மொத்த பதிவுகள் 100
மொத்த பின்னூட்டங்கள் 996 (யாருக்குக் கிடைக்குமோ அந்த 1000வது பின்னூட்ட வாய்ப்பு?)
பின்னூட்டப் புழு
எண்ணிக்கைப் பட்டியல்
பொதுவானவை - 224
சினிமா - 120
இலக்கியம் - 105
ஆன்மீகம் - 120
படப் பதிவுகள் - 54
அரசியல்/சமூகம் - 373
------------------------------------
மொத்தம் 996
------------------------------------
சராசரி பின்னூட்டங்கள்
பொதுவானவை - 14
சினிமா - 14
இலக்கியம் - 13
ஆன்மீகம் - 10
படப் பதிவுகள் - 8
அரசியல்/சமூகம் - 25
உப தகவல் தொகுப்பு
- பின்னூட்டமில்லாத பதிவுகள் 16
- குறைந்தபட்ச பின்ன்னூட்டம் 1 (0வை கணக்கெடுக்காமல்)
- அதிகபட்சம் 55
- முதல் பத்து 55, 50, 49, 45, 39, 36, 31, 31, 30, 29
- முதல் பத்தின் கூட்டுத்தொகை 395
- மீதம் 90ன் கூட்டுத்தொகை 601
- முதல் பத்தின் வகைகள் சமூகம்/அரசியல் - 5 ; பதிவர் வட்டம் - 3; சினிமா - 1 ; ஆன்மீகம் -1
நன்றி: புள்ளியியல் ஆசிரியர் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ் எல்.
31 comments:
கொத்தனார் பதிவுக்குப் பின்னூட்டக் கணக்கெடுத்தா கிட்டத் தட்ட உங்களுக்கு கிட்ட வந்துருவார்னு நினைக்கிறேன்..
நான் மத்த பதிவுகளில் போட்ட பின்னூட்டங்களுக்குக் கணக்கெடுத்துப் பார்க்கலாம்.. 50 பதிவுக்கு எடுத்தா உருப்படியா ரொம்ப தேறாது (பதிவிலயே உருப்படியா ஒண்ணும் தேறாமத் தான் ஓசிப்பதிவு போடுறோம்.. இதுல பின்னூட்டத்துல என்ன தேறப் போகுது :) )
நீங்க "புள்ளி" ராஜாவா? :-)
சிறில், ஸ்மைலி போட்டிருக்கேன். அடி பின்னீறாதீங்க...
//எண்ணிக்கைப் பட்டியல்//
இது பின்னூட்டங்களின் வகைகளா? பதிவின் வகைகளா?
998
1000
verri,veRRi
1000 enathe.
vaazththukkaL
முதல் 10 பதிவுகள் பெற்றது 39.66% பின்னூட்டங்கள். மற்ற 90 பதிவுகள் - 60.34%
முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.
1. நீங்கள் போட்டவை எத்தனை?
2. அதிக பின்னூட்டம் போட்ட பதிவர்கள் யார்(முதல் 5) அவர்கள் போட்ட பின்னூட்டம் எத்தனை?
பொன்ஸ்,
ரெம்பத்தான் பணிவு உங்களுக்கு.
உதையக்குமார்,
நான் பின்னி எடுக்கிற ஆளுமில்ல..புள்ளி ராஜாவுமில்ல
பின்னூட்ட புள்ளியியல் ராஜான்னு வச்சுக்கலாம்..
:)
அடடா. அறிவுபூர்வமா பின்னூட்டம் போட்டு 1000 அடிக்கலாமுன்னு பார்த்த இந்த முந்திரிக் கொட்டை செல்வன் பண்ணின வேலையால் நம்ம முதல் பின்னூட்டமே 1000மாவது ஆகிப் போச்சே!
செல்வன் - பாத்தீங்களா? இதுக்கெல்லாம் ஒரு லக்கு வேணுமய்யா.
இ. கொத்ஸ்
பதிவின் வகைகள்தான். பின்னூட்டங்கள வகைப்படுத்தினா இன்னும் மூணு வாரம் களிச்சுத்தான் பதிவு போட்டிருப்பேன்.
:))
செல்வன்,
மிஸ் பண்ணிட்டீங்களே. இ. கொத்தனார் முந்திக்கிட்டாரு.. இருந்தாலும் உங்க முயற்சிக்குப் பாராட்டா பரிசு ..
3 பின்னூட்டங்கள் உங்கள் அடுத்தப் பதிவில்.
:)
//உதையக்குமார்,//
ஏங்க இப்படி 'உதய'மாகி வரவரை 'உதைய' வாங்குறவரா ஆக்கறீங்க?
//முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.
//1. நீங்கள் போட்டவை எத்தனை?//
இந்தக் கணக்குப் போட்டா கத கந்தலாகிடும் சாமி?..
:)
//2. அதிக பின்னூட்டம் போட்ட பதிவர்கள் யார்(முதல் 5) அவர்கள் போட்ட பின்னூட்டம் எத்தனை?//
இந்தக் கணக்க சீக்கிரமே சேகரிக்கிறேன்.
:)
//முதல் 10 பதிவுகள் பெற்றது 39.66% பின்னூட்டங்கள். மற்ற 90 பதிவுகள் - 60.34% //
ஆமா.. உங்களுக்கும் % கணக்கு போடத்தெரியும்னு நிருபிச்சிட்டீங்க.
:)
ஒரே பதிவில் 500க்கும் மேல் பின்னூட்டம் வாங்கியவர்களுக்கெல்லாம் இந்தப் புல்லிவிவரம் எல்லாம் தூசுப்பா..
அமெரிக்கா பட்ஜெட்டுக்கும் சொமாலியா பட்ஜெட்டுக்கும் வித்தியாசமில்லையா?
:)
//ஏங்க இப்படி 'உதய'மாகி வரவரை 'உதைய' வாங்குறவரா ஆக்கறீங்க? //
இந்தமாதிரிப் பின்னூட்டம் நம்ம கோவி. கண்ணந்தான் போடுவாரு..
சிங்கையில சிங்கம் தூங்குதப்பா..
:)
//செல்வன்,
மிஸ் பண்ணிட்டீங்களே. இ. கொத்தனார் முந்திக்கிட்டாரு.. இருந்தாலும் உங்க முயற்சிக்குப் பாராட்டா பரிசு ..
3 பின்னூட்டங்கள் உங்கள் அடுத்தப் பதிவில்.//
அலெக்ஸ்
ஒரு சிறு கயமைத்தனம் செய்திருக்கிறேன்.என் முந்தைய பின்னூட்டம் ஒன்றை எடுத்து விட்டேன்.அதனால் கொத்தனாரின் 1000மாவ்து பின்னூட்டம் 999வதாகவும்,எனது 1001வது மொய் பின்னூட்டம் ஆயிரமாவது பின்னூட்டமாக வந்துவிட்டது.
அதனால் பொற்கிழியை எனக்கே வழங்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொல்கிறேன்..மன்னிக்கவும் கேட்டு கொள்கிறேன்:))))
செல்வன்,
பின்னூட்டத்தில் குளறுபடி செய்திருந்தும் அந்தப் பின்னூட்டத்துகுப் பாண்டியன் பரிசளிக்கிறானென்றால்...
பின்னூட்டக் கயமைக்கு வேறொரு விலக்கம் தந்துவிட்டீங்க போங்க.
:)
இ. கொத்ஸ் எந்த மண்டபத்துல ஐடியா வாங்குறாரு பாப்போம்.
அலெக்ஸ்
அந்த காலத்தில் தருமி கயமைத்தனம் செய்து தானே பொற்கிழி வாங்கினார்?தட்டி கேட்ட நக்கீரரையும் அலேக் செய்தல்லவா பரிசு பெற்றார்?அதே போல் திருவிளையாடல் படத்திலும் வினாயகர் கயமைத்தனம் செய்துதானே மாங்கனியை பெற்றார்.அதனால் இந்த போட்டியிலும் கயமைத்தனத்தை அனுமதித்து பொற்கிழியை எனக்கே வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்:)))))
//.அதனால் கொத்தனாரின் 1000மாவ்து பின்னூட்டம் 999வதாகவும்,எனது 1001வது மொய் பின்னூட்டம் ஆயிரமாவது பின்னூட்டமாக வந்துவிட்டது//
ஐயா புள்ளியியல் ராஜா,
அவரைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்கச் சொல்லுங்க. இப்பவும் நம்ம பின்னூட்டம்தான் 1000மாவது. ஒரு பின்னூட்டத்தைக் காணாமல் போகச் செய்வது உங்களால் மட்டும்தான் முடியும்.
ஆனால் நீங்கள் அதைச் செய்து இந்த அக்கிரமத்திற்கு துணை போக மாட்டீர்கள் என நானும் எனது ர.ம. கண்மணிகளும் நம்புகிறோம்.
அதனையும் மீறி அது போல் நடக்க வேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால், பாண்டிய மன்னன் வழியில் புள்ளியல் ராஜா. தப்பான தீர்ப்பு கூறி வெறியாட்டம். தேன் வலைப்பூ எரிக்கப்படுமா? இ.கொ.விற்கு மெரீனாவில் சிலையா? பாருங்கள் இன்றைய 8:30 மணி செய்திகள் என்ற அறிவிப்பினை எதிர்பாருங்கள்.
"ஒரு பின்னூட்டத்தைக் காணாமல் போகச் செய்வது உங்களால் மட்டும்தான் முடியும்."
யார் சொன்னது? தான் பிறர் பதிவுகளில் போட்ட பின்னூட்டத்தையே அடையாளம் தெரியாமல் நீக்கக் கூடிய வித்தகர்கள் உண்டு. அவரே இது பற்றி கூறியதை பார்க்க: http://www.pkblogs.com/mmoorthi/2006/05/blog-post_09.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் :)
ஒரு பதிவில் ஆயிரம் பின்னூட்டங்கள் வாங்குகிறவர்களையும், ஆயிரம் பதிவு எழுதியும் ஒரே ஒரு பின்னூட்டம் வாங்குகிறவங்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் :)
கண்ணன்,
ஒரு பதிவில் ஆயிரம் பின்னூட்டம் யாருன்னு தெரியுது ஆனா ஆயிரம் பதிவுல ஒரே பின்னூட்டமா... யாரது?
ஏன்யா வலைப்பூவ எரிக்கிற அளவுக்கு வந்துட்டீங்களா?
ஒங்க கொழாயடிச் சண்டைகள வேறெங்கையாவது வைங்க.
இதுபத்தி சட்டம் என்ன சொல்லுதுன்னு ஆராய்ந்து முடிவு செய்வோம் - கலைஞர்.
:)
அநியாயத்துக்கு பொழுது போகாத பொம்முவா இருக்கீரே ;-)
பாபா,
இப்டி பதிவு போட்டா மட்டும் பொழுது போயிடுதா??
:)
சிறில்,
எங்களுக்கு வாய்பளிக்காமல் நீங்களும் இகொவும் செய்த கூட்டுச் சதி என நான் வழக்கு போடப் போகிறேன்.
சிவபாலன்,
வாய்ப்பை தவறவிட்டுவிட்டு இப்படி சதின்னா எப்படி?
:)
//சிவபாலன்,
வாய்ப்பை தவறவிட்டுவிட்டு இப்படி சதின்னா எப்படி?//
அதானே!
Post a Comment