.

Thursday, November 02, 2006

சொர்க்கம் இலவசம்

செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். 'சித்ரகுப்தன் காலிங்' கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படத்தோடு சேதி சொன்னது செல்போன். 'காலையிலேயா?' பீட்டர் முணுமுணுத்தார்.

நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு.

பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என மெயின்ப்ஃரேம்கள் எப்பவுமே கூட்டல் கழித்தல் மட்டுமே போட்டுக்கோண்டிருந்தன. ஓயாது டெலிஃபோன் மணி அடிக்கும் வேண்டுதல்களுக்கான கால் செண்டரும், வி எம் எஸ் (விதி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) நிர்வகிக்கும் குழுவும் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.

கடவுளர்களால் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே கருத்துப் பரிமாற முடியுமென்றாலும் யார் யாரோடு பேசுகிறார்கள் என கண்டுபிடிக்க இயலாமல் போனதால் செல்ஃபோன் இண்டர்நெட்ட் என தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

சுவர்க்கம்னு ஒத்தையா சொல்றதவிட சுவர்க்கங்கள்னு சொல்றதுதான் சரி. மதங்கள் ஒவ்வொன்றுக்குமாய் பல சுவர்க்கங்கள் இருக்கின்றன. சுவர்க்கங்களுக்கிடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளும் கூட்டு முயற்சிகளும் பிரச்சனைகளைதல்களும் நடைபெறும்.

பீட்டர் கிறித்துவ மோட்சத்தின் வாசலை நிர்வகிப்பவர். யாருக்கு மோட்சம் அளிப்பது யாரை லூசிபரிடம் அனுப்புவது என்பதை அவர்தான் நிர்ணயிப்பார்.

இந்துமதத்தின் எமலோக எம்ப்ளாயீஸ் எல்லோருக்கும் பரிட்சயமானவர்கள்.

அன்று காலையில் மோட்சத்திலிருக்கும் புனித பீட்டருக்கு எமலோகத்தின் சி. குப்தனிடமிருந்து செ. போனில் தொ. பேசி அழைப்பு வந்திருந்தது.

"ஹலோ பீட்டர் ஹியர். ஹூ இஸ் தெயர்?", பீட்டர் சித்ரகுப்தன் எனத் தெரிந்தும் தன் வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் ராசி அப்படி.

"யோவ் பீட்டரு. பேருக்கேத்தாப்ல ஏன்யா காலையிலேயே பீட்டருடுற. நான் சித்ரகுப்தன் பேசுரேன்யா. உங்க செல்போன்ல என்ஃபோட்டோ வந்திருக்கணுமே. ரம்பா 25000 வருட ஜூபிளி பார்ட்டில எடுத்த ஃபோட்டோ. எப்படி? சிரிச்சுக்கிட்டேயிருப்பேனே? காலெர் ஐ.டி எல்லாம் உங்க மோட்சத்துல இல்லியா?"

"சித்ரகுப்தன்! நீங்களா? கண்ணாடி போடல அதான்...? என்ன காலையிலேயே எதாவது டேட்டா ப்ராப்ளமா?"

"டேட்டா ப்ராப்ளமெல்லாம் பாக்கத்தெரியாதா எனக்கு? எத்தன வருஷமா பாக்குறேன்? உம்ம வயசக் காட்டியும் என் அனுபவம் எவ்வளவு அதிகம்னு கணக்குப் போடவே நாலு நாள் ஆகும்."

"சரிதான்.. சொல்லுங்க என்ன விஷயம்.?"

"நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."

"எம்.டியா?"

"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."

"சரி என்ன மீட்டிங்?"

"வரவர பாவிங்க எண்ணிக்க அதிகமாயிடுச்சு. போனவாரம் 'பாவி20000', மெயின்ஃப்ரேம் க்ராஷ் ஆயிடுச்சு."

"ஹெவன் டுடேல சேதி பாத்தேன். நல்லவேள நாங்க பாவிகள் 30000க்கு அப்கிரேட் பண்ணிட்டோம்."

"நாங்க கொஞ்சம் பழசுதான் அத சொல்லிக் காமிக்கதீங்க பீட்டர்."

"ஐயையோ அப்படி இல்லீங்க.."

"பரவாயில்ல. சமாளிக்காதீங்க. அப்கிரேட் பண்ணுங்கோ, அப்கிரேட் பண்ணுங்க்கோன்னு கைலாசம் முதல் பாற்கடல் வரை எல்லா மீட்டிங்லேயும் பவர்பாயிண்ட் போட்டு சொல்லியாச்சு. எல்லாரும் பட்ஜட் கணக்கு சொல்றாங்களே தவிற யாரும் கேட்கிறதாயில்ல?"

"ஏழுமைலையான்கூடவா?"

"குபேரன் இண்ட்ரஸ்ட் ரேட்டை அதிகமாக்கினதுலேந்து அவருக்கு கொஞ்சம் தட்டுப்பாடாயிடுச்சு, ஏண்டா கடன வாங்கினோம்னு நொந்துக்கிறாரு."

"எம் டி மீட்டிங்ல என்ன நடந்துச்சு சொல்லுங்க?"

"நீங்க எங்க சொல்ல விடுறீங்க? அதாவது பாவிகள் எண்ணிக்கை அதிகமானதால நரகத்துல கூட்டம் அதிகமாகவும் சொர்க்கம் காலியாகவும் இருக்குது."

"இங்க மட்டும் என்ன வாழுது?"

"முழுசா கேளுங்க பீட்டர். எம் டி சொர்கத்துக்கு அதிகமா ஆள் சேர்க்க என்ன வழின்னு கேக்கிறாரு? "

"அத்தனபேரு இருக்காங்களே நீங்க ஏன் இதப்பத்தி வொரி பண்ணிக்கிறீங்க?"

"பீட்டர்ஜி அடிக்கடி நீங்க இப்டி வெறுப்பேத்துறீங்க. கணினி மயமாக்கல் வந்தபிறகு எவனுக்கு எப்ப வேலபோகும்னு தெரியல. அதனால இந்த பிரச்சனைக்கு ஒரு ஐடியாவ தந்தா எம் டி கிட்ட நல்ல பேர் கிடைக்குமேன்னு பாக்குறேன். எங்க டேட்டா எண்ட்ரி டீம் சார்புல இந்த ஐடியாவ எப்படியாவது தரணும்னு முடிவு பண்ணியிருக்கோம். "

"டேட்டா எண்ட்ரிக்கு டிமாண்ட் எப்பவுமே இருக்குமே?"

"போங்க பீட்டர். நரகத்துக்கு ஆஃப் ஷோர் பண்ணப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது."

"அடப் பாவமே! நல்லவங்களுக்கு காலமில்ல பாருங்க."

"என்ன ஜோக்கா?"

"இல்லங்க நிஜமாவே. நரகத்துக்கு பாவக்கணக்க ஆஃப்ஷோர் பண்றதால ஃப்ராடு அதிகமாகுமே?"

"அங்கயும் கூட்டம் அதிகமாயிடுச்சே அதனால அவங்க ஃப்ராடு செஞ்சாவாவது சொர்க்கத்துக்கு ஆள் வருவாங்கண்ணு நினைக்கிறாங்களாம்."

"இந்த ஐடியா நல்லாயிருக்கே."

"நான் ஐடியா கேட்டா நீங்க நம்ம வேல போற ஐடியாவ சொல்றீங்களே பீட்டர்."

"ஐடியாவா? எங்கிட்டையா? எங்களுக்கும் உங்க பிரச்சனதான். போன மீட்டிங்ல பிதா சுதன் பரிசுத்த ஆவீன்னு மூணுபேரும் மாறி மாறி கேள்வி கேட்டு தொலச்சிட்டாங்க. இதுல மூணுபேரும் ஒரே ஆளுங்கிறது வேற. யாரோ ஒருத்தன் நான் கேட்ல தூங்குரதாவும் அதனால குழப்பம் நடக்குதுன்னும் ஸ்பாம் மெயிலலடிச்சுட்டான். நான் என்ன செய்ய? வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."

"அட நம்ம பேரக் கெடுக்கிறதே இந்த சாமியாருங்கதானே. கம்ப்யூட்டருக்கு வைரஸ் மாதிரி நம்ம மதங்களுக்கு இந்த சாமியாருங்க. உள்ள இருந்துகிட்டே அழிச்சிடுறானுவ."

"அங்க முகமதுவும் இதத்தான் சொல்றாரு. ஜிகாதுன்னு இவர் ஒண்ணச் சொல்ல அவுங்க அத வச்சுகிட்டு போடுற ஆட்டத்துல அங்கயும் கூட்டம் கொறஞ்சு போயிடுச்சாம்."

"நாங்க தளர்த்தாத சட்டமில்ல கோடுக்காத சலுக இல்ல இருந்தாலும் கூட்டம் வரவே மாட்டேங்குது பீட்டர். இப்ப பாருங்க முன்னாலெல்லாம் பெருநாள் திருநாள்னா கோயிலுக்குப் போகணும்னு இருந்துச்சு. இப்ப? கோவிலுக்குப் போனாதான் பக்தியான்னு கேக்குறாங்க. சரி கோயிலுக்கு போகாத, நல்லவனா இருன்னா கேக்குறானா?"

"சண்டே சர்ச்சுக்குப் போன்னு சட்டம் போட்டாலும் எங்க பசங்க வீட்ல சப்த சுரங்கள் பாத்துட்டு உக்காந்துர்றாங்க."


"நாங்ககூட ஸ்பெசல் இபஃக்ட்ல சீரியல் வழியாத்தான் மக்களப் போய் சேரமுடியுது. இருந்தலும் நீங்க கிரிஸ்டியன். மதத்த மார்கெட் பண்றதுல ஒங்கள விட்டா வேற யாரு இருக்க முடியும் சொல்லுங்க? சும்மா கடவுள் ஒரு விசிட் அடிச்சத வச்சே ஒரு டைட்டிலப் போட்டு மதத்த உருவாக்கி பெரிய மதமாக்கிட்டீங்க. இன்னைக்கும் மூல முடுக்கெல்லாம் ஒளிஞ்சிருக்குறவனயெல்லாம் பிடுச்சு தண்ணி தெளிச்சு மாத்திர்றீங்க. உங்களுக்கில்லாத ஐடியாவா? ப்ளீஸ் பீட்டர் ஒரே ஒரு ஐடியா. எனக்காக இல்லீன்னாலும் என் டேட்டா ப்ராசசிங் டீம் மக்காளுக்காகவாவது ஒரு ஐடியா குடுங்க பீட்டர்."

பீட்டர் வெண்ணிற தாடியை தடவிக் கொடுத்தபடியே யோசிக்க ஆரம்பித்தார்.

"என்ன பீட்டர்ஜீ. அமைதியாகிட்டீங்க."

"யோசிக்கிறேன் சித்ரகுப்த்தன்."

"சரி யோசிச்சு சொல்லுங்க."

"ஆமா. யோசிச்சு சாயங்காலத்துக்குள்ள மெயில் போடுறேன்."

"மெயிலா? வேணாம் பீட்டர். எங்க ஆபீஸ்லமெயில ஓப்பன் பண்ணி படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாரதர் டீம் இருக்குதே அவர் 'கலகம்' னு ஒரு ஸ்பைவேரத் தட்டி உட இப்ப மெயில் அனுப்பவே தயக்கமாயிருக்கு. இப்பவே ஒரு ஐடியா குடுத்தீங்கன்னா...?"

"சட்டுன்னு ஒரு ஐடியா தோணுது..."

"சொல்லுங்க பீட்டர்..."

........

சாயுங்காலம் எமதர்மனின் சபையில் நடந்த மீட்டிங்கில் சித்ரகுப்தன் பீட்டர் தந்த ஐடியாவை விவரித்துக்கொண்டிருந்தார்.

"இலவசத்தப்போல ஒரு மார்க்கெட்டிங் டேக்னிக்கே இல்ல. அதனால ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்."

67 comments:

கோவி.கண்ணன் [GK] said...

சிறில்..!
சீறிய சிந்தனையுடன் சிரிப்பு பதிவு !

போட்டியில் வெற்றி பெற்று மோட்சம் கிட்ட வாழ்த்துக்கள் !

நெல்லை சிவா said...

//ஒரு ஆத்மா மோட்சம் வந்தா இன்னொருவருக்கு மோட்சம் இலவசம்னு அறிவிப்போம்//

:)). வாழ்த்துக்கள்.

பொன்ஸ்~~Poorna said...

அலட்டலா வந்திருக்கு இந்த ஐடியா!!! சூப்ப்ப்ப்பர்..

ஆமாம், நாத்திகர்கள் எல்லாம் எங்கே போவாங்க? ஐ மீன், எந்த மதத்து சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவாங்க ? ;)

Dharumi said...

பின்னீட்டீங்க சிறில். ரொம்ப நல்லா இருக்கு.
//வர வர ஃபாதர், பிஷப் கூட பரலோகம் வரமாட்டேங்கிறாங்க."//
போப்..?

பொன்ஸ் கேட்டது மாதிரி நாங்கல்லாம் எங்க போறது? என் சாய்ஸ்ல விட்டா எங்க போகணும்னு தெரியும். ஆஹா...

ILA(a)இளா said...

நல்ல கதையமைப்பு சிறில். நல்ல கதையோட்டமும் கூட. போட்டிக்கான வாழ்த்துக்கள்

நிர்மல் said...

சிறில்,

நல்ல சிந்தனை.

கடைசில ஓருத்தர் மோட்சம் போனா இன்னோருத்தருக்கு இலவசம் திட்டத்தில
அந்த இன்னோருத்தர் யாருனு சொல்லவே இல்லியே.

சிறில் அலெக்ஸ் said...

கண்ணன்,
'சீறிய' சிந்தனைன்னு புது அடைமொழி சொல்லிட்டீங்க. சீறிப் பாஞ்சுட்டேனா?

பாராட்டுக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

நெல்லை சிவா.. நன்றி :))

சிறில் அலெக்ஸ் said...

//அலட்டலா வந்திருக்கு இந்த ஐடியா!!! சூப்ப்ப்ப்பர்..//

பொன்ஸ் தாங்ஸ்..உங்க கேள்விக்கு பதில் அடுத்த பின்னூட்டத்தில்

சிறில் அலெக்ஸ் said...

//பின்னீட்டீங்க சிறில். ரொம்ப நல்லா இருக்கு.//

தருமி சார். நன்றி. நேர்ல பாக்கும்போது திரும்பி நிக்கச்சொல்லிதான் உங்கள அடையாளம் சொல்லலாம்போல :)

நாத்திகர்கள் எங்க போனா என்னங்க? குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பாங்களோ? :)

சிறில் அலெக்ஸ் said...

இளா,
//நல்ல கதையமைப்பு சிறில். நல்ல கதையோட்டமும் கூட. போட்டிக்கான வாழ்த்துக்கள்//

ஏதோ குறை இருக்குன்னு நினைக்குறேன்.. கதையமைப்பு கதையோட்டம் தவிர நிறைய அம்சங்கள் இருக்குதே...

பாராட்டுக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

நிர்மல்,
//கடைசில ஓருத்தர் மோட்சம் போனா இன்னோருத்தருக்கு இலவசம் திட்டத்தில
அந்த இன்னோருத்தர் யாருனு சொல்லவே இல்லியே. //

இதெல்லாம் சொல்லணுமா.. சொர்க்கம் உங்கள் சாய்ஸ்.

போட்டியில வெற்றிபெற்றா பாகம் இரண்டு போடலாம்னு இருக்கேன். அங்க உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.

ஷைலஜா said...

வித்தியாசமான சிந்தனை சிறில் அலெக்ஸ்..இலவசம் பற்றி இப்படியெல்லாம் கூட எழுதமுடியுமா? க்ரேட்!
ஷைலஜா

SK said...

சிரிக்கச் சொல்லி சிந்திக்க வைத்த நல்ல போட்டிக்கதை!

இலவசமா கொடுத்தா அங்கேயும் 'மனக்கசப்பு' வந்துரப் போவுது!

நீதான் வரணும்னு நான் நினைக்க, இல்லை, இல்லை, நாந்தான் வருவேன்னு இன்னொருத்தர் அடம் பிடிக்க, கடைசில அந்த ரெண்டு பேரையும் கொலை பண்ணி சொர்கத்துக்கு அனுப்பிட்டு, ஹாய்யா நான் நரகத்துக்கு போயிருவேன்!!
:))

வாழ்த்துகள்!

ramachandranusha said...

சிறில் சூப்பர்.

இஸ்லாமியர்களின் சொர்க்கம் "சுவனம்" என்று நினைக்கிறேன். நரகம் நினைவில்லை.
தருமி ஐயா, பொன்ஸ்! அங்கங்க டிராஸ்பர் செய்வாங்க :-)
ஆனா நாத்திகவாதிகளுக்கு நரகம் கன்பார்ம்ட்டுன்னு சொல்லியிருக்காங்க
இப்ப ஒருத்தருக்கு இன்னொருவர் இலவசம் என்றால் யாரு கிட்டையாவாது துண்டு போட்டு வைக்கலாம் இல்லையா ;-)

கப்பி பய said...

கலக்கல் சிறில்..அசத்திட்டீங்க!

வாழ்த்துக்கள்!!

Boston Bala said...

படித்தேன்... மகிழ்ந்தேன் :)

கொஞ்சம் மெதுவான பிக்கப். சுவாரசியமான உரையாடல்கள்.

வெற்றி காண வாழ்த்து!

சிறில் அலெக்ஸ் said...

//வித்தியாசமான சிந்தனை சிறில் அலெக்ஸ்..இலவசம் பற்றி இப்படியெல்லாம் கூட எழுதமுடியுமா? க்ரேட்!
ஷைலஜா//

நன்றி ஷைலஜா. நீங்க சோகமா எழுதுனதுதாங்க அசத்தல்.

சிறில் அலெக்ஸ் said...

//சிரிக்கச் சொல்லி சிந்திக்க வைத்த நல்ல போட்டிக்கதை!

இலவசமா கொடுத்தா அங்கேயும் 'மனக்கசப்பு' வந்துரப் போவுது!

நீதான் வரணும்னு நான் நினைக்க, இல்லை, இல்லை, நாந்தான் வருவேன்னு இன்னொருத்தர் அடம் பிடிக்க, கடைசில அந்த ரெண்டு பேரையும் கொலை பண்ணி சொர்கத்துக்கு அனுப்பிட்டு, ஹாய்யா நான் நரகத்துக்கு போயிருவேன்!!//

அடடா.. இது நல்ல கோனமாயிருக்கே..

வாழ்த்துக்கு நன்றி SK.

G.Ragavan said...

:-)))))))))) சிறில்..சிறில்..சிறில்...இந்த வேளையில சிரிக்க வெக்கிறீங்களே...ராத்திரி பையன் தனியாச் சிரிக்கிறானேன்னு ஏதாவது நெனச்சிறப் போறாங்க.

நல்லா எழுதீருக்கீங்க சிறில். மிகவும் ரசித்தேன். இப்படி எழுதுவதால் புனிதம் ஒன்றும் கெட்டுப் போய்விடாது. மிக நல்ல முயற்சி.

ஒரு ஆத்மா வந்தா இன்னொன்னு இலவசம் சரி. லேசாச் சொல்லீட்டீங்க. ஆனா அதுக்குள்ள ஏதோ பெரிய தத்துவமே உக்காந்திருக்கிற மாதிரி இருக்கு. யோசிக்கிறேன். யோசிக்கிறேன். யோசிக்கிறேன். (எக்கோ)

சனியன் said...

அட அட... என்னமா சிந்திக்கறீங்க. நல்ல பதிவு. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

//சிறில் சூப்பர். //
ஆஹா ஒங்ககிட்ட ஒரு சூப்பர் வாங்கிட்டேன் பரவாயில்ல..

//
இஸ்லாமியர்களின் சொர்க்கம் "சுவனம்" என்று நினைக்கிறேன். நரகம் நினைவில்லை. //

தேடிப்பாக்கணும்னு நெனச்சேன் டைமில்லாததால உட்டுட்டேன் தகவலுக்கு நன்றி.

//தருமி ஐயா, பொன்ஸ்! அங்கங்க டிராஸ்பர் செய்வாங்க :-)
ஆனா நாத்திகவாதிகளுக்கு நரகம் கன்பார்ம்ட்டுன்னு சொல்லியிருக்காங்க
இப்ப ஒருத்தருக்கு இன்னொருவர் இலவசம் என்றால் யாரு கிட்டையாவாது துண்டு போட்டு வைக்கலாம் இல்லையா ;-) //

துண்டு போட்டு வைக்கிறது சூப்பர் ஐடியா.

ஜோ / Joe said...

வாவ்! சிறில்..உயர்தர நகைச்சுவை ,அற்புதமான கற்பனை வளம் .பின்னிட்டீங்க போங்க!

ஜோ / Joe said...

//பொன்ஸ் கேட்டது மாதிரி நாங்கல்லாம் எங்க போறது?//

தருமி,
கம்பெனி ஆரம்பிக்க சொல்லி பெரியாருக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கேன் !

ஆன்லைன் ஆவிகள் said...

சொர்க்கத்துக்கே ஆஃபரா!
பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லா இருக்கு!

(அது சரி! அந்த ஆஃபர்லயும் முறைகேடுகள் நடக்குதாமே!, உண்மையாவா?)

நல்ல கான்செப்ட், வாழ்த்துக்கள்!

Dharumi said...

நாத்திகர்கள் எங்க போனா என்னங்க? குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பாங்களோ? :)//

no chance. நாங்க எங்க இஷ்டத்துக்கு செலக்ட் பண்ணிக்குவோம்.

ஜோ,
பெரியாரை counsellor ஆகப் போட்டுருவோம். பீட்டர்,சித்ரகுப்தன் ரேஞ்சுக்கு கொண்டு போயிடவேண்டியதுதான்

சிறில், இது போட்டிக்கு என்று முதலில் தெரியாது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்

TAMIZI said...

//நேத்து எம்.டி மீட்டிங் வச்சாரு.."

"எம்.டியா?"

"ஆமா இப்ப நாங்க எம Daர்மர எம் டின்னு தான் கூப்புடுறோம்."//

ஏங்க, இது உங்க M.D. க்கு இது தெரியுமா?

நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.

சிறில் அலெக்ஸ் said...

கப்பி பய நன்றிகள்.

சிறில் அலெக்ஸ் said...

பாபா,
மகிழ்ந்தீர்களா? மகிழ்ந்தேன்.

முதல் பத்தில ஆர்வத்த தூண்டிட்டு கொஞ்சம் ஸ்லோவா போயிருகேன். உண்மையச் சொன்னா ரெம்ப குறைந்த நேரத்துல எழுதினது இது ரெம்ப யோசிக்காம...

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஜீரா
//இப்படி எழுதுவதால் புனிதம் ஒன்றும் கெட்டுப் போய்விடாது. //
இது வேற சிக்கல்ல மாட்டி விட்ருவீங்க போலிருக்கே...


//ஒரு ஆத்மா வந்தா இன்னொன்னு இலவசம் சரி. லேசாச் சொல்லீட்டீங்க. ஆனா அதுக்குள்ள ஏதோ பெரிய தத்துவமே உக்காந்திருக்கிற மாதிரி இருக்கு. யோசிக்கிறேன். யோசிக்கிறேன். யோசிக்கிறேன். (எக்கோ) //

சத்தியமா இல்லீங்கோ. ஏதாவது யோசிச்சா சொல்லுங்கோ சொல்லுங்கோ சொல்லுங்கோ.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//வாவ்! சிறில்..உயர்தர நகைச்சுவை ,அற்புதமான கற்பனை வளம் .பின்னிட்டீங்க போங்க! //

நன்றி ஜோ. ரெம்ப நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஆவி அண்ணாச்சி உங்களுக்கு தெரியாததா சொர்க்கம் நரகமெல்லாம் அத்துப்படியாயிருக்குமே..இலவசமா ஆவி தங்காச்சிய கூட்டிட்டு போவீங்களா?

பாராட்டுக்கு நன்றி

சிறில் அலெக்ஸ் said...

தருமி,
மீண்டும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.

பத்மா அர்விந்த் said...

உரையாடல்கள் நன்றாக வந்திருக்கிறது. வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்

Sivabalan said...

சிறில்

நல்லாயிருக்குங்க..

வெற்றி பெற வாழ்த்துக்கள்

PRABHU RAJADURAI said...

very interesting concept...my best wishes!

சிறில் அலெக்ஸ் said...

நன்றிங்க பத்மா அரவிந்த்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சிவபாலன். மறக்காம ஓட்டப்போடுங்க :)

சிறில் அலெக்ஸ் said...

Thanks you Prabhu Rajadurai sir. Nice to get a feedback from you.
Glad you enjoyed.

Hariharan # 26491540 said...

இலவச ஆத்மாவாகிய நான் மிக மகிழ்கிறேன் இந்த ஸ்கீமில் நான் ஒர்க் அவுட் ஆகிடுவேன்னு!

நல்ல கற்பனையுடனான எழுத்து. வாழ்த்துக்கள்!

பினாத்தல் சுரேஷ் said...

அருமையான காமெடி சிறில்.

வெற்றிக்கு உத்தரவாதம் நான் தருகிறேன்;-) வெறும் வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போக மாட்டேன்;-)

லக்கிலுக் said...

தலைப்பு கொடுத்தபோது ரொம்ப யோசிச்சேன். இப்போ சந்தோஷமா இருக்கு. இந்த மாதப் போட்டிக்கு வரும் படைப்புகள் நல்ல தரமாவே இருக்கு.

நல்ல படைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

சிறில் அலெக்ஸ் said...

//இலவச ஆத்மாவாகிய நான் மிக மகிழ்கிறேன் இந்த ஸ்கீமில் நான் ஒர்க் அவுட் ஆகிடுவேன்னு!

நல்ல கற்பனையுடனான எழுத்து. வாழ்த்துக்கள்! //

ஆஹா.. துண்டு போட ஆரம்பிச்சிட்டீங்களா.
நன்றி ஹரிஹரன்.

சிந்தாநதி said...

http://valai.blogspirit.com/archive/2006/11/03/விமர்சனங்கள்-இலவசம்.html

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சுரேஷ். நீங்க சொல்லிட்டீங்கல்ல..பின்னூட்டங்களில் கிடைத்த பாராட்டே வெற்றி பெற்ற மாதிரிதான் இருக்குது.

நம்ம மக்கள குறைத்து எடைபோட முடியாது. நல்ல பதிவுகள் இன்னும் வரும் .. பார்க்கலாம்.

சிறில் அலெக்ஸ் said...

லக்கிலுக்.
நல்ல தலைப்பு. வித்தியாசமா ஏதாவது எழுதணும்னு பாத்தேன். ஐடியா வந்துச்சு.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

சிந்தாநதி,
விமர்சனத்துக்கு நன்றி.

ஓகை said...

வித்தியாசமான சிந்தனை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Kowsalya said...

ரொம்ப நல்லா இருக்குங்க. கன்டிப்பா என் vote உங்களுக்கு தான்

செந்தழல் ரவி said...

விதி மானேஜ்மண்ட் சிஸ்டம், எமன் எம்.டியானது எல்லாம் சிறந்த கிரியேட்டிவிட்டி...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

சிறில் அலெக்ஸ் said...

//வித்தியாசமான சிந்தனை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்//

நன்றி ஓகை. ஓட்டுப் போட மறந்துடாதீங்க... ஹி ஹி (அரசியல்வாதி மாதிரி கற்பனை செய்யவும்)

சிறில் அலெக்ஸ் said...

//ரொம்ப நல்லா இருக்குங்க. கன்டிப்பா என் vote உங்களுக்கு தான் //

கௌசல்யா.. ரெம்ப நன்றிங்க.. தரமான மற்றவைக்கும் போடுங்க..

:)

சிறில் அலெக்ஸ் said...

//விதி மானேஜ்மண்ட் சிஸ்டம், எமன் எம்.டியானது எல்லாம் சிறந்த கிரியேட்டிவிட்டி...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் //

நன்றி செந்தழல் ரவி.

கோவி.கண்ணன் [GK] said...

சிறில்,
போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் !

Sivabalan said...

சிறில்,

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!

அருட்பெருங்கோ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!

சரவ். said...

நல்ல கதை சிறில். வாழ்த்துக்கள்.

Udhayakumar said...

kalakkal...

ILA(a)இளா said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!

ராசுக்குட்டி said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சிறில்,
தொடர்ந்து தரமான படைப்புகளையே தந்து வருகிறீர்கள்... வாழ்த்துக்கள்

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

மா சிவகுமார் said...

சிரில் அலெக்ஸ்,

வேலையில் நல்லா மூழ்கி விட்டீங்களோ? அப்படியே படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். சுவையான, நடைமுறை வாசம் வீசும் உரையாடல் அமைப்பு. முன்பே படித்து வாக்களிக்காவிட்டாலும், வெற்றி பெற்ற பிறகு, படித்து ரசித்து மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

சிறில் அலெக்ஸ் said...

வேலை கொஞ்சம் அதிகம்தான் மா.சி.

வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி.

SK said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் !!

:))

சிறில் அலெக்ஸ் said...

நன்றி SK.

Anonymous said...

வித்தியாசமாக, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஜெய. சந்திரசேகரன்.

சிறில் அலெக்ஸ்