கஞ்சிக்கு வழியில்லாமல், ஆங்கிலத்தில் பெயர் வைத்து தமிழ் படம் எடுத்துக் கொண்டிருந்த தமிழ் படத் தயாரிப்பாளர்களுக்குக் காதில் தேன் கொண்டு ஊற்றியிருக்கிறார் முதல்வர். தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்காம்.
தமிழ் வளர்ப்பில் எத்துணை முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் அரசு இழக்கும் பணத்தைக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயன்றிருக்கலாம், அல்லது தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வண்ணமோ, வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலோ ஈடுபட்டிருக்கலாம்.
குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம்.
இலவச அரசியலில், பண்ணையார்களுக்கு கடன் தள்ளுபடியும், தண்ணீர் விற்பனைக்கு இலவச மின்சாரமும் தந்துதவ யாரிடம் வசூலிக்கப்போகிறார்கள்? ஆட்சியாளர்கள் நடத்தும் வியாபரங்களிலுருந்தும், வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் பங்குகளை விற்றும் பண உதவி செய்வார்களோ என்னவோ.
தமிழில் பெயரை மாற்றிக்கொள்பவர்கள் கெசட்டில் அறிவிக்க கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது (440லிருந்து ரூ. 50 ஆக). தன் சொந்தப் பெயரை தமிழில் ஒருவர் மாற்றிவைத்துக் கொள்வாரானால் அவருக்கு அரசு ரூ. 50 வழங்கவேண்டும். அதுதான் தமிழ் வளர்க்கும் வழியாயிருக்கும். (நான்கூட என் பெயரை கலைஞர் தாசன் என மாற்றிக்கொள்வேன்.... இல்லை ரூ.50க்காக பெயரை மாற்ற முடியாது).
திரைப் படங்களுக்குச் சலுகை வழங்குவதைப் போலவே
வியாபாரக்கூடங்களுக்கும் வழங்கலாமே. 'நாடார் அண்ட் சன்ஸ்' மாற்றி 'நாடாரும் மகன்களும்' என வைக்கவும் 'நாயுடு ஹால்' 'நாயுடு (தமிழா?) அரங்கமாகவும்' மாறும். இதன் மூலம் சன் டி.வி கூட பெரிய பலனை அடையும்.
தமிழில் சினிமா பெயர் வைப்பதால் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
இந்தியாவில் 28 மாநிலங்கள் இருக்கின்றன 1652 தாய்மொழிகள் இருக்கின்றன எதை வளர்ப்பது எதை விடுப்பது. 'தமிழ் நாட்டில் புழக்கத்திலுள்ள எல்லா மொழிகளும் அதன் இலக்கியங்களும் பாதுகாக்கப்படும்', என்பதுதான் சனநாயகம்.
தமிழை வைத்து அரசியல் செய்துகொண்டு தமிழைக் காக்கிறோம் எனும் மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிரூக்கிறோமோ எனத் தோன்றுகிறது.
அடுத்தது என்ன மம்மி டாடி எனச் சொல்லாமல் அம்மா அப்பா எனக் கூறும் பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் இலவசமா?
சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர், சுப்ரீம் ஸ்டார்கள் எனப்படும் நடிகர்களுக்குத் தடை வந்தாலும் வரும்.
தலைப்பு? அடுத்து வரப்போகும் படத்தின் பெயர்தான்.
<<<<<<<<<<<உள்ளலின் பதிவு.>>>>>>>>
Friday, July 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
9 comments:
பணமுதலைகளை மேலும் மேலும் கொழுக்க செய்யும் இந்த திட்டம் தேவையா?சிவாஜி படம் எடுக்கும் ஏவிஎம்க்கு ஜாக்பாட்தான் இனி.100 கோடி வசூல் என்பது 200 கோடி ஆகிவிடும்(அது சரி..சிவாஜி என்பது தமிழ்பெயரா,மராத்தி பெயரா?)
சிவாஜி படத்தின் உரிமையை 100கோடிக்கு சன்டிவி வாங்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.நடிகர் சங்க தேர்தல் வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது
இது குறித்து ஆ.வி.-வில் ஞாநியின் கருத்தைப் படித்தீர்களா?
சீனு,
இன்னும் படிக்கல்ல.
//குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம் //
இது நிச்சயம் நல்ல சிந்தனை.
ஆனால் அநேக ஊடகங்கள் சினிமாவை சார்ந்திருப்பதால், அவை அரசுக்கு எதிராக கிளம்ப வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அரசாங்கம் இதற்கெல்லாம் பயந்து கொண்டு இருகக்கூடாது.
இதன்மூலம் தமிழுக்கு நன்மையா இல்லையா, என்பதை விட பலரின் கேவலமான முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் தமிழல்லாத படப்பெயர்களை பலகாரணங்கள் கூறி நியாயப்படுத்தி வந்தவர்கள் இப்போது சடாரென்று தமது பெயர்களை மாற்றிக்கொள்கிறார்கள். படத்துக்கு ஆங்கிலப்பெயர்தான் கட்டாயம் தேவையென்று சொன்னவர்கள் இப்போது எப்படி மாற்றுகிறார்கள்? ஆக தமிழல்லாத பெயர்கள் வைப்பதை யாருமே நியாயப்படுத்த முடியாதென்பதை இப்போது இவர்களின் குத்துக்கரணம் காட்டியுள்ளது.
இவர்களின் முகமூடியைக் கிழித்ததுக்காக இத்திட்டதுக்கு நன்றி.
அதுசரி உங்கள் தலைப்பு தவறாகத் தெரிகிறதே. 'ள' விடுபட்டுவிட்டது. அல்லது வேண்டுமென்றே தான் வைத்தீர்களா?
//அதுசரி உங்கள் தலைப்பு தவறாகத் தெரிகிறதே. 'ள' விடுபட்டுவிட்டது. அல்லது வேண்டுமென்றே தான் வைத்தீர்களா? //
பிழைதான். வேண்டுமென்றே என்றாலும் எனக்கு வரிவிலக்கு உண்டு, சரியான தமிழில் பெயர்வைக்க வேண்டுமென்றில்லையே..
அனானி,
நீங்கள் சொல்வதுபோல ஆங்கிலப் பெயரில்தான் படமோடுமென்பவர்களை துகிலுரித்துக்காட்டுவது அவ்வளவு பெரிய முக்கியம் வாய்ந்த விஷயமா?
கஞ்சிக்கு வழியில்லாமல், ஆங்கிலத்தில் பெயர் வைத்து... நல்ல கிண்டல்...
குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம்.
... நியாயமான ,லாஜிக்கலான யோசனை
இப்படி சலுகைகள் கொடுத்து வளர்வது தமிழே அல்ல. உண்மையில் சினிமாவின் பெயரை மாற்றி பலர், தங்களுக்கு தமிழை விட, காசே முக்கியம் என்பதை காட்டி இருக்கிறார்கள்.பற்று தமிழ் மீதல்ல , வரப்போகின்ற வருமானத்தின் போது என்பது வெளிபப்டை. மற்ற மொழி பெயர் வைத்தால் கூடுதல் வரி என்பது தான் முறையான நடவடிக்கை.
சிறில் Alex,
//குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம்.//
இது கொஞ்சம் கூட நல்ல இல்ல, யாரோ தமில் வளர்க்கிறேன்னு அதிக வரி போட்ட அதை கட்டபோவது யாருன்னு பாருங்க தல... யார் எதை வளர்க்கறாதானாலும் நேரா மக்கள் தலையில் வெடி வெக்கறது தான் பொழப்பா!
மொதல்ல தமில் தலைவர் சன் டிவி உள்ளிட்ட அனைத்து ஊடங்களின் பெயரை மாற்றுவார தமிலில், அவர்களுடைய ஊடங்களான சன் மியுசிக்கில் வந்து தமிலை கொலை செய்யற புள்ளைகளை தமிலில் பேச வைக்க முடியுமா? அவர்கள் செய்தால் வியாபாரம், அடுத்தவன் செய்தால் தமிலை அழிப்பதற்கான முயற்சி என்பார்கள். வேடிக்கை உலகமடா சாமி!
ஐயோ தெரியாம் டென்ஸன்ல எழுதிட்டேன் ஆட்டோ இப்போ கெளம்பியிருக்குமா!!!
ட்டுடுடுடுடுட்ர்ர்ர்ர்ர்ர்....
ஹலே தம்பி இங்க வாப்பா...
நாங்க கட்சி அலுவலகத்துல இருந்து ஆட்டோல வர்ரோம்
இந்த ஏரியால we the people னு ஒரு குரூப்னு இருக்கம்ல கொஞ்சம் வழி சொல்லுப்பா...
ஆட்டோக்கள் உள்ள இடங்களுக்கும் ஆட்டோ இல்லாத இடங்களுக்கும் உடனுக்குடன் சப்ளை பண்ணப்படும்,
அன்புடன்...
சரவணன்.
Post a Comment