சுப்பையா சார்
முட்டத்தின் அழகு பற்றியும், நீங்கள் பள்ளிக்குச் சென்றுவந்தது பற்றியும் எழுதிய அருமையான, ஆரம்ப காலப் பதிவுகளால் ஈர்க்கப்பெற்றுத்தான் உங்களுடைய'தேனை'ச சுவைக்க ஆரம்பித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்துஎழுதுங்கள். 200 பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல! தொடர்ந்துஎழுதுங்கள்.வாழ்த்துக்கள்.ஜா.சுதா போன்ற பதிவுகளை மட்டும் தவிர்த்து விடுங்கள். இது என அன்பானவேண்டுகோள்.
தேனனா சிறிலின் தேன் பதிவுகள்!! - சிவபாலன்
சிறந்தவை! என் நான் கருதுபவை ( எல்லா தேனும் நல்ல சுவையே!! இருப்பினும் அவற்றில் சில)
1. இயேசு சொன்ன கதைகள்
2. நட்சத்திர பதிவுகள்!
3. சொர்க்கம் இலவசம் - முதல் பரிசு பெற்ற கதை
4. கற்கோவில்கள் - திண்ணையில் வெளிவந்த படைப்பு!
5. அன்னியர்கள் - தமிழோவியத்தில் வெளிவந்த படைப்பு!
6. சிக்காகோ தாவரவியல் பூங்கா
7. சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும் - தமிழோவியத்தில் சிறப்பாசிரியராய் எழுதியது
8. தமிழோவியத்தில் சிறப்பாசிரியராய் எழுதிய கட்டுரைகள்
9. கடவுள் நம்பிக்கை
10. தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்
11. ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்
12. ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்
13. புனிதராவது எப்படி
14. ஒரு ஊர்ல ஒரு இளையராஜா
அளவுக்கு மிஞ்சி நீலம் ஆன பதிவு( இந்த ஒரு பதிவு மட்டும் கொஞ்சம் என்னை வருந்த செய்த்தது.. நண்பர் சிறில் பிடிக்காதவற்றையும் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டதால்)
1. சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்
ஒரு தேன் ஈயின் (கோவி.கண்ணன்) ரீங்காரம் :
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பரபரப்பு புகழ்பதிவுகளால் புகழடைந்தவர்களும், இகழடைந்தவர்களும் உண்டு. இதுக்கெல்லாம் உதாரணம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. :)
நடுநிலமை என்ற பெயரில் ஜல்லி அடிக்கும் பதிவுகள் அதாவது அவர்களுடைய கொள்கையை விட்டுகொடுக்காத கொள்கையிலிருந்து நடுநிலமை(?) தவறாது இருக்கும் பதிவர்கள் 90%. மீதம் 10% பதிவர்கள் உண்மையான நடுநிலையாளர்கள். அல்லிக் குளத்தில் பூத்த தாமரைப் பூப்போல தனித் திறமையல் கவனம் ஈர்பவர்கள். அந்த வகையில் நானும் 'ஈ' யாக சென்று அடிக்கடி ரசித்து பார்த்து பருகும் பதிவு, நம் சிறில் அலெக்ஸ்சின் தேன். தேனில் ஊறிய பழாச்சுழைகள் போல ஒரு வருடகாலத்தில் 200 பதிவுகள் - உவமை கொஞ்சம் அதிகமோ ? :) கண்டுக்காதிங்க.
அரசியல், சிறுகதை, ஆன்மிகம், இலக்கியம், கவிதை, நகைச்சுவை எல்லாவற்றையும் தொட்டு என்று சொல்ல முடியாது எல்லாவற்றை தனித்தனியாக தேன் ஊற்றிப் பிசைப்பவர் நம் சிறில் அலெக்ஸ். 'நம்' என்று சொல்வதில் எவருக்கும் ஆட்சேபம் இருக்கமுடியாது. இவருக்கும் முத்திரை கொடுக்கப் பார்த்தவர்களும் கூட தங்கள் மீதான முத்திரை கொடுக்கும் பழக்கத்தை மாற்றிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். தன் வீட்டை சுத்தமாக வைத்திருந்து பக்கத்து விட்டுக்காரானின் வீட்டைப் பற்றி பேசு என்பது போல் கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் ஜாதி பாகுபாடுகளை முன்பு கண்டித்து இருந்தார்.
நான் விரும்பி பருகும் பதிவுகளில் தேன் மற்றொரு சிறந்த மாறுப்பட்ட பதிவு. நடுநிலைப் பதிவு.
நன்றி நண்பர்களே.
Friday, February 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
2 comments:
சிறில் ,
சுப்பையா சாரும், ஜிகேவும் நன்றாக எழுதியுள்ளார்கள்!!
ஜிகே கூறுவது போல் உங்களுடைய பதிவுகள் நடுநிலைப் பதிவுகள் என்றால் அது மிகையாகாது!
( லிங்குகள் சில சரியாக செல்லவில்லை.. சரி பார்க்கவும்!)
சிபா,
முதல் இரண்டு லிங்குகளையும் சரி செய்துவிட்டேன்... ப்ளாகர் படுத்துகிறது.
Post a Comment