.

Thursday, September 28, 2006

இந்தவாரத் தலைப்பு

தேன்கூடு தமிழோவியம் போட்டிகளில் தொடர்ந்து எனக்கு குறைந்த பட்சம் 20 ஓட்டுக்களாவது (என் ஓட்டை தவிர்த்து) கிடைக்கின்றன அந்த 20 பேருக்கும் என் நன்றி. மரணம் தவிர்த்து மற்ற தலைப்புக்களிலெல்லாம் பங்குபெற்றுள்ளேன்.

பொதுவாக 'ஓட்டைகளை' பயன்படுத்துவதில் 'நாம்' கெட்டிக்காரர்கள். அந்த வகையில் தேன்கூடு தமிழ்மண ஓட்டெடுப்பில் உள்ள ஓட்டைகளை தவறாக பயன்படுத்தி எளிதில் வெற்றி பெற முடிகிறது.

யோசிப்பவர் முன்வந்து தைரியமாய் இதை ஒப்புக்கொள்கிறார். பல நண்பர்கள் பல யோசனைகளை சொல்லியிருக்கிறார்கள் இதன் பேரில் போட்டியை நடத்துபவர்கள் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டுகிறேன். இல்லையென்றால் போட்டியில் கலந்து கொள்பவர்களையும் அவருக்கு உண்மையில் ஓட்டுப் போட்டவர்களையும் ஏமாற்றுவதாய் அமைந்துவிடும்.

எல்லோரும் பதிவுகளில் அவர் சரியில்லை அது சரியில்லை இது முறையில்லை எனப் பலபேரைக் குறை சொல்கிறோம் ஆனால் நமது ஒழுக்கம் சந்தி சிரிக்கும்படி உள்ளது. நம்மீதுள்ள நம்பிக்கையின் பேரில்தான் தேன்கூடு/தமிழோவிய நிர்வாகிகளிந்த ஓட்டெடுப்பு முறையை வைத்துள்ளார்கள் என்பதை உணாராமல் தவறாகப் பயன்படுத்துகிறோம்.

வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் இப்படித்தான் எனச் சொல்வதற்கில்லை அதே சமயம் யோசிப்பவர் நம்மையெல்லாம் யோசிக்கவைத்துவிட்டார் என்பதையும் மறுக்க இயலவில்லை. "மன்றத்திலே தரமான பாடலுக்கு பரிசுகிடைக்கிரதென்றால் அதைக் கண்டு மகிழ்பவனும் நாந்தான் அதே சமயம் தவறான பாடலுக்கு மன்னன் பரிசளிப்பானென்றால் அதை தட்டிக்கேட்கும் தமிழ் பதிவனும் நாந்தான்." என என் முன்னோன் நக்கீரனின் மொழியில் சொல்கிறேன் (அடுத்து தருமி டையலாக். அவர் வருவாரா?).

ஒரு தலைப்புக்கு கதையெழுதுவதென்பது சுவையான அனுபவம் வெற்றி பெருவது இன்னொரு அனுபவம். எனவே வாரம் ஒரு தலைப்பு என்பதிவில் தரவிர்ருக்கிறேன். யார் வேண்டுமானாலும் சும்மாங்காட்டியும் பதிவுகள் இடலாம். வெறும் பாராட்டுக்களுக்காக. போட்டியெல்லாம் கிடையாது.

இந்த வாரத் தலைப்பு 'நரகாசுரன்'. பதிவின் தலைப்பை நரகாசுரன் என வைத்துக் கொண்டு எழுதுங்கள். உங்களுக்குத் தோன்றும் தலைப்புக்களை பின்னூட்டமாய் இடுங்கள்.

இதுவரை எனக்கு வாக்களித்த என 'ரசிகப் பெருமக்களுக்கு' (பில்ட் அப், கண்டுக்கதீங்க) நான் நன்றி சொல்லவில்லை எனவே இந்தப் பதிவு. நன்றி! நன்றி! நன்றி!

நன்றி சொல்லிட்டு ஏன் இந்தப் புலம்பல்னு கேட்டா ஒழுங்கா 20பேர் ஓட்டுப்போட்டும் தோல்வியத் தழுவிட்டோமேங்க்ற வருத்தந்தான் வேறென்ன சொல்ல.

மீண்டும் ஓட்டளித்த நண்பர்களுக்கு நன்றி! வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

இன்றைய காண்டு பாடல்:

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை.

12 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//இந்த வாரத் தலைப்பு 'நரகாசுரன்'. பதிவின் தலைப்பை நரகாசுரன் என வைத்துக் கொண்டு எழுதுங்கள். //

என்ன எழுதறதுன்னு தெரியாமல் ஒருவாராமாக தலையை பிய்த்துக் கொண்டேன், ம் ஒரு தலைப்பைக் கொடுத்திருக்கிங்க, இனி யாரோட தலையைப் பிய்க்காலாம்னு யோசிக்க வேண்டியதுதான்.
:)

Anonymous said...

//வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகளையும், வலைப்பதிவர்களின் எல்லையற்ற திறமையையும் அவர்கள் பாணியிலேயே சுலபமாக சுவாரசியமாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு பயிற்சிக்களமாகவே இந்த போட்டிகளை நாங்கள் பார்க்கிறோம். இதில் வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல என்பதனை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.//

- தேன்கூடு வலைப்பதிவிலிருந்து!

யோசிப்பவர் said...

ithu n-allarukkee!! aanaal eththanai peer varukiRaarkaLoo theriyavillai. n-aan redi! aanaal oru vaaram enpathu konjsam kuRukiya kaalaveLi, oru kathaiyai yoosiththu ezuthuvathaRku(ada! enakku sonneenpaa!!);)

சிறில் அலெக்ஸ் said...

GK, உண்மையில பல முறை என்ன எழுதுறதுன்னு தெரியாம யோசிப்பேன்.

அடுத்து தொடர்ச்சியா நீங்க தலைப்பு தரலாம்.

சிறில் அலெக்ஸ் said...

அனானி,
தேன்கூடு தமிழோவியத்தின் நேர்மையை நோக்கத்தை சந்தேகிப்பதற்கில்லை. நிச்சயம் அவர்கள் முயற்சியில் அவர்களுக்கு முழு வெற்றியே. போட்டிக்கு வரும் பதிவுகளின் எண்ணிக்கையை வைத்தே இதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

இருந்தாலும் ஒரு நெருடல் இருக்கிரது. என்னை மட்டும் நினைத்து அல்ல பொதுவாக பதிவுகளை போட்டுவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கும் எல்லோருக்காகவும்..

சிறில் அலெக்ஸ் said...

யோசிப்பவரே,

வாரம் ஒரு தலைப்பு 'என்ன எழுதுவது' எனக் குழம்பியிருக்கும் GK மற்றும் என் போன்ற பதிவாளர்களுக்கு.

நீங்கள் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு என்னவேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் எழுதலாமில்லையா.

:)

கோவி.கண்ணன் [GK] said...

// சிறில் அலெக்ஸ் said...
வாவ்,
ஒரு படத்துல அத்தனை கதைகள் சொல்லிட்டீங்க GK.

சூப்பரப்பூ..
//

சிறில்...!
கவிதையை ஏற்றுவதற்குள் ப்ளாக்கர் கொஞ்சம் சொதப்பி விட்டது !

கவிதை போடும் போது தமிழ்மண முகப்பில் தெரியாமல் இருக்க, படத்தை மட்டும் ஏற்றிவிட்டு, பிறகு கவிதையை போடுவேன். இடையில் ப்ளாக்கர் சொதப்பியதால் சிறிது தாமதம் ஆகிவிட்டது ! இப்பொழுது கவிதையும் இருக்கிறது !
http://kaalangkal.blogspot.com/2006/09/blog-post_28.html

கவிதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்வீர்கள் என்று நினைக்கிறேன் !
:)

SP.VR. SUBBIAH said...

சொன்னால் வருத்தம் வேண்டாம்
சொல்லிக்கொளள ஒன்றுமில்லை
சொர்க்க அசுரர்கள்தான் - இங்கேயுண்டு
சொல்லுங்கள் அவர்களைபற்றி எழுதும்படி

அரை நூறு பக்கம் கட்டுரை வேண்டுமா
ஆறு பக்கங்கள் கவிதை வேண்டுமா
அடுக்கு மொழியில் அவர்பெருமை பேச வேண்டுமா
அதெல்லாம் நொடியில் துவங்குவேன் செய்து முடிக்க!

நரக அசுரன்பற்றி எழுது என்றால்
நான் எப்படி அதைச் சொல்ல?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!

சிறில் அலெக்ஸ் said...

சுப்பையா ஐயா இதையே பதிவில் போட்டு சுட்டி தந்தால் தேனில் அடுக்க வசதியாயிருந்திருக்கும்.

நான் அதை தேனிலேயே செய்யட்டுமா?

SP.VR. SUBBIAH said...

Okay, with pleasure, Mister Syril Alex!
You can do it as you said!

SP.VR.SUBBIAH

ஓகை said...
This comment has been removed by a blog administrator.
ஓகை said...

ஆர்த்திடும் வாணங்கள் ஆடைகள் தின்பண்டம்
ஈர்க்கும் படங்கள் இனிதான வாழ்த்துகள்
இத்தனை செய்தொழில் ஏற்றங்கள் பெற்றிட
செத்தான் நரகா சுரன்.

சிறில் அலெக்ஸ்