சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை: சுய தம்பட்டத்தின் உச்சக் கட்டம் இந்த கட்டுரை எனினும் ஒரு எளிய கிராமத்தில் பிறந்து வளரும் ஒருவரின் வாழ்க்கை எங்கெல்லாம் பயணிக்கிறதென்பதை சொல்கிறது இது.
"நான் ஒரு அங்கீகரிக்கப்பட்டு, மூன்றுமுறை வடிகட்டப்பட்டு, ஐ
எஸ் ஐ முத்திரை குத்தப் பட்ட மீனவ கிராமத்தான். உலகின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில், வெளி உலகைவிட்டே ஒதுங்கி, தெற்கே முடிவில்லா கடல் நோகி வாழும் சில மனிதர்கள் மத்தியில் பிறந்தேன் வளர்ந்தேன். "
"செம்மண் அகழிகளால் பிரிக்கப்பட்ட ஒரு
குட்டித்தீவு அந்தச் 'சிவந்தமண்'."
"1993 சென்னை லொயோலாவில் சூர்யாவுக்கு ஜூனியராக வணிகவியல்
பிரிவில் இடம் கிடைத்தது."
"சிக்காகோ வந்திறங்கினேன். உலகம் ரெம்ப பெருசு என அந்த 18 மணி
நேர பயணத்தில் புரிந்தது."
எந்தையும் நானும்: தந்தையர் தினம் பற்றிய பதிவு. என் தந்தையையும் என்னையும் முன்வைத்து. ஆமாங்க நானும் ஒரு தந்தைதான்.
"இந்தியாவில் பல தந்தைகள் ஸ்மார்டை விடவும் கடினமான
நிலமைகளில் தங்கள் குடும்பங்களை வழிநடத்துகிறார்கள் அல்லது வழி நடத்த
உதவுகிறார்கள். வருடத்துக்கு இரண்டுமுறை தந்தையர் தினம் கொண்டாடலாம் நாம், தப்பில்லை""'தான்' என்னும் எண்ணம், (அகந்தை அல்ல), அவரிடம் அதிகமாகவே இருந்தது."
"'கட்டி வச்சு தோலை உரிப்பேன்' என்பது எனக்கு வெறும் வார்த்தைகளல்ல, அனுபவம்."
கத்தோலிக்கம் ஒரு மேலோட்டம்: கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு மற்றும் நம்பிக்கைகளைப் பற்றியது. முற்றிலும் தகவல்களாகவே அமைந்துள்ளது இந்த காட்டுரை.
"கி.பி 110 ஆன்டியொக்கின் பிஷப் இக்னேஷியச் முதன்முறை 'கத்தோலிக்க
திருச்சபை' எனும் பெயரை பயன்படுத்துகிறார், பெயர் நிலைக்கிறது. வரலாறு பல
போராட்டங்களுடன் தொடர்கிறது.""1517ல் மார்டின் லூத்தர்(அமெரிக்கர் அல்ல) கத்தோலிக்க திருச்சபை
காணிக்கைக்கு/காசுக்கு ஆன்மீக பரிகாரங்களை(Indulgance) வழங்குவதை எதிர்க்கிறார்.
1582 போப் கிரகொரி தற்கால காலண்டரை அறிவிக்கிறார்.""கலை, இலக்கிய, அறிவியல் படைப்புக்கள் எல்லாமே திருச்சபையின்
அனுமதியுடனேயே வெளியிடப்பட்டன. ""சரி கிறிஸ்த்துமஸுக்கு லீவ் கிடைக்கும் ஆனா ஈஸ்டருக்கு?
யோசியுங்க.""இரண்டாயிரம் ஆண்டுகளாக பல குறைகளை நிவர்த்திசெய்தும்,
சிலநேரங்களில் மூடிமறைத்தும் பல தடைகளையும் தாண்டி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பிரமாண்டமான, உலகளவிலான ஒரு ஆன்மீக அமைப்பாக கத்தோலிக்க திருச்சபை வளர்ந்திருக்கிறது
என்பதை மறுக்கமுடியாது."
சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்: சிரிப்போடு சேர்ந்து சில தகவல்களும் உண்டு. சிக்காகோவில் என்னென்ன பார்க்கலாம் என்பது பற்றிய கட்டுரை.
"எப்படீடி அந்துமதி இப்படி அவிழ்த்து விடற? சதா உன்ன மாதிரி
என்சைகக்ளோப்பீடியாவை படிச்சா நான்கூட வாசகி கேள்விக்கு பதிலெழுதலாம் போல.""சரி. நம்ம கார்ட்டூன் மூஞ்ச வச்சி எப்படி அடையாளம் கண்டுபிடிப்பாரு?"
"மளிக ஜாமானெல்லாம் நீங்க தனியா போய் வாங்கிக்கங்க இப்ப கோவிலுக்குப்
போகலாம்."."முதல்ல சியர்ஸ் போகலாம். சிக்காகோ வந்துட்டு சியர்ஸ் ஸ்கை டெக் (Sky Deck)
போகலன்னா எப்பவுமே அது குறையாத்தான் இருக்கும். அது பெரிய அனுபவம்னு சொல்லமுடியாது
ஆனா சியர்ஸ் டவர் மேல போனோம்னு ஒரு பேரு அவ்வளவுதான். கிட்டத்தட்ட 15 லட்சம்பேரு வருசா வருசம் வர்றாங்க""ஏன் பெயர் போன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க. பெயர் இருக்கிற இடமா
எதுவும் தெரியாதா?"
படித்துவிட்டு பின்னூட்டம் அங்கேயும் இடலாம் இங்கேயும் இடலாம்.
2 comments:
Cyril Alex,
Hope you hade a very good time in chicago :D BTW did u come to naperville ?
IMO you've got better restaurents in & around naperville other than Indian Harvest. I hope you are mentioning the one which is on Route 34 - Ogden Ave.
And the casino you mentioned is not that great :D
Karthik,
I live in Chicago area now. I am in a place called Waukegan near Gurnee.
I have been visitting Naperville almost every other weekend. Next time I am there I will call you.
You are right Holliwood is an ordinary casino but better than nothing.
I have always liked Indian harvest food. These are others too, you are right. I have lived in that area for 2 years earlier.
Post a Comment