அமெரிக்கத் திரையரங்கில் சிவாஜிக்கு அடுத்தபடியாக வரிசையில் நின்று பார்த்தபடம் ரஷ் ஹவ்ர் 3. படத்தில் கதை எனப் பெரிதாய் ஒன்றுமில்லை. எதிர்பாராத திருப்பங்களுமில்லை. வழக்கமாக ஜாக்கிசான் படங்களுக்கு் ரூம் போட்டு கதை எழுதும் பழக்கமில்லை எனத் தெரியுமென்பதால் இதில் பிரச்சனையில்லை. ஆனா் படத்தில் பழைய ஜாக்கிசான் இல்லவே இல்லை. பழசான ஜாக்கிதான் இருக்கிறார்.
சண்டைக்காட்சிகள் மிகவும் சாதாரணமானதாயுள்ளன. அவ்வப்போது வெடிக்கிறது க்ரிஸ்டக்கரின் காமெடி. சிவாஜிக்கும் ரஷ் அவர் 3க்கும் சிவாஜிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை(வரிசையில் நிற்பதை் தவிர்த்து).
வயதான ஹீரோக்கள். பழக்கப்பட்ட கதை. காமெடியனின் அதீத ஆதிக்கம். ஹீரோவே காமெடியனாவது. அங்கவை சங்கவைபோல இனம்சார்ந்த கிண்டல்கள். இன்னும் பல.
இனம்சார்ந்த கிண்டல்களுக்கு அமெரிகாவில் எதிர்வினைகள் அதிகம் இருப்பதில்லை. இங்கே ஈர்க்குச்சி விளக்குமாறு இல்லாததால்கூட இருக்கலாம்.
படம் காமெடி கலாட்டா. ஏனோ, ஜாக்கியின் பழைய படங்களை பார்க்கவேண்டும் என்கிற ஏக்கத்தை தவிற வேறெதுவும் தாக்கமில்லை.
பழைய ஜாக்கி சான் படத்தொகுப்பு
Saturday, August 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
7 comments:
oh. saved my $10.
thanks,
ரஷ் ஹவர் 2 இப்பத்தான் நெட்ஃப்ளிக்சில் வாங்கி வெச்சிருக்கேன்.இன்னும் பார்க்கலை..இதுல நான் கொஞ்சம் ஸ்லோ..
நீங்க சொன்னமாதிரி பழைய ஜாக்கி இதுல இருக்க மாட்டார்ன்னு தெரியும்:((
ரம்பிள் இன் த ப்ரான்க்ஸ் கொஞ்ச நாளைக்கு முன்னே மறுபடி பார்த்தேன்.என்ன துடிப்பு, என்ன ஸ்டண்ட்..அந்த ஜாக்கிக்கு இனி எங்கே போக?
வயசான கதாநாயகர்கள் அவங்க வயசுக்கேத்த பாத்திரத்த எடுத்து நடிக்கவே மாட்டாங்களா? இனிமே கதாநாயகன் வயசப் பாத்து அதுல நாலு வயசு குறைஞ்சு இருக்குறவங்களத்தான் கதாநாயகியாப் போடனும்னு சட்டம் கொண்டு வரனும். அப்பத்தான் கோழிவூட்டுல இருந்து காளிவூட்டு வரைக்கும் திருந்தும்.
சர்வேசன்,
அதுல பாதிய இங்க அனுப்பிடுங்க
:)
பார்க்கலாம்னு நினைச்சிருந்தேன். தல சொல்லீட்டீங்க.. ஒரு பிரியாணி சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிடறேன்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..
அனுப்பலாமே :)
ஆமா, ஏதோ instrumentல ஜன கன மன அனுப்பலாமான்னு கேட்டீங்க? ட்ரை பண்ணலயா?
பி.கு மாற்று சரியா வேல செய்யலியே? எல்லா linkம் emptyயா இருக்கு?
கலக்கிட்டீங்க ஜன கன மனவ.
என்ன இன்ஸ்ட்ருமெண்டு அது?
இங்க ஏத்திட்டேன்.
http://neyarviruppam.blogspot.com/2007/07/12.html
Post a Comment