.

Thursday, October 26, 2006

பசி - சுப்பையா சார் தந்த தலைப்பு

இந்த வார தலைப்பு திரு சுப்பையா ஆசிரியர் தந்தது.

'பசி'.

பசி என கூகிளாண்டவரிடம் சொல்லி முறையிட்டபோது அவர் தந்த சுட்டிகள் சில..

நிலாச்சாரல் - சிறுகதை - சுகந்தி

மழை, பசி, கலாம் - இராமநாதன்

பசி கவிதை - கோவி.கண்ணன்(GK)

பசி கவிதை நிலவு நண்பன்

கட்டுரை - தியோ

புதுமை.காம் - கட்டுரை - ஏ.ஜே. ஞானேந்திரன்

பசி என்றொரு உணர்வு.-கட்டுரை-சரவ்

தீராப்பசி-தமிழோவியம்-கட்டுரை-எஸ். ராமகிருஷ்ணன்


'பசி' தலைப்பில் விருந்து வைக்க அழைக்கிறோம்.

காதல் ஒரு பசி
பார்வை விருந்தானது

காமம் ஒரு பசி
கூடல் மருந்தானது

ஞானம் வேண்டி பசி
தேடலே விடையானது

நட்புக்காக பசி
நாடலில் குறை தீர்ந்தது

செல்வம் தேடி பசி
உழைப்பில் நிறைவானது

எங்கே பசி இருக்குதோ
அங்கேயே மருந்தும் இருக்குது
விருந்தும் இருக்குது.

பசியும் நன்றே.
பிணங்களுக்குத்தான் பசிப்பதில்லை.

5 comments:

Sivabalan said...

பசியற்றவனை (எப்பசி? :)) பிணம் என்னும் சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது.

நல்ல கவிதை.

கோவி.கண்ணன் [GK] said...

சிறில் !

உங்கள் பசிக்கு ஏற்கனவே பதிவு போட்டாச்சு ! :-)

சுட்டியிருக்கிறீர்கள் !
நன்றி !

சிறில் அலெக்ஸ் said...

சிவபாலன் நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

GK,
உங்க பதிவ கூகிளாண்டவரே தந்துட்டாரே...

இன்னொண்ணு போடுங்க தப்பில்ல.

சிறில் அலெக்ஸ் said...

கயமைத்தனம் - 1

சிறில் அலெக்ஸ்