.

Friday, December 29, 2006

2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்

இதுக்கு முன்னால போட்ட இந்தப் பதிவ படிச்சிட்டீங்களா?

தமிழ் திரையுலகத்துக்கு இது பொற்காலம். 2007ல் வெளிவர(மாட்டாத) படங்கள் பற்றிய முன்னோட்டம்

நோ (Sக்கு எதிர்சொல்) ப்ரொடக்சன்ஸ் வழங்கும் 'நிழல்':
நிழல், ரெண்டு பணக்காராப் பசங்களோட கதை. அண்ணன், தம்பி, ரெண்டுபேர். ஒருத்தன் வாழ்க்கைய கொஞ்சமா எஞ்சாய் பண்றான் இன்னொருத்தன் ரெம்ப டூ மச்சா எஞ்சாய் பண்றான். அண்ணன் தியேட்டர் ஓணர். தம்பி இந்தியாவிலேயே பெரிய விளம்பரக்கம்பெனி வச்சிருக்காரு. ரெம்ப உல்லாசமான வாழ்க்கை. கடைசில யார் இதுல எயிட்ஸ் வராம சர்வைவ் ஆகிறாங்கண்றதுதான் கத.

டுபாக்கூர் ப்ரொடக்சன்சின் 'ரெண்டரை':
மூணு மாதவன், ஒருத்தன் வெட்டிப் பய, ஒருத்தர் குருடு, இன்னொருத்தர் அரை லூசு. படம் கலக்கல் காமெடியா வரப் போகுது, முக்காவாசி டையலாக் வடிவேலுக்குத்தான். பேசிக்கிட்டே இருக்காரு. 'எப்படித்தான் நம்மளவச்சி காமெடி பண்றாங்களோன்னு?' ஒரு டையலக்வேற.

கே. எஸ். சிரிக் குமாரின் 'புவியியல்' :
வரலாறு எடுத்தாச்சு அடுத்தது புவியியல்தானே? வழக்கமா வரக்கூடிய பணக்கார வீட்டு பின்னணி. கதை ரெண்டு வார்த்தையில சொல்லிடலாம். ஆனா திரைக்கதை? வார்த்தையில சொல்ல முடியாது. பூமி பிரச்சனை(ரேண்டே வார்த்தையில சொல்லிட்டேன்). பணக்கார அண்ணன் தம்பிங்க சொத்த பிரிக்கிறதுல நடக்குற சண்டைய மையமா வச்சி புவியியல். படத்துக்கு ஆங்கிலத்துல 'Bad Father'னூ பேரு.

பேக்கிரி :
விஜய் பேக்கிரி வச்சு நடத்துறவரா வர்றார். 'தமிழ் நாட்டு கேக்கத்தின்னா தாகம் தீந்து போகும்டா.. தலைவா உன் கேக்கத்தின்னா காகம் வெள்ளையாகும்டா' பாட்டுடன் எண்ட்றி தர்றார் விஜய். வழக்கமான தெலுங்கு ரீ மேக் கதைன்னாலும் அங்கங்கே மானே தேனே எல்லாம் சேர்த்திருக்காங்க.

திருவிளையாடல் ஆ! ரம்பம்:
வழக்கமான முடிச்சுகளுக்கு புதுப் புது ட்விஸ்ட் வச்சு வரக்கூடிய படம். இப்ப வந்த படமும் அதமாதிரிதானேன்னு நினச்சீங்கன்னா என் பொறுப்பில்ல. தனுஷ் புதுசா எதுவுமே பண்ணாத இன்னொரு படமா இது இருக்கும் எல்லாரும் பேசிக்கிறாங்க. ரஜினிகாந்தின் பழைய பாட்டு ஒண்ண ட்ரம்ஸ் பீட்டோட போட்டு தாக்கியிருக்காங்க. 'என் சோகக் கதையக் கேளு' ரஜினி பாட்டில்லையா?

F
ஈ இயக்குனர் எடுக்கும் அடுத்த படம். என்னங்க ஆங்கிலப் பெயர்னு கேட்டா? ஈக்கு அப்புறம் Fதானேங்கிறார் மனுசன். தமிழகத்துல பஸ்லயெல்லாம் 12B, 47Dன்னு வச்சிருக்காங்களேன்னு லாஜிக் வேற. ப்ரொட்யூசர் வரி விலக்கு கிடைக்காதேன்னு கவலைப்படுறதால படத்துக்கு 'உ'ன்னு பேர் வச்சாலும் வைப்பாங்க. F, சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருத்தர் வைரஸ் ஒன்ன டெவலப் பண்ணி வச்சிட்டு ஒலகத்துல உள்ள கம்ப்யூட்டரையெல்லாம்... என்னது? இந்தக் கத ஏற்கனவே தெரியுமா?

சீமானின் தங்கச்சி:
தம்பி படத்த அப்படியே உல்டா பண்ணி தங்கச்சின்னு எடுக்கிறார். ஹீரோயின் ஒரு தமிழ் கவிதாயிணி. வார்த்தைக்கு வார்த்தை ஆம்பிள கவிஞர்கள் பேரச்சொல்லி திட்டுறமாதிரி டையலாக். கவிதைகள்ள வரும் வார்த்தைகள சென்சார் போர்டுல கட் பண்ணச் சொன்னதால படத்துல 20 நிமிஷம் அமைதியாவே இருக்குமாம்.

கிளை நகரம்:
A true story. அண்மையில் சென்னைக்கு அருகில் உருவாக்கப்படப் போவதா இருந்த துணை நகரம் பற்றிய கதை. ஒரு பெரிய நடிகர் தன் வேலக்காரங்களுக்காக இது வராம தடுக்கிறார். அவருக்கு முடி முளைச்சதும் படப் பிடிப்பு ஆரம்பம்.

சீரக சிந்தாமணி:
விஷால் ரகுவரன் காம்பினேஷன் அடுத்தது தரப்போற அதிரடி படம். சிலப்பதிகாரம் சிவப்பதிகாரமானதப் போல சீவக சிந்தாமணிய சீரக சிந்தாமணின்னு மாத்திட்டாங்க. டிஸ்கோ பாடல்கள பத்திய ரிசர்ச் பண்ண விஷால் சென்னைக்கு வர்றாரு. அங்க ரகுவரன பாக்கிறார். என்னது? இந்தக் கதையும் உங்களுக்கு தெரியுமா?

அ, இ, ஆ, ஈ:
இது பார்ட்டிBun சாரோட படமுங்க. எதையாவது டிபரண்டா செய்யணும்னு நீங்க நினைபீங்க ஆன இவரு எல்லாத்தையுமே டிபரண்டா செய்ய நினைப்பார். ரெம்ப கிரியேட்டிவா எடுக்கப்பட்ட படம்(னு அவர் சொல்லிகிறாரு). படத்தோட துவக்கவிழாவில எல்லாரையும் தலைகீழா உக்காரச் சொல்லி மேடையயும் தலைகீழா போட்டு வச்சிருக்காரு. ஹீரோயின் உதட்டுல 'வருக'ன்னு எழுதிவச்சி இதுதான் 'அழைப்பு இதழ்னு' சொல்லியிருக்காரு Partyபன். இவருக்கு மட்டும் எப்டீங்க இப்டி தோணுது?

இன்னும் கமல் அதிபர் புஷ் வேடம் பூணும் 'புஷ்ஷாவதாரம்', ஆர்யா கூத்தடிக்கும் 'கொட்டாரம்', பாக்கியராஜ் இயக்கும்,'லாறிஜாதம்', சிம்புவின் 'ஜொள்ளவன்', பரத் நடிக்கும் 'தம்(Dhum) மகன்', 'சித்திரம் பேசாதடி', 'கிழக்கு கடற்கரை லாட்ஜ்' , 'அழகாய் இருக்கிறாய் அசிங்கமாய் பேசுறாய்' போன்ற படங்கள் வர இருக்கின்றன.

பார்க்கத் தவறுங்கள்.

ரெம்ப கடிச்சிட்டேனோ?

31 comments:

சிறில் அலெக்ஸ் said...

என்ன? ஒரு பின்னூட்டம்கூட வரவில்லையா?

ஆம் அரசே.

அந்த நட்சத்திரத்தை தூக்கிலுடுங்கள்.

உத்தரவு அரசே.

Anonymous said...

//ஹீரோயின் உதட்டுல 'வருக'ன்னு எழுதிவச்சி இதுதான் 'அழைப்பு இதழ்னு' சொல்லியிருக்காரு Partyபன்.//
Too gud...
Malli

Anonymous said...

:)) பதிவைப் படிச்சிட்டு சும்மாத் தான் போயிருப்பேன்.. ஆனால் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தான் சிரிப்பு தாங்கலை :)))))))))))))))

விழாக்கால நட்சத்திரத்துக்குத் தூக்கா!! :)) அதெப்படி :)

சிறில் அலெக்ஸ் said...

Too gud...
Malli

thank you :)

சிறில் அலெக்ஸ் said...

பொன்ஸ்,
எப்டியெல்லாம் உங்ககிட்டேர்ந்து பின்னூட்டம் வாங்கவேண்டியிருக்கு..

கஷ்டம்டா சாமி..
:)

யாரங்கே?

மன்னா?

யானைப்படை தளபதியின் பின்னூட்டத்தை 100 பின்னூட்டமாக கருதி தண்டனையை கேன்சல் பன்ணவும்.

Santhosh said...

அலெக்ஸ் கலக்கி எடுத்து இருக்கிங்க, பின்னூட்டம் தான் ஹைலைட் :)).. எப்படி எல்லாம் கைமைத்தனம் பண்றாங்கப்பா :))

பினாத்தல் சுரேஷ் said...

பதிவு நல்லாவே இருக்கு சிறில். அவசரப்பட்டுட்டீங்க (பின்னூட்டத்துக்கு).

வே வி, சிவாஜி எல்லாம் விட்டுட்டீங்க?

சிறில் அலெக்ஸ் said...

//அலெக்ஸ் கலக்கி எடுத்து இருக்கிங்க, பின்னூட்டம் தான் ஹைலைட் :)).. எப்படி எல்லாம் கைமைத்தனம் பண்றாங்கப்பா :))//

கயமைத்தனம் கண்ட மாமன்னர் வாழ்க வாழ்க.

சிறில் அலெக்ஸ் said...

//பதிவு நல்லாவே இருக்கு சிறில். அவசரப்பட்டுட்டீங்க (பின்னூட்டத்துக்கு).

பதிவு போட்டு ரெம்ப நேரமாச்சேன்னு பாத்தேன். :)
//வே வி, சிவாஜி எல்லாம் விட்டுட்டீங்க? //

ஆமா.. சிவாஜி யோசிச்சேன் பெருசா ஒண்ணும் தோணல. வே.வி மறந்துட்டேன்.

:)

சிறில் அலெக்ஸ் said...

சரண்ஜி ரெயின்போ காலனி..
பேர்ல ஒரு அனானியின் கமெண்ட்ஸ்..


எய்யா..சிறில் அலெக்ஸ் பிடியுமய்யா ஆயிரம் பொற்காசுகளை!

அபாரமய்ய்யா..உமது குறும்பு அருமையய்யா..எய்யா சிறில் அலெக்ஸ் பிடியும் ஆயிரம் பொற்காசு!இதெப்டி இருக்கு?

சிறில் அலெக்ஸ் said...

சரண்ஜி ...
ரெம்பவே நல்லா இருக்கு.

நாமக்கல் சிபி said...

அட்டகாசமா வந்திருக்குங்க... அதுவும் பாத்தியோட 'அழைப்பு இதழ்' ரொம்ப அருமைங்க...

SP.VR. SUBBIAH said...

"மன்னா!"
"என்ன?"
"நீங்கள் ஒன்றும் கவலைப் பட வேண்டாம்!"
"ஏன்?"
"சிங்கப்பூர் அரசர் கோவியார் அவர்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறோம் - அவர் தன் படை, பரிவரங்களூடன் புறப்பட்டு வருகிறார் - இனனி உங்களுக்குப் பின்னூட்டப் பஞ்சம் இருக்காது!
உங்களுடைய 2GB Mail Boxன் அளவை மட்டும் 4GB யாக மாற்றியமைக்க Google காரர்களுக்கு உத்தரவு இடுங்கள்!"

வினையூக்கி said...

//'அழகாய் இருக்கிறாய் அசிங்கமாய் பேசுறாய்' போன்ற படங்கள் வர இருக்கின்றன.

// :):):):):)

சிறில் அலெக்ஸ் said...

//அட்டகாசமா வந்திருக்குங்க... அதுவும் பாத்தியோட 'அழைப்பு இதழ்' ரொம்ப அருமைங்க... //

நன்றி வெட்டிப்பயல்.

:)

சிறில் அலெக்ஸ் said...

மன்னா?
என்னா?
சிங்கை மன்னரை இன்னும் காணோமே?


:)

சிறில் அலெக்ஸ் said...

வினையூக்கி _/\_

சிறில் அலெக்ஸ் said...

Test

nagoreismail said...

குறும்பான நகைச்சுவை பதிவு, அருமையாக உள்ளது -நாகூர் இஸ்மாயில்

கோவி.கண்ணன் [GK] said...

//அவர் தன் படை, பரிவரங்களூடன் புறப்பட்டு வருகிறார் - இனனி உங்களுக்குப் பின்னூட்டப் பஞ்சம் இருக்காது!
உங்களுடைய 2GB Mail Boxன் அளவை மட்டும் 4GB யாக மாற்றியமைக்க Google காரர்களுக்கு உத்தரவு இடுங்கள்!"//

சிறில் மற்றும் வாத்தியார் கவனத்துக்கு,

படைபரிவாரங்கெளுக்கெல்லாம் தொடர்ச்சியாக 4 நாள் விடுமுறை (சனி முதல் செவ்வாய்வரை)

முடிஞ்ச அளவு முயற்ச்சி பண்ணுவோம் !

:)))

ஓவர் டூ மா மன்னார் !
:))

ramachandranusha(உஷா) said...

சிறீல் சில சமயம் பதிவை விட பின்னுட்டங்கள் சூப்பராய் அமைந்துவிடுகின்றன :-)))))

சிறில் அலெக்ஸ் said...

//குறும்பான நகைச்சுவை பதிவு, அருமையாக உள்ளது -நாகூர் இஸ்மாயில் //

ரெம்ப நன்றி இஸ்மாயில்

சிறில் அலெக்ஸ் said...

GK,
முயற்சி உடையார் இகழ்ச்சி முதலியார்னு கேள்விப்பட்டதில்லையா..

சிஸ்கி: விளையாட்டாய் சொன்னதுங்க :)

விடுமுறைய நல்லா எஞ்சாய் பண்ணுங்க.
பதிவுகள் இங்அத்தானே இருக்கப்போவுது.

சிறில் அலெக்ஸ் said...

//சிறீல் சில சமயம் பதிவை விட பின்னுட்டங்கள் சூப்பராய் அமைந்துவிடுகின்றன :-))))) //\\

ஒரே கலுல ரெண்டு மாங்காவா?

:)

Boston Bala said...

எல்லாமே அருமை. 'பேக்கிரி' அருமையோ அருமை.

சிறில் அலெக்ஸ் said...

//எல்லாமே அருமை. 'பேக்கிரி' அருமையோ அருமை. //

நன்றி பாபா. தவறாம வந்து வாசிச்சு பின்னூட்டம் போட்டு கடமைய நிறைவேற்றியதுக்கு ரெம்ப நன்றி

:)

Boston Bala said...

---கடமைய நிறைவேற்றியதுக்கு---

வாக்களிப்பது ஜனநாயகப் பொறுமை ; )
பின்னூட்டுவது இணையகக் கடமை : P
நன்றி நவில்வது வலையுலக உரிமை : )

தருமி said...

ம்ம்..ம்.. எப்படித்தான் சிலருக்கு இப்படியெல்லாம் மண்டையில உதிக்குதோ.. ஒரே பொறாமையா இருக்கு :(

சிறில் அலெக்ஸ் said...

//ம்ம்..ம்.. எப்படித்தான் சிலருக்கு இப்படியெல்லாம் மண்டையில உதிக்குதோ.. ஒரே பொறாமையா இருக்கு :( //

அடடா நீங்கெல்லாம் பொறாமப் பட்டா எப்டி?

:)

ரெம்ப நன்றி.

சேதுக்கரசி said...

நமக்கு சினிமாத் துறையில் ஆர்வம் (கொஞ்சம்) கம்மி. ஆர்வம் கம்மின்னு பொய் சொல்லி என்னையே ஏமாத்திக்கிறதை விட ஞானம் கம்மின்னு தான் சொல்லணும், ஏன்னா அதான் உண்மை. இன்னிக்கு உங்க முதல் பின்னூட்டம் பார்த்துட்டு தான் முழுக்க வாசிச்சேன். சூப்பரா எழுதியிருக்கீங்க.

//திருவிளையாடல் ஆ! ரம்பம்:// -- GOOD
//ஹீரோயின் உதட்டுல 'வருக'ன்னு எழுதிவச்சி இதுதான் 'அழைப்பு இதழ்னு' சொல்லியிருக்காரு Partyபன்.// -- BETTER
//பார்க்கத் தவறுங்கள்// -- BEST

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப லேட்டா சொன்னாலும்....ரெம்ப நன்றி சேதுக்கரசி

சிறில் அலெக்ஸ்