.

Tuesday, December 26, 2006

(வாள்) நட்சத்திரம்

போர்வாள்
அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது எனப்பாடிய பாட்டி இன்றிருந்தால் போர், கலகம் இல்லாத இடத்தில் பிறப்பதரிதுன்னு சொல்வாங்களோ என்னவோ? போர் பூமியில் வாழும் சாமான்யர்களை எண்ணிப்பார்க்கவைத்தது மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்'.

அமுதா, போர் காரணமாய் புலம் பெயர்ந்து, தன் உறவுகளையும், உணர்வுகளையும் பிறந்தமண்ணில் புதைத்துவிட்டு எங்கோ அடைக்கலம்புகும் ஆயிரக்கணக்கானோரின் பிரதிநிதியாகத் தெரிகிறாள். அமுதாவுக்கு கிடைத்ததுபோல போகும் இடத்தில் எத்தனை வசதிகள் வந்தபோதும் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் உணர்வுகளை எவராலும் தொலைக்க முடிவதில்லை.

புலம் பெயர்ந்தவர்களின் ஏக்கமயமான துயரம் ஒருபக்கமிருக்க போர்க்களங்களின் நடுவிலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்களின் சோகம் அவர்களின் சந்ததிகளின் மனதில் கண்ணீர் வெடிகளாக விதைக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.

கொள்கை ரீதியிலான போராட்டங்கள் முதிர்ந்து ஆயுதப் போராட்டங்களாக உருப்பெறுவது நிச்சயம் ஒரு குறுகிய வட்டத்துள் நடக்கும் விஷயமல்ல. Lord of the war எனும் திரைப்படம் ஆயுத வியாபாரி ஒருவனின் வாழ்வைச் சொல்கிறது. ஆயுதங்களை கொத்தவால்சாவடி தக்காளிபோல விலைபேசி விற்கிறான் அவன். "உலகில் 11பேருக்கு ஒரு துப்பாக்கி உள்ளது, என் வேலை மீதியுள்ள 10பேர்கையிலும் எப்படி துப்பாக்கியைத் தருவது என்பதுதான்?" என்கிறான் நாயகன் எடுத்த எடுப்பிலேயே. அமைதி விரும்பிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நாடுகள் பல ஆயுத வியாபாரத்தில் அபார இலாபமூட்டுகின்றன. இவையே ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உறுப்பினர்களாகவும் செயல்படுகின்றன எனும் தகவலோடு முடிகின்றது படம்.

வசதியான தூரத்தில் நின்றுகொண்டு யார்மீதுவேண்டுமானாலும் கல்லெறியத் துணியும் என்னைப் போன்றவர்களால் தன் உடம்பை வெடிகுண்டாக்கித் தன் கொள்கைகளை வாழவைக்கத் துணியும் ஒரு போராளியின் மனதைப் புரிந்துகொள்ள இயல்வதில்லை. பல நேரங்களில் இந்த உயிர்சேதங்கள் சத்தியாகிரக முயற்சியில் நிகழ்ந்திருந்தால் உலகம் இவர்களைத் திரும்பிப் பார்த்திருக்குமோ என எண்ணத்தோன்றும்.
எனினும் நம் போராட்டமுறைகளை வரையறுப்பது நம் எதிரிகளே!

பதிவர்வாள்
தெலுங்கு எழுத்துருவைப் பார்த்திருப்பீர்கள். நடிகர் விவேக் சொல்வதைப்போல ஜிலேபியாகத்தான் அவை எனக்கு காட்சியளிக்கின்றன. தமிழில் அன்பு என்பதையே ஆங்கிலத்தில் Love என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். தமிழ் தெரியாத ஒருவருக்கு தமிழ் எழுத்து புரிவதில்லை, ஆங்கிலம் தெரியாதவருக்கு ஆங்கிலம் புரிவதில்லை (அட என்னையா சொல்ல வர்ற?). இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை அளிக்கின்றபோதும் நம் மூளையால் நமக்குத் தெரியாத ஒன்றை புரிந்துகொள்ள இயலவில்லை. (ரெம்ப சிம்பிள் லாஜிக்டா நட்சத்திரக் கொழுந்து).

அப்ப வலைப்பதிவுல மட்டும் ஏம்பா இப்டி அடுத்தவன போட்டுத் தாக்குறீங்க? எத்தனை முயன்றாலும் அடுத்தவரின் நிலையில் நின்று நம்மால் ஒருபோதும் சிந்திக்க இயல்வதில்லை. ஒருவரின் கொள்கைகள் நம்பிக்கைகள் குறைந்தபட்சமே அவரால் வகுக்கப் படுகின்றன பலது அவரவர்க்கு ஊட்டப்பட்டவையே. அதை யாராவது உங்களுக்கு ஊட்டியிருந்தால் நீங்களும் அவரைப்போல நிச்சயம் ஆகியிருப்பீர்கள் என்பதை நம்புங்கள்.

கருத்துக்கள், எதிர் கருத்துக்களை முன்வைக்கும்போது கருத்துக்களையே குறிவையுங்கள். உங்கள் கொள்கைகளை எடுத்துரைப்பதே முக்கியம் அடுத்தவரை தாக்குவது சிறந்த பதில் ஆகாது. உங்க கொள்கையின் மகத்துவத்தச் சொல்லணும்னா அதன்படி நடங்க. அதை மற்றவருக்குப் பிடிக்கும்படி செய்யுங்க. அடுத்தவங்களை குறைத்துப் பேசினால் உங்க கொள்கைகள் உயர்ந்து நிற்கும் என்பது உங்கள் கொள்கையின் வலிவின்மையையே காட்டும்.

பைபிளில் பேபலின் கோபுரம்பற்றிய ஒரு கதை உண்டு. உலக மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கோபுரத்தை கட்டி வானத்திலிருக்கும் கடவுளைச் சென்றடைந்துவிடலாம் என முயன்றுகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த கடவுள் மனிதர்களிடையே இனம் மொழி என வேற்றுமையை உண்டாக்கி அவர்களை பிரித்துவிட்டாராம். நம்மில் வேற்றுமைகளைக் களையக் களைய நாம் கடவுளர்கள் ஆகிவிடுவோமோ என்னவோ?

நினைவுப் பேரலைகள்
சுனாமி அழிவை வருத்ததுடன் நினைவுகூறும் நாள் இது. இரண்டு வருடங்கள் கழிந்தபின்னும் மனதில் நினவுப் பேரலைகள் இன்னும் வீசிக்கொண்டிருக்கின்றன. சுனாமியின் விளைவு ஓரிருவருடங்களில் தீர்வதல்ல, இன்னும் சில தலைமுறைகளை அந்த நினைவுகள் வாட்டும் என்பதில் ஐயமே இல்லை.

கடற்கரை ஓரங்களில் உருவெடுத்திருக்கும் ஆயிரமாயிரம் அனாதை இல்லங்களே இதற்குச் சான்று. இன்னும் தேவைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவ முன் வருவோம்.

இயற்கை மனிதர்களை அழிக்கலாம். மனிதத்தை?

38 comments:

Anonymous said...

அருமை சிறில்.

நாளைய தலைப்பு (வாழ்) நட்சத்திரமா?

Unknown said...

பார்டனர், நட்ச்சத்திர வாரம் வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

எங்கேயோ ஆரம்பித்து எப்படியோ முடித்திருந்தாலும் சொன்னவிசயம் நன்று என்பதால் போர் செய்யாமல் வால் நட்சத்திரத்தை விட்டுவிடுகிறேன்.
:))

கதிர் said...

முதலாவது சிந்திக்கவும், இரண்டாவது சிரிக்கவும்,மூன்றாவது நினைக்க வைத்த நல்ல பதிவு.

வெங்கட்ராமன் said...

/**********************
கருத்துக்கள், எதிர் கருத்துக்களை முன்வைக்கும்போது கருத்துக்களையே குறிவையுங்கள். உங்கள் கொள்கைகளை எடுத்துரைப்பதே முக்கியம் அடுத்தவரை தாக்குவது சிறந்த பதில் ஆகாது
**********************/

எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டிய, மிகச்சிறந்த வரிகள்.

(அடுத்தவர்களை தாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனத்தையே தாக்குவது வேதனை அளிக்கிறது)

வடுவூர் குமார் said...

சிறில்..
அடுத்தவங்களை குறைத்துப் பேசினால் உங்க கொள்கைகள் உயர்ந்து நிற்கும் என்பது உங்கள் கொள்கையின் வலிவின்மையையே காட்டும்.
இது சரியான பாயின்ட்
அருமை

Anonymous said...

நல்ல பதிவு. Lord of the war ஐ நினைக்கும்போதெல்லாம் அதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நம்ம எ.ஆர்.ரஹ்மானின் இசை தான் காதுக்குள் ஒலிக்கிறது.

G.Ragavan said...

சபாஷ். நல்ல கருத்துகள். முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. நட்சத்திரப் பதிவில் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

வேறுபாடுகளைக் களைவது கடினம். ஆனா வேறுபாடுகள் பாராட்டாமல் இருப்பது எளிது. அதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

ramachandranusha(உஷா) said...

சிறில் என்னுடைய இரண்டணா கருத்துக்கள்
போர் வாளுக்கும், பதிவர் வாள் கருத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருக்கிறது. வறுமை, போர் இவை எல்லாம் உலகம் இருக்கும்வரையில் தொடரும். அடுத்து, மனித குணங்கள். இவையும் அப்படியே. ஏதோ ஒன்று, பொறாமையோ, வயிற்றெரிச்சலோ
ஏதோ ஒன்று ஒருவரை இன்னொருவர் டிஸ்டர்ப் செய்கிறார். அதன் வெளிப்பாடே தனிப்பட்ட தாக்கலாய் வெளிவருகிறது. இவர்களுக்கு சரியான டிரிட்மெண்ட் அலட்சியப்படுத்துதலே! பதிலுக்கு பதில் என்று பேசிக்கொண்டு இருந்தால் அவர்களுக்கும்
நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுகிறது. வலைப்பதிவு மட்டுமல்ல குடும்ப, நட்பு வட்டத்தில், வேலை செய்யும் இடத்தில் கூட இத்தகைய பிரகஸ்பதிகளைப் பார்க்கலாமே :-)

VSK said...

விண்ணென்று கிளம்பி, ஒரு பெரிய அரைவட்டம் அடித்து, அப்படியே எரிதழலாய் விழுந்தது இந்த வாள் நட்சத்திரம்!!

பதியுமா நம் பதிவர் மனங்களில்!

???????????:(

வஜ்ரா said...

//
இதைப் பார்த்த கடவுள் மனிதர்களிடையே இனம் மொழி என வேற்றுமையை உண்டாக்கி அவர்களை பிரித்துவிட்டாராம். நம்மில் வேற்றுமைகளைக் களையக் களைய நாம் கடவுளர்கள் ஆகிவிடுவோமோ என்னவோ?
//

இல்லை என்பது என் கருத்து.

தாமஸ் ஜெஃப்பர்சன் பேசிய இந்த வரி தான் ஞாபகம் வருகின்றது.

Is uniformity attainable? Millions of innocent men, women and children since the introduction of Christianity, have been burnt, tortured, fined, imprisoned; yet we have not advanced one inch towards uniformity. What has been the effect of coercion? To make one half the world fools, and the other half hypocrites. To support rogeury and error all over the earth. - Thomas Jefferson, Notes on the State of Virginia (1781-1785)

இது கிருத்தவத்திற்கு மட்டும் பொருந்துவது அல்ல. நாஜிசம், இஸ்லாம், கம்யூனிசம் என்ற எல்லா இசத்திற்கும் இது பொருந்தும்.

சிறில் அலெக்ஸ் said...

//அருமை சிறில்.//
நன்றி இன்பா.

//நாளைய தலைப்பு (வாழ்) நட்சத்திரமா? //
அட எடுத்துக் குடுக்கிறீங்களே...
:)

சிறில் அலெக்ஸ் said...

//பார்டனர், நட்ச்சத்திர வாரம் வாழ்த்துக்கள். //

நன்றி பார்ட்னர் தேவ்.

சிறில் அலெக்ஸ் said...

//எங்கேயோ ஆரம்பித்து எப்படியோ முடித்திருந்தாலும் சொன்னவிசயம் நன்று என்பதால் போர் செய்யாமல் வால் நட்சத்திரத்தை விட்டுவிடுகிறேன்.
:))//

அடடா..சும்மா நெனச்சதச் சொல்லுங்க நமக்குள்ள என்ன இருக்கு..

:)

சிறில் அலெக்ஸ் said...

//முதலாவது சிந்திக்கவும், இரண்டாவது சிரிக்கவும்,மூன்றாவது நினைக்க வைத்த நல்ல பதிவு. //

எல்லாமே சிந்திக்க வைக்கும்னு எழுதினேனே.. :)

சிறில் அலெக்ஸ் said...

//(அடுத்தவர்களை தாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனத்தையே தாக்குவது வேதனை அளிக்கிறது) //

வருத்தத்தை பகிர்கிறேன்.

பாராட்டுக்கு நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//இது சரியான பாயின்ட்
அருமை //

நன்றி குமார்.

சிறில் அலெக்ஸ் said...

//நல்ல பதிவு. Lord of the war ஐ நினைக்கும்போதெல்லாம் அதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நம்ம எ.ஆர்.ரஹ்மானின் இசை தான் காதுக்குள் ஒலிக்கிறது. //

ஆமா சேவியர் நானும் முதல்ல கேட்டதும் அதிர்ச்சியாயிட்டேன் :) கலக்குறார் ரஹ்மான்.

பாம்பே தீம் ம்யூசிக் பயன்படுத்தியிருந்தாங்க.

சிறில் அலெக்ஸ் said...

//வேறுபாடுகளைக் களைவது கடினம். ஆனா வேறுபாடுகள் பாராட்டாமல் இருப்பது எளிது. அதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.//

அடடா.. இந்த வரிகளை பதிவுல சேர்த்திருக்கலாமே.

:)

பாராட்டுக்கு நன்றி ஜிரா.

சிறில் அலெக்ஸ் said...

//இவர்களுக்கு சரியான டிரிட்மெண்ட் அலட்சியப்படுத்துதலே//

ம்ம்ம் அதுவும் சரிதான்.
பகைவனையும் அன்பு செய்யுன்னு பர்த்டே பாய் சொல்லியிருக்காரே.

:)

சிறில் அலெக்ஸ் said...

//விண்ணென்று கிளம்பி, ஒரு பெரிய அரைவட்டம் அடித்து, அப்படியே எரிதழலாய் விழுந்தது இந்த வாள் நட்சத்திரம்!!

பதியுமா நம் பதிவர் மனங்களில்!

???????????:(

//
(குணா ஸ்டைலில்)
கவிதையாவே சொல்லிட்டீங்களா..
அப்ப நானும்..

மனதில் பதிய பதிக்கிறோம்
மலராய் பூப்பதும்
மடிந்துபோவதும்
விதையின் குணத்தினாலா
நிலத்தின் குணத்தினாலா?

இடையிடையே மானே தேனே எல்லாம் சேக்கக்கூடாது ஆமா.

சிறில் அலெக்ஸ் said...

வஜ்ரா,
சூப்பருங்க. எப்படி இப்படி ஆதாரங்களோடு/மேற்கோள்களோடு பேசுறீங்க.. ஆச்சர்யம்தான்.

Is uniformity attainable?
நான் சொல்லவேயில்லையே. Is 'heaven on earth' attainable? No. But don't we all try to make it?

இயலுமா இயலாதாங்கிறதப் பத்தி நான் பேசல. இயன்றவரை முயலலாம் என்பத சொல்றேன்.

ஒவ்வொருவரின் கொள்கையும் வேறுபட்டு நிற்பதில் தப்பேயில்ல ஆனா தன் கொள்கைதான் சிறந்ததுன்னு சொல்லிட்டு அடுத்தவன் கொள்கைய தாழ்வா நினைப்பது சரியில்லன்னு சொல்றேன்.

Did Christianity (Catholic church once) try to attempt Uniformity?
பெரிய கேள்விதான்.

குறைந்தபட்சம் இரண்டாம் வாட்டிக்கானுக்குப் பிறகு இது இல்லண்ணு தோணுது. லோக்கல் கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்திருக்கு.
இன்றைக்கு பொங்கலுக்கும் தீபாவளிக்கும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்படுது. இது கலாச்சார அழிவுன்னு சொன்னா எப்படி?

Uniformity எல்லா மட்டத்திலேயும் கிடைக்காது ஆனா ஒரு சில மட்டங்களில் நிச்சயம் இயலும். அடிப்படையில எல்லாரையும் சக மனிதனாய் கருதுவதில் மாபெரும் சமநிலையை பெறமுடிய்ம்னு நினைக்கிறேன்.

இது idealismதான். கனவுதான்.
கனவு காண்பது தப்பா?

BadNewsIndia said...

உங்களை போன்றே எல்லாரும் think பண்ணினா, பதிவுலகுமே சுபிட்சமா இருக்குமே சாமி.
ஆனா, எல்லா விரலும் ஒண்ணாவா இருக்கு?

நீங்க சொன்ன மாதிரி, எல்லாருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம்.
எல்லார் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
ஆனால், 'குழந்தைத்தனமாக' பதில் கருத்து அளிக்காமல், ஆற அமர யோசித்து, வாசிப்பவர் மனதுக்கும், கண்ணுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆரோக்கியமான எதிர் கருத்து அளித்தால் அனைவருக்கும் நலம்.

எங்காவது 'அசிங்க' பதிவுகள் கண்டால், இந்த பதிவை அங்கொரு லிங்காக சேர்த்து விடுங்கள். (கோதாவில் அப்படியே குதித்து referee ஆகி, சுத்தத்துக்கு வகை செய்யுங்கள்.). இதயே உங்கள் புத்தாண்டு resolution ஆக்குங்கள் :)

(திருவிளையாடல் நாரதரின் நாராயண நாராயண backgroundல கேக்குதா? ).

வஜ்ரா said...

//
ஒவ்வொருவரின் கொள்கையும் வேறுபட்டு நிற்பதில் தப்பேயில்ல ஆனா தன் கொள்கைதான் சிறந்ததுன்னு சொல்லிட்டு அடுத்தவன் கொள்கைய தாழ்வா நினைப்பது சரியில்லன்னு சொல்றேன்.
//

மிக்கச் சரி. இது எல்லா "மார்கத்திற்கும்" பொருந்தவேண்டும். அதுவே உண்மையான secular view.


//
குறைந்தபட்சம் இரண்டாம் வாட்டிக்கானுக்குப் பிறகு இது இல்லண்ணு தோணுது. லோக்கல் கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்திருக்கு.
இன்றைக்கு பொங்கலுக்கும் தீபாவளிக்கும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்படுது. இது கலாச்சார அழிவுன்னு சொன்னா எப்படி?
//

"தெரிந்து தெளிதல்" என்றால் அது தான். ஓரளவுக்குச் செய்கிறார்கள்.


இன்னும், வாதிகன், பௌத்தம், ஹிந்து மதங்களை, மதமாகவோ, அல்லது கடவுளை அடையும் மார்க்கமாகவோ ஏற்கவில்லை என்பது existential reality.

//
இது idealismதான். கனவுதான்.
கனவு காண்பது தப்பா?
//

தப்பே இல்ல.

Anonymous said...

தொடர்ந்து ஸிக்ஸரா அடிக்கிறீங்க. இதத்தான் நானும் சொல்லனும்னு நெனச்சேன். ஆனா பதிவில சொல்ற அளவுக்கு எனக்கு பக்குவமும், அனுபவமும் இல்லைங்கறதால அப்டீயே விட்டுட்டேன் :(....

VSK said...

//மனதில் பதிய பதிக்கிறோம்
மலராய் பூப்பதும்
மடிந்துபோவதும்
விதையின் குணத்தினாலா
நிலத்தின் குணத்தினாலா?

இடையிடையே மானே தேனே எல்லாம் சேக்கக்கூடாது ஆமா.//

இப்படியெல்லாம் சொன்னா எப்படி?!
:))

மனதில் பதிய "வீணே" பதிகிறோம்
"தேன்" மலராய்ப் பூப்பதும்,
கவரி"மானென" மடிந்து போவதும்,
விதையின் குணத்தினாலா?
நிலத்தின் வளத்தினாலா?

:))

ஜூட்!

Radha Sriram said...

cyril,

well written......ignorance about others' beliefs,thoughts,ideas and pain leads to intolerance.IF only we could just stop and think.....hmm

BTW Merry christmas...(today is boxing day??)



cheers
Radha

PRABHU RAJADURAI said...

"அப்ப வலைப்பதிவுல மட்டும் ஏம்பா இப்டி அடுத்தவன போட்டுத் தாக்குறீங்க? எத்தனை முயன்றாலும் அடுத்தவரின் நிலையில் நின்று நம்மால் ஒருபோதும் சிந்திக்க இயல்வதில்லை"

அப்ப சாப்பாட்டுல காரம் வேண்டாம்னு சொல்றீங்க...

சரிதான், அய்யன் கூட 'கனியிருக்க காய் கவர்ந்தற்று'னு சொல்லியிருக்காரே!

ஏதாவது மனவருத்தமான நிலைகளில்...அப்படியே ஜிவ்வென்று கிளம்பி ஒரு சாடிலைட் போல பூமியினை திரும்பி பார்ப்பதாக கற்பனை செய்யுங்கள். மனிதர்கள், அவர்களது வானுயர்ந்த கட்டிடங்கள், சண்டைகள், பேரழிவுகள் ஒன்றும் பெரிதாக தோன்றாது...

சிறில் அலெக்ஸ் said...

//அப்ப சாப்பாட்டுல காரம் வேண்டாம்னு சொல்றீங்க...//

ராஜதுரை சார்.. நான் அதிகமா காரம் சேத்துக்கிறதில்ல. வீணான வயித்தெரிச்சல். :)

//ஏதாவது மனவருத்தமான நிலைகளில்...அப்படியே ஜிவ்வென்று கிளம்பி ஒரு சாடிலைட் போல பூமியினை திரும்பி பார்ப்பதாக கற்பனை செய்யுங்கள். மனிதர்கள், அவர்களது வானுயர்ந்த கட்டிடங்கள், சண்டைகள், பேரழிவுகள் ஒன்றும் பெரிதாக தோன்றாது... //

உண்மை உண்மை.
மதன், ஜாதி பற்றிய கேள்வி ஒன்றுக்கு இதைப்போல அண்ட சராசரங்களில் மனிதன் எத்தனை சிறியவன், உலகமே எத்தனை சிறியதுன்னு நினச்சுபார்க்கச் சொல்லி பதிலளித்திருந்தார்.

:)

சிறில் அலெக்ஸ் said...

//cyril,

well written......ignorance about others' beliefs,thoughts,ideas and pain leads to intolerance.IF only we could just stop and think.....hmm

BTW Merry christmas...(today is boxing day??)



cheers
Radha //

Thanks for the wishes Radha. Don't know much about boxing day, but I don't see many people in office :)

தருமி said...

//தன் உடம்பை வெடிகுண்டாக்கித் தன் கொள்கைகளை வாழவைக்கத் துணியும் ஒரு போராளியின் மனதைப் புரிந்துகொள்ள இயல்வதில்லை.// ஒரு ஓசி விளம்பரம்: இதைக் கொஞ்சம் வாசித்துப்ப்பாருங்களேன்.

//இயற்கை மனிதர்களை அழிக்கலாம். மனிதத்தை?//
அப்புறம் நாமெல்லாம் எதுக்கு இருக்கிறோமாம் .. ?

Anonymous said...

இவ்வளவு அழகாக பதிவர் வட்டத்துக்கு அறிவுரை முடியுமா ?
சுப்பர் , ஃபன்டஸ்டிக், எக்ஸலன்ட் , பாலு..(சிறில்)

சிறில் அலெக்ஸ் said...

//இவ்வளவு அழகாக பதிவர் வட்டத்துக்கு அறிவுரை முடியுமா ?
சுப்பர் , ஃபன்டஸ்டிக், எக்ஸலன்ட் , பாலு..(சிறில்) //

நன்றி..

அதென்ன பாலு..(சிறில்) ?
புரியலியே... :)

சிறில் அலெக்ஸ் said...

தருமி,
படித்தேன். அங்கேயே பின்னூட்டம் இட்டுவிட்டேன்.

We can only wonder!
நாமும் அந்த நிலைக்குத் தள்ளப்படாமல் இருந்தால் நல்லதே..
:)

Anonymous said...

Super , Fantastic , Excellent ... Baalu ...

ஒரு கொற்வையா ... வந்துச்சு ...
இந்த டயாலாகை சுட்டது வரும் பாடலில் இருந்துதான் ..
http://mp-sundar.blogspot.com/2006/11/blog-post_13.html

Anonymous said...

"பைபிளில் பேபலின் கோபுரம்பற்றிய ஒரு கதை உண்டு. உலக மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கோபுரத்தை கட்டி வானத்திலிருக்கும் கடவுளைச் சென்றடைந்துவிடலாம் என முயன்றுகொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த கடவுள் மனிதர்களிடையே இனம் மொழி என வேற்றுமையை உண்டாக்கி அவர்களை பிரித்துவிட்டாராம். நம்மில் வேற்றுமைகளைக் களையக் களைய நாம் கடவுளர்கள் ஆகிவிடுவோமோ என்னவோ?"

இக்கதையின் மூலம் மூன்று முடிவுகள் கிடைக்கின்றன:

மனிதர்களை, கடவுள் என்ற உயர் நிலைக்குப் போக விடாமல் தடுத்தவர் விவிலியக் கடவுள்.

பிரித்தாளும் கொள்கைக்கு மூலகர்த்தாவே இந்த விவிலியப் பிதாதான்.

வேற்றுமைகளற்ற சமுதாயம் உருவாக்க முனைவது ஆபிரஹாமியக் கடவுளுக்கு எதிரானது.

சிறில் அலெக்ஸ் said...

அனானி கலக்கிட்டீங்க..
இப்படி யோசிச்சே உருப்படாமப் போறோம்.
ஆனா விதியாசமா யோசிக்கிறீங்களேன்னு ஒங்களுக்கு பாராட்டு.

:)

Anonymous said...

//
வேற்றுமைகளற்ற சமுதாயம் உருவாக்க முனைவது ஆபிரஹாமியக் கடவுளுக்கு எதிரானது.
//

ஆனால் ஒவ்வொரு ஆபிரஹாமிய மதமும் வேற்றுமைகளற்ற சமுதாயம் அமைக்க அறும்பாடு பட்டுவதேனோ ?

சிறில் அலெக்ஸ்