.

Thursday, March 15, 2007

300

வீரவரலாறுகளுக்கு உலக கலாச்சாரங்களில் பஞ்சமேயில்லை. அதிலும் பலமிழந்தவன் பலசாலியை வீழ்த்தும் கதைகள். ஹாலிவுட்டிற்கு பிடித்தமான கதைவகைகளில் முதன்மையானது இதுதான்.

2,50,000 பேர் கொண்ட பெர்ஷியர்களின்(இந்தக்கால ஈரான் பகுதி) படையை வெறும் 300பேர் மூன்று நாட்கள் தடுத்து நிறுத்தி பின்னடையச் செய்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா?

இது கிரேக்க வரலாறு. கிரேக்க புராணக்கதையல்ல.

ஸ்பார்ட்டா கிரேக்க நாட்டின் தெற்கிலுள்ள ஒரு நகரம். இங்கு பிறக்கும் ஆண்மகவின் உடல் போருக்குகந்ததா என பிறந்த சூட்டோடேயே பார்க்கப்படுகிறது. குழந்தையின் உடற்கூறு ஒவ்வாததாயிருப்பின் கீழே எலும்புக் கூடுகளோடு எலும்புக்கூடாய்ப்போக வீசி எறியப்படும்.

இப்படி ஒரு காட்சியோடு துவங்குகிறது 300 திரைப்படம். ஸ்பார்டன்களின் தீவிர இராணுவப் பயிற்சியை, ஒருபோதும் தளராமல், உயிர்போகும்வரை போராடும் குணத்தை உருவாக்கும் விதத்தை ஒரு அழகுள்ள ஆவணப் பாடமாய் காண்பிக்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து ஸ்பார்ட்டாவின் அரசனாகிறான்.

லியோனிடா. ஹெர்குலிசின் சந்ததி என நம்பப்படுகிறவன். வீரமும் ஈரமும் கொண்ட ராஜன். கடிந்துகொள்ளவும், காதலிக்கவும் தெரிந்தவன். கட்டிலிலும் ஆடைகளின்றி காதலே செய்கிறான், காமமல்ல.

வல்லமைபொருந்திய எதிரியை தடுக்க வெறும் 300 பேரோடு செல்கிறான். அடிமைகளைக் கொண்ட பெரும்படையை வீழ்த்த உணர்வுள்ள 300பேர் போதுமே?

தலைகள் உருள்கின்றன, யானைகள் மலை உச்சிகளிலிருந்து கடல்நோக்கி விழுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட நடனமாய் ஸ்பார்டன்களின் போர்த்திறம் அழகுற கண்முன் விரிகிறது. வானம் இருண்டிட வரும் அம்புக்குவியல்கள், 10 அடிக்கும் மேல் உயரமான அசுரர்கள். உயிர் பயமில்லாத எதிரிகளை வெட்டிச் சாய்க்கிறது ஸ்பார்ட்டன்களின் குறும்படை.

நடனம் தொடர்கிறது. இரத்தம், திட்டமிடப்பட்டு தெளிக்கப்படும் ஓவிய வண்ணமாய் திரையெங்கும் தெரிகிறது. வரப்புகளில் துள்ளிவரும் அழகிகளைவிடவும் மெதுவாய் ஆனால் அதே அழகோடு வெட்டப்பட்ட தலை தரையில் விழுகிறது, பின்தொடர்ந்து பாடலுடன் ஓடிவரும் நாயகனைப்போல உடல் சரிகிறது. நடனம் தொடர்கிறது.

ஏனோ வீரனைச் சரிக்க வீரன் வருவதில்லை காப்பியங்களில். துரோகமே பெரும் ஆயுதமாகிப் போகிறது. சாதித்துவிட்ட திருப்தியோடு 300பேரும் உயிரைவிடுகின்றனர். இவர்களின் கதையை கேள்விப்பட்டபின் ஸ்பார்ட்டா கொதித்தெழுக்றது. பெர்ஷியாவின் படை விரட்டியடிக்கப்படுகிறது.

பொதுவாகப் போர்களில் அரசர்களே வெற்றி பெறுகின்றனர். அவர்களைத் தெய்வங்களெனப் பாடலில் வைப்பார்கள். ஆனால் மாண்டுபோகும் வீரனின் உயிருக்கு மதிப்பிருக்காது.

300 படம் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் க்ராஃபிக்சில் எடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர்களைத் தவிர்த்து மற்றவை எல்லாம் (எல்லாம்) கணினியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் ஒரே ஒரு காட்சி மட்டுமே வெளியில் எடுக்கப்பட்டிருக்கிறது, அந்தக் காட்சியில் குதிரைகள் வருவதால்.

ஒரு காட்சியில் ஒரு பெண் காற்றில் ஆடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. நிஜத்தில் அந்தப்பெண் நீர்த்தொட்டி ஒன்றில் ஆடியதை படம் பிடித்து அப்படிச் செய்திருக்கிறார்கள். 60 நாள் படப் பிடிப்பு ஒரு வருட தயாரிப்பு.

கால்கள் துண்டிக்கப்பட்டு காற்றில் பறப்பதாயிருக்கட்டும், பிணங்களைக் கலவையாக்கி கட்டப்பட்ட சுவராயிருக்கட்டும், கட்டிலில் முலை தெரியப் பகிரும் அன்பாயிருக்கட்டும், காட்சிகள் அழகுற விரிகின்றன.

இரத்தம் ஆறாய் ஓட, தலைகளும் தசைகளும் சிதற, ஓலங்களும் கூச்சல்களும் எங்கும் நிறைய, காற்றும் நிலமும் சிவப்பாக, நுனிகளில் இரத்தமும் சதையும்தோய்ந்த ஆயுதங்கள் பழக, தூரத்தில் நரிகளும் வானத்தில் வல்லூறுகளும் நாக்கைச் சப்பிக்கொண்டிருக்க, உறுப்பிழந்த உடல்களும் உடலிழந்த உறுப்புக்களும் துடிதுடிக்க கிடக்கின்ற போர்க்காட்சியொன்றை இவ்வளவு அழகாகக் காண்பிக்கத்தான் வேண்டுமா?

15 comments:

G.Ragavan said...

நான் இன்னமும் படம் பார்க்கலை. கண்டிப்பா பாக்கனும். ஆனா அதுல ஈரானியர்களைக் கெட்டவங்களா காட்டியிருக்காங்களாமே. அது சரி...கட்டபொம்மன், மருதுபாண்டியர் பத்திப் படமெடுத்தா வெள்ளைக்காரனை வில்லனாத்தான காட்டனும்.

Appaavi said...

நல்ல விமர்சனம்... டிரெய்லர் பார்த்ததிலிருந்தே படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

Appaavi said...

Naan thaan firsta...

செல்லி said...

//பொதுவாகப் போர்களில் அரசர்களே வெற்றி பெறுகின்றனர். அவர்களைத் தெய்வங்களெனப் பாடலில் வைப்பார்கள். ஆனால் மாண்டுபோகும் வீரனின் உயிருக்கு மதிப்பிருக்காது. //
முற்றிலும் உண்மை. மாண்ட வீரனின் உயிர்த் தியாகம் நினைத்துப் பார்க்கப்படுவதே இல்லை,

நல்ல விமர்சனம். பகிர்ந்தமைக்கு நன்றி.
அன்புடன்
செல்லி

Radha Sriram said...

கண்டிப்ப இந்த படத்த பாக்கணும் சிரில், என் லிஸ்ட் நீண்டுகிட்டே இருக்கு எப்பதான் எல்லாத்தையும் பாத்து முடிக்க போரேனோ தெரியல??
நடுவுல இந்த world cup வேர :)

அப்பாவி உங்க லோகோ சூப்பர்!!!

சிறில் அலெக்ஸ் said...

ஜி.ரா,
படம் பார்க்கலாம் டெக்னிக்கலா நல்லாயிருக்கு, நடிப்பும் நல்லாயிருக்கு. கதை என ஒன்றும் பெரிதாய் இல்லை.

//ஆனா அதுல ஈரானியர்களைக் கெட்டவங்களா காட்டியிருக்காங்களாமே.//

கேள்விக்கு உங்கள் விடைதான் என்னதும் :)

சிறில் அலெக்ஸ் said...

அப்பாவி.
புது லோகோவெல்லாம் போட்டு கலக்குறீங்க.

படம் பாருங்க..

சிறில் அலெக்ஸ் said...

செல்லி,
பாராட்டுக்கு ரெம்ப நன்றி.

தென்றல் said...

நல்ல விமர்சனம்...

என் பொண்ணை கூட்டிடு போய் பார்க்க முடியாதே? ம்ம்ம்.. அப்ப DVD-ல தான் பார்க்கணும்.

//
300 படம் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் க்ராஃபிக்சில் எடுக்கப்பட்டிருக்கிறது.
//
Time-ல next generation of movie making-னு படிச்சதா நினைவு!

நன்றி!

பொன்ஸ்~~Poorna said...

அதுக்குள்ள முன்னூறாவது பதிவா?!!! ன்னு ஆச்சரியத்தோட ஓடிவந்தேன். கார்ட்டூன் இல்லாத இங்கிலீஸ் படமா.. அப்பால வந்து பார்க்கிறேன் :-D

ப்ரசன்னா (குறைகுடம்) said...

"Sin City" - Frank Millerன் பெயரை பார்த்தவுடனேயே படம் பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் விமர்சனம் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. பதிவுக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

Cyril,

Thanks for the review ! Let me see the movie.

சிறில் அலெக்ஸ் said...

தென்றல்,
நிச்சயமா குழந்தைகளை அழத்துச் செல்ல முடியாது. R Rating வேற.

Time கட்டுரையைப் படித்துதான் பார்க்கப்போனேன். Sin City கொஞ்சம் பிடித்திருந்தது (Sky Captain கூடப் பிடித்திருந்தது) அதை விட இது இன்னும் (பார்க்க) நல்லா இருக்குது.

பாராட்டுக்கு நன்றி.

Appaavi said...

//அப்பாவி உங்க லோகோ சூப்பர்!!! //

Thanks RadhaSriram!

//நடுவுல இந்த world cup வேர :)//

அதை பார்பதை விட பார்க்காமல் இருப்பதே மேல்!

Even with Bangaldesh we're struggling with (4 wickets; 34.5 overs) 115 runs...ச்ற்று முன் கிடைத்த தகவலின் படி

Appaavi said...

//அப்பாவி.புது லோகோவெல்லாம் போட்டு கலக்குறீங்க. //

hee... heee... Birthday Special :-)

சிறில் அலெக்ஸ்