அறிவிப்பு வந்ததிலிருந்து மகிழ்ச்சியைவிட குற்ற உணர்வே அதிகமாயிருந்தது. இந்த மாதப் போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்திருந்தது. சுமாராய்த்தான் என் முயற்சி இருந்தது. வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என சில சக போட்டியாளர்களின் முயற்சிகளைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். மனைவியிடம் போட்டி பற்றி சொல்லிவிட்டேன், பிள்ளைகள் கூட எதிர்பார்ப்போடு இருந்தார்கள்.
ரெம்ப தயக்கத்தோடத்தான் ஜேம்சிடம் அந்த ஐடியாவச் சொன்னேன். அவனுக்கு தயக்கமேயில்ல. அப்புறமம வேணாம்டான்னேன். 'இல்லடா ரெம்ப சிம்பிள், நீ ஒண்ணும் பண்ணவேண்டாம் நான் பாத்துக்கிறேன்.' னு சொன்னான். 'நீ சொன்ன மாதிரி போட்டி நடத்துறதுல ஒரு சின்ன ஓட்டை இருக்குது அத யூஸ் பண்ணலாம். போட்டி விதிப்படி பாத்தா நாம செய்றது தப்பேயில்ல.' அவன் சொல்லச் சொல்ல எனக்கும் அது தப்பேயில்லன்னு தோணுச்சு.
சின்னவயசிலேர்ந்தே எதுலயாவது ஜெயிக்கணும்னு ரெம்ப ஆசை. நோஞ்சானாயிருந்தேன். ஸ்போர்ட்ஸ்லயெல்லாம் ஈடுபாடே கிடையாது. படிப்புல எப்பவுமே 3, 4 அல்லது ஐந்து ராங்குகளுக்குள்ளால வந்தேன். வீட்டுல திட்டு கிடைக்காட்டியும் பெரிய பாராட்டெல்லாம் கிடச்சதில்ல.
அம்மாதான் சும்மா சொல்லுவா நான் குழந்தையா இருக்கும்போது அழகிய குழந்தைன்ன்னு பரிசு வாங்கியிருக்கிறதா. அது என்ன சமாதானப் படுத்தத்தான் சொல்லுறான்னு எனக்கும் என் மனைவிக்கும் தெரியும். இருந்தாலும் ஆமோதிப்போம்.
இந்த ஜேம்ஸ்கூட சாப்பாட்டு போட்டி வெற்றிக் கோப்பை வீட்டுல வச்சுருக்கான். ஸ்கூல்ல மூணுதடவை அவந்தான் சாம்பியன். ஒருதடவை மிளகாய கடிச்சு கண்ணீரோட அவன் பரிசு வாங்கினது நியாபகம் இருக்கு.
இப்ப ஒரு வழியா வெற்றி கெடச்சாலும் சந்தோசமே இல்ல. என்னதான் விதிகள் படி நடந்துகிட்டாலும் ஏமாத்தினது ஏமாத்தினதுதானே. மத்தவங்களும் இதச் செஞ்சிருந்தா அது சமமான போட்டியா இருந்திருக்கும். ஒருவேள அப்டி செஞ்சிருப்பாங்கன்னு சமாதானப் படவும் முடியல.
"ஜேம்ஸ் மனச ஒண்ணு உறுத்திகிட்டே இருந்துச்சுன்னா என்ன செய்வ?"
"நண்பர்கள் அல்லது வீட்ல சொல்லுவேன்."
"தெரிஞ்சவங்ககிட்ட பகிர்ந்துக்க முடியலண்ணா?"
"எங்க சர்ச்சுல பாவசங்கீர்த்தனம்ணு ஒண்ணு இருக்கு. சினிமாலகூட கொல செய்றதுக்கு முன்னால ஹீரோ போயி ஃபாதர்ட்ட சொல்றமாதிரியெல்லாம் காண்பிச்சிருக்காங்க. நாம பாவசங்கீர்தனத்துல சொல்றத சாமியார் யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சட்டம் இருக்கு."
'கோவில் போகும் பழக்கமில்லையே. இல்லண்ணா சாமிகிட்ட சொல்லலாம்.' மனதில் சஞ்சலம் அதிகரித்து பாரமானது.
டெலிஃபோன் டைரக்டரியைத் திறந்து எண்ணை சுழற்றினேன்.
"ஹலோ. யார் வேணுங்க?"
"நான் அலுவலகத்துல நடந்த போட்டில குறுக்கு வழியில பரிசு வாங்கிட்டேன்."
"ஹலோ யாருங்க. என்னது?"
"இதச் சொல்லத்தான் ஃபோண் பண்னினேன்"
"ஹலோ யாருங்க இது டிம்ப்பர் டிப்போ. ராங் நம்பருங்க"
'ராங் நம்பர்னு தெரியுங்க.' மனதில் நினைத்தபடியே தொடர்பை துண்டித்தேன்.
மனம் கொஞ்சம் இலகுவானது.
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
28 comments:
சிறில்,
அருமை.
நல்லாயிருக்குங்க!!! நான் கூட, நீங்க தேன்கூடு போட்டி தேர்வு முறையைப் பற்றி சொல்லறீங்கன்னு நினைச்சேன் ;-)
-சுந்தர் ராம்ஸ்
மனோ தத்துவக்கதை!
நல்லா இருக்கு...
Thanks Sivabalan
குற்ற உணர்விலிருந்து விடுதலை பெற இன்னொரு குறுக்கு வழி!
சிறில், நல்ல கற்பனை.
கதை நன்றாக இருக்கிறது, உளவியல் விடுதலை!!!. வாழ்த்துக்கள்.
:-)விடுதலை விடுதலை விடுதலை....அப்பா ஒருவழியா கிடைச்சிருச்சு.
அப்ப இன்னைக்கு இரவே நான் எழுதுன விடுதலையைப் போட்டுற வேண்டியதுதான்.
சிறில், இந்தக் கதையில் நான் மிகவும் ரசித்தது கடைசிப் பகுதிதான். நச்.
சிறில், நிம்மதி தருவது உன்மையைச் சொல்வதுதான் .
நல்ல விடுதலை. உளவியல்
கதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நன்றி வைசா.
//நல்லாயிருக்குங்க!!! நான் கூட, நீங்க தேன்கூடு போட்டி தேர்வு முறையைப் பற்றி சொல்லறீங்கன்னு நினைச்சேன் ;-)
-சுந்தர் ராம்ஸ் //
உண்மையிலேயே அதுதான் இன்ஸ்பிரேஷன்.
:)
பாராஅட்டுக்கு நன்றி
// வலைஞன் said...
மனோ தத்துவக்கதை!
நல்லா இருக்கு...
//
வலைஞன்,
நன்றி.
//ஓகை said...
குற்ற உணர்விலிருந்து விடுதலை பெற இன்னொரு குறுக்கு வழி!
சிறில், நல்ல கற்பனை.
//
நன்றி ஓகை
இப்படிகூட ஒரு வழி இருக்கா??? நல்ல கதையா இருக்கே - இது பாராட்டு இல்லை :-)
மனம் கொஞ்சம் தானே இலகுவான்து.
முழு விடுதலை பெற்றதா?
குற்ற உணர்ச்சி அறவே நீங்கி விட்டு விடுதலையானீர்களா?
இது ஒரு வகை தப்பித்தல் [Escapism] அல்லவோ?
எப்படி விடுதலை ஆக முடியும்?
உறுத்தல் 'உள்ளை' விட்டுப் போகாதே.
நல்ல கதை.
மண்ணிப்பு கேட்பது என்பது வெறும் சடங்கு ஆகிவிட்டது ! சாமியாரிடம் சொன்னால் என்ன ? சைக்கிள் கடைக்காரரிடம் சொன்னால் என்ன ? எல்லாம் ஒன்று தான் என்று சொல்லவருகிறீர்கள் ... என்று சிற்றறிவுக்கு புரிகிறது ! சரிதானே ?
:)
//கதை நன்றாக இருக்கிறது, உளவியல் விடுதலை!!!. வாழ்த்துக்கள்//
நன்றி இன்பா.
//சிறில், இந்தக் கதையில் நான் மிகவும் ரசித்தது கடைசிப் பகுதிதான். நச். //
நன்றி ராகவன். முடிவ நோகித்தான் கதை பயணிக்குது.
//சிறில், நிம்மதி தருவது உன்மையைச் சொல்வதுதான் .
நல்ல விடுதலை. உளவியல்
கதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.//
நன்றி வல்லிசிம்ஹன். நீங்க சொல்றது நல்ல கருத்து. பொதுவா கதையில இதுதான் நீதின்னெல்லாம் நான் முடிவெடுக்கிறதில்ல.
//இப்படிகூட ஒரு வழி இருக்கா??? நல்ல கதையா இருக்கே - இது பாராட்டு இல்லை :-) //
இப்டி கூட பின்னூட்டம் போடுவாங்களா?
(இது பாராட்டு)
ரெம்ப நாளைக்கப்புறம். மீண்டும் உஷா. நன்றி.
SK,
//குற்ற உணர்ச்சி அறவே நீங்கி விட்டு விடுதலையானீர்களா?//
அட கதாநாயகனிடம் கேளுங்க எங்கிட்ட கேக்காதீங்க. :)
//இது ஒரு வகை தப்பித்தல் [Escapism] அல்லவோ?//
என்ன செய்யறது பல நேரங்கள்ள தப்பி தப்பி பிழைக்கவேண்டியிருக்கே.
//எப்படி விடுதலை ஆக முடியும்?
உறுத்தல் 'உள்ளை' விட்டுப் போகாதே.//
மயிலை மன்னார்கிட்ட கேட்டு சொல்றீங்கன்னு நினைக்குறேன்.
//நல்ல கதை. //
நன்றி நன்றி.
GK,
//மண்ணிப்பு கேட்பது என்பது வெறும் சடங்கு ஆகிவிட்டது ! சாமியாரிடம் சொன்னால் என்ன ? சைக்கிள் கடைக்காரரிடம் சொன்னால் என்ன ? எல்லாம் ஒன்று தான் என்று சொல்லவருகிறீர்கள் ... என்று சிற்றறிவுக்கு புரிகிறது ! சரிதானே ?//
:)
இது ஒரு கோணம். நிச்சயமா கதை எழுதும்போது இதப்பத்தி நினைக்கல.
யோசிப்பவர் தன் வெற்றிக்குப் பின் நேர்மையா போட்ட பதிவு அந்த மாதிரி மன நிலையில போட்டிருப்பார் என யோசித்தேன். அவர் தைரியமா, நேர்மையா வெளிய சொல்லிட்டாரு இப்படி சொல்லாதவங்க நிலை எப்படி இருக்கும். அவங்களுக்கு ஒரு வடிகால் இருக்குதான்னு யோசிச்சதுல வந்த கதை.
தேன்கூடு/தமிழோவிய போட்டிகளுக்கே அதன் நிலையைப் பற்றி, சந்தேகங்களுக்குரிய முடிவுகள் பற்றிய சூடான விவாதங்கள் நடக்கும்போதே இதையும் அந்தப் போட்டியிலே சேர்ப்பது நல்ல யுக்தியாய் தோன்றியது.
:)
simpla alakaa eluthiirukkeenga nalla kathai vakthukkal.
நன்றி அனானி,
நன்றி நிர்மல்.
பார்ட்னர்,
இப்படிக் கூட கதை எழுத முடியுமா... அட போட வச்சுட்டீங்க.
வாழ்த்துக்கள்.
//இப்படிக் கூட கதை எழுத முடியுமா... அட போட வச்சுட்டீங்க//
தேவ். ரெம்ப நன்றி. என்னதான் பார்ட்னராயிருந்தாலும் இப்படிப் புகழ்ழக் கூடாது. இடித்துரைக்கவும் செய்யணும்.
:)
சைக்கோலாஜிக்கலா ஒரு கதை ஆனா இதை சொன்ன டைமிங் கலக்கல்.
//சைக்கோலாஜிக்கலா ஒரு கதை ஆனா இதை சொன்ன டைமிங் கலக்கல். //
நன்றி குமரன்.
நேற்றுதான் இந்த கதையை படித்தேன். கதை நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இப்படி யாராவது செய்வார்கள் என்று தோன்றவில்லை.
இன்னொரு விஷயம். நான் அப்பொழுது இப்படிப்பட்ட மனநிலையில் இல்லை. வேறு ஒரு மனநிலையிலிருந்தேன்
சொல்லியிருக்கிறேனா எனத் தெரியவில்லை உங்களை முன்வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினேன்.
நடைமுறையில் சாத்தியமா? ம்ம்ம்ம்
தெரியல.
:))
Post a Comment