.

Monday, February 19, 2007

கவி தந்த விதை -3: வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்.

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்.

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்.

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்.

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்.

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்.

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்.

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்.

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்.

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்.

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்.

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்.

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி.

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி.


விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்


இந்தப் பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்றிருந்தது. சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையிழந்த நண்பர் ஒருவரிடம் பேசும்போது உங்களுக்குப் பிடித்த பாடல் வரிகள் என்ன எனக் கேட்டேன். அவர் சொன்ன வரிகள் இவை. வைரமுத்துவின் வைர வரிகள். பாடலில் தொடர்ந்து வரும் எனக்குப் பிடித்த வரிகள்.

நீ
மல்லிப்பூவை
சூடிக்கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.

நீ
பட்டுப்புடவை
கட்டிக்கொண்டால்
பட்டுப் பூச்சிகள்
மோட்சம் பெறும்

Hats off தல.

4 comments:

கண்மணி/kanmani said...

முக்கியமான முதல் வரியை விட்டுட்டீங்களே அலெக்ஸ்..

'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே'

கல்லூரிப் பருவத்தில் என்னுடைய தேசியகீதம் இதுதான்.காதலின் ஆழம் கூறும் வரிகள்.

சிறில் அலெக்ஸ் said...

கண்மணி,
விட்டதக் கரெக்டா பிடிச்சிட்டீங்களே.
:))

அருமையான பாடல்.
இதே படத்துல (எங்க ஊர்ல எடுத்த படம்:)) காதல் ஓவியம்,புத்தம் புதுக் காலை.. எல்லாம் சூப்பர் மெலடிங்க.
பின்னூட்டத்துக்கு நன்றி.

Unknown said...

சிறில்,

கவி தந்த விதை அருமையாக வளர்கிறது!!!

/நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்./

ஒரு சந்தேகம் ...

எது அழகு? பிறை நிலாவா? பௌர்ணமியா?

சிறில் அலெக்ஸ் said...

அருட்பெருங்கோ,
கவிஞருக்கே உரிய சந்தேகம். பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மணம் உள்ளதா என்பதுபோல கேட்டிருக்கீங்க.. :))

Beauty is in the eys of the beholder. என்பதுபோல நிலவில் பிறையும் அழகாயிருக்கும் முழு நிலவும் அழகாயிருக்கும் நமது பார்வையில்தான் அது இருக்கும்.

/நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்./

இதில் நான் சொல்ல வருவது எப்படியெல்லாம் ...
1. நிலவு அவள் பேச்சை கேட்கும்
2. நிலவு பிறையாயிருப்பதில் அவளுக்கு என்ன? பௌர்ணமிக்கு அடுத்தது அவள்தான் அழகு போல..
3. அவள் பிறையை ரசிப்பவளாயிருக்கலாம்..

சரியா? நீங்க என்ன சொல்றீங்க?

சிறில் அலெக்ஸ்