என் மகனுக்கு தமிழ் சொல்லித் தரலாம் என ஒரு புத்தகம் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தேன். அதுல என்னண்ணா...படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
வான்கோழி பிரியாணி சாப்பிட்டதில்லையா இவரு?
Wednesday, September 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
22 comments:
;)
சிறில் அலெக்ஸ்,
உங்கள் பதிவைப் படித்தவுடன் என் மகனின் பாடபுத்தகத்தில் என்ன எடுத்துக்காட்டுக்கள் என்பதைப் பார்த்தேன்.
ஐ- ஐவர் தவிர அழகாக ஒரு பெண்டகன் வரைந்து ஐங்கோணம் என்றும், ஐம்பது மற்று ஐந்து என்றும் படங்களுடன் போட்டிருக்கிறார்கள்.
ஏ - எடுத்துக்காட்டுக்கள்
ஏழு, ஏணி, ஏலக்காய் , எண் என்று சொல்லித்தரலாம்.
ஒ- ஒட்டகம், ஒன்று, ஒன்பது
ஓ- ஓணான், ஓடம், ஓநாய், ஓலை
கலர்கிளி, வான்கோழி படம் இதெல்லாம் தவறான வழிகாட்டல்கள்
இப்படியே போனால்
டி- டிவி
வி-விசிடி
என்று ஆகிவிடும்.
அ- அணில், அன்னம்
ஆ- ஆணி, ஆமை, ஆடு, ஆலயம்,
இ- இளநீர், இறால், இல்லம், இஞ்சி. இலை
ஈ- ஈட்டி, ஈ, ஈசல்
உ- உடுக்கை, உரல், உணவு, உளி, உப்பு
ஊ- ஊஞ்சல், ஊசி, ஊதல், ஊதுவத்தி,
எ- எறும்பு, எருமை, எட்டு, எலி
ஒள- ஔடதம், ஒளவை
என்ன கொடுமை சார் இது? :-(
மன்னிக்கவும்
எ- எண் என்று வரவேண்டும்
,
என்னங்க விசேஷம் இந்த பதிவுல? பிரிலியே?
ஏ ஃபார் ஏரோப்ளேன் கரெக்டு தான? ;)
சிரிச்சு வயிறு புண்ணானது உண்மை உண்மையைத் தவிர வேறில்லை ;)
அந்த புத்தக பதிப்பாளருக்கு எழுதிப் போடுங்களேன்.
தமில் வெளங்கிடும்.
டூ பேட்!
:(
புத்தகத்தை வாங்குவதற்கு முன்பே நீங்கள் ஒரு முறை புரட்டிப் பார்த்திருக்கலாம்!!!;-)
:)
நான் வாங்கிய புத்தகம் இவ்வளவு மோசம் இல்லை.
ஐ-ஐயர் என்று சாதிப் பெயருடன் ஒரு படம்.
-aathirai
//"தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?" //
தமிழ் சொற்கள் எத்தனை லட்சம் ?
-இதுதான் சரியான தலைப்பு. நீங்க போட்டதும் புழக்கத்தில் இருப்பதால் தவறு இல்லை. வார்த்தை வட சொல்.
ப(ஆ)டங்களெல்லாம் சூப்பர். ஆக்கிவைத்த ஆசானுக்கு ஓ போடனும்.
:)))
சிரில்,
டயர், பஸ், ஐஸ்கிரீம் எல்லாம் தமிழ் ஆக்கீட்டாங்க அது தெரியாதா? :-))
இப்போ ஆங்கிலத்தில் இருப்பது எல்லாம் ஆங்கில வார்த்தைகளா சொல்லுங்க , தமிழ வளர்க்கிறாங்க புதிய சொற்களை கொண்டுவந்து அதைப்புரிந்துகொண்டு நீங்களும் வளருங்க , உங்க பையனும் வளருவான்! :-))
//தமிழ் சொற்கள் எத்தனை லட்சம் //
கோவி. கலக்கிட்டீங்க. நான் வைரமுத்துவின் வைர வரிகளை கடன் வாங்கி தலைப்பு போட்டேன்(ஊர்வசி டேக் இட் ஈசி பாட்டில் வரும்). ஆனா வார்த்தை வடசொல் என்பது எனக்கு தெரியாது.
இதுதாங்க டேம்மில், இந்த பியர்டு வெச்சுட்டு கூட ஒன்னே முக்கா வரியில கருத்து கூட சொன்னாரே அந்த மொழி.
சேசே, இப்படி புத்தகத்துலயே படிக்க வெச்சா உருப்படும். யார் அந்த புத்தகத்தின பதிப்பாளர், குடுங்க இந்த இடுகையை.
என்னா ஸார் இது
இது தான் இந்தியத்தமிழ்
இதுகூடத்தெரியலைன்னா எப்பிடி
உங்களுக்குக்கூட ஒழுங்காத் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது வந்துட்டீங்க பெரிசாப் பேசறதுக்கு
போய் உருப்படுற வழியப்பாருங்க
பதிப்பகத்தின் பெயரை கொஞ்சம் சொல்லுங்களேன் ஒரு பாராட்டு கடிதம் எழுதி போடுவம்
டயரும் ஐஸ்கிரீமும் தமிழ் இல்லியா... அப்போ இது இரண்டுக்கும் தமிழ்ல இன்னா நைனா ?
:)
அடக்கொடுமையே!!
(அதெல்லாம் இருக்கட்டும் டயருக்குத் தமிழில் என்ன?
ஐஸ்கிரீமுக்கு என்னமோ உறைபனி, உறைபாலாடை என்றெல்லாம் படித்த ஞாபகம். வேற சொற்கள் இருக்கா?
நீங்க என்ன கேரளாவா? இப்படி ஆம்னி பஸ் என்ற தமிழ்ச்சொல்லை ஓம்னி பஸ் என்ற மலையாளச் சொல்லாக மாற்றி விட்டீரே!)
//உங்களுக்குக்கூட ஒழுங்காத் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது வந்துட்டீங்க பெரிசாப் பேசறதுக்கு//
கூல்,
உண்மைதான். ஆனா தமிழ் கத்துக்குறதுக்கு ஒரு புத்தகம் போடும்போது இதைவிட கொஞ்சம் கவனமாயிருந்திருப்பேண்ணு நினைக்குறேன்.
பின்னூட்டத்துக்கு நன்றி.
:))
Publisher information:
SPG
Phone: 231482
SVKS
Rs. 30-00 ????
:)
குரூப்-2 மாதிரி வினா விடை « Snap Judgment
முப்பது ரூபாய் வீண் சிறில்.
இங்கே பாருங்கள் நீங்கள் வேண்டும் சின்ன சின்ன சொற்கள் பாடங்கள் எல்லாம் இருக்கின்றன
http://tamilvu.org/courses/primer/bp000001.htm
சிறில்,
சொல்ல மறந்துவிட்டேன். அங்கும் சின்னச்சின்ன தவறுகள் இருக்கின்றன
உ.ம் ஆனால் இந்த அளவுக்கு கொடூரமான தமிழ்க்கொலை இல்லை.
சத்தியா
இப்பிடியொரு அருமையான புத்தகம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா இத வெச்சே படிச்சிருப்பேனே...
அம்மா ஆடு இலை ஈ உரல் ஊசி எறும்பு ஏணி ஐவர் ஒட்டகம் ஓடம் ஔவை இப்பிடித்தான நான் படிச்சேன்
அது சரி....உரலும் ஊசியும் ஏணியும் பிள்ளைகளுக்குத் தெரியாதுன்னு மாத்தீட்டாங்க போல...
Post a Comment