நடுவராய் மு. மேத்தா அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது எனக்கு தலைகால் புரியாத சந்தோஷமாயிருக்குதுங்க. ரெம்ப எளிமையான ஒரு கருத்த வச்சு எளிமையா எழுதின கவிதை. பொதுவா கவிதைன்னா நமக்கு அவ்வளவு தன் நம்பிக்கை கிடையாது. இனிமேல் முயல நம்பிக்கை வந்திருக்கு.
கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என் மீனவ உறவினர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆகாயம் ஒரு திடமான இடமென பேசினனர். அவருக்கு என்ன சொல்லி புரியவைப்பது? சில உண்மைகள் சிலருக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என விட்டுவிட்டேன். Ignorance is bliss. அறியாமை ஆனந்தமானது. உண்மை, உண்மை.
அந்த உரையாடலின் ஆதாரத்தில் பிறந்த இந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.
நம்ம வ. வா தமிழ் சங்கத்தாருக்கும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
'இன்னும் இருக்கிறது ஆகாயம்'
'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.
சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.
பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.
மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.
ஆகாயம் ஒரு மாயை.
மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
35 comments:
வாழ்த்துக்கள். கதைகள், கட்டுரைகளில் இருந்து இப்போது கவிதகளும் பரிசுகள் கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள்.
சிறில்
வாழ்த்துக்கள்!! கலக்குங்க..
வாழ்த்துக்கள் சிறில்.
இன்னொரு முறையாக என்னுடய வாழ்த்துக்கள் சிறில்!!!
:-)
வாழ்த்துகள் சிறில்.
வாழ்த்துக்கள் அலெக்ஸ் :)
வாழ்த்து தெரிவித்த, தெரிவிக்கும் நண்பர்களுக்கு நன்றி.
ரொம்ப நல்ல கவிதை.
நல்ல விஷயமும் கூட.
தொடர்ந்து எழுதுங்கள் சிறில்.
இதெல்லாம் அதா வரதுதான் இல்ல. ஹ்ம்.
வாழ்த்துக்கள் சிறில்..
எதார்த்தம் பரிசு பெற்று இருக்கிறது.
கவிதைக்கும் எனக்கும் காத தூரம்
( அவ்வளவாப் புரியாது)
அதான் இந்தப் பக்கம் வரலை. இப்பப் பரிசுன்னு தெரிஞ்சதும்....
சந்தோஷமாத்தான் இருக்கு.:-))))
வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துக்கள் சிறில்.
நன்றி பத்மா அர்விந்த்,
//இருந்து இப்போது கவிதகளும் பரிசுகள் கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள். //
உண்மை. முதல் பரிசில் இன்னொரு முதல் இருக்குதே. சந்தோஷம்.
சிவபாலன்,
//வாழ்த்துக்கள்!! கலக்குங்க..//
ம்ம் கலக்குவோம்.
இளா, நன்றி.
ராம்,
//இன்னொரு முறையாக என்னுடய வாழ்த்துக்கள் சிறில்!!! //
இன்னொரு முறை நன்றி ராம். :))
கைப்பு, நன்றிப்பூ.
நன்றி நிர்மல்.
நன்றி விக்கி.
கெட்டசெய்தி இந்தியா (??).
//ரொம்ப நல்ல கவிதை.
நல்ல விஷயமும் கூட.
தொடர்ந்து எழுதுங்கள் சிறில்.//
நன்றி. தொடர்ந்து எழுத உங்கள் ஊக்கம் நிச்சயம் உதவும்.
//இதெல்லாம் அதா வரதுதான் இல்ல. ஹ்ம்.//
அதா வர்ரதா? அதான் எப்படி வருதுன்னு எழுதியிருக்கேனே. :)
//வாழ்த்துக்கள் சிறில்..
எதார்த்தம் பரிசு பெற்று இருக்கிறது. //
நன்றி மணிப் ப்ரகாஷ்.
//கவிதைக்கும் எனக்கும் காத தூரம்
( அவ்வளவாப் புரியாது)
அதான் இந்தப் பக்கம் வரலை. இப்பப் பரிசுன்னு தெரிஞ்சதும்....
சந்தோஷமாத்தான் இருக்கு.:-))))
வாழ்த்து(க்)கள். //
நன்றி துளசியக்கா ரெம்ப நன்றி.
நன்றி இன்பா.
வாழ்த்துக்கள் மிஸ்டர் சிறில்!
எளிமையான அழகான கவிதைக்கு பாராட்டு! பரிசு பெற்றதுக்கு வாழ்த்து அலெக்ஸ்!
ஷைலஜா
கவிஞர்.சிறில்,
வாழ்த்துக்கள்!
அடுத்த வெற்றிக்கும் சேர்த்து தான் :-)
மு.மேத்தா சார் தேர்ந்தெடுத்தது, வெற்றிக்கு மேலும் சிறப்பு!
கவிஞருமான சிறிலுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி சுப்பையா சார்.
மிக்க நன்றி ஷைலஜா.
//கவிஞர்.சிறில்,
வாழ்த்துக்கள்!
அடுத்த வெற்றிக்கும் சேர்த்து தான் :-)
//
கண்ணபிரான்... வாழ்த்துக்கு நன்றிகள்.
//மு.மேத்தா சார் தேர்ந்தெடுத்தது, வெற்றிக்கு மேலும் சிறப்பு! //
ஆமா முற்றிலும் உண்மை,
கௌதம்,
ரெம்ப நன்றிங்க.
வாழ்த்துகள் சிறில். கவிதை நன்றாக இருக்கிறது. பரிசு வியப்பானதல்ல. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
கவிதை மிக நன்று....
படித்து முடித்த பின்னும் மனதில்
இன்னும் இருக்கிறது கவிதை...
வாழ்த்துக்கள் சிறில்
//வாழ்த்துகள் சிறில். கவிதை நன்றாக இருக்கிறது. பரிசு வியப்பானதல்ல. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.//
நன்றி ராகவன். ரெம்ப நன்றி.
//கவிதை மிக நன்று....
படித்து முடித்த பின்னும் மனதில்
இன்னும் இருக்கிறது கவிதை...
வாழ்த்துக்கள் சிறில் //
ரெம்ப நன்றி சாத்வீகன். கவித்துவமாக பின்னூட்டம் போட்டிருக்கீங்க. நன்றி.
வாழ்த்துக்கள் சிறில்.
நன்றி சுதர்சன் கோபால்.
வாழ்த்துக்கள் சிறில்
Thanks JTP
வாழ்த்துக்கள்
எனக்கென்னவோ இதுல மனசத் தொடற மாதிரி எந்த வரியும் கவித்துவமா தெரியல ;( மன்னிச்சுக்கங்க..
ரவி,
கருத்துக்கு நன்றி. உண்மையச் சொன்னா நானதிகம் கவிதைகள் படிச்சதுமில்ல எழுதினதுமில்ல.
அதனால எனது கவிதையையே என்னால மட்திப்பிட இயலுவதில்லை.
உண்மைங்க.
All the best cyril alex.I am very happy for your achievement.well done.
Thanks Selvan.
Just saw the comment.
:(
:)
Post a Comment