Tuesday, September 19, 2006
இன்னும் இருக்கிறது ஆகாயம்
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
11 comments:
சிறில்
சூப்பர்.. கலக்கிடீங்க..
சிறில்,
கவிதை கலக்கல்!
அருமையான கவிதை!
நீங்கள் எழுதினீர்களா?
பாராட்டுக்கள்.
அன்பரசன்.
பாராட்டுக்களுக்கு நன்றி.
//ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.//
சிறில்...!
காகம் பறந்தாலும், மேகம் மிதந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகிப்போனதில்லை என்று தலைவர் பாடி இருக்கிறார்.
ஆகயத்தில் ஆவி உண்டு எனில் அது பரிசுத்த ஆவியாகத்தான் இருக்கும்.
//மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம். //
நல்லா முடிச்சிருக்கிங்க !
ஆனால் மடமை பூசிய மனங்களில் ஆகயம் இருக்கிறது என்று சொல்வது அவர்களுக்கு பெரிய மனசு இருப்பது போல் பொருள்படுகிறது.
//ஆகயத்தில் ஆவி உண்டு எனில் அது பரிசுத்த ஆவியாகத்தான் இருக்கும்.//
இன்னைக்கு சூழல்ல ஆகாயம் அழுக்காகிக் கிடப்பது உங்க தலைவருக்குத் தெரியலியா? :)
நான் சொல்லவந்தது மதம் சார்ந்த ஆகாயம்/சொர்க்கம் கடவளர் வாழும் இடம் எனும் பொருளில்..
அந்தமாதிரியான ஆகாயம் மடமை பூசிய மனங்களில்தான் இருக்கு... உங்க லேட்டஸ்ட் மதம் பற்றிய பதிவுக்கு ஏற்ற கவிதைன்னு நினைக்கிறேன்.
:)
//இன்னைக்கு சூழல்ல ஆகாயம் அழுக்காகிக் கிடப்பது உங்க தலைவருக்குத் தெரியலியா? :)//
சிறில்...!
முதல் பின்னூட்டத்தில்
டிஸ்கி [:)] போட மறந்துட்டேன், சீரியஸ் ஆக சொல்லவில்லை :))
நீங்க செல்வனை சீண்டுகிறீர்கள் !
:)
சிறில்,
உங்கள் இக்கவிதை முதல் பரிசுப் பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நன்றி ராம்.
லேட்டா வந்தாலும் லேட்டச்ட்டா வந்த ரிசல்ட்.
தமிழ் சங்கத்துக்கு நன்றி.
மனமார்ந்த வாழ்த்துகள் சிறில்
மனமார்ந்த நன்றிகள் மதுமிதா
:)
Post a Comment