.

Friday, October 13, 2006

பதிவர்களைக் கவரும் யாஹூ பீட்டா


புதிய யாஹூ பீட்டா(Beta) மின்னஞ்சல் சேவை பழைய சேவையை தூக்கிச் சாப்பிட்டு மென்று துப்பும் வகையில் அமைந்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே அதன் புதிய வடிவமைப்பு நம்மை கவர்கிறது. முகப்பிலேயே தற்போதைய முக்கிய செய்திகளைப் பெறமுடிகிறது. Tab வடிவமைப்பில் பல விண்டோக்களை ஒன்றாய் வைத்து வேலை செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது இன்னொரு வசதி.

Yahoo Calander வெகு நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாகூ நாட்குறிப்புக்களை பயன் செய்யாதவர்கள் இனிமேல் முயற்சி செய்யலாம்.

முகவரி தொகுப்பு எளிதில் வகைப்படுத்தவும் பயன்படுத்தவும் ஏதுவாக மாற்றப்பட்டுள்ளது.

வலைப்பதிவர்களுக்கான சிறப்பம்சம் என்னவென்றால் RSS feed பெறும் வசதி உள்ளது. இதன்மூலம் உங்கள் விருப்பமான பதிவுகளை யாஹூ மெயிலிலேயே படித்துக்கொள்ளலாம்.

தேனை சேர்ப்பதில் பிரச்சனை இருந்தது. எனவே feedburner.com மூலம் சுட்டு அந்த சுட்டியை சேர்த்ததும் சரியானது. நீங்களே உங்களுக்கு பிடித்த சில பதிவுகளை மட்டும் சேர்த்து ஒரு மினி திரட்டி வைத்துக்கொள்ளலாம். Google Reader இதை மெயிலுடன் இணைக்காமல் தனி சேவையாய் தந்துள்ளது. இங்கே தமிழ்மணம்(thamizmanam.com) மற்றும் தேன்கூட்டையும்(thenkoodu.com) இணைத்து வாசிக்கலாம் இல்லை உங்களுக்குப் பிடித்த பதிவுகளள மட்டும் தொகுத்துப் பார்க்கலாம்.
தமிழ்மணம் தேன்கூடு தரும் சேவைகளுக்கு இவை மாற்றல்ல என்பதை கூற விரும்புகிறேன். அவை கூகுள்போல என்றால் இது நாம் உலவியில் சேர்க்கும் ஃபேவரிட்ஸ் போல.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்களுக்கே அழைப்பின்பேரில் யாஹூ இந்த பீட்டா சேவையை தந்துள்ளது.

மின்னஞ்சல் தொகுப்பு


பாபாவின் ஈ-தமிழ் பதிவு யாஹு மெயிலுக்குள்ளே

10 comments:

Sivabalan said...

நானும் பார்த்தேன் .. ரொம்ப நல்லாயிருகுங்க..

ALIF AHAMED said...

/./
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்களுக்கே அழைப்பின்பேரில் யாஹூ இந்த பீட்டா சேவையை தந்துள்ளது
/./

மெயில் உள்ளே செல்லும் போதும் உள்ளே சென்ற பின்பும் அவுட் ஆகும் போதும் பிட்டா விளம்பரத்தை கிளிக செய்ய அனைவரும் இந்த வசதியை பெறலாம்..

SP.VR. SUBBIAH said...

எல்லாம் தொழில் போட்டிதான்.
பாருங்கள் கூகிள் காரர்களும் சளைத்தவர்கள் அல்ல
இன்னும் சில வாரங்களில் அவர்களும் த்ங்களுடைய மின்னஞ்சல் சேவையை மேம்படுத்தி விடுவார்கள்!

Syam said...

என்னுடையது paid service என்பதால் எனக்கு இந்த சேவை ஒர் 6 மாதங்களுக்கு மேலாக உள்ளது, நீங்கள் சொல்வது சரி மிகவும் அருமையாக உள்ளது, இப்போது rediffmail கூட இதே மாதிரி பண்ணிட்டாங்க...

Syam said...

கேட்க மறந்துட்டேன் பாருங்க...attachment download பண்ணும் போது its asking for password and even after giving password it doesn't download the attachment...உங்களுக்கும் இதே மாதிரி பிரச்சனை இருக்கா...

சிறில் அலெக்ஸ் said...

Syam,
எனக்கு டவ்ன்லோடில் எந்த பிரச்சனையுமில்லை. பாஸ்வோர்ட் கேட்கவுமில்லை

Anonymous said...

ஆனால் yahoo mail beta வில் mail-ஐத் திறந்து படிக்கும் போது வலது ஓரம் விளம்பரம் வந்து தொந்தரவு பன்னுகிரதே!? ஆனால் gmail-ல் அப்படியில்லை வரும் mail-ன் அளவிற்கு ஏற்ப படிப்பதற்கான அளவு மாறி விளம்பரங்கள் வலது ஓரத்தில் தெரியும்.

Search marketing-ல் yahoo-விற்கு இன்னும் அனுபவம் பத்தாது. தகவலுக்கு நன்றி.

Machi said...

எனக்கு அழைப்பு வந்தது நான் தான் ஏத்துக்கொள்ளவில்லை. "Broadband Connedtion" இருக்கனும் என்று சொன்னார்கள் அதனால் ஏற்கவில்லை.
இப்போ அந்த அழைப்பை ஏற்று யாகூ பீட்டாவை பயன்படுத்தி பார்க்கிறேன்.

Chandravathanaa said...

நீங்கள் படிக்காமலே பின்னூட்டம் இடுவீர்கள் என்று எங்கோ நீங்களே எழுதிப் படித்த ஞாபகம்.
பரவாயில்லை. உங்கள் பதிவைப் படித்தேன். ஏற்கெனவே என்னிடம் யாகூ பீட்டா(Beta) இருக்கிறது.
நீங்கள் சொன்னவைகளையும் பயன் படுத்திப் பார்க்கிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

//நீங்கள் படிக்காமலே பின்னூட்டம் இடுவீர்கள் என்று எங்கோ நீங்களே எழுதிப் படித்த ஞாபகம்.//

என்ன இப்டி சொல்லிட்டீங்க...

படிக்காமலே என்பதைவிட முழுதும் படிக்காமலேன்னு சொல்லலாம். நானே இப்டி சொன்னேனா? (ஓட்டவாய்டா சிறில்.).

:)

சிறில் அலெக்ஸ்