.

Thursday, November 30, 2006

சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு

சிக்காகோவில் பதிவர்கள் மூவர் கடந்த ஞாயிறன்று சந்தித்தோம். அயராது பதிவு போடும் சிவபாலன், சவுண்டாய் பதிவு போடும் உதயக் குமார் மற்றும் அப்பப்போ பதிவு போடும் நான்.

மூவரும் சந்திப்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. அறிவிப்பும் காடைசி நேரத்திலேயே தரப்பட்டிருந்தது. நண்பர் சுந்தரமூர்த்தி மின் மடல் அனுப்பியிருந்தார். தொலைபேசினார். சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சிக்காகோ தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் எனக் கூறியிருந்தார் சிவபாலன். தாவரங்களெல்லாம் வறண்டு நிக்கும் இந்தக் குளிர்காலத்தில் இங்கே ஏன் வருகிறீர்கள் என எண்ணியோ என்னவோ நானும் என் நண்பரும் குடும்பங்களுடன் போய் சேரும்போது பூங்காவை மூடியிருந்தார்கள்.

சிவபாலன் வீட்டுக்கு வழிசொல்ல நானும் என் மனைவி, மகனும் போய் சேர்ந்தோம்.

இரண்டு முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. உள்ளே சிவபாலன் உதயக்குமாரோடு பயங்கர விவாதத்தில் இருந்திருப்பார் போல.

'அண்டக்கா கசம் அபுக்கா குசம்..' சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவு திறந்தது.

சிவபாலன். எளிமை இனிமை. அவர் எழுத்தைப் போலவே பட படவென இருக்கிறார் மனிதர். அருமையாய் உபசரித்தார். (பதிவுகள் போலவே) சமூக, அரசியல் விவாதங்களையே விரும்பிச் செய்தார். உண்மையில் அவர் சொல்வதற்கும் அவரின் கொள்கைகளுக்கும் தொடர்புள்ளது என்கிற நேர்மையைப் புரிந்துகொண்டேன்.

உதயக்குமார் எனும் விளையாட்டுப்பிள்ளை வந்திருந்தார். பீர் மணம் மாறாத முகம். (ரெம்ப இளையவர்னு சொல்ல வர்றேங்க) மத்தபடி அவர் சவுண்ட் பார்டின்னு தெரியும் தண்ணி பார்ட்டியான்னு தெரியல. வலைப்பதிவுகளில் சீரியசான இளைஞர். நேரிலும்.

மூவரும் ஏதோ சின்ன வயசுலேர்ந்தே பக்கத்து வீட்டில் வளர்ந்தவர்கள் போல பேசிக் கொண்டோம். வலைப் பதிவுகளில் அப்படி ஒரு அறிமுகம் கிடைக்கிறது. ஒருவரைப் பற்றிய முன் அனுமானங்களை அவரின் எழுத்திலிருந்தே செய்துகொள்ள முடிகிறது(ஓரளவுக்கு சரியாகவே) . சின்னச் சின்ன விவாதங்களே புரிந்தோம். கலந்துரையாடல். சீரியசாக எதையும் விவாதிக்கவில்லை எனச் சொல்லலாம்.

சிவபாலன் மனைவி மசால் வடை பரிமாற சந்திப்பு சூடு பிடித்தது. அடுத்து டீ இன்னும் இனிப்புடன் உபசரிப்பு தொடர்ந்தது. மசால்வடை போண்டா வடிவில் திரித்து செய்யப்பட்டிருந்தது. (வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இருக்கவேண்டும் எனும் விதிமுறைக்கேற்ப.)

நண்பர்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி. வரும் கோடையில் மெகா சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்தோம்.

வலைப்பதிவர் சந்திப்பு என்பதை விட நண்பர்களின் சந்திப்பு எனச் சொல்லலாம். நிறைவான சந்திப்பு இனிவரும் சந்திப்புக்களுக்கு முத்தாய்ப்பு.

விடை பெறும்போது உதயக் குமார் நண்பர்களோடு கசினோ ராயேல் பார்க்கப் போவதாகச் சொன்னார்.

கூடவே வந்துகொண்டிருந்தார். ஹைவேயில் காரை விட்டபோது காணாமல் போயிருந்தார்.

இன்னும் சந்திப்போம். மகிழ்வோம். (போண்டா) பகிர்வோம்.

18 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//மசால்வடை போண்டா வடிவில் திரித்து செய்யப்பட்டிருந்தது.//

சிறில்... நீங்களுமா "போண்டா" சந்திப்பு பற்றி சொல்றிங்க !
:))

Sivabalan said...

சிறில்

சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்..

அதுசரி பரிசு பெற்ற பதிவராகிற்றே..!!

உதய் வந்து என்ன எழுதப் போகிறாரோ!?

சிறில் அலெக்ஸ் said...

//சிறில்... நீங்களுமா "போண்டா" சந்திப்பு பற்றி சொல்றிங்க !//

குறும்புதான்!

VSK said...

போண்டா மசால் வடைன்னு சொல்லியாச்சு.
இன்னும் பாக்கி இருக்கிறது என்ன இனிப்பு, என்ன டீ என்பது தான்!

:))

குமரன் (Kumaran) said...

ஆக இதுவும் இன்னொரு போண்டா வடை சந்திப்பு தானா? ஏனப்பா இப்படி இருக்கிறீர்கள்? நன்கு சிந்தித்து தமிழ் வலைப்பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யக்கூடாதா? அப்படி செய்தால் சொல்லுங்கள் நானும் வருகிறேன். வெறும் போண்டா வடை மட்டும் தான் என்றால் எனக்குப் போதாது. (கோழி, மீன் என்று வேண்டும் என்று சொல்கிறேன். வேறொன்றுமில்லை.) :-))

குமரன் (Kumaran) said...

அது சரி. இந்தச் சந்திப்பில் ஒரு கட்டுரை கூடவா வாசிக்கவில்லை? என்னமோ போங்க. சின்ன பசங்களா இருக்கீங்களே.

நான் வர்றப்ப வலையில இருந்து சுட்டு ஒரு கட்டுரை கொண்டு வர்றேன். படிச்சிரலாம். :-))

சிறில் அலெக்ஸ் said...

//போண்டா மசால் வடைன்னு சொல்லியாச்சு.
இன்னும் பாக்கி இருக்கிறது என்ன இனிப்பு, என்ன டீ என்பது தான்!//

அடடா அத்தன டீடெய்லெல்லாம் தந்தா எப்படி. பதிவர் சந்திப்புல ரகசியங்கள் இல்லைன்ன எப்டி?

சிறில் அலெக்ஸ் said...

//ஆக இதுவும் இன்னொரு போண்டா வடை சந்திப்பு தானா? ஏனப்பா இப்படி இருக்கிறீர்கள்? நன்கு சிந்தித்து தமிழ் வலைப்பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யக்கூடாதா? அப்படி செய்தால் சொல்லுங்கள் நானும் வருகிறேன். வெறும் போண்டா வடை மட்டும் தான் என்றால் எனக்குப் போதாது. (கோழி, மீன் என்று வேண்டும் என்று சொல்கிறேன். வேறொன்றுமில்லை.) :-)) //

குமரன் கோழி மீன் போட்டுரலாம் எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க.

சிறில் அலெக்ஸ் said...

//அது சரி. இந்தச் சந்திப்பில் ஒரு கட்டுரை கூடவா வாசிக்கவில்லை? என்னமோ போங்க. சின்ன பசங்களா இருக்கீங்களே.

நான் வர்றப்ப வலையில இருந்து சுட்டு ஒரு கட்டுரை கொண்டு வர்றேன். படிச்சிரலாம். :-)) //

என்ன இப்டி ஒரு உள்குத்து உடுறீங்க.
:)

சிறில் அலெக்ஸ் said...

//
சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்..//

நன்றி.

//அதுசரி பரிசு பெற்ற பதிவராகிற்றே..!!//

அடடா. :)

//உதய் வந்து என்ன எழுதப் போகிறாரோ!? //
ஆமா. என்ன எழுதப் போறாரோ?

பொன்ஸ்~~Poorna said...

//என்ன இப்டி ஒரு உள்குத்து உடுறீங்க.:) //
ஆமென் :)

//வலைப்பதிவுகளில் சீரியசான இளைஞர்//
உதய், என்னப்பா இது? எனக்குத் தெரியாம ஏதாவது மாறிட்டீங்களா?!
இப்போ தான் உங்களை வருத்தப்படாத வாலிபரா ஒத்துகிட்டிருக்காங்க, அதுக்குள்ள உங்க இமேஜை காலி செய்யும் முயற்சி ஒண்ணு நடக்குதே!! :))))

சிறில், ஹி ஹி.. ஏதோ, என்னால் ஆன குறும்பு !! :))

Udhayakumar said...

Cryil, I didn't have 50 cents for the toll :-). But I saw your car when you taking the Buckley Rd exit.

SP.VR. SUBBIAH said...

என்ன சிறில் சந்திப்பு என்றால் ஒரு புகைப்படம் கூட எடுத்துப் பதிவில் போடாமல் விட்டு விட்டீர்கள்?
உங்கள் முகத்தையும், உதயகுமார் முகத்தையும் பதிவில் பார்த்திருக்கிறேன்
சிவகுமாரைப் பார்க்கும் ஆவலோடுதான் பதிவிற்குள் நுழைந்தேன்.
ஏமாற்றமாகிவிட்டது!!!!!!!

சிறில் அலெக்ஸ் said...

//Cryil, I didn't have 50 cents for the toll :-). But I saw your car when you taking the Buckley Rd exit.//
I've got I'pass. How did you manage?

Udhayakumar said...

//உதய், என்னப்பா இது? எனக்குத் தெரியாம ஏதாவது மாறிட்டீங்களா?!
இப்போ தான் உங்களை வருத்தப்படாத வாலிபரா ஒத்துகிட்டிருக்காங்க, அதுக்குள்ள உங்க இமேஜை காலி செய்யும் முயற்சி ஒண்ணு நடக்குதே!! :)))) //

Pons, My alter ego went there. You know that I am having 3 personalities :-)

Udhayakumar said...

//I've got I'pass. How did you manage? //

Just noted the website (www.illinoistollway.com) and paid it through online next day.

சிறில் அலெக்ஸ் said...

//Just noted the website (www.illinoistollway.com) and paid it through online next day. //

oh good. If it was once in a while they usually don't care.

Anonymous said...

சுவாரசியமான சந்திப்பு தான் போல!!
மசாலா வடை போண்டாவையாச்சும் ஒரு படம் எடுத்திருக்கலாம்!!!

சிறில் அலெக்ஸ்