.

Thursday, May 25, 2006

மதுமிதா

வலைப்பதிவர் பெயர்: சிறில் அலெக்ஸ்

வலைப்பூ பெயர் : தேன்

சுட்டி(url) :

http://theyn.blogspot.com/
http://bblk.blogspot.com/
http://muttom.blogspot.com/

ஊர்: வாழ்ந்த இடங்கள் முட்டம், திருப்பத்தூர்(வ. ஆ), சென்னை. தற்போது சிக்காகோவில்

நாடு: அவ்வப்போது அமெரிக்கா; எப்போதும் இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வேலை நேரம் போர் அடித்து நெட்டில் சுற்றியதில் தற்செயலாய் கண்டுபிடித்தது. 'கடற்புறத்தான்' ஜோவின் உதவியுடன் தொடர்ந்தது

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : டிசம்பர் 30, 2005

இது எத்தனையாவது பதிவு: 117


இப்பதிவின் சுட்டி(url): http://theyn.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: "தெரியலயே", நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும். உண்மையில் 'நேரப்போக்குக்காகவும் தமிழ் எழுதிப்பழகவும்' என வைத்துக்கொள்ளலாம். ஏன் தொடர்ந்து எழுதுகிறீர்கள் எனக் கேட்கமாட்டீர்களே?

சந்தித்த அனுபவங்கள்: மொத்தத்தில் நல்ல அனுபவங்களே.

பெற்ற நண்பர்கள்: நிறையபேர். சட்டுன்னு நியாபகம் வரும் சில பெயர்கள் ஜோ, பாஸ்டன் பாலா, கால்கரி சிவா, ஜி. இராகவன், சமுத்ரா, குமரன்(பக்தி), மதி கந்தசாமி, வஜ்ரா ஷங்கர், தேவ்... இவுங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியாது நான் இவங்களை நண்பர்களாய் நினைக்கிறேன். பெயர் சொல்லாத நண்பர்கள் பலரும் உண்டு.

கற்றவை: பல பதிவுகளிலிருந்து பல விஷயங்கள்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ரெம்பவே அனுபவித்தேன் (நல்ல அனுபவம்தான்)

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து படிக்கணும்; தொடர்ந்து பதிக்கணும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பிறந்தது - முட்டம்
படித்தது - கார்மல் (நாகர்கோவில்), டான் போஸ்கோ(திருப்பத்தூர்)
கல்லூரி - லயோலா(சென்னை) 5 வருடம் B. Com மற்றும் MBA.
வேலை - கணிணித் துறை (மென்பொருள்)
இது போதும்பா

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
"அடுத்தவன் உனக்கு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாயோ அதையே அடுத்தவனுக்கு நீ செய்." - இயேசு

"எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும்" - கீதை

12 comments:

தேவ் | Dev said...

PARTNER DO U REMEMBER ME?:)

சிறில் அலெக்ஸ் said...

தேவ்..உங்களை மறப்பேனா.. செர்த்துவிட்டேன் லிஸ்ட்டில்..

தேவ் | Dev said...

Thanks Partner for the Honour:)

Get going partner:)

கால்கரி சிவா said...

சிறில், நான் உங்களை நண்பராகவே கருதுகிறேன். ஐயம் வேண்டாம்

குமரன் (Kumaran) said...

தொட்டுட்டீங்களே சிறில். நண்பர்ன்னு நினைக்காமலேயா பதிவு போடறப்ப எல்லாம் மின்னஞ்சல் அனுப்புறேன்? :-)

எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணலை? எங்க வீட்டுப்பக்கம் எல்லாம் வர்றீங்களா? இல்லையா?

சிறில் அலெக்ஸ் said...

சிவா..உங்களிடம் சந்தேகமேயில்லை..

குமரன் (Kumaran) said...

தொட்டுட்டீங்களே சிறில். நண்பர்ன்னு நினைக்காமலேயா பதிவு போடறப்ப எல்லாம் மின்னஞ்சல் அனுப்புறேன்? :-)

எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணலை? எங்க வீட்டுப்பக்கம் எல்லாம் வர்றீங்களா? இல்லையா?

சிறில் அலெக்ஸ் said...

குமரன்.
சொன்னா நம்பமாட்டீங்க(pardon the cliche) இன்னைக்கு உங்கள் தொலைபேசி எண்ணை கேட்டு மெயில் அனுப்ப நினைத்திருந்தேன்.அனுப்பவும்.

Vajra said...

சிறில் அவர்களே...என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி...

வஜ்ரா ஷங்கர்.

சிறில் அலெக்ஸ் said...

சங்கர்...உங்களைப் பற்றி சிவா சொன்னார்... விரைவில் பேசலாம்

மஞ்சூர் ராசா said...

அன்பு சிரில்
உங்களின் சிறிய சுயத்தினை அழகாக எழுதியிருக்கிறீர்கள். எழுதுங்கள், மேலும் எழுதுங்கள், ஆக்கபூர்வமாக எழுதுங்கள். வெற்றியடையுங்கள்.
வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

மஞ்சூர் உங்களை நண்பர்கள் லிஸ்டில் விட்டுவிட்டேன் அலைகள் பாறைகளுக்கு நீங்கள் தந்த உற்சாகம் நியாபகம் வருகிறது..

வாழ்த்துக்கு நன்றி

சிறில் அலெக்ஸ்