.

Tuesday, June 20, 2006

வார்ப்புருமாற்றம்

எத்தனை நாள்தான் பாஸ்ட்டன் பாலாவின் டெம்ப்ளேட்டையே பார்த்து ஜொள் விட்டுக்கொண்டிருப்பது, நாமும் கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமே என என் வார்ப்புருவை கொஞ்சம் மாற்றியமைத்துள்ளேன்.

'என்னதான் டெம்ப்ளேட் மாத்தினாலும் அதே பழைய பாணி பதிவுகள்தானே?'
என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. உங்கள் மைக்கை மியூட் செய்யவும்


தலைப்பிலிருந்த தப்பை திருத்திய பொன்ஸுக்கு நன்றி. 'வாற்ப்புரு' இல்லை 'வார்ப்புரு'

15 comments:

துளசி கோபால் said...

வார்புருவும் டெம்ப்ளெட்டும் ஒண்ணுதான்னு இப்பத் தெரிஞ்சிருச்சு:-))))

சிறில் அலெக்ஸ் said...

எனக்கே உறுதியா தெரியலீங்க. யாருடைய பதிவிலயோ படிச்சது. 'வாற்பு' + 'உரு' டெம்ளேட்டாத்தான் இருக்கும்னு யூகிச்சேன்.

:) நம்ம ராகவன்+ குமரன் 'சொல் ஒரு சொல்லுல' இத உறுதிப் படுத்துனா நல்லாருக்கும்.

அதெல்லாம் சரி மேடம் எப்படி இருக்குன்னு ஒரு வார்த்த சொல்லாம போயிட்டீங்க?

பொன்ஸ்~~Poorna said...

வார்ப்புருன்னுதாங்க சொல்வாங்க.. ஆனா வாற்புரு தப்பு..

தேன் கூடு போட்டிக்குத் தான் ஏதோ எழுதி இருக்கீங்களாக்கும்னு வந்தேன் :) நல்லா ஏமாத்திட்டீங்க :)

பொன்ஸ்~~Poorna said...

ஓ.. போன பின்னூட்டம் போடும்போது பார்க்கலை.. நீங்க தான் ஏற்கனவே சிறப்பாசிரியர் ஆகிட்டீங்களோ.. வாழ்த்துக்கள்.. :)

சிறில் அலெக்ஸ் said...

பொன்ஸ் நன்றி.. திருத்தத்துக்கும் வாழ்த்துக்கும்..

இந்த யான எவ்வளவு ஓடினாலும் இளைக்க மாட்டேங்றதே.. இதனாலத்தான் நான் ஜாக்கிங்க போரதில்ல..

:)

பொன்ஸ்~~Poorna said...

//என என் வாற்புருவை கொஞ்சம் மாற்றியமைத்துள்ளேன்.
//
தலைப்பு மட்டும் தானா? :)))


ஓ ஜாக்கிங் போகாம இருக்க என் யானையும் ஒரு காரணமா?!! அது சரி.. நான் நல்லா கரும்பு, பர்கர்னு போட்டு வளர்க்கறேனாக்கும்.. அதான் ஒரு பவுண்டு கூட குறையாம ஓடிகிட்டு இருக்கு :)

சிறில் அலெக்ஸ் said...

பொன்ஸ்,
நிச்சயம் நீங்க ஆசிரியராத்தான் இருக்கணும்.

தவறுகளை திருத்திட்டேன்.

பொன்ஸ்~~Poorna said...

ஹி ஹி.. சிறில், ஆசிரியர் ஆகுறது என்னோட நிறைவேறாத ஆசைகள்ள்ல ஒண்ணு..

தமிழைத் தப்பா எழுதினா வந்து சொல்லிடுவேங்க.. மாத்திக்குவாங்கன்னு தோணிச்சுன்னா எத்தனை தரம் வேணாலும் சொல்லுவேன் :)

சிறில் அலெக்ஸ் said...

பொன்ஸ்,
இந்த மாதிரி அடிக்கடி வந்து திருத்துங்க என்னை.

Boston Bala said...

வாவ்... பளிச்னு இருக்கு

சிறில் அலெக்ஸ் said...

நன்றி பாபா..
எல்லாம் உங்க இன்ஸ்பிரேஷன்தான்

G.Ragavan said...

வார்ப்புரு மாற்றமா? வளர்சிதை மாற்றமா? இப்பல்லாம் அதுதான பாப்புலர். நீங்களும் அப்படித்தான் ஏதாவது பதிவு போட்டிருக்கீங்களோன்னு பாத்தேன். நல்லாருக்கு புதிய வார்ப்புரு.

G.Ragavan said...

// பொன்ஸ் said...
ஹி ஹி.. சிறில், ஆசிரியர் ஆகுறது என்னோட நிறைவேறாத ஆசைகள்ள்ல ஒண்ணு..

தமிழைத் தப்பா எழுதினா வந்து சொல்லிடுவேங்க.. மாத்திக்குவாங்கன்னு தோணிச்சுன்னா எத்தனை தரம் வேணாலும் சொல்லுவேன் :) //

கல்யாண அகதிகள் சரிதா பாத்திரமும் இப்படித்தான். தப்பா எழுதீருந்தா திருத்துவாங்க. ஓட்டல்ல தயிற்-னு எழுதீருக்கும். "ஏய்யா பெரிய ற போட்டிருக்க? சின்ன ர தான் போடனும்னு" சொல்வாங்க. பதிலுக்குக் கடைக்காரன்.."அட கெட்டித் தயிர்னு நெனைச்சுக்கிட்டுப் போகட்டுமே"ன்னு சொல்வாரு. ஹா ஹா ஹா

சிறில் அலெக்ஸ் said...

ராகவன்,
வளர்சிதைமாற்றம்னுகூட சொல்லலாம்..ஒரு வலைப்பதிவரா நான் mature ஆயிட்டேன்..

அந்த 'கட்டித் தயிர்' ஜோக் ஹா ஹா

பொன்ஸ்~~Poorna said...

//கல்யாண அகதிகள் சரிதா பாத்திரமும் இப்படித்தான். தப்பா எழுதீருந்தா திருத்துவாங்க//

ஐயா ராகவன்,
அந்தம்மா மாத்திக்குவாங்கன்னு தெரியலைன்னாலும் (மாத்து விழும்னாலும்) கூடச் சொல்வாங்கய்யா.. நம்ம அவ்வளவுக்கு மோசமில்லை :)

சிறில் அலெக்ஸ்