.

Thursday, November 23, 2006

வான்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

நன்றிஅறிவித்தலை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள் அமெரிக்ககவில். இதுக்காக குளிர்காலத்தில், வெளியே போகமுடியாதபடியான தட்பவெட்பத்தில் நான்குநாள் லீவ் வேற விட்டுட்டாங்க. Thanksgiving பொங்கலைப் போன்றதொரு திருவிழாவாக உருவெடுத்து இன்று எல்லாத் துறையினரும் குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாக மாறியிருக்கிறது. நவம்பரின் நாலாவது வியாழன் தாங்க்ஸ்கிவிங். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் வேறுசில நாடுகளிலும் thanksgiving கொண்டாடப்படுகிறது.

பொங்கலில் பொங்கல் வைப்பதுபோலவே தாங்ஸ்கிவிங் ஸ்பெஷல் என்னண்ணா வான்கோழி (Turkey) ஒண்ண முழுசா ரோஸ்ட் செய்து குடும்பமா உக்காந்து சாப்புடுறதுதான். டர்க்கி ரோஸ்ட் பண்ணும்போது 'டர்க்கியோ டர்க்கி..டர்க்கியோ டர்க்கி..'ன்னு யாரும் கத்தமாட்டாங்க.

வான்கோழி மேல பட்டரத்தடவி, உள்ளார வேண்டிய மூலிக சாமான்கள புகுத்தி நல்ல மணம் வரும்படியா, பேக்கிங் அவன்ல வச்சு ரோஸ்ட் பண்ணவேண்டியதுதான். அட இவ்வளவுதானான்னு கேக்காதீங்க.

இங்கே போய் பாருங்க.

பி.கு: எல்லாரும் அது எப்படி செய்வது இது எப்படி செய்வதுன்னு போடுறாங்களேன்னு நெனச்சதுல வந்தது இந்தப் பதிவு.

10 comments:

கால்கரி சிவா said...

சிறில், வான்கோழியும் திராட்சை மதுவும் இந்த குளிருக்கு (கால்கரியில் இன்று -12 வரும் வார இறுதியில் -24 விண்ட் ஜில் சேர்க்காமல்) அற்புதமாக இருக்கும்.

ஒரு வான்கோழி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

சிறில் அலெக்ஸ் said...

அடடா.. வான்கோழி கண்ட கவி ஆயிட்டீங்க சிவா.

G.Ragavan said...

வான்கோழியா! அமெரிக்க சிறிலாட கண்டிருந்த ஜிராகோழி....தானும் அதுவாகப் பாவித்து.....தன் பொல்லா நாக்கைக் தொங்கி ஜொள்ளினாற் போலுமே....தின்னாதான் தின்ன வான்கோழி :-((((((((((((((

இதுவரைக்குஞ் சாப்பிட்டதில்லை ஜோ. காடையும் கௌதாரியும் சாப்பிட்டிருக்கேன். ஆனா வான்கோழிதான் அகப்படலை. தூத்துக்குடீல எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு மாட்டாஸ்பித்திரி உண்டு. அதுல முந்தி ஒரு ஓரமா கோழி வாங்கோழி எல்லாம் கெடைக்கும். ம்ம்ம்....இதுக்காக அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்து சிறில் வீட்டுக்குப் போகனும் போல.

நாமக்கல் சிபி said...

அப்படியே இங்கே ஒண்ணு பார்சல்.

(ஐயோ! பார்சல் செய்வது எப்படின்னு யாராவது பதிவு போடப் போறாங்க)

ramachandranusha(உஷா) said...

எத்தினி வான்கோழிகள் உயிர் தியாகம் செய்யப் போகுதோ :-(

சிறில் அலெக்ஸ் said...

ஆழுக்காளு பார்சல் கேட்டா எப்டி. நானே ஒரு வான்கோழி முட்டைய பொரிச்சு Futruridtic-ஆ சாப்பிடவேண்டியிருக்கு.

:)

ராகவன்,
சென்னையில் சில நான்வெஜோட்டல்களில் வான்கோழி பிரியாணி பிரபலம். எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை.

உஷா,
வான்கோழிகள் ரெம்ப சின்ன கூண்டில் வளர்க்கப்படுகின்றனவாம். அதுல வாழுறதுக்கு இறப்பதுவே மேல்.

:)

நெல்லை சிவா said...

அப்படியே ஒரு ரோஸ்ட் படமும் போட்டீங்கன்னா, ஜொள்ளு விட்டுட்டே படிக்கலாம்,

இந்தப் பின்னூட்டத்திற்கு இலவசமா ஒரு செய்தி: :) உங்க கதைக்கு ஓட்டும் போட்டாச்சு.

முத்துகுமரன் said...

//எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை.//

அது தீபாவளி ஸ்பெசல் :-)

சிறில் அலெக்ஸ் said...

//அப்படியே ஒரு ரோஸ்ட் படமும் போட்டீங்கன்னா, ஜொள்ளு விட்டுட்டே படிக்கலாம், //

மனோரமா ஜோக்குத்தான் நியாபகம் வருது.

//இந்தப் பின்னூட்டத்திற்கு இலவசமா ஒரு செய்தி: :) உங்க கதைக்கு ஓட்டும் போட்டாச்சு. //

அடடா நல்ல சேதியாச்சே.. நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

முத்துக்குமரன்
தீபாவளி ஸ்பெசலா? எனக்குத் தெரிந்து டி நகர் அம்மாவில் வாரத்துக்கு ஒருநாளாவது வான்கோழி கிடைக்கும்.

எனக்கு நம்ம ஊர் டர்க்கி அத்தனை விருப்பமில்லை. இங்கே டர்க்கி சாண்ட்விட்ச் நல்லாயிருக்கும்.

சிறில் அலெக்ஸ்