வரவர வார்த்தைக்குப் பஞ்சமாயிடுச்சு. ஆறு வார்த்தை கதைகள்.
நிலவை அடைந்தோம். திரும்பிப் பார்த்தேன். உலகம் உருண்டைதான்.
எட்டுப்பட்டி கிராமம். ஆலமரத்தடி கூட்டம். தூக்கில் நாட்டாமை.
.E.D.E.N. விண்கலம் தரையிறங்கியது. ஆதாம் ஏவாள் வெளிவந்தனர்.
'டேய் விடுடா விடுடா'
'இருடீ'
'துரோகி விடுடா'
கால எந்திரம். தவறான கட்டளை. 'நாளையை சென்றடை'.
'அம்மா'
'மகனே!'
'போரில் தோற்றுவிட்டேனம்மா'
'என்ன?'
'அம்மா...!'
போரில் மரணம். நெஞ்சில் தோட்டா. அம்மா அழுகிறாள்.
வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. சிவப்பாய் என்னது?
இன்னொரு வெர்ஷன்
வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. செந்நீர் பாய்ந்தது.
Sunday, March 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சிறில் அலெக்ஸ்
13 comments:
கற்பனை கரை புரண்டு ஓடுதுங்களே :) தூக்கில் நாட்டாமை கதை எனக்குப் பிடித்தது.
இது போல சுஜாதா ஒரு தடவை அஞ்சல் அட்டைல போட்டிக்கு அனுப்பச் சொன்னார்..
வார்த்தைகள ரொம்ப சுருக்கிட்டதால கதைகள், கவிதைகளாகவும் தெரியுது.
வேணும்னா, சில கதைகளை ஹைக்கூவாவும் மாத்திக்கலாம்.
எஞ்சாய் பண்ணுங்க சிரில்.
நன்றி ரவிஷங்கர்.
:)
//இது போல சுஜாதா ஒரு தடவை அஞ்சல் அட்டைல போட்டிக்கு அனுப்பச் சொன்னார்.. //
அப்பெல்லாம் நான் வெறும் லெட்டர்தான் எழுதிட்டிருந்தேன் :)
யாழினி அத்தன்,
பாராட்டுக்கு ரெம்ப நன்றி.
நீங்களும் எஞ்சாய் பண்ணுங்க.
6 வார்த்தை கதைக்கு 6 பின்னூட்டம் கூட வரவில்லையே.. ஐயகோ.
ஈ - தமிழ்: Six Word Stories
பினாத்தல்கள்: ஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி (22 Jul 2006)
மிகவும் புதிய முயற்சி. நன்றாக வந்திருக்கிறது. கவிதைக்கும் கதைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சி. முதலில் அப்படித்தானே இருந்தது. காப்பியங்கள் கவிதைகளாகத்தானே வந்தன. பிறகுதானே உரை வடிவம். முயற்சி அனைத்தும் ரசித்தேன்.
நன்றி பாபா. முன்னமே படிச்சிருக்கேன்.
//
எட்டுப்பட்டி கிராமம். ஆலமரத்தடி கூட்டம். தூக்கில் நாட்டாமை.
'அம்மா'
'மகனே!'
'போரில் தோற்றுவிட்டேனம்மா'
'என்ன?'
'அம்மா...!'
//
அருமை! சுஜாதா-வுக்கு அனுப்புனிங்களா?
அமெரிக்க கடிகாரங்களில் மாற்றம். இதனாலோ தமிழ்மணத்தில் பிரச்சனை?
தென்றல்.. பாராட்டுக்கு நன்றி.
:)
இலவசம்,
6 வார்த்தையுல இப்படி ஒரு சோகக் கதைய சொல்வீங்கன்னு எதிர்பார்க்கல.
:))
6 கேட்டேன் 12 வந்துடுச்சு :)
Post a Comment