.

Friday, August 04, 2006

அமைதி... அமைதி...

எளிமைக்குப் பெயர் போன புனிதர் அசிசியின் பிரன்சிஸ். இவரின் புனிதத்தன்மையால் இவரால் பறவைகளோடும் உரையாட முடிந்ததாம். ஸ்டிக்மாடிஸ்ட்(Stigmatist) அதாவது இயேசுவின் ஐந்து காயங்களை உடம்பில் பெற்றவர்.

தமிழாக்கம்

"இறைவா, என்னை உன் அமைதியின் கருவியாக மாற்று;
எங்கே வெறுப்புள்ளதோ அங்கே அன்பையும்;
எங்கே (உள்ளங்கள்) காயப்பட்டுள்ளதோ அங்கே மன்னிப்பையும்;
எங்கே சந்தேகமுள்ளதோ அங்கே இறைநம்பிக்கையையும்;
எங்கே மன உறுதியில்லையோ அங்கே தன்னம்பிக்கையையும்;
எங்கே இருளுள்ளதோ அங்கே ஒளியையும்;
எங்கே சோகமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும்
என்னை விதைக்கச்செய்யும்.
தெய்வீகத் தலைவனே,
ஆறுதல் அடைவதைவிட ஆறுதல் அளிப்பதையும்;
சகிக்கப்படுதலைவிடப் சகிப்பதையும்;
அன்பு செய்யப்படுவதைவிட அன்புசெய்வதையும்
நான் தேடுவேனாக;
ஏனெனில் வழங்கும்போதுதான் பெறுகிறோம்,
மன்னிக்கும்போதே மன்னிப்பு பெறுகிறோம்,
இறக்கும்போதே என்றென்றைக்குமாய் பிறக்கிறோம்.

ஆங்கிலத்தில்

Lord, make me an instrument of Thy peace;
where there is hatred, let me sow love;
where there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
and where there is sadness, joy.
O Divine Master,
grant that I may not so much seek to be consoled as to console;
to be understood, as to understand;
to be loved, as to love;
for it is in giving that we receive,
it is in pardoning that we are pardoned,
and it is in dying that we are born to Eternal Life.

8 comments:

Anonymous said...

if everybody thinks like this then the earth is heaven.
raghs

சிறில் அலெக்ஸ் said...

உண்மை ராகவ்.

கோவி.கண்ணன் said...

//ஏனெனில் வழங்கும்போதுதான் பெறுகிறோம், //
நல்ல தத்துவங்கள் !
இந்த வரியே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது !

சிறில் அலெக்ஸ் said...

ஆமா கண்ணன்.

கைப்புள்ள said...

//அன்பு செய்யப்படுவதைவிட அன்புசெய்வதையும்
நான் தேடுவேனாக;//

இதை அனைவரும் பின் பற்றினால் உலகம் அழகானதாகி விடும். நல்ல பதிவு.

சிறில் அலெக்ஸ் said...

டாங்ஸ் கைப்புள்ள. இத எப்பவுமே பின்பற்றுவது கஷ்ட்டம் ஆனாஅப்பப்பவாவது....

VSK said...

புனித அஸிஸ்ஸியாரின் இப்பதிவு நான் தினமும் காலையில் படிக்கும் ஒன்று!
நன்றி!

சிறில் அலெக்ஸ் said...

//புனித அஸிஸ்ஸியாரின் இப்பதிவு நான் தினமும் காலையில் படிக்கும் ஒன்று!
நன்றி//

இன்னுமொரு முறை என் தமிழாக்கத்தைப் படித்துப்பார்ட்த்தேன்..கண்ணில் ஏனோ நீர் பனிக்கிறது..

தினமும் படிக்கிறீர்களா... மகிழ்ச்சி.

சிறில் அலெக்ஸ்