.

Saturday, November 25, 2006

போக்கர் ஆடுவது எப்படி?

கசினோ ராயேல் பார்த்துவந்த பாதிப்பில் எழுதும் பதிவு இது. படம் அசத்தலாக உள்ளது. தீவிர பாண்ட் ரசிகர்களை படம் ஏமாற்றலாம்(?) ஆனால் பொதுவாக நல்ல சண்டை படங்களை விரும்புவர்களுக்கு விருந்துதான்.

எப்போதும் சாதுவாய், ரீஜண்ட்டாய் நடந்துகொள்ளும் பாண்ட் இந்தப்படத்தில் பேட்டை தாதாவாட்டம் குமுறுகிறார். லேசர் முதல் ராக்கெட் லாஞ்சர்கள் சகிதம் உள்ளடக்கிய கார்களில்லை, உலகை ஆட்கொள்ள விரும்பும் வில்லனில்லை. உரையாடல்களில்கூட பழைய பாண்ட்தனம் இல்லை. பாண்ட் பற்றிய உங்கள் முன் அபிப்பிராயங்களையெல்லாம் தகர்த்தெறியும் படம் 'காசினோ ராயேல்'.

'ரௌடி பாண்ட்' என்கிறது டைம். ஒப்புக்கொள்கிறேன். ரசிக்கத்தகும் ராஸ்க்கல் இந்த புதிய பாண்ட்.

போக்கர் எனும் சீட்டாட்டம் (பொதுவாக சூதாட பயன்படுத்தப்படுகிறது) இந்தப் படத்தில் முக்கிய பங்குவகிக்கிறது. வில்லனை, வில்லன்களில் ஒருவரை (படத்தில் சில வில்லன்கள்) போக்கர் ஆட்டத்தில் தோர்க்கடித்து சில மில்லியன்களை தீவிரவாதிகளின் கையில் சேர்வதிலிருந்து காப்பாற்றுகிறார் பாண்ட்.

போக்கர் ஆட்டத்தின் விதிமுறைகளை தெரிந்திருப்பது இந்தப் படத்தை மேலும் ரசிக்க உதவும் என்னும் நம்பிக்கையில்..

ஒரு சீட்டுக் கட்டில் 52 சீட்டுக்கள் உள்ளன. ஏஸ்(Ace), ராஜா, ராணி, ஜாக்(Jack அல்லது குலான்), 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 மற்றும் 1 என இவை பெரிதிலிருந்து சிறிதாக வரிசைப்படுத்தப் படுகின்றன. ஆட்டீன் அல்லது ஆர்டீன்(Hearts), ஸ்பேட்(Spade), கிளாவர் அல்லது க்ளப்ஸ், டைமண்ட் என நாலு வகை(பூக்கள்-suites) சீட்டுக்கள்.

போக்கரில் இந்த வகைகளில் பெரியது சிறியது என இல்லை. (நம்ம ஊர் மூணு சீட்டில் இந்த வகைப்படி பெரியது சிறியது உண்டு).

போக்கரில் ஐந்து சீட்டுக்களின் மதிப்பை வைத்து ஒருவரின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. 'டெக்ஸாஸ் ஹோல்ட் தெம்' (Texas Hold em) போக்கரில் ஒருவருக்கு முதலில் இரண்டு சீட்டுக்கள் மறைவாக டீல் செய்யப்படுகின்றன. இந்தச் சீட்டுக்களை 'hole cards' என அழைக்கின்றனர்.

இதற்குப் பின் பெட்டிங் துவங்குகிறது. ஒரு சுற்று பெட்டிங் முடிந்தபிறகு டீலர் கையில் மீதியிருக்கும் சீட்டுக்கட்டின் மேல் சீட்டை நிராகரித்துவிடுவார். இதற்கு burning the card எனப் பெயர்.

மேல் சீட்டை களைந்தபின்னர் அடுத்த மூன்று சீட்டுக்களையும் எல்லோருக்கும் தெரியும்படி டேபிளில் போடுவார். இதற்குப் பெயர் Flop. இன்னொரு ரவுண்ட் பெட்டிங் நடைபெறும்.

அடுத்து இன்னுமொரு மேலுள்ள சீட்டு 'எரிக்கப்படும்' (burning the card).

அடுத்து இன்னொரு சீட்டு திருப்பப்படுகிறது. இதற்குப் பெயர் Turn அல்லது Forth Street. இப்போது டேபிளில் நான்கு சீட்டுகள் எல்லோருக்கும் தெரியும்படி இருக்கின்றன. விளையாடுபவர்கள் கையில் இரண்டு சீட்டுக்கள் அவர்கலுக்கு மட்டுமே தேரியும்படி உள்ளன.

இப்போது பெட்டிங் மீண்டும் நடைபெறும். இன்னும் ஒரு சீட்டை ஒதுக்கிவிட்டு ஐந்தாவது சீட்டு திறக்கப் படும் இதற்குப் பெயர் rivar அல்லது fifth street.

இத்தனை சீட்டுக்கள்தான் டீல் செய்யப்படுகின்றன. இப்போது விளையாடுபவர் கையிலிருக்கும் இரண்டு சீட்டுக்களையும் மேசையில் இருக்கும் ஐந்து சீட்டுக்களில் மூன்றையும் சேர்த்து ஐந்து சீட்டுக்களை வைத்து கீழ்கண்ட விதிகளின்படி யாருக்கு வெற்றி என முடிவு செய்யப்படும்.

1. ராயல் ப்ளஷ். (Royal Flush).
இதுதான் எல்லாவற்றிற்கும் முதன்மையான கை. ஏஸ், கிங், குயின், ஜாக், 10 சீட்டுகள் ஒரே suiteல் உள்ளதாய் வந்தால் அதுவே ராயல் ப்ளஷ். ஆர்ட்டின் ஏஸ் ஆர்ட்டின் 10 உங்களிடம் இருக்கும் இரண்டு சீட்டுக்கள் என வைத்துக்கொள்வோம். மேசையில் ஆர்ட்டின் குயின் ராஜா ஜாக்கோடு வேறு சில சீட்டுக்கள் இருந்தால் வெற்றி உங்களுக்கே. மற்ற இரண்டு சீட்டுக்களையும் கணக்கில் சேர்க்கமுடியாது.


என்பது இதுபோல ஒரு வரிசைப்படி வரக்கூடிய சீட்டுக்களூக்கு Straight எனப்பெயர். 2,3,4,5,6 என்பது ஒரு Straight.

Straightஎன்பது ஏஸில் துவங்கி ஏஸில் முடிவடையும் சாத்தியமான ஐந்து சீட்டு வரிசைகள். அதாவது A, 2, 3, 4, 5 என்பது சரியான வரிசை. 10, J, K, Q, A என்பதும் சரியானது ஆனால் 4, 3, 2, A, K என்பது சரியான வரிசை அல்ல.

Flush என்பது ஒரே suiteல் அந்து சீட்டுக்கள் வருவது.

2. ஸ்ட்ரெய்ட் ப்ளஷ்(Straight Flush).
ராயல் ப்ளஷ் இல்லாமல் ஒரே suiteல் வரும் வேறெந்த Flushம் ஸ்ட்ரெயிட் ப்ளஷ் எனப்படுகிறது. பாண்ட் ஒரி Straight Flush வைத்துதான் வில்லனை வீழ்த்துகிறார்.

3. நாலும் ஓன்றானது(4 of a kind).
நான்கு A அல்லது நான்கு 5 என நான்கு suiteகளிலும் உள்ள சீட்டுக்களும் வருவது.

4. புள் ஹவுஸ்(Full House).
9, 9, 9 மற்றும் 5, 5 என ஒரு சீட்டில் இரண்டும் இன்னொன்றில் மூன்றுமாய் வருவது.

5. ப்ளஷ்(Flush)
ஐந்து டைமண்ட் சீட்டுக்கள் (எந்த வரிசையிலுமில்லாமல்) போல ஐந்தௌ சீட்டுக்கள் ஒரே வகையில் வருவது.

6. நேர்வரிசை(Straight)
வரிசையில் ஐந்து சீட்டுக்கள் வெவ்வேறு suiteகளில் வருவது.

7. மூன்று ஒன்றாய்(Three of a kind)
8, 8, 8 என மூன்று சீட்டுக்கள் ஒரே என்ணில் வருவது.

8. இரண்டு ஜோடிகள்(Two pairs)
8,8 மற்றும் 4, 4 என வருவது.

9. ஜோடி(Pair)
இரண்டு ஒரே எண்சீட்டுக்களை பெறுவது 7, 7 போல.

10. வரிசையில் பெருசு(High card)
மேலுள்ள எந்த சாத்தியமும் ஒருவரிடம் இல்லாமல் போனால் அவரிடம் இருக்கும் சீட்டில் உள்ளதில் மிகப் பெரிய எண்ணை வைத்து வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது பல பெட்டிங் விதிகளும் உள்ளன.

போக்கரில் தன் கையின் பலத்தைவிட மேசையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்களைக் கொண்டு மற்றவர்களால் என்ன சாத்தியங்களை உருவாக்கமுடியும் என்பதை கணக்கிடத் தெரியவேண்டும். அதுபோல பெட்டிங்கில் யார் உண்மையாக நல்ல கையுடன் பெட்டிங் செய்கிறார் யார் ஏமாஅற்றுகிறறர் எனத் தெரிந்துகொள்வதே சாமர்த்தியம்.

அடுத்தவர் நம்மிடம் இருக்கும் சீட்டுக்களின் பலத்தையும் பலவீனத்தையும் உணர முடியாதபடி நடந்துகொள்ளவேண்டும் இதனால்தான் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துக்கு Poker Face எனும் பதத்தை பயன்படுத்துகிறார்கள்.

பாண்ட் படம் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க.

The name is Bond. James Bond.
எம்பேரு Alex. Cyril Alex. ஹி ஹி.

17 comments:

சிறில் அலெக்ஸ் said...

டெஸ்ட் அல்லது யாராவது படித்தீர்களா?

பாலராஜன்கீதா said...

// அதுபோல பெட்டிங்கில் யார் உண்மையாக நல்ல கையுடன் பெட்டிங் செய்கிறார் எனத் தெரிந்து ***கொல்வதே*** சாமார்த்தியம் //

ஐய்யோ பயமாக இருக்கிறதே, நான் வரவில்லையப்பா இந்த ஆட்டத்திற்கு ;-)

கைப்புள்ள said...

//டெஸ்ட் அல்லது யாராவது படித்தீர்களா?//

படிச்சேனா இல்லியான்னு காமிக்காம கொஞ்ச நேரம் Poker Face காட்டுனேன்..ஹி...ஹி. இந்த ரவுண்டு Full House எனக்கே.
:)

ஒரு lapல மிஸ் ஆயிடுச்சு தலைவா. போன வாரம் தான் இந்த படத்தைப் பார்த்தேன். போக்கர் ஆட்டத்தைப் பத்தி ஒன்னும் தெரியாததுனால சும்மா பேக்கு மாதிரி பாத்துட்டு வந்தேன். திரும்ப அந்த படம் பாக்க ஒரு சான்ஸ் கெடச்சா உங்க பதிவைப் படிச்சதுனால புரியும்னு நெனக்கிறேன்.

நீங்க சொல்ற மாதிரி ரவுடி பாண்டா இல்லியான்னு தெரியலை...ஏன்னா நான் பாத்த முதல் பாண்டு படம் கேசினோ ரொயால் தான். பதிவுக்கு டேங்ஸுங்கோ.

இவண்
புள்ள...கைப்புள்ள
:)

Boston Bala said...

இனிமேத்தான் படிக்கணும். நமக்குப் பிடிச்ச சூது - ப்ளாக் ஜாக். (இந்த மூஞ்சிய மாத்தற விளையாட்டு நமக்கு ஒத்து வராது... அகத்தின் அழுக்கு மொவத்தில வந்துரும் :-D)

Sridhar V said...

நல்லா எளிமையா சொல்லிக் கொடுத்திருக்கீங்க... மிக நன்றி!

poker விளையாட்டோடு, poker face-க்கு அர்த்தமும் தெரிந்து கொண்டேன் :-)

//நமக்குப் பிடிச்ச சூது - ப்ளாக் ஜாக். //

பா பா, அப்போ நீங்களூம் ஒரு 'எப்படி' பதிவு போடலாமே... please...

G.Ragavan said...

பாக்கலையே ஐயா படத்த. இப்போ பாக்க முடியும்னு தோணலை. இன்னும் ஒரு வாரம் போகட்டும்.

அரை பிளேடு said...

சூப்பரு நைனா..
தாங்ஸபா....
மங்காத்தா ரேஞ்சில கீற நமக்கு
இன்டர் நேஷனல் ரேஞ்சுக்கு சொல்லி குட்ததுக்கு..
அப்பிடியே இத்த எங்க போயி வெளாட்றதுன்னும் சொல்லிக்கோப்பா..

சிறில் அலெக்ஸ் said...

//ஐய்யோ பயமாக இருக்கிறதே, நான் வரவில்லையப்பா இந்த ஆட்டத்திற்கு ;-) //

பயப்படாதீங்க படத்துல பாண்ட் கொல்றாரு அதத்தான் (தவறாக) சரியாக சொல்லியிருக்கிறேன்.

சுட்டியமைக்கு நன்றி பாலராஜன்கீதா.

சிறில் அலெக்ஸ் said...

//படிச்சேனா இல்லியான்னு காமிக்காம கொஞ்ச நேரம் Poker Face காட்டுனேன்..ஹி...ஹி. இந்த ரவுண்டு Full House எனக்கே.
:)//

அடடா இதென்ன பதிவுலேயே போக்கர் ஆட ஆரம்பிச்சிட்டீங்க.

இன்னொருமுறை பாக்கலாம் படம் நல்லாத்தான் இருக்கு.

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//இனிமேத்தான் படிக்கணும். நமக்குப் பிடிச்ச சூது - ப்ளாக் ஜாக். (இந்த மூஞ்சிய மாத்தற விளையாட்டு நமக்கு ஒத்து வராது... அகத்தின் அழுக்கு மொவத்தில வந்துரும் :-D) //

நமக்கு மூணு சீட்டு ரெம்ப பிடிக்கும்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஸ்ரீதர் வெங்கட்.

ராகவன்,
பொறுமையா பாருங்க. ஆனா பாருங்க.

சிறில் அலெக்ஸ் said...

அரை பிளேடு இங்க காசினோக்கள்ள விளையாடலாம். ஆனா பொதுவா தனிப்பட்ட டூர்ணமெண்ட்ஸ்லதான் போக்கர் பிரபலம். அதுவரைக்கும் மங்காத்தா தொடருங்க.

போக்கரில் பல வகைகள் இருக்கு.

Machi said...

ஒன்னும் புரியலை :-(( நமக்கு ரம்மி & மங்காத்தா தான் ஏதோ கொஞ்சம் புரிஞ்ச ஆட்டம்.

Udhayakumar said...

பார்த்துட்டேன்... சூப்பரா இருக்குங்க...

ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களான் என் நண்பர்களுக்கு இன்னமும் பியர்ஸ் ப்ரோஸ்னன் மற்றும் டுமாரோ நெவர் டைஸ் மறக்கவில்லை :-(

மீனாக்ஸ் | Meenaks said...

Thanks. Very useful lessons.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி குறும்பன்.. ஆட ஆடத்தான் இதெல்லாம் புரியும்னு நினைக்கிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

உதயக் குமார்..
பழச மறக்க சிலருக்கு கஷ்டமாத்தான் இருக்கும். படம் as such ர்ந்ம்ப நல்லாருந்துச்சு.

சிறில் அலெக்ஸ்