.

Friday, June 23, 2006

மதமாற்றமா? மனமாற்றமா?

மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.

ஒரு குட்டிக்கதை.

அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை.
அந்தப் பெண் இளைஞனிடம் "எனக்குப் பயமாயிருக்கிறது." என்றாள்.
இளைஞன் "என்ன பயம்?" என்றான். "நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் பெண்.
"அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த இடுக்குல காய்கறி கூட வச்சுருக்கேன். நான் எப்படி ஒன்ன இப்ப முத்தம் கொடுக்கிறது?". இளைஞன் வெகுளியாய் கேட்டான்.
"அரிசி மூட்டைய இறக்கி வச்சுட்டு, ஆட்டை அந்த மரத்துல கட்டிபோட்டுட்டு, காய்கறிக் கூடைய அரிசிமூட்டை மேல வச்சுட்டு வந்து என்னை கட்டி பிடிச்சு முத்தும் தருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் அந்தப் பெண்.




கருத்து : நாம் பயத்துல சொல்லும் விஷயங்கள் பல
நேரங்களில் நம் எதிரிக்கு சாதகமாய் அமைகின்றன அல்லது
நாம்தான்
நம்ம எதிரிகளுக்கு பல நேரங்களில் ஆலோசனைகளை தருகிறோம்.


'கட்டாய மதமாற்றம்' எனும் பதம் இப்போ பழக்கத்தில் வந்துள்ளது. மிஷனரிகள் எனப்படும் மதம் பரப்பும் கிறீத்துவ போதகர்கள் 'கட்டாயமாய்' மதம் மாற்றுவதாக பலர் நம்புகிறார்கள்.

உண்மையில் இது சாத்தியமா?

'கட்டாயம்' என்றால் என்ன? பலவந்தமாகவா? அது நிச்சயம் சாத்தியமில்லை. கிறித்துவர்கள் 2%மைனாரிட்டி என்பது ஒருபக்கமிருக்க, பலவந்தத்தம் செய்வதற்கு சரியான (அடிதடி) அரசியல் பின்னணி வேண்டும் என்பதும் அடிதடியில் இறங்கி கிறித்துவத்தில் மக்களை சேர்ப்பது, அதுவும் இந்தியா போன்ற சர்வதேச அரங்கில் எப்போதும் பேசப்படுகின்ற நாட்டில் செய்வது இன்றைய சூழலில் சாத்தியமில்லை. சுதந்திர இந்தியாவில் பலவந்தமாக யாரும் மதம் மாற்றப்பட்டதாக நான் இதுவரைக் கேள்விப் பட்டதில்லை.

பணம் தந்து மதம் மாற்றுகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு? ஒருவருக்கு ஒரு நாள் 1000 கொடுக்கலாம் ஆனா எல்லா நாளும் கொடுக்க முடியுமா? உண்மையில் மதம் மாறினால் காசு கிடைக்குமென்றால் இந்தியாவில், ஏழ்மை அதிகமிருக்கிறபடியால், கிறித்துவர்கள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கவேண்டுமென நினைக்கிறேன். அதுவுமில்லை. ஒரு மிதமான வளர்ச்சியையே கிறித்துவம் கொண்டுள்ளது, மற்ற சில மதங்களைவிட குறைவான வளர்ச்சியே இது.

கிறித்துவராகிவிட்டால் பணக்காரனாகிவிடலாம் என்கிறது யாரோ கனவிலிருந்து விழித்துவிட்டுச் சொன்னது. செயராமன் பதிவைப் படிக்கவும். (இவர் சொல்லும் சில விபரங்கள் சரியானதாக இல்லை என்றாலும்...)

இன்னுமொரு குற்றச்சாட்டு நன்மை செய்வதுபோல ஊருக்குள் வந்து மெதுவாக மதம் மாற்றுகிறார்கள் என்பது. இதற்கு எப்படி விளக்கம் சொல்வதென்று புரியவில்லை.

நல்லது செய்வதில் உள் அர்த்தம் கற்பித்துக்கொண்டு பலருக்கு கிடைக்கும் உதவியை தடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எத்தனை கிறித்துவ கல்விக்கூடங்கள், சமூக சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, மதம் மாறினால்தான் சேர்த்துக்கொள்வோமென்கிறதாய் எந்த நிறுவனமும் கூறியதாயில்லையே. அப்படியே மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்கள் பின்னால் சென்றால் என்னதான் தவறு? அன்னை தெரசா எத்தனைபேரை 'கட்டாய' மதமாற்றம் செய்தார்? அவர் செய்யாத சேவையா?

மதமாற்றம் நடப்பதேயில்லை எனச் சொல்வதற்கில்லை. நிச்சயம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும். ஏன் கிராமங்களுக்குப்போகவேண்டும்? , சென்னையிலேயே ஒன்றிரண்டுபேர் ஒவ்வொரு கோவிலிலும் (பொதுவாக) ஈஸ்ட்டர் திருநாளன்று மதம் மாறக் கண்டிருக்கிறேன். இவர்கள் எந்தவித கட்டாயத்திர்கு ஆளாக்கப்படுகிறாகள் என்பது அவர்களுக்கும் அவர்கள் கும்பிட்ட, கும்பிடப் போகின்ற கடவுள்களுக்குமே வெளிச்சம்.

என் கல்லூரித் தோழி, இந்து மதம் சார்ந்தவள், கிறித்துவப் பையனை காதலித்தாள், மணமுடித்தாள். அவள் கணவனைவிட இயேசுவை பெரிதாய் நினைக்க ஆரம்பித்துவிட்டாள். நான் எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன் தெய்வங்களை விடவும் இயேசுவே பெரிதாய் தோன்றினார்.

உண்மையில் அவளுக்கு என்ன நிகழ்ந்தது? தன் மதம் பற்றிய, அதன் அதிசயிக்கத்தக்க தத்துவ குணாதிசயங்கள் பற்றிய அறிவே இல்லாதிருந்தாள். நம்மில் எத்தனைபேருக்கு இந்துமதம் சொல்லும் தத்துவ இறையியல் பற்றித் தெரியும்? காப்பியங்களையே முழுமையாகத் தெரியாதவர்கள் எத்தனைபேர்.

எதையுமே எடுத்துச் சொல்லும்போது அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது அல்லது அதிக மதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் நல்ல பொருட்களைக்கூட கூவி விக்கவேண்டியுள்ளது. 'கட்டாயம்' என்பதை விட இந்த கூவி விற்கும் தன்மைதான் கிறித்துவ மத மாற்றத்தின் அடிப்படை வழியாக இருக்கிறது. இதற்கு ஜனநாயகத்தில் இடமுண்டு.

கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் எனப் பார்த்தால் அதை செய்பவர்கள் இரண்டுபேர். நம் தாய் தந்தை. தத்துவார்த்தமாக சிந்தித்தால் இது புரியும். பிறந்து ஒன்றுமறியா குழந்தைக்கு இதுதான் கடவுள், இவன் நம்ம மதம், இது நம்ம சாதின்னு பல வழிகள்ள எண்ணங்களை திணிக்கிறோம், அதை பின்பற்றச்சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். நாம் நல்லதே நினைத்து இதைச் செய்தாலும் இது ஒரு திணிப்புதான் என்பது உண்மை.

மதமாற்றம் எல்லா மதங்களும் செய்திருக்கின்றன. துவக்கத்திலுருந்தே எந்த மதமும் இப்போது இருக்கும் நிலையில் இருந்ததில்லை. கொஞ்சம் வரலாற்றை புரட்டினால் 'கட்டாய' மதமாற்றம் இல்லாமல் எந்தமதமும் இருக்கவில்லை என உணரலாம்.

மதம் மாறாதே என ஒருவரை கட்டாயப்படுத்துவதற்கும், மதம் மாறு என கட்டாயப் படுத்துவதற்கும் யாருக்கும் உரிமையில்லை.

எனக்குத் தெரிந்தவகையில் கத்தோலிக்க குருக்களும் கன்னியர்களும் மதமாற்றம் செய்ய சுய உந்துதல் உடையவர்களாகத் தெரியவில்லை. பலர் சமூக/ கல்வி நிறுவனங்களில் நமக்கு என்ன பதவி கிடைக்குமெனும் ஏக்கத்திலேயே காலம் தள்ளுகின்றனர். போய் மற்ற மதத்தினருக்கு இயேசுவை அறிவி எனச்சொன்னால் து.கா.து.கான்னு ஓட்டம்பிடிப்பவர்கள் பலர். அநேகம் பாதிரியார்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையே கிடையாதென்பதுபோலத் தெரியும். இவர்கள் போய் மதம் மாற்றுகிறார்கள் என்றால் நம்பமுடியவில்லை.

போப் 'அறுவடை' எனச் சொல்கிறாரே? அறுவடை என்பது இயேசு பயன் படுத்திய பதம். அதைத்தான் இவரும் பயன்படுத்துகிறார். "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு" இது இயேசு சொன்னது. இதில் எந்தவித தவறும் உள்ளதாகத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகம் கூவி வில்லுங்களளெனச் சொல்லுகிறார் அவ்வளவுதான். எல்லோரையும் போட்டுத்தாக்குங்க எனச் சொல்லவில்லை.

இந்தக் கூவி விற்கும் போது பல நேரங்கலில் அடுத்தவர் மனம் புண்படும்படி அவர்கள் விற்பதை (அல்லது வைத்திருப்பதை) தாழ்த்திப் பேசுகீறார்கள் என்பது கண்டிக்கப்படவேண்டியதே. இதைக் கண்டிக்க யாருக்கும் உரிமையுள்ளது. அதேபோல கூவி விற்பவர்களை அடுத்தவர் மட்டம் தட்டலாம்.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் நடக்கும்போது, "நீ என் கட்சியில்ல. இங்க வந்து ஓட்டுக்கேட்கக்கூடாது" என யாரையும் உங்களால் தடுக்கமுடியுமா? அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என நினைக்கிறேன்..

கொஞ்சம் தாறுமாறாகத்தான் இந்தப் பதிவு வந்துள்ளது. தோன்றிய எண்ணங்களை அப்படியே பதித்தேன்.

முடிவாக...

  • கட்டாய மதமாற்றம் என்பது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை.
  • மதமாற்றம் எல்லா மதங்களிலும் நடைபெற்றுள்ளன; இதில் பல கட்டாய மதமாற்றங்களும்.
  • நம் மதம் பற்றிய அறிவைப் பெற நாம் முயல வெண்டியது அவசியம்.
  • மதம் மாறு எனக் கட்டாயப் படுத்துவதற்கும் மதம் மாறாதே எனக் கட்டாயப் படுத்துவதற்கும் வித்தியாசமில்லை.
  • தன் கடவுள் யார் என்பதை தனி மனிதந்தான் நிர்னயிக்கவேண்டும்.
"ஒருவன் தன் கடவுளை பக்தியோடு வணங்க முடியாவிட்டால் எந்தக்
கடவுளையும் பக்தியோடு வணங்கமுடியாது." - இராமகிருஷ்ண பரமஹம்சர். இதுதான் மதமாற்றம் பற்றிய என் நிலைப்பாடு.

34 comments:

arunagiri said...

கூவி விற்பதையும், தேர்தலையும் உதாரணம் சொன்னது மிகப்பொருத்தம். கிறித்துவ மதப்பிரச்சாரம் என்பது ஒரு சந்தை வியாபாரம் மற்றும் மக்கள் மேல் அதிகாரம் இவற்றை அடிப்படையாய்க் கொண்டது என்றுதான் மதமாற்றத்தை எதிர்ப்பவரும் சொல்கின்றனர்.

கட்டாயம் என்று சொல்வது "compulsion" என்ற அர்த்தத்தில் அல்ல. சமூகத்தில் vulnerable-ஆக உள்ளவரிடத்தில் அந்த பலவீனத்தப் பயன்படுத்திக்கடை விரிப்பது சேவை அல்ல- coercion. coercion, compulsion இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. வட கிழக்கில் நடப்பது compulsion. பெற்றோரின் செயல்களை "திணிப்புகள்" என்பது சரியல்ல. அவர்கள் நடக்கும் வழியைக் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை ஆதர்சமாய்க் கொண்டு பின்பற்றுகிறார்கள்- தன் கலாசார குறியீடாக பரம்பரை பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் காட்டித்தருவது அவர்களுக்கு,
தான் ஒரு வரலாற்றின் தொடர்ச்சி என உணர்த்தி உளவியல் ரீதியாகவும், சமூகவியல் அடிப்படையிலும் பக்குவம் பெற உதவுகிறது. ஆனாலும் இந்த பாதிப்பு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே செல்லுபடி ஆகும்.
மத மாற்றம் என்பதை இத்துடன் ஒருமைப்படுத்த முடியாது. நிற்க.

கிறித்துவ மதப்பிரச்சாரம் எந்த சமூக சூழ்நிலையில் நடைபெறுகிறது எனக் கணக்கில் கொள்ள வேண்டும்.

காலனியாதிக்கத்தில் இந்திய நம்பிக்கைகளையும், கலாசாரத்தையும் கேவலமாய்ப்பேசியும், கிறித்துவ நம்பிக்கைகளை உயர்த்தியும் இந்தியத்தனத்தையே தாழ்வுணத்தி அடிமைகளாய் வைத்திருப்பதில் இது தொடங்கியது.

கிறித்துவ மிஷனரிகளுக்கும் தேவாலயங்களுக்கும்- பைபிள் மட்டுமே print செய்ய அனுமதி; கல்விக்கூடங்கள், மருத்துவமனை தொடங்க மிஷனரிகளுக்கு சிறப்புச் சலுகைகள்; வட கிழக்கிலோ பள்ளிகளில் பாடப்புத்தகங்களாக விவிலியம் கற்பித்தல், சகாய விலையில் தேவாலயம் கட்ட உதவி- என்றவாறு பலவகையிலும் தனிச்சலுகைகள் காட்டப்பட்டு ஆளும் வர்க்கத்தின் அரவணைப்பில் வளர்த்தெடுக்கப்பட்டது. கிறித்துவம் அவற்றின் நற்பண்புகளுக்காகவும் இந்து மதமோ அதன் "மூட" நம்பிக்கைகளுக்காகவும் முன் நிறுத்தப்பட்டது. வெள்ளைத்தோல்கள் அமெரிக்காவில் பூர்வீகர்களுக்கு எதிராக நிகழ்த்திய கலாசாரத்தாக்குதலை இந்தியாவிலும் மிகக்கடுமையாகவே செய்தது.

விடுதலைக்குப் பிறகு கிறித்துவ சர்ச்சோ இந்தியாவிலேயே (ராணுவத்திற்கு அடுத்து) அதிக நிலங்களை கைக்கொண்டு (நன்றி: காலனியாட்சி) அதனை மையமாக்கி சமூகத்தில் ஆதிக்கத்தைத் தொடர்ந்தது.

ஆனால், இந்து மதத்தை (மட்டுமே) எதிர்ப்பதும் இகழ்வதும் "முற்போக்கு" என்ற கேடு கெட்ட நிலை வளர்ந்தது. இந்து என்றால் இழிவு என்ற வகையில் அவமதிப்பு பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு கிறித்துவ சர்ச்சின் மறைமுக ஆதரவும் இருந்தது.

சர்ச் போன்ற கட்டமைப்பு இல்லாத நெகிழ்வுத்தன்மையாலும், இயல்பாகவே பிற கடவுளர்களை மதிக்கும் குணத்தாலும், நூற்றாண்டு அடிமைத்தன அவமதிப்பாலும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக இந்து சமூகம் ஒன்றிணைய முடியாமல் போனது.

நீங்களும் பிரச்சாரம் செய்து மத மாற்றம் செய்யுங்கள் என்று சொல்லாதீர்கள். இந்து தத்துவத்தில் மத மாற்றம் என்ற அடிப்படையே முதலில் இல்லை. இந்து தத்துவ சிந்தனையில் 'எல்லாம் ஒன்றுதான்' என்ற உணர்வு ஆழப்பதிந்த ஒன்று.

ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். உன் பாதையும் உண்மைதான் என்று சொல்வதற்குத்தான் உரிமை வேண்டும். என்பாதைதான் உண்மை- உன்னுடையது உண்மை அல்ல என்று சொல்வதற்கு உரிமை கூடாது. மீண்டும் சொல்கிறேன். "உன் பாதையும் உண்மைதான் என்று சொல்வதற்குத்தான் உரிமை வேண்டும். என்பாதைதான் உண்மை- உன்னுடையது உண்மை அல்ல என்று சொல்வதற்கு உரிமை கூடாது".
இந்து மதம் தருவது முதல் வகை சுதந்திரம். கிறித்துவ மதப்பிரச்சாரம் கேட்பது இரண்டாம் வகை "சுதந்திரம்".

இந்து மதத்திற்கு மீள்மாற்றம் செய்வதை கிறித்துவ அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. வட கிழக்கில் யூத மதத்திற்கு மாற்றம் செய்யும் முனைப்புகளைக்கூட சர்ச்சின் அழுத்தத்தால் தடை செய்தது மத்திய அரசு, தெரியுமா?

இந்து மதம் பற்றி அறிவு இல்லை என்று நீங்கள் சொல்வது சரியான குற்றச்சாட்டுதான். ஆனால் ஒரு சராசரி இந்துவின் மத சூழல் எவ்வாறு உள்ளது என்பதையும் யோசித்துப்பாருங்கள்:
இந்து மதத்தையும் இந்துக்களின் நம்பிக்கையையும் அசிங்கமாய்ப்பேசி, கேவலப்படுத்தி அதனையே முற்போக்காக முன்வைக்கும் நிலை உள்ளது. இந்துக்களின் கோவில்கள் கிறித்துவர்களாலும், முஸ்லீம்களாலூம், நாத்தீகர்களாலும், இந்து மத நம்பிக்கையற்றவர்களாலும் நிர்வகிக்கப்படலாம் - அவற்றின் வருமானங்கள் பிற மத நிறுவனங்களுக்கு திசை திருப்பக்கூடப்படலாம், கிறித்துவத்திற்கு இது போன்ற நிலை இல்லை. இந்து கோவில்களில் இருந்து பெறப்படும் பணத்தில் எத்தனை விகிதம் இந்து நம்பிக்கைப்பரவலுக்காகவும், இந்து நம்பிக்கை வலுப்படவும் செலவழிக்கப்படுகிறது? கிறித்துவ சர்ச்களுக்கு இந்நிலை இல்லை.

இயல்பாகவே இயேசுவையும் ஒரு கடவுள் என ஏற்றுக்கொள்ள முன் வருபவன் சராசரி இந்து. ஆனால் அவன் மத சூழ்நிலை எப்படியெல்லாம் அவனை பாதிக்கிறது- அவனது மத நம்பிக்கைகளை வலுப்படுத்த முயற்சி எடுக்காத ஆனால் அவனது வழிபாட்டுத்தலங்களைக் கைக்குள் வைத்திருக்கும் "மதம் சாரா" அரசு ஒரு புறம். முற்போக்கு என்ற பெயரில் இந்து மதம் மட்டும் selective-ஆக இழிவு செய்யப்படும் நிலை ஒரு புறம். இந்நிலையில் என்கடவுள் மட்டுமே உண்மை என உரத்த குரலில் விற்கும் வரும் மத மாற்ற விளம்பரதாரர் ஒரு புறம். நம் நாட்டு "மத சார்பின்மை" நல்ல ஒரு அறுவடைக்களத்தை கிறித்துவத்திற்கு அளித்து உள்ளது. அந்த வசதி இந்துக்களுக்கு இல்லை. சொல்லுங்கள் சிரில், வியாபாரம் என்றே சொன்னால் கூட இது என்ன level playing field-ஆகவா உள்ளது?

மேற்கூறிய பல காரணிகளால் தாக்கப்பட்டும் தன் மதப்பாரம்பரியம் குறித்த பெருமிதம் இல்லா ஒரு சூழலில் சராசரி இந்து மதம் மாறாமல் இருப்பதுதான் அதிசயம்- நம் முன்னோரும், சித்தர்களும், முனிவர்களும் செய்த புண்ணியம்.

"மதம் மாறு எனக் கட்டாயப் படுத்துவதற்கும் மதம் மாறாதே எனக் கட்டாயப் படுத்துவதற்கும் வித்தியாசமில்லை."

உண்மை. இரண்டையுமே தடை செய்ய வேண்டும். சரியா?
மதம் மாறு என கடை விரிப்பது உள்ளவரை மாறாதே என கடை விரிப்பதும் இருக்கும்.

""ஒருவன் தன் கடவுளை பக்தியோடு வணங்க முடியாவிட்டால் எந்தக்
கடவுளையும் பக்தியோடு வணங்கமுடியாது." - இராமகிருஷ்ண பரமஹம்சர். இதுதான் மதமாற்றம் பற்றிய என் நிலைப்பாடு"

நன்று சொன்னீர். இதனை கிறித்துவர்கள் ஒப்புக்கொண்டால் மத மாற்றம், பிரச்சாரம் எதுவும் தேவையில்லை. ஆனால் அதற்கு முதலில் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்களை உண்மையென ஒப்புக்கொள்ளத்தயாராய் இருக்கவேண்டும். இருக்கிறார்களா? நீங்கள் இருக்கிறீர்களா? (ஒரு மகதலேனாவுக்கே மண்டை காய்கிறது).

பி.கு: ஏன் கிறித்துவ பிரச்சாரகர்கள், முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஏரியாக்களுக்கும், தர்கா எதிரிலும், சேரிகளுக்கும் சென்று மதமாற்றப் பிரச்சாரம் செய்வதில்லை என்று தெரிந்தால் சொல்லவும்.

Anonymous said...

Cyril

I agree with you compulsory conversions are not possible in all places. But such conversions are still hapenning in North eastern states.

1. I've personally witnessed how low a Pastor can go in conveting a target. My friend's brother was admitted in Madurai Mission Hospital. I went there to see him. In front of us, a preacher (I think his name was Rajan Iyer or something, I dont remember his name now, but he is a popular speaker) was there telling my friends family that he will take care of all his medical expeneses. In return he wanted the entire family to convert. The same night my friend brought his brother back and in few weeks he died too. I was a personal witness to that.


2. There are few churches in Madurai Tirunagar suburb. Many poor people would go to the clinics attached to those churches. I accompanied and taken few in my bicycle. The first order on entry would be to wash the Kungumam or Viboothi on the foreheads of those poor villagers. Next thing, they would ask them why they contuinue to worship such evil Satans (Murugan, Ganapathy, Amman are those Satans)

3. I also knew some cases where the subordinates of a top ranking officer were lured to convert in our organization.

4. If you visit each and every village in the nook and corners of Tamil Nadu you will find hundreds of such incidents.

Conversions are happening one way or other. Even the attempt of such conversions should be forcibily condemned and opposed by saner guys like you. But unfortunateley your real intentions are exposed by this post.

No Hindu try to convert any other religions people now. So why cant you reciprocate the same gesture to Hindus too ? Such attempts of luring people creates serious contentions between two communities and create problems. As long as church stops with catering to the spiritual needs of Christians alone, there are no issues. All these missionaries dont have any right in calling our gods in bad tastes and calling hindus as sinners. They should stop doing that.

சிறில் அலெக்ஸ் said...

//அவர்கள் நடக்கும் வழியைக் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை ஆதர்சமாய்க் கொண்டு பின்பற்றுகிறார்கள்- தன் கலாசார குறியீடாக பரம்பரை பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் காட்டித்தருவது அவர்களுக்கு,
தான் ஒரு வரலாற்றின் தொடர்ச்சி என உணர்த்தி உளவியல் ரீதியாகவும், சமூகவியல் அடிப்படையிலும் பக்குவம் பெற உதவுகிறது. ஆனாலும் இந்த பாதிப்பு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே செல்லுபடி ஆகும். //

அஎத வயதுக்கப்புறம் அவரெந்த மதத்தையும் தேர்ந்தெடுக்கலாமில்லையா..அப்போ தன் மதத்தை தேர்ந்தெடுக்கச்சொல்லி ஒருவர் விளம்பரப்படுத்துவது தவறா?

சிறில் அலெக்ஸ் said...

//விடுதலைக்குப் பிறகு கிறித்துவ சர்ச்சோ இந்தியாவிலேயே (ராணுவத்திற்கு அடுத்து) அதிக நிலங்களை கைக்கொண்டு (நன்றி: காலனியாட்சி) அதனை மையமாக்கி சமூகத்தில் ஆதிக்கத்தைத் தொடர்ந்தது.
//
இருந்தாலும் 2% கிறித்தவர்களே இன்றளவும் இருக்கின்றனர்.

//ஆனால், இந்து மதத்தை (மட்டுமே) எதிர்ப்பதும் இகழ்வதும் "முற்போக்கு" என்ற கேடு கெட்ட நிலை வளர்ந்தது//

சதி தீண்டாமை எல்லாம் இருந்தா நல்லாருக்குமா?

//இந்து தத்துவ சிந்தனையில் 'எல்லாம் ஒன்றுதான்' என்ற உணர்வு ஆழப்பதிந்த ஒன்று.//

இந்த அடிப்படையில் மதமாற்றத்தை அனுமதிக்கலாமே?

இதே அடிப்படையில் நான்கூடச் சொல்வேன் நான் இந்துதான் என்று.

//சிரில், வியாபாரம் என்றே சொன்னால் கூட இது என்ன level playing field-ஆகவா உள்ளது? //
85% Vs 2%

சிறில் அலெக்ஸ் said...

//பி.கு: ஏன் கிறித்துவ பிரச்சாரகர்கள், முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஏரியாக்களுக்கும், தர்கா எதிரிலும், சேரிகளுக்கும் சென்று மதமாற்றப் பிரச்சாரம் செய்வதில்லை என்று தெரிந்தால் சொல்லவும்.//

ஆபிரகாமிய மதங்களுக்கு மூலக் கடவுள் ஒருவரே. இதனால் இருக்கலாம்.

கிறித்துவர்கள் யூத, மற்றும் இஸ்லாமியர்களைதிருமணம்செய்ய சில சட்டச் சலுகைகள் இருக்கின்றன.

சிறில் அலெக்ஸ் said...

அருணகிரி,
இன்னுமொன்று சொல்லநினைத்தேன்.. இந்தியாவில் கிறித்துவர்கள் முதலாம்நூற்றாண்டிலிருந்தே இருக்கின்றனர்.

ஆங்கிலேய ஆட்சியில்தான் கிறித்துவம் வந்ததென்று நினைப்பது தவறு.

arunagiri said...

சிரில், நீண்ட பதிலாக எழுதியதால் என் பதிலை முழுமையாகப்படிக்காமல் முதல் 2 பாராக்களை மட்டும் படித்து விட்டு வந்து கேள்வி கேட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். முழுதும் படித்து விட்டு வாருங்கள். உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது. "உன் பாதையும் உண்மைதான் என்று சொல்வதற்குத்தான் உரிமை வேண்டும். என்பாதைதான் உண்மை- உன்னுடையது உண்மை அல்ல என்று சொல்வதற்கு உரிமை கூடாது" என்பது பற்றி யோசியுங்கள். நான் சில கேள்விகளை எழுப்பியுள்ளேன். அவற்றைப்பற்றியும் சிந்தனை செய்து உங்கள் பதில்களை எழுதுங்கள்.

சிறில் அலெக்ஸ் said...

To anony and evryone,
\If you know (or think or been taught) that something is the abslute truth what would you do?

These people think that Jesus isthe absolute truth. And they are paid to sell Jesus.

arunagiri said...

"சதி" என்பது முகலாய வெறியர்களின் பாலியல் கொடுமைகளுக்குப்பயந்து இந்து ராஜ குலப்பெண்கள் தேர்ந்தெடுத்தது. சடங்காக்கப்படும் நிகழ்வுகள் போல பிற்காலத்தில் ஆகி விட்ட கொடுமை அது. இதனை எதிர்த்துக்குரல் கொடுத்து போராடியவர்கள் இந்துக்கள். கிறித்துவ எவாஞ்சலிகல் பாதிரிகள் இப்படிப்பட்ட விஷயங்களை இந்து மதம் என்று காட்டி கேவலப்படுத்த மட்டுமே உபயோகித்துக்கொண்டனர். மற்றும் நாம் பேசுவது இன்றுள்ள கிறித்துவ சதி பற்றித்தான் (ஜோஷுவா திட்டம் குறித்துப் படித்திருக்கிறீர்களா? 10/40 என்றால் என்ன என்று அறிவீர்களா?).
நான் சொல்வது இந்து மதம் மட்டுமே selective-ஆக இகழப்படுகிறது - மதமாற்றிகளுக்குக் களம் அமைத்துத்தரும் வகையில் என்பதைத்தான்.

2% என்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டாம். 2% ஆட்களுக்கு ஏன் இவ்வளவு நிலம், சர்ச், வெளிநாட்டுப்பணம்? 2% ஆட்களுக்காக ஏழு மாநிலங்களில் ஏன் ஒரு படம் தடை செய்யப்படுகிறது?
மற்ற 2% குறித்து பிற நேரங்களில் வாய் கிழியப்பேசும் முற்போக்கு வயிற்றுப்போக்குகள் இது குறித்து இடிபோல மவுனம் சாதிப்பது ஏன்?

(சென்சஸ் எடுத்து 15 வருடங்கள் ஆகி விட்டன. மைனாரிட்டிகளின் பைக்குள் கிடக்கும் நம் நாட்டு "மத சார்பில்லா" அரசில் சென்சஸ் என்பது ஒரு பெரும் farce.பல கிராமங்களில் முஸ்லீம்களும், கிறித்துவர்களும், குறைவாகவே எண்ணிக்கை காட்டுவர். எனக்குத்தெரியும் -ஒரு quasi-givernment அமைப்புக்க்காக குடும்ப நல புள்ளி விவரச்சேகரிப்புக்காக கிராமங்களில் செல்கையில் நேரே கண்டிருக்கிறேன்).

பிரிட்டிஷார்தான் கிறித்துவத்தைக் கொண்டு வந்ததாகச் சொல்லவில்லை. ஆனால் ஆள்பிடிக்கும் அமைப்பாக, அதிகார படிக்கல்லாக கிறித்துவத்தை மாற்றிய "பெருமை" போர்ச்சுகீசியரையும் ஆங்கிலேயரையுமே சாரும். இதனால் பாதிப்புக்குள்ளானது கேரளத்தின் (முதல் நூற்றாண்டில் உண்டான) Orthodox Syrian Christianகளும்தான் என அறிகிறேன். Evangelicalகள் மற்றும் மேற்கத்திய பணமிகு சர்ச்களின் கைப்பிடியிலுள்ள நம் நாட்டு திருச்சபைகளுடன் Orthodox Syrian சர்ச்சை ஒப்பிடவில்லை.

கீழ்க்கண்ட வாக்கியங்களை எழுதியது இந்து அல்ல, ஒரு கிறித்துவர்:

"In my opinion, most Christians born and raised in India's diverse milieu are innately liberal and pluralistic in their outlook. Therefore, they should now raise their voices against the divisive activities of the evangelical Christians, especially those that are bankrolled by the Western churches. Failure to do so is likely to do harm both to the religious freedom of India's minorities and the territorial integrity of that nation. The peripatetic foreign missionaries certainly have no stake in preserving the territorial integrity of India. But, Indians of all religions do. Besides, separatist movements in Northeast India have been suspected of deriving support from foreign missionary groups. Given the sordid history of Western Christianity, eternal vigilance is indeed prudent.
...
I am not at all surprised at the emerging rise of Hindu nationalism in India, given the historical experience of the Hindus whose faith had been assaulted first by Muslim invaders and subsequently by European colonizers. Since the citizens of India can now think for themselves, they can demand that they be shielded from intrusive evangelical activities through the use of democratic means.
...
For years, I used to think that the complaints of many Hindus about the use of economic inducements as a means of conversion to Christianity may be exaggerations until I personally came across incidents such as a Catholic school's offer to defray the marriage expenses of Hindu girls if they agree to wed Christian boys. Anti-conversion laws may be the only civil means available for Indian states to deter such nefarious conversion activities"

நீளமான கட்டுரைதான், ஆனால் மத மாற்றம் குறித்த சிந்தனையுள்ள ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய கட்டுரை. முழுமையாக ஒருமுறை படித்து விடுங்கள்:

http://www.sulekha.com/blogs/blogdisplay.aspx?cid=4616

உங்களைப் போன்ற லிபரல் கிறித்துவர்கள் மத மாற்றத்திற்கு எதிராகக்குரல் கொடுப்பது இந்தியாவிற்கும், இந்து கிறித்துவ ஒற்றுமைக்கும், இந்திய கிறித்துவத்திற்கும் பெரிதும் நன்மை பயக்கும்.

வஜ்ரா said...

சிறில்,

நல்ல பதிவு...

//
நம் மதம் பற்றிய அறிவைப் பெற நாம் முயல வெண்டியது அவசியம்.
//

சரியாகச் சொன்னீர்கள், இது தான் நம்மிடம் இல்லை...


//
//இந்து தத்துவ சிந்தனையில் 'எல்லாம் ஒன்றுதான்' என்ற உணர்வு ஆழப்பதிந்த ஒன்று.//

இந்த அடிப்படையில் மதமாற்றத்தை அனுமதிக்கலாமே?

இதே அடிப்படையில் நான்கூடச் சொல்வேன் நான் இந்துதான் என்று.
//

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் இந்து தான். இஸ்லாமியர் கூட இந்து தான்...

ஆனால் political ideology போல் இறை நம்பிக்கையை செயல்படுத்துவது தான் தவறு...அதைச் செய்யும் சர்ச்சை உங்களைப் போன்றவர்கள் கண்டிக்கவேண்டும்...

அருணகிரியின் பின்னூட்டங்களும் பார்த்தேன்...

//
உங்களைப் போன்ற லிபரல் கிறித்துவர்கள் மத மாற்றத்திற்கு எதிராகக்குரல் கொடுப்பது இந்தியாவிற்கும், இந்து கிறித்துவ ஒற்றுமைக்கும், இந்திய கிறித்துவத்திற்கும் பெரிதும் நன்மை பயக்கும்.
//

அவர் கருத்தை நான் வழி மொழிகிறேன்.

திராவிட தமிழர்கள் said...

http://dravidatamils.blogspot.com/2006/05/blog-post_31.html

சிறில்,

தகவலுக்காக மட்டும்..இந்த பதிவையும் பாருங்கள்

சிறில் அலெக்ஸ் said...

அருணகிரி,
கலாச்சாரம் கெட்டுப்போச்சுன்னு கொஞ்சநாளா சத்தம்போட்டுக்கிட்டிருந்தோம்..மேற்கத்திய கலாச்சாரம் வரத்தான் செய்கிறது, கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை மாற்றத்தான் செய்தது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது.

arunagiri said...

"மேற்கத்திய கலாச்சாரம் வரத்தான் செய்கிறது"

கலாசாரம் கெட்டுப்போச்சு என்று ராமதாஸ்தனமாக கூக்குரல் இடுவதில் எனக்கு சம்மதமில்லை. மேற்கத்திய கலாசாரம் வரலாம், அதிலுள்ள பல நல்ல அம்சங்களை நாமும் ஸ்வீகரிக்கலாம். தப்பில்லை. நமது பல விஷயங்களை மேற்கு ஏற்றுக்கொண்டு முன்னேற்றம் கண்டுள்ளது; காண்கிறது. நம் பாரத கலாசாரம் என நான் சொல்வது ஒரு திறந்த கலாசாரமாக, பல ஆண்டுகளாக தன்னை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தி அதன்மூலம் சமுதாய புதுப்பித்தலையும் அனுமதித்தே வந்திருக்கிறது. ஆபிரஹாமிய மதங்களின் கைப்பிடியில் இருந்தவரை ஐரோப்பா இருண்ட காலத்திலேயே இருந்தது என்பதை நினைவில் இருத்தவும்.

"ஆபிரகாமிய மதங்களுக்கு மூலக் கடவுள் ஒருவரே. இதனால் இருக்கலாம்".

பின் ஏன் சிலுவைப் போர்கள், மூலக்கடவுள் ஒன்றுதான் என விட்டு விடுவதுதானே. இரண்டு உலகப்போர்களுக்கும் ஆபிரஹாமிய மத நம்பிக்கைகளே அடித்தளம் அமைத்துக் கொடுத்தன என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

"ஆனால் தனக்கு தெரியாத விசயத்தில் எங்கிருந்து உரிமை வந்தது?"

தனக்குத் தெரியாத விஷயத்தைத் தவறென்று கூற ஆபிரஹாமிய மதவாதிகளுக்கு எங்கிருந்து துணிவு வருகிறதோ அதனை விட மேம்பட்ட ஒரு சிந்தனைத்தளத்திலிருந்து வருவது 'உன் பாதையும் உண்மைதான்' என்ற பெருந்தன்மை. உங்களுக்குப் புரியாதடியாத்தி, விட்டு விடுங்கள்.

Amar said...

Excellent points.
ஆனால் வட-கிழக்கு மாநிலங்களை பற்றி அருனகிரியார் சொல்வது உன்மையாக தான் படுகிறது.

வஜ்ரா said...

அருணகிரி அடி ஆத்தியை விட்டுவிடுவது நல்லது (விவாதம் தேவையில்லாமல் திசை திரும்பும்)...கிணற்றுத் தவளைகளுக்கு சமுத்ரத்தைப் பற்றி என்ன தெரியும்.

Anonymous said...

சிறில்,

நீங்கள் கிருத்துவராயிருப்பதனால் சற்றுப் பிரசார நெடி அடிக்கிறது. ஆனாலும் கொஞ்சம் நியாய உணர்வுள்ளவராயும், சிந்திப்பவராகவும் தெரிவதால் உங்களுக்கு ஒரு குட்டிக் கதை.

கி.பி.2036. மனிதர்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு பிரபஞ்ச உயிரினம் புவியில் இறங்கி, நட்பாய்க் கை குலுக்கி விட்டார்கள். ஆனால் அவர்கள் உண்மையான நோக்கம், மனிதக்கறி தின்பதும், ஏற்றுமதி செய்வதும்தான். இதை எதிர்ப்பில்லாது, ரகசியமாய்ச் செய்ய வேண்டும். பின்வருமாறு செய்தார்கள்.

'இந்த உலகையும் உங்களையும் படைத்த கடவுளே எங்களை இங்கு அனுப்பினார். நாங்கள் அவர் தூதர்கள். உங்களுக்கு அவர் உலகை எப்படிப் படைத்தார் என்பது பற்றிய குழப்பங்கள் தீரவே எங்களை அனுப்பினார்.' என்று சொல்லி வெறும் காற்றில் ஒலியும், ஒளியும் (ஹி,ஹி) தோன்றியது. புவியின் படைப்பும், மோஸஸ், ஜீஸஸ் மற்றும் முகமதுவின் வாழ்வு நிகழ்சிகளும் காட்டப்பட்டன. தனியொரு மனிதனாகவோ, குழுவாகவோ எப்பொழுதுப் போய்க் கேட்டாலும், எச்சூழலிளும் தூதர்களால் இவற்றைக் காட்ட முடிந்தது. விஞ்ஞானிகள் தேவாலயங்களில் சரணடைந்தார்கள். ஒன்றாய்ச் சேர்ந்த ஆபிரகாமிய மதத்தினர் மிகுந்த மகிழ்சியோடு, மற்ற மதத்தினர், மற்றும் கடவுளை நம்பாதவர்களிடம் 'மனமாற்றம்' செய்தனர். மீறி எதிர்த்தவர்கள் தூதர்களிடம் நரகத்திற்குக் கொண்டு செல்ல ஒப்படைக்கப்பட்டனர். அப்புதிய ஒன்றான மதத்தவரும், தூதர்களால் தேர்வு செய்யப்பட்டு, பெரும் குழுக்களாய் கடவுளைப் பார்க்க அனுப்பப்படுவதும் உண்டு.

இந்தக் கதை புரிந்தவர் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். :)

Anonymous said...

ஒரு சிறப்பான பதிவு. தைரியமாக உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லியிருப்பதில் மகிழ்ச்சி.

மதமாற்றம் என்ற உடனே கிறிஸ்தவர்களை நோக்கி நீட்டப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏன் என்று தெரியவில்லை. ஒரு விதமான பயம் என்று வைத்துக் கொள்ளலாம். கிறிஸ்தவர்களுக்கு இயேசுவால் இடப்பட்டிருக்கும் கட்டளைகளில் கவனிக்கப் படவேண்டியவை 'உலகமெங்கும் போய் எல்லா இனத்தாரையும் எனது சீடர்கள் ஆக்குங்கள்' என்பதும், 'உலகிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்' என்பதும்.
உண்மையான ஒரு பிராமணன் எப்படி பூணூலை பாதுகாக்கிறானோ அப்படி உண்மையான ஒரு கிறிஸ்தவன் தனக்கு கிறிஸ்துவால் இடப்பட்ட கட்டளையை காப்பாற்றியாக வேண்டும். இல்லையேல் அவன் கிறிஸ்தவனே அல்ல. ஆனால் கிறிஸ்தவர்கள் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள் (பல வேளைகளில்) அது என்ன வென்றால், 'நீங்கள் யார் என்பதை உங்கள் செயல்களால் காட்டுங்கள்' என்னும் கிறிஸ்துவின் கட்டளையே அது. அப்படியானால் அதன் பொருள் என்ன ?

என்னுடைய கட்டளைகளை உன் வாழ்வில் கடைபிடிப்பதன் மூலமாக மக்களுக்கு ஒரு முன்மாதிரிகையாக இரு. அப்படி நீ இருக்கும் போது நீ என்னைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறாய் என்பதே. ஆனால் பலருக்கு செயல் வழிப் போதனைகள் பிடிப்பதில்லை. இது தவறு.

2% கிறிஸ்தவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை தான். என்னுடைய கணிப்புப் படி தமிழ்நாட்டில் 25% கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஊர் ஊராக மாறி மாறி வேலை பார்க்கும் யாருக்கும் இது தெரியவரும். விருது நகரில் 100% இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எல்லா வீட்டிலும் பெண்கள் கிறிஸ்தவர்களாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் தங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. காரணம் சமுதாயத்தைக் கண்டு அவர்களுக்கு எழும் பயம்.

மெடிமிக்ஸ் சோப் மிகச் சிறந்தது என்று விளம்பரம் வந்தால், சிந்தால் சோப் அபாரமானது என்று ஒரு எதிர் விளம்பரத்தையே நான் எதிர்பார்க்கிறேன். மாறாக மெடிமிக்ஸ் சோப் பற்றி பேசுபவர்களைத் துரத்துவதோ, மெடிமிக்ஸ் உபயோகிப்பவர்களை எரிப்பதோ, பாலியல் பலாத்காரம் செய்து பாவம் சேர்ப்பதோ அல்ல. ( அப்படிச் செய்கையில் எனக்குத் தோன்றுவதெல்லாம் ஒன்று தான். சிந்தால் சோப் புக்கு எந்த சிறப்பும் இல்லை போலிருக்கிறது )

உன் மதமும் என் மதமும் சரி என்று பொத்தாம் பொதுவாக சொல்வதை கிறிஸ்தவம் அனுமதிப்பதில்லை.
'எவனும் இரண்டு தலைவனுக்கு ஊழியம் செய்ய முடியாது' என்பதில் கிறிஸ்தவத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்து மதத்தில் மத நல்லிணக்கம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயல்கிறார்கள். ஆனால் ஐயர்களும், ஐயங்கார்களும் அதிகமாய் உலவும் என்னுடைய அலுவலகத்தில் அவர்களுடைய உண்மை முகத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

எந்த மதத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை மக்கள் முடிவு செய்யட்டும்,
மாறுவதற்கு முடிவு செய்து விட்டால் மத நல்லிணக்கவாதிகள் தடுக்காதிருக்கட்டும்.

-

வின்செண்ட்

arunagiri said...

மீண்டும் மீண்டும் வரும் பதிவுகள் கிறித்துவம் ஒரு (சோப்) வியாபாரம் போன்றதே என்பதையே சொல்கின்றன. ஒப்புக்கொண்டதற்கு நன்றி. ஆதிக்க அரசியலுக்கு அடிக்கல்லாகவே மத மாற்றம் பயன்படுகிறது, இதில் இறைமை குறித்த மனமாற்றம் என்பது போன்ற ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்பதுதான் நான் சொல்வதும். 25% என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. மைனாரிட்டி "பதவி" பறி போகாமலிருக்க "மதம் சாரா" சென்சஸ் மூலம் கிட்டும் 2% என்ற பொய் எத்தனை வசதி- இல்லையெனில் லெவெல் ப்ளேயிங் ஃபீல்டு குறித்து ஜல்லியடிக்க முடியுமா, என்ன?

இதில் பிராமணரை இழுக்கும் குள்ளநரித்தனமும் எதிர்பார்த்தது போலவே வந்து விட்டது-என்னவோ கிறித்துவ மதம் மதுரை வீரனுக்கும், எல்லக்காளிக்கும், இயற்கை வழிபாட்டுக்கும், நாட்டார் தெய்வங்களுக்கும் ஓ.கே. சொல்லிவிட்டது போல- இந்து மதத்தில் மட்டுமே இவற்றிற்கும் அங்கீகாரம் உண்டு என்பதை வசதியாய் மறைத்தும், பிராமணரைத்திட்டி வாதத்தை திசைதிருப்பியும் பல வயிற்றுப்போக்குப்பதிவுகள், வஜ்ராஷங்கர் எச்சரித்தபடி இங்கே இனி கொட்டப்படும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதே. பிரித்தாளும் சூழ்ச்சியும் வியாபாரம் செய்ய வந்து அடிமைகளாக்குவதும் கிறித்துவம் காலடி வைத்த பல தேசங்களும்- இந்தியா உட்பட- கண்டதுதான். மற்றபடி இது போன்ற மூளை வறண்ட பதில்களில் புதிதாக ஒன்றும் இல்லை.

சிறில் அலெக்ஸ் said...

அருணகிரி.. சில கேள்விகள்...

1. மதமாற்றம் என்று வரும்போதுதான் பலரும் அடிமட்ட இந்துக்களை நினைவில் கொள்கிறார்கள் இது ஏன்?

2. பிரித்தாளும் கொள்கை கிறித்துவப் பழக்கம் என வைத்துக்கொள்வோம். அப்போ சாதி என்றால் என்ன?

3. வட கிழக்கு என்கிறீர்களே அங்கே கொடுமை நடப்பதாக நீங்களே யூகிப்பது எப்படி, அங்கே உள்ள மக்கள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாதபோது?

4. மதமாற்றம் தவறா?

5. இந்து மதம் 'கட்டாய' மத மாற்றம் செய்துள்ளதா இல்லையா?

6. எல்லா நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் ஏன் குழந்தைகளை உயிரோடு வைத்து எரிக்க வேண்டும்?

7. இந்திய சென்சஸ் தவறென்றால் உங்கள் கணக்கு/யூகப்படி கிறித்துவர்கள் எத்தனை சதவீதம்?

8. சமஸ்கிருதமமெப்படி அழிந்தது அல்லது பழக்கத்தில் இல்லாமல் போனது?

9. பெரியாரின் கடவுள் இல்லை எனும் இயக்கத்துக்கும் மதமாற்றத்திற்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே இந்துக்கள் எண்ணிக்கையை குறைக்கவும் மதத்தை குறைகூறவும் செய்யுதே? நம்மால் மதம் இல்லை எனக்கூறும் இயக்கத்தை சட்டம் போட்டு தடை செய்ய முடியுமா?

Anonymous said...

//எந்த மதத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை மக்கள் முடிவு செய்யட்டும்//
ஆமாம், எந்த மதம் அதிக சலுகைகளைத் தருகிறதோ அதற்கு மாறட்டும் இல்லையா? ஈழத்தில் இனப்பிரச்சினையைக் காரணங்காட்டி பலர் இன்று மதம் மாற்றப்படுகிறார்கள். (இங்கு கட்டாயம் இல்லை, ஆனால் சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள்). இதேபோல் சலுகைகளுக்காக ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த பலர் கனடாவில் மதம் மாறுவதாக அறிகின்றேன்.

மிதக்கும்வெளி said...

ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன ஆடு-இளைஞன் -இளம்பெண் கதையில் தெரிவது பயமல்ல,முத்தம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம்தான்.நிற்க,மதமாற்றத்தின் பின்னுள்ள இந்து சாதியமைப்பை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.கிறித்துவ மிஷனரிகள்தான் மதம் மாற்றின,சரி,இன்றுவரை முஸ்லிம்களில் மதம் மாற்றுவதை ஒரு வேலைத்திட்டமாகக் கொண்டு ஒரு நிறுவனம் கூட இல்லையே.பின் எப்படி கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களும்,சூத்திரர்களும் முஸ்லிம்களாக மாறினார்கள் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சிறில் அலெக்ஸ் said...

//ஆமாம், எந்த மதம் அதிக சலுகைகளைத் தருகிறதோ அதற்கு மாறட்டும் இல்லையா?//
இதில் தப்பென்ன... கடவுளிடம் போய் கூட நாம சுவர்க்கம் தான்னா வேண்டுறோம் சுவர்ணம்(தங்கம்) தான்னுதானே வேண்டுறோம்?

கடவுளையே மனிதன் தன் சுய லாபத்துக்குத்தான் பயன் படுத்துகிறான். அப்புறம் ஏன் அதிக சலுகையுள்ள மதத்தில் சேரக்கூடாது?

உண்மையில் 'சுவர்க்கம் போதும்னு' வேண்டுபவர்கள் மத்ம் மாற மாட்டார்கள்.

சிறில் அலெக்ஸ் said...

மிதக்கும் வெளியின் கேள்வி நியாயமாகப் படுகிறது. எப்படி இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்?

Anonymous said...

அருணகிரி அண்ணாத்தே... முதல்ல இந்துக்கள்னா யாரெல்லாம்ன்னு சொல்லிடுங்க. சண்டைக்கு மட்டும் ஊரோட அருவா தூக்கிட்டு கிளம்பிடுவாங்க. மத்த நேரத்துல எல்லாம், பிராமணாள் மட்டுமே இந்து ! முதல்ல நீங்க இந்துக்கள் யாருண்ணு முடிவு பண்ணிட்டு வாங்கோ. பிராமணரா, அப்படின்னா வடகலையா தென்கலையா ? இல்லே இந்துக்கள்ல வேற யாராவது சேருவாங்களா ? நாங்க எல்லாம் ஒரே குடும்பம் தான்னு சொன்னா முதல்ல எல்லாரையும் வீட்டுக்குள்ள ஏத்துங்க. கொஞ்சம் பேரு கொல்லையில, பாதி பேரு படிக்கட்டுக்கு வெளியே, கொஞ்சம் பேரு தெருவையும் தாண்டிங்கற வயிற்றுப் போக்கு நாற்றத்தையெல்லாம் கொஞ்சம் சரிபண்ணுங்க. வீடு நாறிட்டு இருக்கும்போ எதுக்குய்யா ஊருல வாசனை இல்லேன்னு வக்கற்ற வாக்குவாதம் ? 'சாமிக்கு படைக்கிற கைகளை கும்பிட்டோ ம் சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோ ம்' ந்னு ஒரு பாட்டு கேட்டிருக்கீங்களா ? முதல்ல வீதியில கிடக்கிறவனை வீட்டுல ஏத்துங்க. இல்லேன்னா... வீட்டுல ஏத்தறவனை வீட்டோ ட கொளுத்துங்க. இந்து மதம் எதைச் சொல்லுதோ அதைச் செய்யுங்க. இந்து மதம் என்னான்னு அப்போ தாம் மக்களுக்கு தெரியும்.
(பின் குறிப்பு :- ஏழைங்க தான் சலுகைக்காக மதம் மாறுகிறார்கள் என்பது நீங்கள் போடும் தப்புக் கணக்கு ஐயா... மதம் மாறும் மக்களில் பாதிக்கு மேற்பட்டோ ர் பணக்காரர்கள் ! கண்ணைத் தொறங்க )

Ram.K said...

தங்கள் எண்ணத்தை விளக்கப் பயன்படுத்தபட்ட 'குட்டி' கதை அருமை. இதோடு நான் நின்றுவிட்டு பிறகு சில மணிநேரம் கழித்துத் தான் மற்றதைப் படித்தேன்.

:)

இது போல எழுதவும்.

ஆழ்ந்த சிந்தனையுடன்
பச்சோந்தி

சிறில் அலெக்ஸ் said...

பச்சோந்தி,
கதையெல்லாம் ஒரே மூலத்திலிருந்துதான் எடுக்கிறேன்.

என்னையும் ஒரு காலத்தில் பல மணிநேரங்கள் சிந்தனையில் கட்டிப்போட்ட கதைகள் இவை.

ஆண்டனி டி மெலோ எழுதிய புத்தகங்களான Prayer of the frog, Song of the bird, One minute Wisdom, One minute Nonsense போன்ற புத்தகங்கள் இந்த குட்டிக்கதை பாணியிலேயே (தியானத்திற்காக) எழுதப்பட்டன. ஆண்டனி இந்தியர். கிறித்துவ பாதிரியார் ஆனாலும் அவரது புத்த்கங்களை திருச்சபை தடை செய்தது. பின்னர் வெளியிட்டது, ஒரு முட்டாள்தனமான முன்னுரையோடு.

சென்னையில் பூக்கடை அந்தோனியார் கோவிலில் உள்ள Good Pastor Center ல் கிடைக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். ஒருமுறை செயமோகன் சொல்லியிருக்கிறார் அவரும் இவரது விசிறியாம்.

arunagiri said...

சிரில்,
நான் எழுதிய பின்னூட்டங்களில் உள்ள கேள்விகளையெல்லாம் வசதியாய் மறந்து விட்டு, என்னிடம் கேள்விகள் கேட்க வந்து விட்ட உங்களுக்கு அதேபோலத்தான் பதிலும்.
1. மதமாற்றம் என்று வரும்போதுதான் பலரும் அடிமட்ட இந்துக்களை நினைவில் கொள்கிறார்கள் இது ஏன்?
>>> யார் அந்த பலர்? அடிமட்டம் என்றால் என்ன?

2. பிரித்தாளும் கொள்கை கிறித்துவப் பழக்கம் என வைத்துக்கொள்வோம். அப்போ சாதி என்றால் என்ன?
>>> கிறித்துவ மதத்தில் சேர்ந்தவுடன் சாதி மறைந்து விடுகிறதா என்ன?

3. வட கிழக்கு என்கிறீர்களே அங்கே கொடுமை நடப்பதாக நீங்களே யூகிப்பது எப்படி, அங்கே உள்ள மக்கள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாதபோது?
>>> யூகமா? மக்கள் எதிர்ப்பு காட்டவில்லையா? காட்டியவர்களுக்கு சர்ச் அளித்த தண்டனைகள் குறித்து அறிவீரா? சிரில் அவர்களே, படித்து அறிந்து விட்டு வாதம் செய்ய வாருங்கள். உங்களுக்குத் தெரியாது என்றால் தெரியாது என சொல்லி விளக்கம் கேளுங்கள், ஆசிரியனாக இருந்து அறிவுறுத்துகிறேன். யூகம் என்று மட்டையடி அடிக்கும் உங்களுக்காக நான் வேலையற்றுப்போய் செய்திச் சுட்டிகளை திரட்டித்தர வேண்டுமா? சரி அப்படியே தந்தாலும் என்ன செய்யப்போகிறீர்கள்? செய்தி ஆதாரங்களோடு நிரூபித்தால் கிறித்துவ மதத்தை விட்டு விடப்போகிறீர்களா? அட குறைந்தது, கிறித்துவத்தின் மத மாற்றங்கள் தவறு என்றாவது ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா? அப்படிச் சொன்னால் நீங்கள் கிறித்துவர் இல்லை என்று ஆகி விடுமே, என்ன செய்வீர்கள்?

4. மதமாற்றம் தவறா?
>>> மற்ற நம்பிக்கைகள் எல்லாம் பொய், என் மதம், என் கடவுள், என் புத்தகம் இவை மட்டுமே உண்மை என்ற வகை மதமாற்றங்கள் தவறு. 'உன் நம்பிக்கை பொய், என்னுடயது மட்டுமே உண்மை' எனப்பிரச்சாரம் செய்வது மதக்காழ்ப்பிற்கு அடிகோலுவது இல்லையா, அதைத்தடை செய்தால் என்ன தவறு?

5. இந்து மதம் 'கட்டாய' மத மாற்றம் செய்துள்ளதா இல்லையா?
>>> நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க, அமெரிக்க பூர்வீகர்களை மதப்பயங்கரவாதத்தின்மூலம் மாற்றியது, தென் அமெரிக்காவில் ஒரு பெரும் சமுதாய அழிவுக்கே காரணமாய் இருந்தது, Inquisitions, சிலுவைப்போர்கள், ஸ்பானிஷ், போர்த்துக்கீசியர் மற்றும் பிரிட்டிஷார் சென்ற இடங்களில் எல்லாம் துப்பாக்கி முனையில் கிறித்துவம் பரப்பியது, யூத வெறுப்புக்கு நீரூற்றி இனவாதம் வளர்த்து ஹிட்லரின் இனப்படுகொலையை மவுனமாய் ஆதரித்த வட்டிகன்- இவை அனைத்துமே உங்களைப்பொறுத்தவரை யூகம் என்று ஆகிவிடக்கூடிய அபாயத்தில், இந்து மதத்தின் "கட்டாய" மத மாற்றத்தை கிறித்துவம் நிகழ்த்திய/நிகழ்த்திக்கொண்டுள்ள கட்டாய மத மாற்றங்களுடன் ஒப்பிட்டு உங்கள் கேள்விக்கான பதிலை நீங்களே கண்டறிந்து கொள்வதுதான் சாலச்சிறந்தது. நான் சொன்னால் அது "யூகமாகி" விடும் அபாயம் உள்ளது.

6. எல்லா நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் ஏன் குழந்தைகளை உயிரோடு வைத்து எரிக்க வேண்டும்?
>>> யாரைச்சொல்கிறீர்கள். ஒரு நாடு முழுவதும் உள்ள ஒன்றும் அறியா தலைச்சன் பிள்ளகளைக் கொண்ட தாடிவைத்த ஆபிரஹாமிய ஆண் கடவுளையா?

7. இந்திய சென்சஸ் தவறென்றால் உங்கள் கணக்கு/யூகப்படி கிறித்துவர்கள் எத்தனை சதவீதம்?
>>>யூகத்தில் சிறந்த தாங்கள்தான் பதில் சொல்ல வேண்டும், நீங்கள் 2% என்கிறீர்கள், அறுவடைக்கு அறுவாள் தீட்டும் தங்களது ஆதரவாளர் ஒருவர் 25% என்கிறார்.

8. சமஸ்கிருதமமெப்படி அழிந்தது அல்லது பழக்கத்தில் இல்லாமல் போனது?
>>> போப்பினைப்பொறுத்தவரை லத்தீன்தான் தேவ பாஷையாம், தெரியுமா? லத்தீனில்தான் வட்டிகனில் தொழுகை. அதுசரீ...தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு. வயிற்றுப்போக்கு கிருமி உங்களையும் பாதிக்கத்தொடங்கி விட்டதோ? (அடுத்து பார்ப்பான்தான் இந்து மதம், பார்ப்பான் ஆதிக்கம் ஒழியத்தான் கிறித்துவம் வளர்க்கிறோம் என அறிவித்து விடுங்கள், நோய் முழுமையடைந்து விடும்).

9. பெரியாரின் கடவுள் இல்லை எனும் இயக்கத்துக்கும் மதமாற்றத்திற்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே இந்துக்கள் எண்ணிக்கையை குறைக்கவும் மதத்தை குறைகூறவும் செய்யுதே? நம்மால் மதம் இல்லை எனக்கூறும் இயக்கத்தை சட்டம் போட்டு தடை செய்ய முடியுமா?
>>> பெரியார் வார்த்தையிலேயே சொல்வதென்றால் "நாத்த நரகலில் எந்த நரகல் நல்ல நரகல்" (not a verbatim quote). மதம் இல்லை, கடவுள் இல்லை என்று எல்லாமதங்களையும், எல்லாக் கடவுள் நம்பிக்கைகளையும் உதறி அவை அனைத்தையும் ஒருசேர விமர்சித்தால் பிரச்சினை இல்லை. அப்படிச்செய்வது பாரத கலாசாரத்தில் புதிதொன்றும் இல்லை. நிரீசுவர வாதம் (ஈஸ்வரன் இல்லை என்ற வாதம்) பாரதத்தில் இருந்ததுதான். ராமாயண கால ஜாபாலி முனிவர் ஒரு நிரீசுவர வாதி. கபிலரின் சாங்கிய தத்துவம்- எப்போதாவது மனம் வந்தால் படியுங்கள்.
ஆனால் ஆபிரஹாமிய மதமாற்றங்களை இத்துடன் ஒப்பிட முடியாது. உன்னுடைய நம்பிக்கை பொய் என்னுடையது மட்டுமே உண்மை என்ற அடிப்படையில் வரும் மத மாற்ற முனைப்புகள் அனைத்தும் ஆண்டவன் பெயரால் நடத்தப்படும் அசிங்கங்கள். சுய அறிவால் கடவுள் இல்லை எனத் தெளிந்தவன் அதே சுய அறிவின்மூலம் இறையை ஒத்துக்கொள்ளவும் வழி உண்டு. ஆனால் கிறித்துவமும், இஸ்லாமும் பிற மதங்களின் இருப்பினை மறுக்கும் ஒருவழிப்பாதைகள். ஆபிரஹாமிய மதங்களில் பிற மத வாதிகள் அனைவரும் நரகத்தில் விழப்போகும் பாவிகள். "என்னை ஒத்துக்கொள்ளாதவர்கள் எல்லாரும் எனக்கு எதிரிகள், அவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்" என்று சொல்வது கடவுளாக இருக்க முடியாது- ஹிட்லர் அல்லது ஸ்டாலினாக இருக்கலாம். மதம் இல்லை என்ற இயக்கத்தைத் தடை செய்யக் கூடாது. "உன் மதம், உன் கடவுள், உன் நம்பிக்கை, இவை எல்லாம் பொய்; என் மதம், என் கடவுள், என் நம்பிக்கை- இவை மட்டுமே உண்மை" எனச் சொல்லும் பிரச்சாரங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஒப்புக்கொள்ளுகிறீர்களா?

சிறில் அலெக்ஸ் said...

அருணகிரி,
நாம் இரண்டுபேருமே நம் மதம் பற்றிய எந்த குற்றச்சாட்டையும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

உண்மையில் 'கட்டாய' மதமாற்றம் எல்லா மதத்திலும் நடைபெற்றுள்ளது என்பது வரலாறு. ஆனால் இன்றைய சூழலில் இது நடந்துகொண்டிருக்கிறதா? இது பெரிய கேள்விதான்.

அடுத்த மதத்தை குறைகூறிப் பேசுவது பிரச்சனையின் ஒரு பகுதி இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதே, அதே சமயத்தில் மற்றவர்கள் நம்மீது வைக்கும் குறைகளை களைய முயலும்போது 'மதமாற்ற' எதிர்ப்பு இன்னும் சிறப்பாகிறது.

இஸ்க்கான் போன்ற அமைப்புகள் இதை செய்துகொண்டிருக்கின்றன. இங்கே சிக்காகோ கோவிலில் வெள்ளைக்கார துறவிகளை பார்த்திருக்கிறேன்.

உண்மையில் நீங்கள் சொல்லும் 'மக்கள் மேல் அதிகாரத்தை' எப்படி கிறித்துவ மதமாற்றிகள் கையில் எடுக்கப் பார்க்கிறார்களோ அதுபோல சில இந்து மதவாதிகள் அதை விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள்.

எல்லா மதமும் சரிதான் எனச் சொல்வது எப்படி? அப்போ எல்லா கடவுள்களையுமே நாம வணங்கவேண்டுமே? அது சரியானதாய்ப் படவில்லை. இது இந்துமதத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகவும் எனக்குத் தெரியவில்லை. சில இந்துக்கள் ஒரு சில இந்துக் கடவுள்களையே வணங்குவதில்லை. இல்லையா?

'இந்துத்வா' என்பதை விட இந்துமதம் என்பது எழுச்சி கொள்ளவேண்டும். இரண்டாம் வத்திக்கான் வரும்வரை கிறித்துவமும் பழமையிலே மூழ்கியிருந்தது. பின் மக்கலுக்குத் திறந்துவிடப்பட்டது. இன்று பல கலாச்சாரங்களையும் எளிதில் உள்ளடக்கிக் கொள்கிறது. இது போன்ற மாற்றம் வருவதே மதமாற்றத்தை தடுக்க வழிவகுக்கும். புத்தாண்டு நள்ளிரவில் பூஜை செய்வது போன்ற பழக்கங்களை சாதாரண இந்து மக்கள் எளிதில் ஏற்றுக்கொண்டுள்ளது போல பல மாற்றங்களை ஏற்படுத்துங்கள். குழந்தைகள், இளைஞர்களுக்கு போதிய மத போதனை அளியுங்கள்.

உங்கள் அளவுக்கு எனக்கு மத/கடவுள் நம்பிக்கையில்லை என்றாலும், எனக்கு அபத்தம் எனத் தோன்றிய 'மதமாற்றம்' பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்நிறுத்தியே இந்தப் பதிவை இட்டேன்.

தொடர்ந்து சிந்தியுங்கள். ஆக்கபூர்வமாய் செயல்படுங்கள்.

:)

anbuselvaraj said...

I think the most of the things what you said are true.

arunagiri said...

எனது பதில் இன்னமும் உங்கள் மெயில் பாக்ஸிலேயே உள்ளது என நினைக்கிறேன். கொஞ்சம் பார்த்து வெளியிடுங்களேன்.

சிறில் அலெக்ஸ் said...

வேறெந்த பின்னூட்டமும் இல்லை அருணகிரி.

ப்ளாகர் பிரச்சனையில் போயிருக்கலாம்.
திரும்பவும் அனுப்புங்கள் அல்லது தனிமடல் செய்யுங்கள்.

arunagiri said...

"அடுத்த மதத்தை குறைகூறிப் பேசுவது பிரச்சனையின் ஒரு பகுதி இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதே, அதே சமயத்தில் மற்றவர்கள் நம்மீது வைக்கும் குறைகளை களைய முயலும்போது 'மதமாற்ற' எதிர்ப்பு இன்னும் சிறப்பாகிறது".

உண்மைதான். இதுவும் பல தளங்களில் நடந்து கொண்டுதான் உள்ளது. இல்லையென்றால் இவ்வளவு நாள் தாக்குப்பிடித்திருக்க முடியுமா?

"உண்மையில் நீங்கள் சொல்லும் 'மக்கள் மேல் அதிகாரத்தை' எப்படி கிறித்துவ மதமாற்றிகள் கையில் எடுக்கப் பார்க்கிறார்களோ அதுபோல சில இந்து மதவாதிகள் அதை விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள்".

விட்டுக் கொடுத்தால் அது எடுக்கத்துடிக்கும் மதமாற்றிகள் கையில் சென்று விடலாம் என்ற நியாயமான பயமாகக் கூட இருக்கலாம் அல்லவா?

"எல்லா மதமும் சரிதான் எனச் சொல்வது எப்படி? அப்போ எல்லா கடவுள்களையுமே நாம வணங்கவேண்டுமே? அது சரியானதாய்ப் படவில்லை. இது இந்துமதத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகவும் எனக்குத் தெரியவில்லை. சில இந்துக்கள் ஒரு சில இந்துக் கடவுள்களையே வணங்குவதில்லை. இல்லையா?"

நீங்கள் தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எல்லாக்கடவுள்களையும் வணங்குவது சரியாகப்படவில்லை என நீங்கள் சொல்வது போல் இந்து எண்ணுவதில்லை. "உண்மை ஒன்று; அதனை மாந்தர் பலவாகக் காண்கின்றனர்" என்பது இந்து மத அடிப்படைக்கூறுகளில் ஒன்று. பலவாகக் காணப்படுவதும் ஒரே விஷயம்தான் எனும்போது என்னுடையதே உண்மை, உன்னுடையது பொய் என்ற வாதமே அபத்தமாகி விடுகிறது. பரப்ரம்மம் என்ற மேலான ஒன்றின் பல அம்சங்களாகவே பல கடவுள்களும் தரிசிக்கப்படுகின்றன. பல கடவுளர் என்பது ஆன்மீக வளர்ச்சியில் ஒரு phase மட்டுமே. சிலருக்கு அதுவே போதும். சிலர் மேலும் ஆன்மீக ஆராய்ச்சியில் வளர்ந்து துவைதம், அத்வைதம் என சிந்திக்கின்றனர். எல்லாக்கடவுள்களையும் வணங்க வேண்டும் எனச்சொல்லவில்லை,
ஆனால் பிற கடவுள்கள் பொய் என்று சொல்லிவிடவும் வகையில்லை. என் அப்பா நல்லவர் என்பதற்கும் என் அப்பா மட்டுமே நல்லவர் என்பதற்கும் உள்ள வேறுபாடுதான் இது. அதனால்தான் பிற கடவுளர்களின் நம்பிக்கையாளர்களைப் பாவிகள் என்றிகழ்ந்து நரகத்திற்கு சபிப்பதில்லை. (ஒரு வாதத்திற்காகக் கேட்கிறேன் "தன் பிம்பத்தில் மனிதரைப்படைத்தார்" என பைபிளில் வருகிறதே- அந்த பிம்பம் எது- குட்டையா, நெட்டையா, கறுப்பா, பழுப்பா, வெள்ளையா, மஞ்சளா, ஆணா, பெண்ணா, அலியா? எது அவர் பிம்பம்? இந்தக்கேள்விக்கான பதிலின் முடிவில் பல கடவுளர்களுக்கான பதிலும் உள்ளது. தேடியறிந்து கொள்வீர்களென நம்புகிறேன்)

"'இந்துத்வா' என்பதை விட இந்துமதம் என்பது எழுச்சி கொள்ளவேண்டும்".

இப்படிச்சொன்னதற்காகவே உங்களை உண்மையான உள்ள நெகிழ்ச்சியுடன் நன்றாக வாழ வாழ்த்துகிறேன்.
என்னைப்பொறுத்தவரை இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்துத்துவம் (இந்து+தத்துவம்) என்பது பாரத மண் என்ற புண்ணிய பூமியில் வாழும் அனைவருக்கும் பொதுவான விஷயம் என எண்ணுகிறேன். சுப்ரீம் கோர்ட்டும் அவ்வாறே தீர்ப்பளித்துள்ளது.

"குழந்தைகள், இளைஞர்களுக்கு போதிய மத போதனை அளியுங்கள்".

நன்றாகச் சொன்னீர்கள். செய்கிறோம்.

"உங்கள் அளவுக்கு எனக்கு மத/கடவுள் நம்பிக்கையில்லை என்றாலும்..."

உண்மையில் கடவுள், மதம் என்பது போன்ற பெரிய நம்பிக்கைகள் இல்லாமல்தான் இருந்தேன். ஆனால் selective Hinduism bashing-இல் உள்ள hypocracy, hidden agenda இவை கண்டு எழுத வந்தவன் நான். பிறகு படித்து நிறைய அறிந்து கொண்டேன். 'கடவுள் நம்பிக்கையற்ற ஆன்மீகவாதி' என்று அயன் ராண்டில் Howard Roark குறித்து படித்தது நினைவுக்கு வருகிறது.

பி.கு: இந்த வாதம் நான் எழுப்பிய பல கேள்விகளுக்கும் நீங்கள் விடை தராமல்தான் முடிகிறது என்றாலும், சொல்லப்பட்ட வார்த்தையும் படிக்கப்பட்ட எழுத்தும் என்றும் வீணாவதில்லை என்பதால் ஆக்க பூர்வ விவாதம் செய்த நிறைவுடனேயே இப்பதிவிலிருந்து விடை பெறுகிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

அருணகிரி,
வாதங்கள் செய்துகொண்டே இருக்கலாம்...முடிவில் வெறும் வார்த்தைகளே மிஞ்சும். என்றாலும் அவற்றை தூரத்தள்ளுவதற்கில்லை. உங்கள் பக்க நியாயங்களை கேட்கமுடிந்ததில் மகிழ்ச்சியே.

கடவுள் மனிதனை தன் சாயலில் படைத்தார் என சொல்லப்பட்டுள்ளது. சாயல் என்பது 'தன் உருவம் போல' என பார்க்கப்படுகிறது 'தன்னைப் போல, அச்சாக' என பார்க்கப்படுவதில்லை. அதாவது கை கால் தலை போன்ற உறுப்புக்களைக் கொண்ட கடவுள் மனிதனையும் அப்படியே.. படைத்தார் எனப்படுகிறது.

மனிதன் படைப்பில் உசத்தியா தன்னை நினைக்கிரான் தன்னைவிட சிறந்ததை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை எனவே கடவுளும் தன்னைப் போல கண், மூக்கு காதெல்லம் உடையவனாக சொல்கிறான் .. இதுதான் உண்மை.

'ஆணும் பெண்ணுமாக, படைத்தார்' என்றிருக்கிறது.

இன்னொரு களத்தில் விவாதங்களைத் தொடர்வோம் எனும் நம்பிக்கையில் நானும் விடைபெறுகிறேன்..

:)

Anonymous said...

அருணகிரிக்கு....

ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை கடவுளாக இருந்தது. அந்த வார்த்தை கடவுளாயும் இருந்தது. நீர் நிலைகளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தார்....

கடவுள் எந்த சாயலில் என்பதை யாரும் வரையறுத்துவிட முடியாது. ஆணையும் பெண்ணையும் தன் சாயலாகப் படைப்பதாகவே கடவுள் சொல்கிறார். அவரே வார்த்தையாகவும், ஆவியாகவும் இருக்கிறார்.

கடவுள் எப்படி இருக்கிறார்... யார் அது என்பதைப் பற்றி விவாதிப்பதை விட, எல்லோரும் அவரவர் மதத்தில் உள்ள சமுதாய நலக் கருத்துக்களை மனதில் வளரவிடுவோம். அப்போது கடவுளும் நம்மில் வளர்வார்.

சிறில் அலெக்ஸ்