கொசு புடுங்கி ஒரு கொசு காதல் கவிதை போட்டிருந்தார் அதில் உள்குத்து ஏதோ இருக்கும்போலிருக்கு இருந்தாலும் ஐடியா நல்லா இருந்ததால கீழ உள்ள கவிதையப் போட்டேன். (அடடா பின்னூட்டங்கள பதிவாப் போட்டாலே சீக்கிரம் 400 போட்டிரலாம்போல).
காதல் பரிசாய்
உறிஞ்சிக் கொடுத்தேன்
ஒரு துளி இரத்தம்
தியேட்டர் போகலாம் என்றாள்.
மூட்டை பூச்சிகளோடு
மோத வேண்டாம்என்றேன்.
பீச்சுக்கு? என்றாள்
ஈக்கள் இருப்பது போதாதா அங்கே
பார்க்?
காதலர்கள் அங்கே கூடினால்
காவல்துறை நசுக்கிவிடும்
அவள் சொன்னாள்
come on darling B+.
+ = (Positive)
============
Wednesday, February 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
8 comments:
சிறில் அலெக்ஸ் ஐயா,
உள்குத்தும் இல்லை வெளிக்குத்தும் இல்லை அய்யா. நான் என்ன மைக் டைசனா குத்து விட?
பார்ப்பவர்களின்... இல்லை இல்லை படிப்பவர்களின் பார்வையில்தான் அய்யா குத்துகள் தெரிகின்றன.
மற்றபடி எங்க கிராமத்தில் நெல்லை உரலில் போட்டு உலக்கையால்தான் அய்யா குத்தி சாப்பிடுவோம் அந்தக் காலத்தில்!
//கொசு புடுங்கி ஒரு கொசு காதல் கவிதை போட்டிருந்தார் அதில் உள்குத்து ஏதோ இருக்கும்போலிருக்கு//
O -
ஓ நெகடீவ் ?
:))
கொசு,
சில பின்னூட்டங்களை பாத்துதான் அப்படிச் சொன்னேன்.
தவறாயிருந்தா மன்னிக்கவும்.
கோவி,
:))
மன்னிப்பா... அதெல்லாம் வேண்டாம்யா. சும்மா விளையாட்டா சொன்னீங்க. நானும் விளையாட்டா எடுத்துக் கொண்டேன்.
நகைச்சுவை வேனும்யா மனுஷனுக்கு. சும்மா உம்முன்னு இருந்தால் மூளை கழண்டு பொகும்னு பெரியவங்க சொல்வாங்க.
சரி சரி... நகைச்சுவையா எடுத்துக்கோங்க.
கொசு,
இனிமே நகைச்சுவை பின்னூட்டம் போட்டா ஒரு :) போட்டிருங்க..
இல்லைன்னா ரத்தக் கொதிப்பாயிடுது..
உங்ககிட்ட போசும்போது 'ரத்தம்' இல்லம பேசமுடியல
:)
கோவி. கண்ணன் வழியில் ஓ+
: )
நன்றி பாபா.
Post a Comment