கொள்ளவும் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதரவு திரட்டவும் இயலும்.





தேன்

சிறில் அலெக்ஸ்