.

Friday, February 16, 2007

இது புதுசுங்க

இரு புதிய முயற்சிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

வலைப்பதிவுகளில் பலவிதமான எழுத்துக்களையும் இன்று காண முடிகிறது. நாம் தமிழில் ஒரு மாற்று ஊடகத்தை செவ்வனே உருவாக்கியிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'சற்றுமுன்...'
'சற்றுமுன்...' என்னும் குழு உடைபடும் செய்திகளை (Breaking news)உடனுக்குடன் தெரிவிக்க ஏற்படுத்தப்படவுள்ளது.
தொலைக்காட்சிகளில் ஓடும் 'சற்றுமுன் வந்த செய்திகள்' போல. கிழக்கே ஆஸ்த்ரேலியா துவங்கி மேற்கே அமெரிக்கா வரை இருக்கும் பதிவர்களை உள்ளடக்கிய குழு பதிவு 'சற்றுமுன்...' இதன்மூலம் ஒரு 24 மணிநேர செய்தித் தளமாக உருவாகும்.

தமிழகம், இந்தியா துவங்கி உலகச் செய்திகள் வரைக்கும் முக்கியமான செய்திகளை தரவிருக்கிறது 'சற்றுமுன்...' உங்கள் பங்குக்கு செய்திகளைத் தர விரும்பினால் பின்னூட்டங்கள் வாயிலாகவோ satrumun @ gmail . com ற்கு மெயில் செய்வதன் மூலமாகவோ தெரிவிக்கலாம். செய்திகளுக்கு தொடர்புள்ள சுட்டிகளைத் தருவது செய்தியின் நம்பகத்திற்கு வகைசேர்க்கும்.

வலைப்பதிவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகளையும் தர இருக்கிறோம். குழுவில் சேர மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சலுங்கள். 'சற்றுமுன்...'

'மாற்று'

இரண்டாவது முயற்சி ஒரு 'மாற்று' முயற்சி. தேனில் ப(பி)டித்தது எனும் பகுதியை வலப்பக்கம் பார்த்திருப்பீர்கள். நான் படிக்கும் பதிவுகளில் பிடித்த சில பதிவுகளை நீங்களும் படிக்கத் தருகிறேன். இந்த முயற்சியை சில பதிவர்கள் சேர்ந்து செய்யப் போகிறார்கள். மாற்று எனும் தளம் இதற்காக செயல்பட ஆரம்பித்துள்ளது.

தரமான பதிவுகளை, சார்புநிலை கருத்துகளையோ தனி மனித தாக்குதல்களையோ கொள்ளாத பதிவுகளை, வெட்டி ஒட்டாமல் தன் முயற்சியில் எழுதப்பட்ட பதிவுகளை தெரிந்து தர இருக்கிறார்கள் 'மாற்று' குழுவினர்.

வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல நேரங்களில் பதிவுகளை தரம்பிரித்து படிப்பது கடினமானது. மாற்று போன்ற சேவை இந்தக் குறையை தவிர்க்கிறது.

சிறப்பான முயற்சி. நானும் இணைந்துள்ளேன் மாற்று குழுவில்.

படித்து பயன்பெறுங்கள்.

மேலுள்ள சேவைகள் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்ல தவறாதீர்கள்.

மாற்று குழுவில் சேர.

17 comments:

- யெஸ்.பாலபாரதி said...

ம்ம்.. அடுத்த கட்டத்துக்கு நகருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
:-)

Unknown said...

!!!

புதிய முயற்சிகளுக்கு ஒரு ஓ!

Anonymous said...

வெட்டி ஒட்டும் சற்று முன்னுக்கு தானாக எழுதப்படும் மாற்றா? ;-)
24 மணிநேரம் என்றால், இது தமிழ்மணத்திலே முன்னூட்டக்கயமையாகாதா? ;-)

செல்லி said...

மாற்று எனும் தளத்தில் எப்படிச் சேருவது?

சிறில் அலெக்ஸ் said...

//ம்ம்.. அடுத்த கட்டத்துக்கு நகருகிறீர்கள். வாழ்த்துக்கள்.//

நன்றி பாலபாரதி. உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சேர்ந்து போகலாம் வாங்க அடுத்த கட்டத்துக்கு...

சிறில் அலெக்ஸ் said...

நன்றி அருட்பெருங்கோ.

சிறில் அலெக்ஸ் said...

செல்லி.. பதிவில் கடைசியில் சுட்டி சேர்த்துருக்கேன் பாருங்க.

சிறில் அலெக்ஸ் said...

கயமை..

- யெஸ்.பாலபாரதி said...

இதுவும் கயமை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாற்று ! குறித்த அறிமுகத்துக்கும் அழைப்புக்கும் நன்றி, சிறில். இரண்டு புதிய முயற்சிகளை ஒன்றாக அறிமுகப்படுத்தியதும் நன்று

சிறில் அலெக்ஸ் said...

நன்றி, தல பாரதி.
இவ்வளவு இனிய கயவர் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை,

:))

சிறில் அலெக்ஸ் said...

ரவிஷங்கர்,
நன்றி. நல்ல புது முயற்சிகளே அடுத்த நிலைக்கு நம்மையெல்லாம் எடுத்துச் செல்லும், பாலபாரதி சொல்வதைப்போல

Anonymous said...

சிறில்,

புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் :)

குழுவில் சேர ரொம்ப ஆசையா இருந்தாலும் ஏற்கனவே தொடங்கிய வேலைகளே நிறைய pendingல் இருப்பதால் இப்போதைக்கு ஒரு துண்டு மட்டும் போட்டுகிறேன் ;)

சிறில் அலெக்ஸ் said...

//சிறில்,

புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் :)

குழுவில் சேர ரொம்ப ஆசையா இருந்தாலும் ஏற்கனவே தொடங்கிய வேலைகளே நிறைய pendingல் இருப்பதால் இப்போதைக்கு ஒரு துண்டு மட்டும் போட்டுகிறேன் ;) //

விக்கி,
உங்க துண்ட யாரும் எடுக்காம பாத்துக்கிறேன், நிச்சயமா வந்து சேருங்க. :) குறிப்பா சற்றுமுன்'க்கு அவ்வளவு நேரம் தேவைப் படாது முக்கிய செய்திகளை குறைந்தபட்ச வார்த்தைகளில் சொன்னா போதும். வாங்க. மாற்று மிக நல்ல முயற்சி அதுலயும் மூத்த பதிவர்கள் கலந்துக்கிறது வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும். விக்கி விக்கி வராம.. விக்காம வாங்க. :)

Amar said...

வாழ்த்துக்கள் சிறில்.

எதுனாச்சும் இடைஞ்சல் செய்யனுமுன்னா சொல்லுங்க நான் வந்து செய்யறேன். :)

சிவபாலன் said...

சிறில்,

புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் !!!

சிறில் அலெக்ஸ் said...

//எதுனாச்சும் இடைஞ்சல் செய்யனுமுன்னா சொல்லுங்க நான் வந்து செய்யறேன். :)//

சமுத்ரா,
பதிவுதுவங்கியதிலேர்ந்தே நீங்க செஞ்ச 'இடைஞ்சல்'களால்தான் இங்க வந்து நிக்கிறோம்.
:)))

அந்த மாதிரியான அன்பு 'இடைஞ்சல்களை' செஞ்சுகிட்டேயிருங்க.

:)))
வாழ்த்துக்களுக்கு நன்றி. பதிவர்கள் அடுத்த நிலைக்கு செல்கிறார்கள். ஒரு சின்ன கால் எடுத்து வைத்திருக்கிறோம் எனச் சொல்வேன்.

சிறில் அலெக்ஸ்