.

Friday, June 09, 2006

அறிவிருக்கா?

பொதுவாக பள்ளி கல்லூரியில் விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர்கள் படிப்பில் சிறப்பதில்லை. பல நேரங்களில் ஆசிரியர்கள் இவர்களை சிறுமைப் படுத்துவதை பார்க்கலாம். ஏனோ ஸ்போர்ட்ஸ் என்றால் மூளைக்கு வேலைஇல்லை எனும் நினைப்பே இதற்கு காரணம்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு வினாடிக்கும் மிகக்குறைவான மணித்துளியில் எத்தனை தகவல்களை ஆராய்ந்து இவர்கள் முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என எண்ணத்தோன்றுகிறது. இப்படி அதிவேகமுடிவுகளை எடுக்கும் இவர்களின் மூளை எவ்வளவு கூர்மையானதயிருக்கும்? நாம் ஏனோ படிப்பறிவுதான் பெரியது என நினைக்கிறோம்.

ஈக்குயேடர் போலந்தை 2-0 என வென்றுள்ளது. துவக்கத்தில் சில நிமிடங்கள் போலந்து வேகம் காட்டியது ஆனால் போலந்தின் தடுப்பாட்டம் தப்பாட்டமானதால் ஈக்குயேடர் 2 கோல்கள் அடிக்க முடிந்தது.

போலந்து இரு முறை பந்தை கோல் போஸ்ட்டில் அடித்து வாய்ப்பை நழுவவிட்டது.

13 comments:

Unknown said...

Most of the decisions are automatic cyril.Human brain is really fast.They have seen so many such situations before and can easily arrive at a decision within seconds

சிறில் அலெக்ஸ் said...

வெறும் 'இயல்பானது' என இதை ஒதுக்கமுடியாது என நினைக்கிறேன்.

களம், யுக்திகள் என எத்தனையோ மாற்றங்கள் ஒவ்வொரு போட்டியிலும் இருக்குதே.

சரி அப்படியே மூளை பழக்கப்பட்டிருந்தாலும் அது இந்தமாதிரி வேகமாகச் செயல்பட பழக்கப்பட்டிருக்கிறதே.

உண்மையில் நாம் மூளையின் பயன்பாடு வெறும் தகவலாராய்ச்சி என் நினைக்கிறோம். தகவல்களை கிரகிப்பது வே அறிவாளித்தனம் என நினைக்கிறோம். அது இல்லை என்பதே என் பதிவு..

நீங்களுமதைத்தான் சொல்கிறீர்களோ?:)

Anonymous said...

என்ன சிறில் சார் கால்கரி சிவா சாரோட கடேசி தீவிரவாதி பதிவுல அவரு போட்ட ஐகியூ காமெண்டை கிண்டல் செய்றமாதிரி இருக்கே.

பொன்ஸ்~~Poorna said...

புத்திசாலியா இருந்தாத் தான் இந்த விளையாட்டுத் துறையில் நல்லா வர முடியும்.. ஆனா, நம்ம பாட திட்டத்தில் படிக்கிறதுக்கு புத்திசாலியா இருந்தா மட்டும் பத்தாதே.. கொஞ்சம் மனப்பாடம் செய்யும் வேலையும் வரணும்..

பொதுவா இப்படி விளையாட்டுல விருப்பம் இருக்கிறவங்களுக்கு மனப்பாடம் செய்வது எட்டிக்காய்.. வாத்தியார்களுக்கு படிச்சி ஒப்பிக்கிறவங்களைத் தான் பிடிக்கும்.. அவ்வளவு தான்.. :)

சிறில் அலெக்ஸ் said...

அனானி,
நீங்க சொன்னப்பறம்தான் அவர்கமெண்டுகளப் பாத்தேன்.

அவர் சொல்வதற்கும் இதற்கும் சம்மந்தமில்லையே?

எங்களுக்குள்ளே ஏன் சண்டை மூட்டப் பாக்குறீங்க?

சிறில் அலெக்ஸ் said...

பொன்ஸ்,
நீங்க பளிச்சுன்னு சொல்லிட்டீங்க போங்க..

கோல்கேட்டா க்ளோஸ் அப்பா?

பொன்ஸ்~~Poorna said...

//கோல்கேட்டா க்ளோஸ் அப்பா? //
மன்னிச்சிக்குங்க சிறில், உங்க பதிவு முதல் முதலா படிக்கிறேன்.. இது என்ன மாதிரி குத்துன்னு சொல்லிட்டீங்கன்னா புரிஞ்சிக்குவேன் :)

சிறில் அலெக்ஸ் said...

உங்க முந்தைய பின்னூட்டத்துல 'பளிச்'ன்னு சொல்லிட்டீங்க. நம்மூர்ல பளிச்னா கொல்கேட் க்ளோஸ் அப் தானே.
அதான்...

உள்குத்தெல்லாம் இல்ல பொன்ஸ்... நமக்கு அதெல்லம் தெரியாது. சும்மா ஒரு கடி விட்டு மாட்டிக்கிட்டேன் :)

இதுதான் முதல்முறையா.. வருகைக்கு நன்றி.நான் உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

//சும்மா ஒரு கடி விட்டு மாட்டிக்கிட்டேன் :)//

:))) சரி சரி :)

dondu(#11168674346665545885) said...

நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கையில் என் வகுப்புத் தோழன் ராமகிருஷ்ணன் யூனிவெர்சிடி அளவில் டேபிள் டென்னிஸ் ஆடுபவன். அவன் பல கிளாஸ் தேவையின்றி கட் செய்தான். அவனை வழிக்குக் கொணர எங்கள் சிவில் இன்ஞினியரிங் ஆசிரியர் அவனிடம் எங்கள் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் ஒரு மாணவரை உதாரணமாகக் காட்டி, அவர் போல நடந்து கொள்ள வேண்டும் என்றார். கடைசியில் அவர் சொன்னார் "வெங்கடராகவன் தேவையின்றி கிளாஸ் மிஸ் செய்வதில்லை" என்று?

எந்த வெங்கடராகவன்? நீங்கள் நினைக்கும் அதே மனிதர்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிறில் அலெக்ஸ் said...

டோண்டு சார் ரெம்ப நாளுக்கப்பறம் இந்தப்பக்கம் வந்திருக்கீங்க.

நீங்க சொல்லுறதுல உண்மையிருக்கு, சில நேரங்களில் அட்வாண்டேஜ் எடுத்துக்கறாங்க. நல்ல தகவல்.

தருமி said...

களம், யுக்திகள் என எத்தனையோ மாற்றங்கள் ஒவ்வொரு போட்டியிலும் இருக்குதே.//
ரொம்ப சரி, அலக்ஸ். நீங்க சொன்ன போலந்து=ஈக்வேட்டர் அணி ஆட்டத்தில்கூட இரண்டாம் பகுதி ஆட்டத்தில் ஈக்வேட்டர் அணி தன் முதல் பாதி ஆட்டத்தை முழுவதுமாக மாற்றிக் கொண்டு ஆடியதைக் கவனித்தீர்களா?
in the first half poland played with short passes while equador had mostly air balls. in the second half (இதில் கால்மணிநேரம் மட்டும் பார்த்தேன்) equador switched over to short passes.

சிறில் அலெக்ஸ் said...

தருமி சார் ஆட்டம் முழுதும் பார்த்தேன் ஆனா இவ்வளவு கூர்மையா பாக்கல. ரெக்கார்ட் பண்ணிவச்சுருக்கேன் திரும்ப பார்க்கலாம்.

முதல்ல ஈக்குயேட்டர் ஏனோதானோன்னு ஆடுதோன்னு நினச்சேன்... ஆனா அது ஒருவகை Prejudiceனு போகப்போகத் தெரிஞ்சுது.

கடைசியில் போலந்துதான் ஏனோதானோன்னு ஆடுனமாதிரி இருந்தது.

சிறில் அலெக்ஸ்