.

Monday, March 19, 2007

நான் ரெம்ப நெஇர்ட்(weird)

தலைப்ப பாத்தாலே தெரியலியா நான் ரெம்ப weirdனு(தமிழ்ல என்ன?)

நம்ம அணில்-குட்டி-கவிதா (எப்டி வேணா படிச்சுக்குங்க) என்னோட 5 weird குணங்கள எழுதச் சொல்லியிருக்காங்க. Weirdக்கா பஞ்சம் செஞ்சுருவோம்.

1. எத எடுத்தாலும் ஏதாவது வித்யாசமா செய்யணும்னு நினைக்கிறது. சாதாரண விஷயங்களில்கூடா ஏதேனும் அறிவியலையோ அல்லது தத்துவங்களையோ அப்ளை பண்ணலாமான்னு பாப்பேன். வேடிக்க என்னண்னா பல நேரங்கள்ல வொர்க் அவுட் ஆயிருக்குது. Weird.

2. ஜோக் ஒண்ணு தோணுச்சுன்னா, யாரு, எந்த இடம், என்ன நடக்குதுன்னு எதுவுமே பாக்காம சொல்லிவிடுவது. இதுவும் பல நேரங்கள்ள ஒர்க் அவுட் ஆயிருக்குது சில நேரங்கள்ல என்ன ஒர்க்லேந்து அவுட் பண்ற லெவலுக்கு போயிருக்குது. Weird.

3. என்னப் பத்தி யாராவது பெருமையா பேசுனா தலகால் புரியாமப் போயி ஆனந்தக் கண்ணீர் வருமளவுக்குப் போயிரும். குறிப்பா, பேசும்போது என் ஜோக்க யாராவது ரசிச்சு விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னு வையுங்க... (அதுக்கப்புறம் கடி பின்னிருவேன்). Weird.

4. அறிமுகமில்லாத நபர்களிடம் எளிதில் பழகுறது. (weird also means that which is not common) என் நெருங்கிய நண்பர்களுகூட கேப்பாங்க 'எப்படீடான்னு'. ஒரு சின்ன ஸ்மைல்தான் முதலீடு. வாட்ச்மேன், ட்ரைவர், பால்காரர், இன்னும் யாராயிருந்தாலும் முடிந்தவரை நட்பு பாராட்டுவேன்.

5. மேல சொன்ன பாயிண்ட்டுக்கு தொடர்ச்சியா ஒரு பாயிண்ட்...புது எடத்துக்குப் போனா பழைய நண்பர்களை எளிதில் மறந்துடுவேன். ஆனா பாத்தா அடையாளம் கண்டு பிடிச்சுருவேன். ஆனா முயற்சி எடுத்து நட்ப தக்கவச்சிக்க முயல மாட்டேன். (சில நெருங்ங்ங்ங்கிய நண்பர்கள் இதற்கு விலக்கு) எல்லாரும் அப்படித்தானோ? I find it weird.

இண்டர்வீயுவுல கேப்பாங்க Tell me about your weeknessனு பல வருஷமா தப்பிச்சு வந்துட்டேன் இப்ப சொல்லிட்டேன். அடுத்து weired Mimiக்கு நான் அழைப்பது..

1. அரவிந்தன் நீலகண்டன்
2. ஜி.ரா
3. சர்வேசன்
4. மணிகண்டன்
5. நிர்மலா

25 comments:

சுந்தர் / Sundar said...

//அறிமுகமில்லாத நபர்களிடம் எளிதில் பழகுறது. (weird also means that which is not common)
//

நிங்க சென்னைக்கு வாங்க ! உங்கல வந்து பார்கிறேன் !

சிறில் அலெக்ஸ் said...

நிச்சயம் பாக்கலாம் சுந்தர். ஆவலோடு இருக்கிறேன்.

G.Ragavan said...

ஓ! இப்ப இதுதான் டிரெண்டா? நல்ல வியர்டுதான் நீங்க. அமெரிக்கால இருக்குறதால நெர்டுன்னும் சொல்லிக்கிறீங்க.

எதையெடுத்தாலும் வித்யாசமாச் செய்யனும்னு நெனைக்கிறீங்க. சரி. எதை வைக்கனும்னாலும் அப்படித்தானோ? ;-)

அட! தோணுன ஜோக்க ஒடனே சொல்லீரனும். இல்லைன்னா மறந்திரும்ல.

பெருமையாப் பேசுனா ஆனந்தக் கண்ணீர் வருமா? இது கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்துற மாதிரி இருக்குதே?

அறிமுகம் இல்லாதவங்க கிட்டயும் நல்லாப் பழகுறது நல்ல பழக்கந்தான். ஆனா அறிமுகம் இருக்குறவங்ககிட்ட எப்படிப் பழகுவீங்க?

கடைசி பாயிண்டு எனக்கும் லேசாப் பொருந்தும் போல இருக்குது. ஆனா ரொம்பவும் நெருங்கிய நண்பர்கள் கிட்ட எப்பவும் தொடர்பு இருக்கும்.

ஓ! என்னையும் கூப்பிட்டிருக்கீங்களா? சரி. வாரேன்.

மணிகண்டன் said...

என்னையும் கோர்த்து விட்டுட்டிங்களா?

வரிசப்படி வரேன் :)

பாலராஜன்கீதா said...

// தலைப்ப பாத்தாலே தெரியலியா நான் ரெம்ப weirdனு(தமிழ்ல என்ன?) //

வயது 250 ன்னு ப்ரொஃபைலில் பார்த்தபோதே நினைத்தேன் :-)))

சிறில் அலெக்ஸ் said...

//நெர்டுன்னும் சொல்லிக்கிறீங்க//
நெர்டில்ல wierd அப்படியே தமிழ் யுனிக்கோடுல நெஇர்ட் ஆக்கிட்டேன்

:)

ஒங்க நெஇர்ட்-ஐயும் பகிர்ந்துக்குங்க.

சிறில் அலெக்ஸ் said...

//வரிசப்படி வரேன் :) //

என்னங்க இதுலேயும் பாட்டிங் லைன் அப் பாபீங்களா.. எறங்க ஆடுங்க.

சிறில் அலெக்ஸ் said...

//வயது 250 ன்னு ப்ரொஃபைலில் பார்த்தபோதே நினைத்தேன் :-))) //

அடடா கீதா என் வயசு தெரிஞ்சுபோச்சா?
:)

Radha Sriram said...

//4. அறிமுகமில்லாத நபர்களிடம் எளிதில் பழகுறது. (weird also means that which is not common) என் நெருங்கிய நண்பர்களுகூட கேப்பாங்க 'எப்படீடான்னு'. ஒரு சின்ன ஸ்மைல்தான் முதலீடு. வாட்ச்மேன், ட்ரைவர், பால்காரர், இன்னும் யாராயிருந்தாலும் முடிந்தவரை நட்பு பாராட்டுவேன்.//

இந்த weird நல்ல weird !!

இலவசக்கொத்தனார் said...

//இண்டர்வீயுவுல கேப்பாங்க Tell me about your weeknessனு பல வருஷமா தப்பிச்சு வந்துட்டேன்//

சொல்லி இருக்க வேண்டியதுதானே! இதுக்கு என்ன பயம். நான் இங்க பப்ளிக்கா சொல்லட்டுமா?

It is the sum total of my Sundayness, Mondayness, Tuesdayness, Wednesdayness, Thursdayness, Fridayness and Saturdayness!!

வல்லிசிம்ஹன் said...

அப்போ நாம எல்லாருமே நெர்ட் தானா:-)

சிறில் அலெக்ஸ் said...

//இந்த weird நல்ல weird !!//

நன்றி ராதா.
:)

சிறில் அலெக்ஸ் said...

ஆமா கொத்ஸ்..எனக்கு spellingல நிஜமாவே week/weakness :)

குற்றம் கண்டுபிடித்தே சூப்பராய் காமெடிசெய்யும் பதிவர் நீர்தானோ..

:)

சிறில் அலெக்ஸ் said...

நெர்ட் என நான் சொல்லலீங்க...
weird என்பதை யுனிகோட்ல/தங்லிஷ்ல டைப் பண்ணிட்டென்.

Bad joke..

கார்த்திக் பிரபு said...

நல்லாயிருக்கே இந்த 5 விளையாட்டு, தொடருங்க , நமக்கும் ஒரு வாய்ப்பு வந்த்ருக்கு வந்து பாருங்க

கார்த்திக் பிரபு said...

நல்லாயிருக்கே இந்த 5 விளையாட்டு, தொடருங்க , நமக்கும் ஒரு வாய்ப்பு வந்த்ருக்கு வந்து பாருங்க

தென்றல் said...

/ஒரு சின்ன ஸ்மைல்தான் முதலீடு./

என்னங்க, இதைப்போய் weird list ல சேர்த்துட்டிங்க..
இது பெரிய விசயம்-ங்க!

இங்கதான் நம்ம மக்களே நம்மல பார்த்து ஸ்மைல் பண்றது அபூர்வமா இருக்கே!

சிறில் அலெக்ஸ் said...

கார்த்திக்,
கட்டாயம் பாக்குறேன். நீங்க ரெம்ப வியர்டா கொஞ்ச வியர்டான்னு
:)

சிறில் அலெக்ஸ் said...

//இங்கதான் நம்ம மக்களே நம்மல பார்த்து ஸ்மைல் பண்றது அபூர்வமா இருக்கே! //
அதுனாலத்தான் இது வியர்ட்.
:)

தென்றல் said...

//அதுனாலத்தான் இது வியர்ட்.
:)
//
அதனாலலாம் 'இது' வியர்ட் ஆயிடுமா என்ன?

Keep Smiling, சிரில்.. :)

SurveySan said...

Just saw this.

Weirds எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா அஞ்சு பத்தாது. :)

சீக்கிரம் ஒரு பதிவ போட்டு, இன்னும் கொஞ்சம் பேர மாட்டிவிடறேன்.

ஜோ/Joe said...

அட இது என்ன கலாட்டா!

சிறில் அலெக்ஸ் said...

ஆமா ஜோ.. கவிதா மாட்டி விட்டுட்டாங்க :)
உங்களுக்கும் சீக்கிரம் வந்துரும் ரெடியா இருங்க.
:)

Nirmala. said...

போட்டாச்சுங்க!

கவிதா | Kavitha said...

//இதுவும் பல நேரங்கள்ள ஒர்க் அவுட் ஆயிருக்குது சில நேரங்கள்ல என்ன ஒர்க்லேந்து அவுட் பண்ற லெவலுக்கு போயிருக்குது. Weird.//

ம்ம்ம்..நாங்க இவ்வளோ மோசம் இல்லன்னு நினைக்கிறேன்.. :)))))

நன்றி சிறில்- எங்களுடைய அழைப்பை ஏற்று.. பதிவிட்டதற்கு..

சிறில் அலெக்ஸ்