.

Friday, September 15, 2006

சுவையான தகவல்

del.icio.us ஒரு பயன்மிக்கத் தளம். உங்களுக்குப் பிடித்த சுட்டிகளை -URL- சேகரிக்கவும் ஒழுங்காய் தொகுக்கவும் பயன்படும்வகையில் உள்ளது.

எளிதில் பயனீட்டாளராய் பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள். சிறிய செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள். அது இரண்டு ஐக்கான்களை(Icons) உலவியில் நிறுவுகிறது. இதில் TAG எனும் ஐக்கான் மூலம் நமக்குப் பிடித்த சுட்டிகளை குறிச்சொற்களோடு சேகரிக்க முடிகிறது.


உங்கள் குறிச் சொற்களை மேலும் குழுக்களாய் சேர்க்கமுடிகிறது. படித்ததில் பிடித்த பதிவுகளை உங்கள் வார்ப்புருவின் பகுதியாக சேர்க்க Settings->Link Roll எனும் சுட்டிகளில் சென்று ஸ்க்ரிப்ட்டை உருவாக்கி வார்ப்புருவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போது ஆங்கிலமல்லாத எழுத்துக்கலிலான குறிச் சொற்களை லின்க் ரோல் ஆக்க இயலவில்லை. நான் ஏற்படுத்திய ஸ்க்ரிப்ட் நன்றாக இயங்கி வந்தது இப்போது இயங்கவில்லை. இதை del.icio.us க்கு தெரிவித்திருக்கிறேன் அவர்கள் பதில் நம்பிக்கை தருவதாயுள்ளது.

இன்னும் விரிவாய் தகவல்கள் வேண்டுவோர் பின்னூட்டம் வாயிலாக அல்லது தனி மடலில் கேட்டால் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

என் முந்தைய பதிவு நான் சேகரித்துள்ள சுட்டிகளின் குறிச் சொற்களின் தொகுப்பு.

இன்னுமொரு சுவையான தகவல். டெலிஷியசில் பயனீட்டாளர்கள் நெட்வொர்க் செய்துகொள்ள வசதி உள்ளது இதன்மூலம் ஒருவரின் சேகரிப்பை மற்றவர்களும் பார்த்து பயன்படுத்த முடிகிறது.

del.icio.us ஐ எனக்கு அறிமுகப் படித்திய நண்பருக்கு நன்றி.

4 comments:

Anonymous said...

பயனுள்ளத் தகவல்.

இந்த del.icio.us பக்கத்தில் உங்களுக்குப் பிடித்தப் பதிவுகளை சேர்க்கும் வசதியையும் "தமிழ்ப் பதிவுகள்" திரட்டியில் கொடுத்துள்ளோம்.
பார்க்க: http://tamilblogs.com

சிறில் அலெக்ஸ் said...

நன்றி முகுந்த்

வெற்றி said...

சிறில்,
மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி வெற்றி

சிறில் அலெக்ஸ்