.

Thursday, February 08, 2007

நீ இல்லாத நான்


கவனித்துக்கொண்டிருக்கும்
கள்வனைப்போல
நீ சென்றதும்
தொற்றிக்கொண்டது தனிமை.

நீயில்லா என்னை, நானே வெறுக்கிறேன்.

வெற்றிடம் நோக்கிப்
பாயும் காற்றாய் மனதை
அழுத்தும் நினைவுகள்.

பசியிருக்கிறது
பதார்த்தமுமிருக்கிறது
பரிவுதான் இல்லை.

தொலைக்காட்சித் தொடர்களில்
அழுதுவடியும் பெண்களைப்
பார்த்து சிரிக்கின்றேன்
உன் பிரிவைவிடப் பெரிய சோகமா?

சுவற்றில் நகச்சுரண்டலின்
தடம் தேடிப் பொழுதைக் கழிக்கிறேன்
கழுவிவைத்துச் சென்ற பாத்திரத்தில்
கை ரேகையை பாதுகாக்கிறேன்

சோலையின் அழகை உணராதப் பூவைப்போல
நீ இருக்கும்போது தெரியவில்லை உனதருமை.

இன்று மட்டும்,
தொட்டி ரோஜாவில் இரட்டைப் பூக்கள் ஏன்?
சிட்டுக்குருவி, துணையோடு வந்தது ஏன்?
மெட்டுருகும் பாடல் மட்டும் வானொலியில் கேட்பது ஏன்?
கிட்டக் கிடக்கும் உன் தலையணைகள் தூரமாய்த் தெரிவது ஏன்?

கன்னத்தில் கைவைத்து
நினைவுகளுக்கு முட்டுக் கொடுக்கிறேன்
அந்தக் கடைசி நேரக் கையசைப்புக் காட்சி
மனக்கண்களில் ஓடிக்கொண்டிருக்கிறது,
முடிவில்லா சுழற்சியில்.

தனிமையில் தூக்கம் துக்கம்.

நள்ளிரவில் விழித்துக்கொண்டு
உன்னை அழைத்தேன்
மீண்ட சில அழைப்புக்கெல்லாம் மௌனமே பதில்.
விழித்தபோது
நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
இரவு
உறங்கிக்கொண்டிருந்தது.

கண்கள் மூடவில்லை.
உன்னைப்பற்றிய கனவுகளைவிட
நினைவுகளே இனியது.
=============================சிறில் அலெக்ஸ்

41 comments:

மணிகண்டன் said...

என்ன சிறில், வீட்டுக்காரம்மா ஊருக்கு போனதுல ரொம்ப feel பண்றீங்க போல :))

ரொம்ப நல்லாயிருக்கு கவிதை.

பத்மா அர்விந்த் said...

அடடா, சிறில் ஊரில் இருந்து வந்துடுவாங்க. ஏதோ வலைப்பதிவர் சந்திப்பெல்லாம் நடத்திட ஆர்வம் இருந்த மாதிரி படிச்ச நினைவு. அதுக்குள்ளே பிரிவுத்துயரா?

சிறில் அலெக்ஸ் said...

//என்ன சிறில், வீட்டுக்காரம்மா ஊருக்கு போனதுல ரொம்ப feel பண்றீங்க போல :))//

கண்டுபிடிச்சிட்டீங்களா?

ஹி ஹி.

சிறில் அலெக்ஸ் said...

//அதுக்குள்ளே பிரிவுத்துயரா? //

பசியெடுக்கும்போதெல்லாம் ...

:))

சும்மா. கவிதை எழுதி ரெம்ப நாளானதுபோலிருந்திச்சு.
:))

ஷைலஜா said...

இதே போல் அருமையான கவிதை அடுத்த பிரிவில்தான்...ஹ்ம்ம் பரவாயில்லை காத்திருக்கிறோம்..
ஷைலஜா

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
இரவு
உறங்கிக்கொண்டிருந்தது.

கண்கள் மூடவில்லை.
உன்னைப்பற்றிய கனவுகளைவிட
நினைவுகளே இனியது.//

கடைசி வரிகள் கவிதைக்கு முக்கியம். காத்திருந்த கள்வன் போல் கவிதை முடியக் காத்து வந்திருக்கு கவித்துவம். நல்லா இருக்கு.

சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மாதிரி கவிதை எழுதி வைச்சு வந்த பிறகு அசத்துங்க :)

சிறில் அலெக்ஸ் said...

//இதே போல் அருமையான கவிதை அடுத்த பிரிவில்தான்...ஹ்ம்ம் பரவாயில்லை காத்திருக்கிறோம்..
ஷைலஜா//

ஏங்க இப்படி நல்ல கெட்டெண்ணம்
:)

கோவி.கண்ணன் said...

பிரிவின் ஆற்றாமையா ?
கவிதை நன்றாக வந்திருக்கிறது.

வருவாங்க கவலைப்படாதிங்க.

சிறில் அலெக்ஸ் said...

ரவி,
நன்றி..

//
சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மாதிரி கவிதை எழுதி வைச்சு வந்த பிறகு அசத்துங்க :) //

ஐயோ ஒரே வெக்கமாயிருக்குங்க.

:)

சிறில் அலெக்ஸ் said...

//வருவாங்க கவலைப்படாதிங்க.//

தெரியுமே! நாந்தானே ரிட்டர்ன் டிக்கட் வாங்கித் தந்தேன்.

:))

Anonymous said...

hi
ennakum elutha thoniyathu..kavithai arumai.
24 மணி நேரம் போதாது
கணினியில்
நீ இல்லை
மனம் லயிக்கவில்லை

ஏங்க..இங்கே வாங்க..
அழைக்க மாட்டாயா
என் தனிமையைத் தீர்க்க

சேதுக்கரசி said...

இதென்னது சின்னப்புள்ளத்தனமா.. புதுசாக் கல்யாணமான மாதிரி!! :-)))))))

சிறில் அலெக்ஸ் said...

நன்றி நக்கீரன்.. நீங்களும் வீட்ல தனியா இருக்கீங்களா?

சிறில் அலெக்ஸ் said...

சேதுக்கரசி

//இதென்னது சின்னப்புள்ளத்தனமா.. புதுசாக் கல்யாணமான மாதிரி!! :-))))))) //

3 வருஷமெல்லாம் பழசா?

தேன் நிலவு முடிஞ்சு 1 வாரந்தான் ஆகுதுங்க

:))

Anonymous said...

hi
ada aamanga.ippo vanthutanga.
avunga illamal nanaum ippadi than polambikite irruthen. ph. bill pakkanume!. uril ellarum kindal pannranga.ippo than vanthanga athukkol enna ph. pannikite irruka endru. irrukum pothu arumai therivathu illai. patta than puththi varuthu.

சேதுக்கரசி said...

//தேன் நிலவு முடிஞ்சு 1 வாரந்தான் ஆகுதுங்க//

குழந்தையோட தேனிலவா? :) சரி சரி :))

சிறில் அலெக்ஸ் said...

////தேன் நிலவு முடிஞ்சு 1 வாரந்தான் ஆகுதுங்க//

குழந்தையோட தேனிலவா? :) சரி சரி :)) //

அவங்க போய் 1 வாரந்தான் ஆகுதுன்னு சொல்ல வந்தேன்..

:)

SurveySan said...

//சுவற்றில் நகச்சுரண்டலின்
தடம் தேடிப் பொழுதைக் கழிக்கிறேன்
கழுவிவைத்துச் சென்ற பாத்திரத்தில்
கை ரேகையை பாதுகாக்கிறேன்
//

அட அட அட.. சூப்பரப்பு!

இதை audio பதிவா போட்டா மனசுல அப்படியே பதிஞ்சுடும். வூட்டுக்காரம்மாக்கு லிங்க் அனுப்பினா, ஓடியே வந்துடுவாங்க.

( காப்பி/பேஸ்ட் பண்ணி, நான் எழுதினதுன்னு சொல்லி, நானும் யூஸ் பண்ணிக்கறேன், தேவை படும்போது :) )

சேதுக்கரசி said...

//அவங்க போய் 1 வாரந்தான் ஆகுதுன்னு சொல்ல வந்தேன்//

ம்.. அப்பவே கமெண்டைப் போட்டு லாகவுட் செஞ்சதும் பளிச்னு விளக்கு எரிஞ்சிடுச்சு :)

நவீன் ப்ரகாஷ் said...

//தனிமையில் தூக்கம் துக்கம். //
//விழித்தபோது
நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
இரவு
உறங்கிக்கொண்டிருந்தது.//

:))நினைவுகளின் உணர்வுகள் ஆழமாக இருக்கிறது சிறில் !:)) அருமை !

சிறில் அலெக்ஸ் said...

அடடா பதிவுலக் காதல் கவிஞர் நவீன் ப்ரகாஷே வந்து பாராட்னதுல ரெம்ப மகிழ்ச்சி.

சிறில் அலெக்ஸ் said...

சர்வே...

கொஞ்சம் பொறுங்க குரல் பதிவு வந்துகிட்டேயிருக்கு

:)

கோவி.கண்ணன் [GK] said...

சிறில்,
ஆறுதல் அடைக ! அமைதி பெறுக,
உற்சாகம் பெறுகுக
:)))

சுந்தர் / Sundar said...

//கன்னத்தில் கைவைத்து
நினைவுகளுக்கு முட்டுக் கொடுக்கிறேன்
//

அருமை ..
பிரிவுகளும் உங்களை கவிஞன் ஆக்குகிறதே !

Unknown said...

்க்காதல் மட்டுமல்ல பிரிவும் நல்லக் கவிதைக்கு கருவைக் கொடுக்கிறது :)

வாழ்த்துக்கள் சிறில்

Anonymous said...

kovi.kannan -nin kavithai padithu sirithu kontu irrukiren. avanga avanga kastam avangalukku.
kovi.kannan kavithai super

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இன்று மட்டும்,
தொட்டி ரோஜாவில் இரட்டைப் பூக்கள் ஏன்?
சிட்டுக்குருவி, துணையோடு வந்தது ஏன்?
மெட்டுருகும் பாடல் மட்டும் வானொலியில் கேட்பது ஏன்?//

அடடா !அருமை. அதான இப்பன்னு பார்த்து தானா இதெல்லாம் தெரியணும் ? இன்னமும் உத்து பாருங்க ஒரு காவியம் எழுதற அளவு விஷயத்தை உங்கள சுத்திலும் விட்டுட்டு போயிருக்காங்க அம்மணி.

Anonymous said...

//நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
இரவு
உறங்கிக்கொண்டிருந்தது.
//

//
கவனித்துக்கொண்டிருக்கும்
கள்வனைப்போல
நீ சென்றதும்
தொற்றிக்கொண்டது தனிமை
//

அருமை.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி சுந்தர். பிரிவாற்றாமை கேள்விப் பட்டிருப்பீங்க. வாழ்க்கையில மட்டுமல்ல இலக்கியத்திலும் முக்கிய அங்கம்

:))

சிறில் அலெக்ஸ் said...

அடடா.. காதல் கவிஞர் அருட்பெருங்கோவும் வாழ்த்தியாச்சா.

இந்த அரை நேரக் கவிஞனுக்கு இத்தனை பாராட்டை வாங்கித் தந்த பிரிவு வாழ்க..வாழ்க..

:)))

சிறில் அலெக்ஸ் said...

லட்சுமி,

//அடடா !அருமை. அதான இப்பன்னு பார்த்து தானா இதெல்லாம் தெரியணும் ? இன்னமும் உத்து பாருங்க ஒரு காவியம் எழுதற அளவு விஷயத்தை உங்கள சுத்திலும் விட்டுட்டு போயிருக்காங்க அம்மணி. //

காவியம் எழுதவா.. அதுக்குள்ள வந்துடுவாங்க அப்புறம் யுத்தகாண்டம்தான் எழுதணும்.

:))

சேதுக்கரசி said...

காதல் கவிஞர் சேவியரும் வாழ்த்தியாச்சு!! கலக்குறீங்க போல சிறில் அலெக்ஸ் :) சேவியர் கவிதைகள் படிச்சுப்பாருங்க நேரமிருக்கும்போது...

சிறில் அலெக்ஸ் said...

இன்னைக்குப் போய் படிச்சேன்.. ரெம்ப நல்லா எழுதியிருந்தாரு..

வாழ்த்து சொல்லியிருந்தேன்.

:)

Anonymous said...

Don't you get it?

It is to hide the world of joy of being single.
Tomorrow, he can say, "see, how sad I was, when you are gone!"

சிறில் அலெக்ஸ் said...

//Don't you get it?

It is to hide the world of joy of being single.
Tomorrow, he can say, "see, how sad I was, when you are gone!" //

உண்மையை உணர்ந்த அனானி, பதிவர்கள் மத்தியில் உண்மைக்கு மதிப்பில்லை எனத் தெரியாதா?

:))

enRenRum-anbudan.BALA said...

சிறில்,

நீர் இவ்வளவு பெரிய கவிஞர் என்று யானறியேன் :)

Jokes apart, உணர்வு பூர்வமான நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்கள்.

எ.அ.பாலா

சிறில் அலெக்ஸ் said...

எ.எ.அ. பாலா,
//சிறில்,

நீர் இவ்வளவு பெரிய கவிஞர் என்று யானறியேன் :)//

ஆமா கவித கொஞ்சம் பெருசுதான்.
:)

//jokes apart// அப்ப நான் பெரிய கவிஞர் இல்லியா?

:))

ஏதோ அப்பப்ப சிச்சுவேஷன் சாங் மாதிரி சிச்சுவேஷன் கவிதை.

:))

ilavanji said...

ம்ஹீம்!

இதெல்லாம் ஆவறதில்லை!!!

அனேகமா அடுத்த வாரத்துள்ள நீங்களும் பொட்டிய கட்டிக்கிட்டு ஊட்டம்மா ஊருக்கு கெளம்பிருவீங்கன்னு நினைக்கறேன்! :))

சிறில் அலெக்ஸ் said...

இளவஞ்சி,
அடுத்தவாரம்னா எதுக்கு கவிதையெல்லாம் எழுதுறேன்..
2 மாசம் கழிச்சுத்தான்.

ஜோ/Joe said...

அருமை ! அருமை!!
தங்கச்சி வாசிச்சா நெகிழ்ந்து போயிடுவாங்க!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஜோ.

:)

சிறில் அலெக்ஸ்