.

Monday, September 17, 2007

இனிமேல் இங்கே எழுதப்போவதில்லை.

பதிவர்கள் விலகுவதும் விலகியவர்கள் உள்ளே வருவதும் சகஜமாயிருக்கும் இந்த நாட்களில் நானும் ஒரு அறிவிப்போடு இங்க எழுதுறத நிறுத்தப் போறேன். இதுக்கு மேல பில்ட் அப் குடுக்க விரும்பல தனிக்குடித்தனமா போயி cyrilalex.com தளத்துல எழுதலாம்னு இருக்கேன். உங்க ஆசியோட!
எல்லாரும் புதுவீடு புகுவிழாவுக்கு வந்திடுங்க.

என்னுடைய பதிவுகள் சிலவற்றை ஒன்றாக ஒரே தளத்தில் காணும் வசதியை விரைவில் ஏற்படுத்தவிருக்கிறேன்.

பதிவுகளுக்கான புதிய செய்தியோடை : http://cyrilalex.com/?feed=rss2
பின்னூட்டங்களுக்கான புதிய செய்தொயோடை : http://cyrilalex.com/?feed=comments-rss2

அடுத்த பதிவு எப்ப போடுவேன்னு தெரியாது. ஆணியப் புடுங்க சொன்னா பரவாயில்ல இங்க ஆபீஸ்ல சுத்தியலையே புடுங்க சொல்றாங்கப்பா.

தள வடிவமைப்பு சிந்தாநதியும், ரவுசங்கரும் சற்றுமுன்னுக்கு செய்ததிலிருந்து சிறிய முன்னேற்றங்களுடன் நான் ஆக்கியது. தேன், அலைகள் பாறைகள் மணல்மேடுகளுக்கான லோகோ நானே செய்தது. இதுக்கெல்லாம் வீட்ல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிட்டேன்.

மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க.

15 comments:

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் சிறில். எப்போ ட்ரீட்டு?

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள் சிறில்.

// எப்போ ட்ரீட்டு?//

ரிப்பீட்டேய்.........

சிறில் அலெக்ஸ் said...

நன்றி இளா, துளசி அக்கா.

ட்ரீட்னா இன்னாபா?
:)

SP.VR.சுப்பையா said...

எங்கே எழுதினால் என்ன சாமி - எழுதுங்கள் !
இதுவரை வாடகை வீட்டில் இருந்தீர்கள்- இப்போது சொந்த வீட்டிற்குப் போகிறீர்கள் - அவ்வளவுதானே!
வாழ்த்துக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

சுப்பையா சார் வாழ்த்துக்கு நன்றி. என்ன இந்த நேரத்துல பின்னூட்டம் போடுறீங்க? அமெரிக்காவுக்கு வந்துட்டீங்களா?

சிறில் அலெக்ஸ் said...

முதல் நாளே தளத்தில் கொஞ்சம் பிரச்சனைகள் வருது.. பொறுத்துக்கொள்ளுங்கள் மக்கள்ஸ்.

கீதா சாம்பசிவம் said...

சொந்தவீட்டுக்குக் குடி போறீங்க, வாழ்த்துக்கள். ம்ம்ம்ம்ம்., நமக்கு இங்கேயே பிரச்னை, சொந்த வீடுன்னா மெயின்டனென்ஸ் சமாளிக்க முடியாது.

kovi said...

ஏம்பா.. தனியா போறே.. யாரையாவது கன்னா பின்னா என்று திட்டி எழுதும் நோக்கமா. அப்படியெல்லாம் செய்யாதப்பா..

சேதுக்கரசி said...

நானும் இனிமேல் இங்கே பின்னூட்டமிடப் போவதில்லைன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே? ;-)

தேவ் | Dev said...

வாழ்த்துக்கள் PARTNER :)

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா அங்க சாதாரணமா பின்னூட்டம் போடலாமா இல்லை தனியா புகுபதியணுமா? அதெல்லாம் செய்யச் சொல்லி படுத்தாதீங்கப்பா....

புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்.

Appaavi said...

கலக்கிப்புட்டீங்கோ!!

புது வீடு வாங்கினதுக்கு எப்போ டீரீட்டு? :-)

யோசிப்பவர் said...

//தனிக்குடித்தனமா போயி//

நீங்களுமா?!?!

சிறில் அலெக்ஸ் said...

அதென்ன நீங்களுமா? என்னமோ யோசிக்கிறீங்க :)

இலவசம்,
தனிப் பதிவுனால புகுபதிய தேவையில்லை..
ஒரு முறை புகுபதிந்து வைக்கிறதுல மக்களுக்கு எத்தன கஷ்டம்பாருப்பா..

கார்த்திக் பிரபு said...

என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

http://gkpstar.googlepages.com/

இணைப்பு கொடுத்ததற்கு நன்றி

சிறில் அலெக்ஸ்