கரண் ஹீரோவாய் நடித்து வந்திருக்கும் படம் கொக்கி. எந்தக் கரண்? "செக் மேட்டுன்னு சொன்னேன் சார்" என வி.பி கமலை மிரட்டுனாரே அந்தக் கரண்.
ஆன்டி ஹீரோ கேள்விபட்டிருக்கோம் இவர் ஆர்டினரி ஹீரோ. படத்தில் 'பக்கி'மாதிரி காட்சியளிக்கிறார்.
கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு பிழைக்க வரும் ஒரு சாதாரண இளைஞன் வாழ்க்கை பட்டணத்தில் சின்னாபின்னமாக்கப்படும் கதை. இப்பத்தானே இப்படி ஒரு படம் பார்த்தோம் என்பவர்களுக்கு குறிச்சொல் 'ட்ரீட்மெண்ட்'. கதை சொல்லும் விதமும் காட்சியமைப்பும் படத்தை வித்தியாசப்படுத்துகின்றன.
யதார்த்தமாய் காட்சியமைப்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. மாடியிலிருந்து நூறு படிகளில் இறங்கிவரும் வில்லன், எந்திரத்துப்பாக்கியில் சுட்டுத்தள்ளும் ஹீரோ, சாவுப்படுக்கையில் சத்தியம் வாங்கும் அம்மா எல்லாம் இல்லாமல் படம் கிட்டத்தட்ட கலைப் படம் போலவே ஓடுகிறது.
ஆரம்பத்திலேயே ஒரு குழந்தையை பலி கொடுக்கும் பூஜை, சோதிடத்தால் ஏமாந்தவர்களின் கதை பற்றிய செய்தித் தாள் தொகுப்பு என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.
சோதிடர் சொல்வதை கேட்டு காலம் சமயம் பார்த்தே எதையும் செய்யும் வில்லன் காலையில் சவரம் செய்யவரும் ஹீரோ முகத்தில் முழிக்க, அன்று எல்லாமே வெற்றி. இவனை தினமும் பார்த்தால் ஜெயம் என சோதிடர் சொல்ல, ஹீரோவை வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து தன்னோடு இருக்கச்சொல்கிறார். வேலை செய்துதான் சம்பாதிப்பேன் என்கிறார் ஹீரோ. 'சனி' துவங்குகிறது கொக்கி எனப்படும் கொக்கிச்சாமிக்கு.
கடுமையாக முயற்சி செய்து காட்சிகளை எளிமையாய் அமைத்துள்ளார் டைரக்டர். யதார்த்தமான நடிப்பில் எல்லோரும் மின்னுகிறார்கள் வில்லன் தவிர. சாமியில் நடித்தமாதிரியே இன்னும் நடிக்கிறார். 'ரேஷன் கார்டு கிழிஞ்சிடுச்சி'ன்னு பஞ்டையலாக் வேற.
மலேசியா வாசுதேவன் குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும் அருமையாய் நடித்துள்ளார். சோதிடராய் வரும் மாணிக்க விநாயகம் கலக்கல்.
கரண் நடிக்கவேயில்லை அப்படியே அந்த இறுக்கமான கிராமத்தானாகவே மாறியிருக்கிறார்.
தினாவின் ரீசைக்கிள்ட் பாடல்கள் கதையின் வேகத்தை குறைக்கிறது. பாடல்கள் இல்லையென்றால் கலைப்படம்போலாகியிருக்கலாம்.
அதிகம் பேசாமலே இருக்கும் ஹீரோ கடைசியில் பேசும் வசனம் மனதில் நிற்கிறது.
ஜீவனின் ஒளிப்பதிவு ஜீவன் சேர்க்கிறது.
பிரபு சாலமன் இயக்கத்தில் கொக்கி உங்களை கவர்ந்திழுக்கலாம்.
Thursday, June 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
7 comments:
ஏன் சிறில் அப்போப் பாக்கலாம்ங்கறீங்க.. பாத்துருவோம்
அட! விமரிசனம் பார்த்து இந்தப் படம் போலாமென்ற்றிருந்தேன். ம்...எல்லா பாரத்தையும் சிறில் மேலே போட்டுட்டு போக வேண்டியது தான்.
பார்ட்னர் தேவ்..உண்மையில் கரண் மேல் உங்களுக்கு கொஞ்சம் அபிமானம் இருந்தால் படம் இன்னும் ரசிக்கலாம்.
போய் பார்த்துவிட்டு வந்து பின்னூட்டம் போடுங்கோ.
சீனு,
ஏனோ என் மனைவிக்கு இந்தப்படம் பிடிக்கவில்லை.
உங்கள் டேஸ்ட் தெரியல. எனக்கு பிடித்திருந்தது. டெக்னிக்கலி நல்ல படம்னு சொல்லலாம்.
//உங்கள் டேஸ்ட் தெரியல//
என் டேஸ்ட இங்க பாருங்க.
நானும் இந்தப் படம் பார்த்துட்டேங்க.
ஜெயில்லே 6 வருசம் இருந்துட்டு வந்த ஆளு இப்படித்தானே வெறித்த பார்வையோடு இருப்பார்.
எல்லாம் எதிர்காலம் பத்துன கவலைதான் இல்லையா?
கரண் நல்லாத்தான் நடிச்சிருக்கார்.
துளசி மேடம்...
//ஜெயில்லே 6 வருசம் இருந்துட்டு வந்த ஆளு இப்படித்தானே வெறித்த பார்வையோடு இருப்பார்.
எல்லாம் எதிர்காலம் பத்துன கவலைதான் இல்லையா?
கரண் நல்லாத்தான் நடிச்சிருக்கார்//
உண்மை. அழகாச் சொல்லியிருக்கீங்க.
Post a Comment