தேவையானப் பொருட்கள்
மைதா-இரண்டு கோப்பை
கடலைப்பருப்பு- ஒன்னரை கோப்பை
வெல்லம்-ஒரு கோப்பை
தேங்காப்பூ-அரைக்கோப்பை
ஏலப்பொடி-கால் தேக்கரண்டி
மஞ்சத்தூள்-கால் தேக்கரண்டி
உப்புத்தூள்-கால்தேக்கரண்டி
எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
நெய்-கால்க்கோப்பை
செய்முறை
மைதாவில் உப்புத்தூள், மஞ்சத்தூளைப் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். பின்பு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சற்று தளர பிசைந்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து நீரை சொட்ட வடித்து விட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு உருக்கவும். அதில் அரைத்த கடலைபருப்பு, ஏலப்பொடி, மற்றும் தேங்காப்பூவையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பூரணம் நன்கு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.
பிறகு மைதாமாவிலிருந்து சிறிய எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.
பிறகு பூரணத்தை சிறிது எடுத்து அதன் நடுவில் வைத்து மூடி மீண்டும் கட்டையால் தேய்க்கவும். இதேப்போல் எல்லா மாவையும் செய்து வைக்கவும்.
பிறகு தோசைகல்லை காயவைத்து தயாரித்த போளிகளை ஒவ்வொன்றாக போட்டு சுற்றிலும் நெய்யை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.
தலைப்பை பார்த்துவிட்டு வேறெதாவது எண்ணத்தில் வந்தீர்களானல் மன்னிக்கவும். ப்ளீஸ், தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது என பின்னூட்டம் போடாதீங்க.
:)))))
குறிப்புக்கு நன்றி: அறுசுவை
Tuesday, February 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
13 comments:
ஏங்க இது 'போலி'யா 'போளி'யா?
போலி அசல் நெய்யினால் செய்யபடவேண்டுமா ?
:)
:-))))).....பரவா இல்லையே!!! ,,,not bad...
//ஏங்க இது 'போலி'யா 'போளி'யா? //
'போலி' எனக்கு ள வராது
//போலி அசல் நெய்யினால் செய்யபடவேண்டுமா ?//
:)
கலக்கிட்டீங்க
மங்கை,
நீங்க போலியச் சொல்றீங்களா போளியச் சொல்றீங்களா?
மணிகண்டன்
:)) போட மறந்துட்டேன்
நீங்க கேட்ட அப்புறம் தான் அதப்பத்தி யோசிச்சேன்...
சரி ரெண்டும் தான் 'நாட் பேட்'..:-))
இது நான் செய்த போலி தான் என்பதற்கு சாட்சியாக இதில் சிறிது பிய்த்து எனது பதிவிலும் போட்டுள்ளேன் :))
அலெக்ஸ் அவர்களே! தலைப்பு பாத்ததுமே இது ஏதோ கேலிக்கோ ஜாலிக்கோன்னு புரிஞ்சிபோனாலும் ரசிச்சது நிஜம் அதனால மத்த ஜோலிய விட்டு பதில் அளிக்க வந்தேன்!!!!
ஷைலஜா
மணிகண்டன்! போளி தான் சரி. போலி வேறு!
கோவிகண்ணன்! அசல் நெய்யிலயும் செய்யலாம் ரிஃபைண்ட் ஆயில்லயும் செய்யலாம். கொலஸ்ட்ரால் உள்ளவங்களுக்கு நெய்யை கடைசில கண்லகாட்லாம்! ஆறின போளில சூடா பால் ஊத்தியும் சாப்பிடலாம் அந்தப்பாலில் குங்குமப்பூ ஏலக்காய் பச்சைகற்பூரம் போட்டுவச்சா மணம் சுவை குணம்.. ஆஹா!
போலியை போளியாக்கிய தோழிக்கு நன்றி.
உப்புமா சங்கத்திலே நீங்களும் சேர்ந்தாச்சா?
சொல்லவே இல்லியே:-(
//போலி அசல் நெய்யினால் செய்யபடவேண்டுமா ?
:)//
:))))))))))
பாலச்சந்தர் பட கதாநாயகன் மாதிரி உங்களுக்கும் "ள" வராதா?
டிரை பண்ணுங்க. வீட்டுக்கார அம்மா வர இன்னும் ரெண்டு மாசமிருக்கு. அதுக்கிடையில பழகியிரலாம்.
Post a Comment