.

Friday, October 06, 2006

மரணதண்டனைப் பதிவுகள்

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை 'தேன்' தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.

ஜெயபாலின் கவிதை - மரணம் தண்டனையா?

கொஞ்சம் லைட் ரீடிங் - எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார்.

மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா

அவர் வைக்கும் கேள்விகள்

அபு மூகையின் ஆதரவு - பொதுவாக இஸ்லாமியப் பதிவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக பதிவிடுவதில்லை எனும் எண்ணத்தை மாற்றும் பதிவு. தேச பக்தியும் வெளிப்படுகிறது இவரின் வார்த்தைகளில்.

ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த
நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!


ஆணித்தரமாகச் சொல்கிறார்.

நுனிப்புல் உஷாவின் எண்ணம் - மரண தண்டனைக்கு எதிராக சில கருத்துக்களை வைக்கிறார். எதையும் வாதமாக தீர்மானமாகச் சொல்லாமல் சில காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க
யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

சிந்திக்கப்படவேண்டிய கேள்வி.

பிரபு ராஜதுரையின் அலசல் - பிரபு ராஜதுரை எனும் வழக்கறிஞர் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தை அலசுபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு.

ஆனால் தண்டனைக்கான் காரணங்களை முன் வைக்கும் உச்சநீதிமன்றம் முதலாவதாக கூறுவதான, ‘குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதின் மூலமே சமுதாயத்தின் பொதுவான மனநிலையினை திருப்திப்படுத்த இயலும் (the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender)’ என்பது அபாயகரமான ஒரு போக்கு என்பது எனது பணிவான கருத்து. இரண்டாவதாக கூறும் ‘சதியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதே, நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் (The challenge to the unity, integrity and sovereignty of India by these acts of terrorists and conspirators, can only be compensated by giving the maximum punishment)’ என்பதும் தகுந்த காரணமில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் இறுதியில் அளித்துள்ள ‘ஏற்கனவே சரணடைந்துள்ள ஒரு போராளி மீண்டும் நாட்டுக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபடுவதினால், சமுதாயத்தினை சீர்குலைக்கும் ஒரு சக்தியாக கருதி அவர் வாழ்வு முடிக்கப்படவேண்டும்’ என்ற காரணமே சரியானதாக இருக்க இயலும் என எண்ணுகிறேன். எனெனில்
முதலிரண்டு காரணங்களிலும் பழிவாங்குதலே வெளிப்படுகிறது. மூன்றாவது காரணமே தடுத்தல் மற்றும் எச்சரித்தல் வகையில் வருகிறது. திருத்துதலுக்கு மரண தண்டனையில் வாய்ப்பில்லை!
பொதுவாக குற்றம் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளி
என்று தீர்க்க முடியும். ஆயினும், சில சமயங்களில் மனதிற்குள் சின்னதாக ஒரு ஐயப்பாடு இருக்க வாய்ப்புண்டு. அவ்விதமான நிலைகளில் மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பழிவாங்குதல் மற்றும் தண்டனை அல்லாமல் தடுத்தல் அல்லது எச்சரித்தல் போன்ற காரணங்களுக்காவே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இல்லை, அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்றால், வருமான வரி ஏய்ப்பு, பத்திர பதிவில்
சொத்து மதிப்பினை குறைத்துக் காட்டி முத்திரைக் கட்டண ஏய்ப்பு போன்ற வெள்ளை காலர் குற்றங்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். வரி கட்டுபவர்கள் ஒழுங்காக அதை கட்டி அரசிடம் போதுமான பணமிருந்திருந்தால், எல்லையில் பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கலாம். அப்சல் அந்தப்பக்கம் உள்ள காஷ்மீரத்துக்கு ஓடிச்சென்று பயிற்சி எடுத்து பின்னர் திரும்புவதை தடுத்திருக்கலாம் அல்லது தில்லியில் கொசு மருந்தாவது கூட கொஞ்சம் அடித்திருக்கலாம்...ஆக வெள்ளை காலர் குற்றங்களாலும் மரணங்கள் நிகழ்கின்றன, ஏன் பின்னர் பாகுபாடு?


நீதி வழங்கலை முன்வைத்து அருமையான அலசல். (இவரின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன - கவனிக்கத்தக்க பதிவர்)

நல்லடியாரின் எதிர்வாதம் - அப்சலின் கேசை விவரிக்கும் பதிவு அபு மூகையின் பதிவுக்கு நேரெதிர் எனச் சொல்லலாம். பிரபு ராஜதுரை சொல்லும் சில தகவல்கலை இவரும் சொல்கிறார். அவரைப் போலவே வேறொரு குற்றத்தைக் காட்டி அவர்களுக்கு தண்டனை எப்போது எனக் கேட்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க. போன்ற மதவாத அரசியல் கட்சிகள் வழக்கம்
போல் இப்பிரச்சினையில் அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர். குற்றவாளி அப்ஷல் தூக்கிலிடப்பட வேண்டும்; நாட்டின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தனஞ்சய் சட்டர்ஜி என்ற காமக் கொடூரனுக்கு
மரண தண்டனை உறுதி செய்யப்பட்டபோது,மனித உரிமை அமைப்புகள் குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையில்லை; அதிகபட்சம் ஆயுள் தண்டனையே போதும் என்று குரலெழுப்பினார்கள். ஆனால், அப்ஷல் விசயத்தில் அவர்கள் மெளனம் காப்பதாகவே அறிய முடிகிறது. இதில் யாரெல்லாம்
குற்றவாளிக்கு ஆதரவாகவோ அல்லது நியாயமாகவோ குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் தேசத் துரோகப் பட்டம் வழங்கப்படும் என்பதால் அனேகமாக மெளனம் காக்கிறார்கள்.


சில நியாயமான கேள்விகள்.

செல்வனின் சாடல் - செல்வன் வழக்கமான உணர்ச்ச்சிவசத்துடன் அப்சலின் தண்டனை நிறைவெற்றப் படவேண்டுமென்கிறார். பிறநாடுகளின் நிலமை இந்தியாவில் இல்லையாதலால் மரணதண்டனை இங்கே செயல்படுத்தப்படவேண்டும் என்பது இவரின் வாதம்.

இந்த மாதிரி சமூகத்தில் மரண தண்டனை தேவையில்லை. அவன் கால் மேல் கால் போட்டு கொண்டு புனித பிம்ப வேசம் கட்டி உலகத்துக்கு "மரணதண்டனை தப்பு" என உபதேசம் செய்வான். லிஸ்பனில் தினமும் 10 குண்டு வெடிக்கும் சூழ்நிலை இருந்தால் அவன் மரணதண்டனை மட்டுமல்ல, சித்ரவதையையே கூட கொண்டுவருவான்."ஐரோப்பாவை பார்" என முழக்கமிடும் அறிவுசீவிகள் அங்கிருக்கும் சூழலுக்கும் இங்கிருக்கும் சூழலுக்கும் வித்யாசம் தெரியாதவர்களல்ல . இங்கே மரண தண்டனை ரத்து செய்தால் அடுத்த வினாடி என்ன நடக்கும்? ஒரு நாலு வருஷம் இந்த அப்சல் ஜெயிலில் இருப்பான். அப்புறம் தீவிரவாதிகள் ஒரு விமானத்தை கடத்துவார்கள். உடனே இந்த அறிவுசீவிகள் "தீவிரவாதியை விடுதலை செய்" என ஒப்பாரி வைப்பார்கள்.

அதிகபடியான உணர்ச்சிவசம்.

பிரபு ராஜதுரையின் கருத்துக்கள் மிகவும் நியாயமானதாகப் படுகிறது. மரணதண்டனையே வேண்டாம் என்பது என் வாதமல்ல. சில கேடுகட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவே வேண்டும். அதேசமயம் சட்டம் எல்லோருக்கும் சமமானதாய் செயல்படவும் வேண்டும். சட்டத்தின் கடமை பழிவாங்குவதல்ல.

பின்சேற்கைகள்

பாபா தந்த சில சுட்டிகள்

1. மெய்கீர்த்தி: அப்சலை தூக்கில் போடுவது தான் சரி

2. E-Tamil : Points to ponder against Capital Punishment

3. கண்ணோட்டம்- KANNOTTAM: மரண தண்டனையா, மன்னிப்பா ?

4. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! - ROSAVASANTH :: பொதுப்புத்தி

5. முத்து(தமிழினி) - அப்சலை தூக்கில போடுங்கடா

6. கோவி.கண்ணன்(GK) - மரண தண்டனை, கோட்சே, இஸ்லாம், ஒரிசா பாதிரியார்!

7. அஃப்சல் மரண தண்டனை --- சில எண்ணங்கள் - என்றென்றும் அன்புடன் பாலா

8. அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்! - நா. ஜெயசங்கர்

9. குழலி - நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்

10. லக்கிலுக் - 1

11. லக்கிலுக் - 2

12. we the people

13. பெனாத்தல் சுரேஷ்

14. ராஜபாட்டை.

15. சிந்தாநதி

16. வலை

17. யெஸ். பாலபாரதி

35 comments:

வஜ்ரா said...

//
மரணதண்டனையே வேண்டாம் என்பது என் வாதமல்ல. சில கேடுகட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவே வேண்டும். அதேசமயம் சட்டம் எல்லோருக்கும் சமமானதாய் செயல்படவும் வேண்டும். சட்டத்தின் கடமை பழிவாங்குவதல்ல.
//

அந்த கேடு கெட்டவனுங்களுக்குத் தான் இப்போ மரண தண்டனை கொடுக்கச் சொல்கிறோம். நீதி மன்றமும் கொடுத்திருக்கிறது.

ஜனநாயக காவலர்கள், ஜனநாயகத்தின் முக்கிய corner stone ஆன நாடாளுமன்றத்தில் தாகுதல் நடத்தியதற்காக குற்றம் நிரூபிக்கப் பட்ட குற்றவாளிக்குத் தான் மரண தண்டனை.

இப்போது கூப்பாடு போடும் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், திரு. நல்லடியார் போன்றோர், கல்லால் அடித்துக் கொல்லுக் சவூதி தண்டனைக்கு இதே எதிர்ப்பு தெரிவிப்பாரா என்றால் இல்லை.

திரு. ரோசாவசந்தும் தம் பங்குக்கு ஒரு அருந்ததி ராய் வக்காலத்து வைத்திருக்கிறார். இவர்கள் எல்லாம், மற்ற நேரங்களில் காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் தான் வருவார்கள்...முக்கியமாக இந்த கிராஹம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டது, அப்போது இந்த ராய், ரோசா எங்கே போனார்கள்? திரு நல்லடியார் எங்கே போனார்?

சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று தானே விட்டார்கள்...வியாக்யானம் செய்தார்களா?

இப்போது செய்யும் வாய்,( திரு ராஜதுரை அவர்களும் இதில் அடக்கம்) அப்போதும், செய்திருக்கவேண்டுமே...இதே circumstantial evidence, கருணை, கன்றாவிகள், மனித நேயம், பழிக்குப் பழி, எல்லா எழவும் அப்போதும் இருந்தது தானே...

(இப்போது அவன் ஆயூள் தண்டனை கைதி தான்... அதைப் பற்றிய வாதம் அல்ல இது)

சிறில் அலெக்ஸ் said...

வஜ்ரா,
பிரபு ராஜதுரையின் அலசலிலிருந்தே சில விஷ்யங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ரெம்பத் தெளிவா சில விஷயங்களை சொல்லியிருக்கிறார். சார்புநிலைகளைக் கொண்டு சட்டத்தையும் எடைபோடவேண்டாமே. சட்டம் எல்லோருக்கும் சமமாக இல்லமல் போனால் இன்றைக்கு அது நமக்கு சாதகமாகப் போனாலும் நாளாஇக்கு அது நமக்கு எதிராய் கொஞ்சம் ஸ்ரீஇந்தால் அதுவும் மரணதண்டனை போன்றதொரு விஷயத்தில் ஆனால் எப்படி ஆகும் எனவும் யோசிக்கவேண்டும்.

சிலரை கடுமையாக தண்டிப்பதன்மூலம் தீவிரவாதத்தை நிச்சயம் ஒழிக்கமுடியாது என்பதும் ஒரு வாதமில்லையா?

Nakkiran said...

//சிலரை கடுமையாக தண்டிப்பதன்மூலம் தீவிரவாதத்தை நிச்சயம் ஒழிக்கமுடியாது என்பதும் ஒரு வாதமில்லையா?//

இந்த வாதத்தை ஒப்புக்கொள்ள முடியாது.. அப்சலின் நிலை, இனி தீவிரவாதிகளுக்கு உதவினால் என்னாகும் என்பதற்க்கு சரியான எடுத்துகாட்டாக அமையும்..

இனி இந்தியாவில் யாராவது துணை போவதற்க்கு முன் யோசிக்க வேண்டும்.. அவர்கள் இல்லாவிட்டாலும், அவர் குடும்பத்தார் யோசிக்க வேண்டும்.. இல்லையெண்றால் அப்சல் குடும்பத்தாரை போல் ஜனாதிபதியிடம் தான் கையேந்த வேண்டி இருக்கும்,

தண்டனை பற்றிய பயமே சமூகத்தில் குற்றங்களை குறைக்கும்...

வஜ்ரா said...

சிறில்,

என் வாதம் என்றுமே மரண தண்டனை இருக்கவேண்டும் என்பதே. ஸ்டேயின்ஸ் கொலையாளிக்கும் சரி, அப்சலுக்கும் சரி.

//
சிலரை கடுமையாக தண்டிப்பதன்மூலம் தீவிரவாதத்தை நிச்சயம் ஒழிக்கமுடியாது என்பதும் ஒரு வாதமில்லையா?
//

நிச்சயமாக அது ஒரு வாதம் தான், இல்லை என்று சொல்லவே இல்லை.

வாதாடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. Selective ஆக இவர்கள் இருப்பதைத் தான் சுட்டிக் காட்டுகின்றேன்.

அவர்களுக்குத் தேவை என்னும் போது "சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்"

அவர்களுக்கு ஆப்பு வைக்கப் படும்போது, "ஒலக ஞாயம், தருமம், கருமம்" எல்லாம் பேசுவார்கள்...இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால் நாமெல்லாம் தற்கொலை செய்து கொள்ளுதலே மேல் என்ற எண்ணத்திற்கு நம்மளை தள்ளிவிடுவார்கள்.

Boston Bala said...

விட்ட சில உரல்கள்:
1. மெய்கீர்த்தி: அப்சலை தூக்கில் போடுவது தான் சரி

2. E-Tamil : Points to ponder against Capital Punishment

3. கண்ணோட்டம்- KANNOTTAM: மரண தண்டனையா, மன்னிப்பா ?

4. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...! - ROSAVASANTH :: பொதுப்புத்தி

Boston Bala said...
This comment has been removed by a blog administrator.
Sivabalan said...

சிறில்,

நல்ல பதிவு.

//பிரபு ராஜதுரை எனும் வழக்கறிஞர் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தை அலசுபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு. //


இதை நான் வழிமொழிகிறேன்.

Anonymous said...

சிறில்,

செல்வன் உணர்ச்சிவச படுவதாக கூறி அவர் கூறியதை முற்றிலுமாக புறக்கணித்து விட்டதாக நினைக்கிறேன்.

நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் பதில் சொல்ல பாருங்களேன்

1) போர்ச்சுகலையும் இந்தியாவையும் ஒப்பிடு செய்வது சரியா?

2) தீவிரவாதம் மன்னிப்பை கண்டு மனந்திருந்த கூடியதா? இல்லை அதை கொம்பாக பயன்படுத்தி மேலே படற கூடியதா?

3)மரணதண்டனை தடுக்க பேசும் அறிவு பெரியவர்கள் பாதிரியார்
கொலை வழக்கில் மவுனமாக இருந்தார்கள்? அப்போது மவுன விரதம்,எழுத்து விரதம் என்று ஏதாவது இருந்ததா? இல்லை நாக்கு மற்றும் விரலில் சுளுக்கா?
(நான் அந்த மரணதண்டனையும் ஆதரிக்கிறேன்)

4)வொய்ட் காலர் திருடனையும்,தீவிரவாதியையும் ஒப்பிடு செய்வது சரியா? இருவரின் நோக்கம் என்ன? செயல் பாடு என்ன?
உதாரணத்திற்கு இரண்டு

4.1) நாளை பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஒருவன் எனக்கு அமைந்த ஜெனிடிக் அமைப்பு அப்படி என்னை ஏன் தண்டிக்கீறிர்கள். எனக்கு இதை கொடுத்த என் அம்மை அப்பனை தண்டியுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள்?

4.2) வீடு புகுந்து திருடுபவன் மாட்டிக் கொண்டவுடன் எல்லோரும் ஒழுங்காய் வரிப்பணம் கட்டி வேலை வாய்புகள் பெருகி எனக்கு வேலை கிடைத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

5) சிறையிலிருந்து தப்புவிக்கப்படும் தீவிரவாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

6)தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் குண்டு வைப்பது வெற்றியாக நிகழ்ந்திருந்தால் அறிவு பெரியோர்கள் அதை கண்டித்திருப்பார்களா இல்லை குண்டுக்கு பக்கத்தில் நாடாளுமன்றத்தை கட்டியது அரசின் முட்டாள்தனம் என்று கூறியிருப்பார்களா?

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு. ஓசிப் பதிவு ஐடியாவுக்கு எனக்கு காப்பி ரைட் கிடைக்குமா? ;)

சிறில் அலெக்ஸ் said...

பொன்ஸ் உங்களுக்கு அந்த காப்பி ரைட் எப்பவுமே உண்டு.

:)

சிறில் அலெக்ஸ் said...

1) போர்ச்சுகலையும் இந்தியாவையும் ஒப்பிடு செய்வது சரியா?

ஏன் சரியில்லை. மரண தண்டனை தீவிரவாதிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இன்னைக்கு வந்ததுதான் தீவிரவாதம். போர்ச்சுக்கல்லில் தீவிரவாதம் இல்லை என்பதால்தான் மரணதண்டனை இல்லை என எப்படிச் சொல்வது?

2) தீவிரவாதம் மன்னிப்பை கண்டு மனந்திருந்த கூடியதா? இல்லை அதை கொம்பாக பயன்படுத்தி மேலே படற கூடியதா?

தீவிரவாதம் தூக்குத் தண்டனைகளால் தளரக் கூடியதா? அதுவுமில்லை. ஒருத்தனைக் கொன்றால் பத்துபேர் உருவாகிறானே? நிச்சயமா நம்ம அரசால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இயலும். அதற்கான முயற்சிகளை சரியா எடுக்கலைன்னுதான் தெரியுது அல்லது சில அரசியல் ஆதாயங்களுக்காக இவை அனுமதிக்கப் படுகின்றன.

3)மரணதண்டனை தடுக்க பேசும் அறிவு பெரியவர்கள் பாதிரியார்
கொலை வழக்கில் மவுனமாக இருந்தார்கள்? அப்போது மவுன விரதம்,எழுத்து விரதம் என்று ஏதாவது இருந்ததா? இல்லை நாக்கு மற்றும் விரலில் சுளுக்கா?
(நான் அந்த மரணதண்டனையும் ஆதரிக்கிறேன்)

மரணதண்டனை வேண்டாம் என்பதும் என்கருத்தல்ல. ஆனால் Conspiracy குற்றங்களுக்கு குறைந்தபட்ச தடையங்கள் கிடைக்கப்பெற்ற ஒரு வழக்கில் மரணதண்டனையா என்பதே கேள்வியா தெரியுது. சட்டம் அரசியல்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் குண்டுவைப்பவனுக்கு ஒரு நீதியும் பஸ்ஸ்டாண்டில் குண்டுவைப்பவனுக்கு ஒரு நீதியுமாய் இருக்கக்கூடாதே.

4)வொய்ட் காலர் திருடனையும்,தீவிரவாதியையும் ஒப்பிடு செய்வது சரியா? இருவரின் நோக்கம் என்ன? செயல் பாடு என்ன?
உதாரணத்திற்கு இரண்டு

4.1) நாளை பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஒருவன் எனக்கு அமைந்த ஜெனிடிக் அமைப்பு அப்படி என்னை ஏன் தண்டிக்கீறிர்கள். எனக்கு இதை கொடுத்த என் அம்மை அப்பனை தண்டியுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள்?

4.2) வீடு புகுந்து திருடுபவன் மாட்டிக் கொண்டவுடன் எல்லோரும் ஒழுங்காய் வரிப்பணம் கட்டி வேலை வாய்புகள் பெருகி எனக்கு வேலை கிடைத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

இந்தமாதிரி வாதங்களை சட்டம்தான் சரிபார்க்கவேண்டும்.

5) சிறையிலிருந்து தப்புவிக்கப்படும் தீவிரவாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்ன நினைப்பது?

6)தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் குண்டு வைப்பது வெற்றியாக நிகழ்ந்திருந்தால் அறிவு பெரியோர்கள் அதை கண்டித்திருப்பார்களா இல்லை குண்டுக்கு பக்கத்தில் நாடாளுமன்றத்தை கட்டியது அரசின் முட்டாள்தனம் என்று கூறியிருப்பார்களா?

எல்லோரும் தீவிரவாதத்தை கண்டிக்கவே செய்கிறோம் அதுல சந்தேகமே வேண்டாம். என் கேள்வியெல்லாம் சட்ட ரீதியா இந்தப் பிரச்சனை ஒழுங்காக அலசப் படுகிறதா? குஜராத் கலவரங்களில் இதுபோல எத்தனைபேருக்கு மரணதண்டனை வழங்கியிருக்கு நம் சட்டம்?

Anonymous said...

//குஜராத் கலவரங்களில் இதுபோல எத்தனைபேருக்கு மரணதண்டனை வழங்கியிருக்கு நம் சட்டம்?
//
ஐயா,

இந்த நிலைமையை நீங்கள் அறிவுறுத்தினால் எந்த குற்றத்திற்கும் தண்டனை கிடையாது.

ஒரு இடத்தில் சட்டம் தவறுகையில் , இன்னொரு இடத்திலும் தவற வேண்டுமென்பது தங்கள் வாதமா?

இன்று நாட்டில் நடக்கும் எல்லா வழக்குகளையும் ஓத்தி வைத்து விட்டு
குஜராத் தீர்வுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.

குஜராத்தில் உள்ளவனை கேட்டால் அவன் வேறு ஓரு வழக்கை கை காட்டி அதை தீர்த்து விட்டு வா என சொல்லலாம். அவன் கை காட்டும் இடத்திற்கு போனால் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு கை காட்டலாம்.

இதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?

நாடாளுமன்றத்தில் குண்டு வைத்தாலும்,பஸ் ஸ்டான்டில் குண்டு வைத்தாலும் மரண தண்டனை தேவைதான். நான் உங்களோடு ஓத்து போகிறேன்.

இரண்டு இடங்களிலும் சாவது அப்பாவிகளே. அன்றாடம் பிழைப்புக்கு ஆளாய் பறக்கும் சாமாயன்ரை இவரது அரிப்புக்கு சாகடித்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.சாமானய மனிதரின் சாவு ஒரு குடும்பத்தையே கிழித்து போடுவது சாத்தியம்.

அப்சல் உணர்ச்சி வசப்பட்டு ஒரு நிமிடத்தில் இதை செய்யவில்லை. இந்த செயல் பலநாள் திட்டமிட்டு விளைவுகளை ஆராயந்து
விளைவுகளை விரும்பி அவர் சொந்த புத்தியுடன் விருப்பத்துடன் நிகழ்ந்தது. இவருக்கும் இந்த செயல்களை நிகழ்த்த இருந்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்


அவர் மனதில் இரக்கமோ, அன்போ இருக்க சாத்தியமில்லை. தன் வீட்டில் மனைவி, குழந்தையை வைத்துக் கொண்டு அவர்கள் முகத்தை தினமும் பார்த்துக் கொண்டு இந்த செயலுக்கு திட்டம் தீட்டியுள்ளார். அடுத்தவர் குடும்பத்துக்கு இதுதான் அவர் கொடுக்கும் மரியாதை. அவரிடம் குற்ற உணர்வோ, வருத்த உணர்வோ இருக்குமென்பதில் நம்பிக்கையில்லை.
இவர் போன்றவருக்கு மரண தண்டனை
என்பது தேவையே.

Unknown said...

//ஒரு இடத்தில் சட்டம் தவறுகையில் , இன்னொரு இடத்திலும் தவற வேண்டுமென்பது தங்கள் வாதமா?//
இல்லை. சட்டம் ஏன் selective ஆக தவறுகிறது என்பதுதான் வாதம்

கோவி.கண்ணன் [GK] said...

//தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள்//

நாங்களும் தனிபதிவு போட்டுவிட்டோம்ல ...!
:)
http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_06.html

Muthu said...

http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html

Anonymous said...

////ஒரு இடத்தில் சட்டம் தவறுகையில் , இன்னொரு இடத்திலும் தவற வேண்டுமென்பது தங்கள் வாதமா?//
இல்லை. சட்டம் ஏன் selective ஆக தவறுகிறது என்பதுதான் வாதம்
//

சுல்தான் சட்டம் selective ஆக தவறுதல் கூடாது. இந்தியர் அனைவருமே அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வருபவர்தான்.

பினாத்தல் சுரேஷ் said...

சிறில்,

நல்ல வேலை செய்யறீங்க; சிரமம் பார்க்காம, பதிவையே அப்பப்போ அப்டேட் செஞ்சீங்கன்னா, ஒன் - ஸ்டாப் ஷாப்பா இங்கேயிருந்தே எல்லா மரணதண்டனைப்பதிவுக்கும் போகலாம் பாருங்க!

அப்பாலே, (இதுக்கு சம்மந்தமில்லாதது) இட்லிவடையிலே நீங்க போட்டிருந்த ஒரு கமெண்டு என் மனதிலிருந்த மிருகத்தை எழுப்பிவிட்டது, விரைவில் எதிர்பாருங்கள்

சிறில் அலெக்ஸ் said...

சுரேஷ்,
கண்ணில் பட்டதையெல்லாம் தொகுத்துள்ளேன்.

உங்களுக்குள்ள இருந்த மிருகம் கொசு இல்லியே?

Anonymous said...

//////ஒரு இடத்தில் சட்டம் தவறுகையில் , இன்னொரு இடத்திலும் தவற வேண்டுமென்பது தங்கள் வாதமா?//
இல்லை. சட்டம் ஏன் selective ஆக தவறுகிறது என்பதுதான் வாதம்
//

சுல்தான் சட்டம் selective ஆக தவறுதல் கூடாது. இந்தியர் அனைவருமே அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வருபவர்தான்.//

சுல்தான் ஒரு விடயம் சொல்ல விட்டு விட்டேன்.

நீங்கள் சிறுபான்மையினர்,பெரும்பான்மையினர் என்ற நிலையில் பார்க்க நினைத்தால்

1)பாதிரியார் வழக்கில் சரியான தீர்ப்புதான் வழங்கப்பட்டது

2)ராஜிவ் காந்தி காலத்தில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நீதி மன்றம் ஒரு தீர்ப்பளித்தது. வழக்கின் விவரங்கள் நியாபகம் இல்லை

2)பெரும்பான்மையினாராக இருந்தும் காஷமிர பண்டிட்களுக்கு சட்டம் உதவ முடியவில்லை. சொந்த நாட்டில் அகதிகள்தான அவர்கள்

நாட்டின் எல்லா பிரச்சனைகளுக்கும் சட்டதின் வாயிலாக சரியான தீர்ப்புகள் சுடசுட வழங்க வேண்டுமென்பதே சரியானது. அதற்கு இன்னும் இந்தியா முன்னேற வேண்டும். இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறோம்.

எது கிடைத்தாலும் அரசியல் மசாலா தூவி இந்திய இறையான்மையை அடகு வைக்க நினைக்காமல் குற்றங்களை குற்றங்களாகவும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவும் பார்க்கும் மனம் வேண்டும். அதற்கு சிந்தனை முதிர்ச்சி வேண்டும். அந்த மாற்றம் வரும் போதுதான் சுட சுட சரியான தீர்ப்புகள் வழங்க இயலும்.

குழலி / Kuzhali said...

என் பதிவின் சுட்டி http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html

சிறில் அலெக்ஸ் said...

பதிவுகளை சேர்த்த நண்பர்களுக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

என்னய விட்டுட்டீங்களே, சிறில் ! நல்ல அலசல் !

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

சிறில் அலெக்ஸ் said...

பாலா,
நீங்க ஏழாவது. ஏற்கனவே சேத்தாச்சு.

enRenRum-anbudan.BALA said...

சிறில் அலெக்ஸ்,

The link you have given for MUTHU, points to Kovi.Kannan's posting. Pl. correct it !!!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி பால. சரி செய்துவிட்டேன்.

லக்கிலுக் said...

முடிஞ்சா இந்த ரெண்டையும் சேர்த்து விடுங்களேன் :

http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_23.html

http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_116115372637699678.html

We The People said...

இந்த பதிவையும் அப்படியே இணைத்துவிடுங்க.

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post_18.html

Unknown said...

//எது கிடைத்தாலும் அரசியல் மசாலா தூவி இந்திய இறையான்மையை அடகு வைக்க நினைக்காமல் குற்றங்களை குற்றங்களாகவும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவும் பார்க்கும் மனம் வேண்டும். அதற்கு சிந்தனை முதிர்ச்சி வேண்டும். அந்த மாற்றம் வரும் போதுதான் சுட சுட சரியான தீர்ப்புகள் வழங்க இயலும்.//

குற்றங்களை குற்றங்களாகவும் குற்றவாளிகளை குற்றவாளிகளாகவும் தான் பார்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நான் கேட்பது பொடா, தடா போன்ற சட்டங்களே தவறென்றான பிறகு அதனடிப்படையிலே அமைந்த தீர்ப்பு எவ்வாறு சரியானதாகும்.

இந்த மாதிரி சட்டங்களில் உங்களையும் என்னையும் அதாவது யாருக்கு வேண்டுமானாலும் தண்டனை பெற்றுத் தரவியலும். ஏனெனில் துன்புறத்தி வாக்குமூலம் பெற்று அதை குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆனால் மற்ற கிரிமினல் வழக்குகளில் துன்புறுத்தலுக்கு பயந்து சொன்னதாக நீதிபதிமுன் மறுத்தால் அவ்வாக்குமூலத்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியாது.

Anonymous said...

//சிலரை கடுமையாக தண்டிப்பதன்மூலம் தீவிரவாதத்தை நிச்சயம் ஒழிக்கமுடியாது என்பதும் ஒரு வாதமில்லையா?
//

You must be kidding me

பஞ்சாபில் தீவிரவாதம் எப்படி ஒழிந்தது?

மக்கள் எதிர்த்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க பஞ்சாப் போலீசார் தீவிரவாதிகளையும் அவர்களின் குடும்பத்தையும் "நன்றாக" கவனித்தார்கள்.

அதே சமயம், மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் ஏன் தீவிரவாதம் ஒழிந்தது என்று பார்த்தால் அதற்க்கு ராஜீவ் காந்தியின் அமைதி முயற்ச்சிகள் தான் காரனம்.

தீவிரவாத்ததை ஒழிப்பதில் எந்த standard operating procedureஉம் கிடையாது...

அப்சல் போன்ற ஆட்கள் மதங்களுக்காக போராடுபவர்கள். அவர்களுக்கு தூக்கு தான் சரி..ஆனால் மேகாலயா போன்ற இடங்களில் போராடியவர்கள் மக்களுக்காக அவர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும் என்று போராடியவர்கள்.There is a fundamental difference.

And the solution to each problem, naturally, has to be unique.

அப்புறம் moral standardகளை இங்கே நுழையவிடகூடாது.

பேச்சுகளிலும், வலைபதிவுகளிலும், utopian dialogeகளிலும் தான் இவை நன்றாக இருக்கும்.

No holier than thou nonsense please!

moralityஐ பற்றி மட்டும் பேசாதீங்க சாமி! அந்த கருமத்தை வச்சிகிட்டு புடுங்ககூட முடியாது.

இஸ்லாமிய அடிப்படைவாத்ததை வன்முறை மூலமாக மட்டும் தான் ஒழிக்க முடியும். கெங்கிஸ் கான் பாக்தாத் நகரை முடித்துக்கட்டியது போல...

பினாத்தல் சுரேஷ் said...

நானே இருந்திருந்து ஒரு பதிவு போடிருக்கென் சாமி! சேத்துக்கோங்க!

வெங்கட்ராமன் said...

இது என்னோட மரண தண்டனைப் பற்றிய ப்திவு.

http://rajapattai.blogspot.com/2006/10/blog-post_26.html

இத நீங்க கணக்கில் எடுத்துக் கொள்வீர்களா. . . .

Anonymous said...

சிரில்

சின்னதா ஒண்ணு

http://valai.blogspirit.com/archive/2006/10/25/அப்சல்-தீவிரவாதியா.html

G.Ragavan said...

ஒன்று புரிகிறது சிறில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. மதம். மொழி. நாடு என்று. இதில் ஒன்றுக்காக மற்ற அனைத்தையும் தியாகம் செய்யவும் தயங்காத கடமை வீரர்கள் அவர்கள். அடுத்தவன் தப்பு செய்யும் பொழுது அது இனிக்கிறது. ஆனால் வேண்டப்பட்டவர் செய்யும் பொழுது அதை மறைக்க எலும்பில்லா நாக்கு எல்லாப் பக்கமும் புரள்கிறது. வாழ்க மக்கள். வாழ்க உலகு. மனித குலத்திற்கு அழிவு மனிதனால்தான்.

(சரி...இப்படித் திரட்டிப் பதிவுகளா போட்டுக்கிட்டிருந்தா எப்படி? வழக்கமான சிறில் பதிவுகள் எங்கே? எங்கே? எங்கே?)

- யெஸ்.பாலபாரதி said...

அப்ப இது
http://balabharathi.blogspot.com/2006/10/blog-post_116124411449409319.html

:-)))

சிறில் அலெக்ஸ் said...

ராகவன் வேலையில ரெம்ப பிசி.. இது நடுவில சில ஓசிப் பதிவுகள் போட்டதே பெரிய விஷயமாப் படுது. நான் பாக்கிற மூணு ப்ரஜக்ட்டும் கோ-லைவ் நேரம் நெருங்குது..

உங்க எதிர்பார்ப்புக்கு நன்றி ... முடிந்தவரையில் வாரம் ஒன்றிரண்டாவது போட முயல்கிறேன் விரைவில்.

சிறில் அலெக்ஸ்