துளசி தளம் துளசி அக்காவின் ஆசியுரை(மடல்)
தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி மாளாது. தீப்புண்ணுக்குக்கூடத் தேன் தடவினால் (அதுவும் மயிலிறகில் தொட்டு) சுகமா இருக்குமாம்!
ஆமா, ருசியை நினைச்சுப் பார்த்தாலே இனிக்கும் தேனைப் படிச்சுப் பார்த்தா எப்படி இருக்கும்?
நம்ம சிறில் அலெக்ஸ் எழுதுறதைப் படிச்சுப் பார்க்கற மாதிரித் தா( தே)ன் இருக்கும்!
முட்டம் பத்தி சிறில் எழுத ஆரம்பிச்சதுலே இருந்து அவரோட பரம ரசிகை ஆயிட்டேன். மீனவ நண்பர்களைப் பத்துன ஒவ்வொரு விவரமும் ஆச்சரியத்துடன் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அள்ளித்தெளிச்ச இயல்பான நகைச்சுவை.
//கருவாட்டுக்கு இடம் விட்டுவிட்டு ரோடு போட்டிருக்கலாமோ? //
//'மாப்பிளைக்கு முகத்துவேலை ஆரம்பிக்க இருப்பதால்... அழைக்கப்பட்ட நண்பர்களும் உற்றார் உறவினர்களும் உடனடியாக மணமகன் வீட்டிற்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'//
//ஏட்டுச் சுறாமீன் புட்டுக்குதவாது என்பது இவர்களின் வாதம்.//
//அந்த சக்கரத்தை காண்டுபிடித்தவனை மட்டும் அப்புறமா கவனிச்சுக்க வேண்டியதுதான்.//
கடற்கரையிலேயே (விளையாட்டு) மைதானங்கள், திரைப்படம் பார்க்கத் தியேட்டர்(??)ன்னுஜாலியாத்தான் இருக்கு.
இதுக்கப்புறம் அவர் 'அலைகள். பாறைகள், மணல்மேடுகள்'ன்னு மணற்புறத்தைவிட்டுப் போயிட்டாலும் எனக்கு இன்னும் மனசுலெ நிக்கறதென்னவோ 'முட்டம்'தான்.
வளர்ந்தாத்தானே அது வளர்ச்சி. அவரும் அப்படியே ரொம்ப மேலே போயிட்டார்.தேன்கூடு & தமிழோவியம் போட்டிகளில் பரிசுகள், அப்புறம் தமிழ்ச்சங்கக் கவிதைப்போட்டியில் பரிசுன்னு மனுஷர் எல்லாத்தையும் தானே வாங்கித் தள்ளிக்கிட்டு இருக்கார். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு இப்ப தமிழோவியம் ஆசிரியர் குழு அங்கம் வேற!
ஆனா..ச்சும்மா சொல்லக்கூடாது..மனுஷர் கதை அதுவும் உள்ட்டா செய்யும் கதைகளில் பிச்சு வாங்கறார்:-)))'குழந்தைசாமியாவது வெளியிடுவாரா? ' படிச்சீங்கதானே? :-)
இந்த இருநூத்தம்பது வயசுலே எட்டுப் பதிவுகளை வச்சுக்கிட்டு( ஒரு பதிவுக்கு முப்பது வயசுன்னா கணக்குசரியாவருது இல்லே? ) மேய்ய்சுக்கிட்டு இருக்காருன்னா பாருங்களேன்.
தேனில் (அட, தின்ற தேனில்) எந்தப் பக்கம் ருசி அதிகம்? எல்லாமேதான். இதென்ன கரும்பா,ஒவ்வோர் இடத்துலே ஒவ்வொரு ருசின்றதுக்கு?
தேனில் 200வது பதிவாம்! 'எண்ணி'க்கூடப் பார்க்கலையே! அவ்வளவும் தேனய்யா. தேன்.
இன்னும் மேன்மேலும் வளர, வாழ்கன்னு வாழ்த்தி, நம்ம 'ட்ரேடு மார்க்' ஆசியையும் சொல்லிக்கறேன்.
நல்லா இருங்க சிறில்.
============================
மிக்க நன்றி. நானும் முட்டத்தப்பத்தி எழுதினதுபோல இன்னும் எதையும் எழுதலைன்னு நினைக்கிறேன். நினைவுகள அசைபோடுறது ஆத்மார்த்தமான அனுபவம்.
நன்றி! நன்றி! நன்றி!.
உங்கள் விமர்சனங்களை அனுப்ப cvalex at yahoo . com
முந்தைய தேன்200.
Thursday, February 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
16 comments:
நீங்க 200 நான் 50! :))
வாழ்த்துக்கள் சிறில் அண்ணே!
அப்படியே 300, 400, 500 ன்னு போயிட்டே இருங்க!
தம்பி கவலப்படாதீங்க
இன்னும் நிறைய டைம் இருக்கு..
வாழ்த்துக்கு ரெம்ப நன்றி தம்பி.
பாசமா அண்ணன்னு கூப்புட்டதுக்கும் நன்றி.
:)
//பாசமா அண்ணன்னு கூப்புட்டதுக்கும் நன்றி//
ஆமாமாம். தம்பின்னு பேரு வச்சுக்கிட்டா எல்லாருக்கும் தம்பிதேன்.
இப்ப நான் எல்லாருக்கும் அக்காவாயிறலையா? அதுபோலத்தேன்.
எல்லாம் நம்ம வலைப்பதிவு குடும்பத்துலே சகஜமப்பா.
நம்ம யானைகளையும் கூட்டத்துலெ சேர்த்துக்கிட்ட 'பெரிய' மனசுக்கு
நன்றி சிறில்'தம்பி':-)
//எல்லாம் நம்ம வலைப்பதிவு குடும்பத்துலே சகஜமப்பா.//
இதுதான்.. அக்காண்றது.
//நம்ம யானைகளையும் கூட்டத்துலெ சேர்த்துக்கிட்ட 'பெரிய' மனசுக்கு
நன்றி சிறில்'தம்பி':-) //
வுட்ருவோமா?
:)
சிறில்,
அடடா, துளசியம்மாவின் ஆசி கிடைக்கப் பெற்றீர்களா?!
இதைத்தான் வசிட்டர் வாயாலேயே பாராட்டுக்கள் பெறுவது என்பது![சரியாகச் சொன்னேனா இந்த முதுமொழியை? ஏதோ ஆரைகுறையாக நினைவில் நிற்பதைச் சொன்னேன், தவறு இருப்பின் மன்னிக்கவும்]
ஐயையோ!!
நான் முட்டத்தை விட்டு விட்டேனே!
தேடிப்படித்துவிடுகிறேன்.
200 எல்லாம் ஒரு பிகரா?உங்களுக்கு அது ஒரு ஜுஜுபி.
தொடருங்கள்.
டீச்சரே பாஸ் மார்க் போட்ட நம்ம சிறிலுக்கு என் வாழ்த்துக்கள்.
பார்த்-தேன்
ரசித்-தேன்
பின்னூட்டத் துடித்-தேன்
பதிவில்-தேன்
என நான்
நினைத்-தேன்
அந்த மலைத்-தேன்
சுவையென
மலைத்-தேன்!
இருநூறு பெருநூறாகப் பெருகி
வாழி சிறில்! வாழ்த்துக்கள்!
//இந்த இருநூத்தம்பது வயசுலே எட்டுப் பதிவுகளை வச்சுக்கிட்டு//
அடடா....டீச்சர் கலக்கிட்டீங்க!
சிறிலார்க்கு அகவை இருநூத்தம்பது! என்று தனிப்பதிவு போட்டுவிடலாமா? :-)
KRS,
நீங்க சிறிலோட ப்ரொஃபைல் பார்க்கலையா? வயசு 250ன்னு போட்டுருக்கார்:-))))
இருநூறு பல்லாயிரமாய் பெருகி தேனாய் என்றென்றைக்கும் பாய வாழ்த்துகள் சிறில்!
டீச்சர் கிட்டேர்ந்து சர்டிபிகேட்.. நல்லாருக்கு.
கொத்தனார் சூப்பர் ஃபோட்டோ போட்டிருக்கீங்க..
யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?
சொ.செ.சூ வெச்சிக்கிற தயார் என்றால் நானும் ஒரு வாழ்த்துமடல் அனுப்புகிறேன் ;-)
ramachandranusha
சிறில் அண்ணே!
Double century போட்டாச்சு!!! கலக்குங்க கலக்குங்க கலக்கிக்கிட்டே இருங்க ..
என் மனமார்ந்த வாழ்த்துகள்..
துளசி மேடம்,
தேனின் சுவையை சுவை பட கூறியிருக்கிறீர்கள்!!
நன்றி!!
வாழ்த்துகள் சிறில்.
இப்படி ஏறத்தாழ தமிழ்மணத்துலே எல்லார்கிட்டேயும் விமர்சனம் வாங்கிப்போட்டா எப்படி?
சுரேஷ் நன்றி..
நீங்களும் அப்டியே ஒரு மயில் அனுப்பிடுங்க..
"200 பதிவுகள் விரைவில் போடுவது எப்படி?" இப்படி ஓசி பதிவு போட்டுத்தான்..
:)
நண்பர்களைக் கேட்டேன் தாராளமா அனுப்பினாங்க.
இந்த ஐடியாவக் குடுத்த பாபாவக் கேளுங்க.
:)
Post a Comment