கவிதை எழுதுறதுன்னாலே எனக்கு பயம். கவிதைக்குரிய வார்த்தைகள் பலவும் எனக்கு பரிட்சயமில்லை. ஆனாலும் புதுக்கவிதைகள் சில படிக்கும்போது அடடா நாமும் எழுதலாம்போல என நினைப்பேன்.
அப்படி எழுதிய கவிதை ஒன்றை இன்று ஒலிFM இணைய வானொலியில் காதலர் தினத்தன்று கேட்டுமகிழலாம். சக பதிவாளரும் அனுபவம் மிகும் எழுத்தாளருமான ஷைலஜா, எனது உட்பட்ட சில காதல் (நிஜமாங்க) கவிதைகளை தொகுத்து வழங்குகிறார்.
அமெரிக்க நேரம்: 13th Feb 7:30 PM EST
இந்திய நேரம் : 14th Feb 7:00 AM IST
http://olifm.com/
நிகழ்ச்சி 2 மணி நேரம் கடைசில (முத்தாய்ப்பா?) என் கவிதையும் வரும்.
மறு ஒலிபரப்பு 13th: 12AM 14th: 6AM, 12 PM and 6AM EST.
சக பதிவாளர்கள் அண்ணாகண்ணன், ப்ரியன், மதுமிதா, மு. கார்த்திக்கேயன், உதயக்குமார், ஆசாத், ஷைலஜா ஆகியோரின் படைப்புக்களும் இடம்பெற இருக்கின்றன. வாய்ப்பளித்த ஒலிக்கும், ஷைலஜா அவர்களுக்கும் நன்றி.
காதல் கவிதைகள் எழுதவேண்டிய வயசில் கர்வம் பிடித்தலைந்தேன். அதனால் காதல் வாய்க்கவில்லை கவிதையும் வாய்க்கவில்லை(இத பிரிச்சுபோட்டா கவிதையாயிரும்ல?) அதனால இந்த காதலர் தினத்துக்கு ஒரு குட்டி தொடர் ஒண்ணு துவங்கப் போறேன். ரெம்ப குட்டித் தொடர். முழுவதும் காதல் கவிதைகள். படிக்க மறக்காதீர்கள்.
இன்று பதிந்த மற்ற பதிவுகள்.
தேன்200: ஜி. ராகவன்
சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்
செய்திகள் வாசிப்பது ... - 2
Tuesday, February 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
10 comments:
வாழ்த்துக்கள் சிறில்...
பதிவிலும் கவிதை தொடரா?
கலக்குங்க... வாசிக்க காத்திருக்கோம்...
அருட்பெருங்கோ,
சும்மா விடமாட்டேன்.. நீங்கெல்லாம் நிறுத்துறவரைக்கும் எழுதுகிட்டேயிருப்பேன்.
:)))
அடுத்த கவிஞ்சரா?????
வாங்க வாங்க... நாங்களும் உங்களோட கபடி ஆட எறங்குவோம் சொல்லிட்டேன் :))))
கவிதைத் தொடருக்காக காத்திரிக்கிறோம் :))
ஜி,
//அடுத்த கவிஞ்சரா?????//
அட.. பரிசெல்லாம் வாங்கியிருக்கோம்ல..
//வாங்க வாங்க... நாங்களும் உங்களோட கபடி ஆட எறங்குவோம் சொல்லிட்டேன் :))))//
சும்மா தைரியமா எறங்குங்க.
காதல் கபடியில்
மூச்சுவிடாமல் பாடினேன்
உன் பெயரை.
(எப்டி இன்ஸ்டண்ட் கவிதை?)
//கவிதைத் தொடருக்காக காத்திரிக்கிறோம் :)) //
Hope I don;t disappoint you.
தலைவா, என் பேரு லிஸ்ட்ல இல்லை, இருட்டடிப்பு செய்யறீங்களா???? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :-)
வேற யாரோ உதயகுமார்னு நெனச்சு விட்டுட்டேன்பா..
ஒன்னப் பாத்தா காதல் கவித எழுதுறமாதிரி தெரியலையே..
:))
'அப்ப ஒன்னப் பாத்தா?' அப்ட்டின்னு திரும்பக் கேக்காதீங்க.
:))
லிஸ்ட்டில் சேத்துட்டேன்.
//சிறில் அலெக்ஸ் said...
அட.. பரிசெல்லாம் வாங்கியிருக்கோம்ல..//
நான் புதுசு... அதான்... தெரியல ;)))
//காதல் கபடியில்
மூச்சுவிடாமல் பாடினேன்
உன் பெயரை.//
நீங்க கவிஞரேதான்.... :))
//ஒன்னப் பாத்தா காதல் கவித எழுதுறமாதிரி தெரியலையே..//
:-). "உனக்கு ஒன்னுமே எழுத வாராதே, உன் பேரெப்படி???" சரியா இருந்திருக்கும்.
//:-). "உனக்கு ஒன்னுமே எழுத வாராதே, உன் பேரெப்படி???" சரியா இருந்திருக்கும்.//
அவ்வளவு மோசமில்லப்பா.
:))
வாழ்த்துக்கள்!
Post a Comment