.

Monday, March 26, 2007

கிரிக்கமெண்ட்ஸ் = கிரிக்கெட் + கமெண்ட்ஸ்

உலகக் கோப்பை பற்றிய கசப்பான நினைவுகளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போதே நம் பதிவர்காள் தொடர்ந்து 'சற்றுமுன்னில்' விட்டுக்கொண்டு வந்த பின்னூட்டங்களில் சுவாரஸ்யமானவை சிலவற்றை கீழே தொகுத்துள்ளேன். சற்றுமுன் குழு இதை சிறப்பாக செய்திருந்தது. ஏதோ பதிவர்கள் எல்லாருமே சேர்ந்து மேட்ச் பாத்ததுபோல அமைந்திருந்தது. Over to கிரிக்கமெண்ட்ஸ்.

sksanu said...
191க்கு இந்தியா ஆல் அவுட்!என்னத்தெ சொல்றது.இவங்களையெல்லாம் சக்கரைத் தண்ணியத் தெளிச்சு எறும்புப் புத்திலெ தூக்கிப்போடணும்.

ஜோ / Joe said...
கிரிக்கெட் கடவுள் 26 பந்துகளில் 7 ரன் ,பங்களாதேஷுக்கு எதிரே .ஹும்.பொதுவா இந்தியா செத்த பாம்பை நல்லா அடிப்பாங்க .ஆனா இங்கே பங்களாதேஷ் செத்த பாம்பு இல்லை போலிருக்கு.

தம்பி said...
நம்ம பொழப்புதான் சிரிப்பா சிரிக்குதுன்னா அங்க பாகிஸ்தான் பொழப்பு குய்யோ முறையோ அழுவுது. என்ன நடக்குதுன்னே தெரில

bangalorean said...
வருத்தமான செய்தி : பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிவாஜிநகர் பக்கம் அதிகமான போக்குவரத்து நெருக்கடி. பங்களாதேஷ் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும்போதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இருக்கிறோமா என்றே சந்தேகம் :(

ஆன்லைன் ஆவிகள் said...
ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

தென்றல் said...
பங்களாதேஷ்: 60/1/(11 ஓவர்;5.45RR)/ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் .../ஏங்க... இருக்கிற tension பத்தாது-னு....

சிறில் அலெக்ஸ் said...
Bangladesh 54-1 these guys are playing great. hitting easy boundries. Sixes, yes I said sixes.Pathetic.We will face Pakistan's fate against West Indies, only it is Bangladesh.

icarus prakash said...
தமீம் நாலும் ஆறுமாக விளாசுகிறார். CRR : 5.5. சான்ஸே இல்லை... எல்லாரும் டீவியை ஆஃப் பண்ணிட்டுப் போய் படுங்க,.

தம்பி said...
Patel to Iqbal, THATS OUT!! Caught!!

icarus prakash said...
இருந்தாலும் டவுட்டுதான்..... அடுத்த அஞ்சு ஓவருக்குள்ளே இன்னும் ரெண்டு மூணு விக்கெட் எடுத்தா சான்ஸ் இருக்கு

icarus prakash said...
ச்சேஎ... கேவலமான டிராப்..., தோனி கொஞ்சம் ஒழுங்கா விளையாடுப்பா

cricket said...
prakash: what do you think abt paki innings

icarus prakash said...
i was shocked , to say the least

cricket said...
impossible : victory is far away. current runrate is about 5+ runs a over and bangladesh looks very possitive

cricket said...
gonna sleep now. there is no point in watching the match. waste of time

தம்பி said...
//பங்களாதேஷ் இந்தியாவிற்கு நல்லதொரு சுண்ணாம்பு தடவி வீட்டிற்கு அனுப்ப பார்க்கறாங்க...//யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!

Anonymous said...
// தம்பி யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!//உண்மைய சொன்னா ஏன் கோபப்படுறீங்கனு புரியல...

bangalorean said...
Holy crap :( i stay near muslims area. lots of crackers :( when ever 4 was hit by bangladesh ashamed

தம்பி said...
நாளைக்கு தினத்தந்தி நியூஸ்.பயந்து பம்மிய இந்தியாபாய்ந்து குதறிய பங்களாதேஷ்

Vicky said...
// kadavuLE ipadiye pochunna chance irukku

Dravid: இன்னுமா இவங்க நம்மள நம்பறாங்க
Zaheer: அது அவங்க தலைவிதி தல

சிறில் அலெக்ஸ் said...
Another good boundry..Who is the underdog hereoh make it two.Bangladesh Sure to win.:)India is the new Bangladesh.

Radha Sriram said...
how cruel can you get??! (no smiley!)

Anonymous said...
saga pora nerathula sankara sankara ... oru wicket pochchu

சிறில் அலெக்ஸ் said...
17 from 46 balls. 5 wickets down.Is there hope?

Anonymous said...
ungalukku paiththiyama ? hopes ?? :))

Anonymous said...
tai kannadi potta kunda ippo santhoshama??? :(

(மேலுள்ள கமெண்ட் எனக்கு - :))

"வற்றாயிருப்பு" சுந்தர் said...
இந்த வாணவேடிக்கையை பங்களாதேஷ்கிட்ட காட்டிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!யுவா விக்கெட் விழுந்த அடுத்த பந்துல டெண்டுல்கள் ஒரு 4. அப்றம் 1. 396 ஆயிடுச்சு. 400 உறுதி.

சிறில் அலெக்ஸ் said...
இன்றைக்கு மழை வரப் போவுதுங்க.இந்தியா சூப்பர் 8 போறது ரெம்ப சந்தேகம்.. என்னை நீங்க சபிச்சாலும் பரவாயில்ல.ஒரு பெட்டிங் வச்சுக்கலாமா?:)

மணிகண்டன் said...
ரெண்டு முறை LBW ஆகி, மூன்றாவதாக பேட் செய்ய கிடைத்த வாய்ப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஜெயசூரியா. நல்லாயிருங்க அம்பையர்ஸ்.

சிவபாலன் said...
சிறில்என்ன இப்படி டென்சன் ஏத்திறீங்க.. நம்ம ஆளுங்க இன்னை தோத்துட்டா .. அவ்வளவுதான்.. :)

மணிகண்டன் said...
எனக்கென்னவோ அப்பையர்களையும் சேர்த்து இலங்கைக்கு 13 பேர் ஆடறாங்களோன்னு தோனுது.அம்பையர் ஹார்ப்பர் டவுன் டவுன்!

சிறில் அலெக்ஸ் said...
அங்க பெவிலியன்ல நம்ம க்ரெக் சாப்பல் கழுத்த தடவிகிட்டு உக்காந்துகிட்டிருக்காராம்.:))

மணிகண்டன் said...
//சிபா,என்ன கேள்வி இது. பங்களாதேஷ் கிட்ட அந்த அடி அடிச்சிட்டு அடுத்த மேட்சல இப்படி யாராவது தடவுவாங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவிங்க சி.பா //

சந்தோஷ்,
நீங்க சொல்றது படி பார்த்தா ஒரு அணி தடவிகிட்டே தான் இருக்கனும், இல்லை அடிச்சிகிட்டே தான் இருக்கனும். எந்த டீமும் ஒரு நாள் ஆடின மாதிரி இன்னொரு நாளும் ஆட முடியாது. அப்படி ஆடினா அவங்க வின்னிங் % 100 இருக்கனும். ஆஸ்திரேலியாவொட வின்னிங் % கூட கிட்டத்தட்ட 63% கிட்ட தான். இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? (உங்களைன்னு சொல்லலை பொதுவா ஃபிக்ஸிங்னு சொல்ற எல்லாருக்கும் சொல்றேன்)

சிறில் அலெக்ஸ் said...
//இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? //க்ரெக் சசப்பலின் நிலமை என்னவாகும்ணு தெரியவேண்டாமா?க்ரிக்கெட்ட பொறுத்தவரைக்கும் நீங்க தீவிர பக்தர் நான் நாத்திகன் ஆயிட்டேன்.:)

VSK said...
Dravid's gamble with Ganguly paid off!!Sanggakara out caugt Patel bowled BT[Bengal Tiger]:))

சிறில் அலெக்ஸ் said...
//Dravid's gamble with Ganguly paid off!!//some one agrees it is all Gamble.:)

Boston Bala said...
---இந்தியாவிற்க்கு முதல் மாட்ச் அவுஸ்திரேலியாவோ, தென்னாபிரிக்காவோதான். ---இந்த மேட்சையே பிக்ஸ் செய்யறப்போ, அடுத்த ஆட்டத்தையும் 'வாங்கிடலாமே' ;))

Anonymous said...
எப்படியும் இலங்கையைத் தோற்கடித்து இலங்கைக்கு அனுப்பி வைக்கவும்.தமிழனைக் கொல்லும் நாடு வெற்றியடையக் கூடாது.ஒரு இலங்கைத் தமிழன்

VSK said...
இங்கே இருக்கறவங்க[பின்னூட்டம் போடறவங்க] எல்லாரும் இது மேட்ச் ஃபிக்ஸிங்னு முடிவு பண்ணிகிட்டு பின்னூட்டம் போடற மாதிரி இருக்கு.இது நல்லால்லே!சொல்லிட்டேன்!இந்தியா மேலியும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கப்பா!தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!:))

Boston Bala said...
---தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!---அதானே.. நானும் இதையேத்தான் சொல்றேன் :Pஎன்ன திறமை என்பதில்தான் இரு அணியினரும் வேறுபடறாங்க ;)

சந்தோஷ் aka Santhosh said...
//Depending on spinners at the 47th over??What the hell is Dravid thinking?bad.... very baaaad!//டென்ஷன் ஆகாதிங்க SK. அவங்களும் எம்முட்டு நேரம் தான் நல்லா விளையாடாத மாதிரி நடிக்க முடியும் சொல்லிங்க. அவங்களை அடிங்கடா அடிங்கடான்னு சொல்லி நம்ம ஆளுங்க பவுலிங் போட்டா அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லுங்க.

Boston Bala said...
---Depending on spinners at the 47th over??What the hell is Dravid thinking?---அதே... அதே! அகர்கர் எதற்கு இருக்கிறார்?அவர்தானே ரன் தானம் தரவேண்டும் ;)

மணிகண்டன் said...
Good competitive score. chances are 50-50. For match fixers 100-0 in favour of India :)

தமிழ்பித்தன் said...
//இம்முட்டு அடிச்சா அப்புறம் இந்தியா எப்படி ஜெயிக்கிறது. ஒரு வேளை அவ்வுளவு அடிச்சா bermuda bowlers வந்து பவுலிங்க் போடுவாங்களோ?//நானும் இதைத்தான் நினைத்தேன் அவர் கேட்டுட்டார் ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம் இலங்கையரின் பந்தா அல்லது இந்தியரின் பட்டா என்று?

அவந்திகா said...
:-)))..காலையில இருந்து 3 தடவை trial toss போட்டு பார்த்து வின் பண்ணேன்so கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம்

icarus prakash said...
அப்படிப் பார்த்தா டாஸ் கூட நாமதான் கெலிச்சோம்... சூப்பர் எட்டுக்கு நேராப் போய்டலாமா? :-)

மணிகண்டன் said...
Looks like good solid start by India..keep up the good work India!

மணிகண்டன் said...
கமெண்ட் போட்ட நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்..உத்தப்பா அவுட்.

Boston Bala said...
ஏன் இந்தியா கெலிக்கும்1. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள். ராகு காலத்திலோ எம கண்டத்திலோ துர்கா சன்னதியில் கூட்டம் அள்ளும். அவ்வளவு கடாட்சமும் இந்தியா மேல் படுவதால்...2. சேவாக் 5000 ஓட்டங்களைத் தாண்டுவதால்...3. இந்த வருடம் இளவேனிற் பருவம் பிறந்த பிறகு இந்தியா தோற்கவே இல்லை என்பதால்...

Boston Bala said...
---நம்ம அணியை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க..---சித்து சொன்னது: 'விக்கெட் என்பது வீட்டுக்கரசியைப் போல; எப்போது எப்படி திரும்பும் என்று சொல்லவே முடியாது'

சந்தோஷ் aka Santhosh said...
ஆட்டம் அங்க சூடு குறையுது. பாபா இங்க பட்டையை கிளப்புறாரு. :)).

சிறில் அலெக்ஸ் said...
மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..:)

சந்தோஷ் aka Santhosh said...
//மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..:)//அலெக்ஸ் அவங்களும் எம்முட்டுடோ டிரை பண்றாங்க பவுலிங்கை சுமாரா போட முடியலை அவங்களுக்கு நல்லா போட்டே பழக்கமாயிடிச்சி.


சிவபாலன் said...
சாப்பலின் கழுத்து காலி.. டிராவிட்டின் கடைசி போட்டி..கேப்டனாக..அட போங்கப்பா..இன்ன நோ கமன்ட்ஸ்.. இந்தியா ஜெயித்தா வருவேன்..


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(போலி)செய்தி: சேப்பல் ஓட்டம். விமானத்தின் இறக்கையை பிடித்துக்கொண்டு பறந்தார்.


சிறில் அலெக்ஸ் said...
குங்குமம் இந்த வாரம்: சேப்பலின் கழுத்து தப்புமா? கேட்கிறார் மேட்ச் ஃபிக்ஸ் செய்பவர்.சச்சினுக்கு முட்டை பிடிக்கும். ஸ்கோர் கீப்பர் சுவாஇயான பேட்டி.பெர்முடாவிடம் ஜெயித்தது எப்படி? கணிக்கிறார் ஜோதிடத்திலகம் சுந்தரம்


-L-L-D-a-s-u said...
கை அரிக்குது .. அடுத்து எங்கே பின் ஊட்டம் இடுறது ..மணிகண்டா, போஸ்ட மாத்து


சந்தோஷ் aka Santhosh said...
Commentator "Terrific batsman Shewag".shewag "இப்படி ஏத்தி விட்டு உடம்பை ரணகளம் ஆக்குறதே இவனுங்களுக்கு வேலையாப்போச்சி"காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:1. மணிகண்டன்.2. SK3.Icarus prakash


ரவிசங்கர் said...
44 comments..பட்டைய கிளப்பும் போல இருக்கே சற்றுமுன் updates ! live commentary மாதிரி மக்கள் பின்னூட்டத்தில் பூந்து விளையாடுகிறார்கள் !!


-L-L-D-a-s-u said...
குரங்கு ராதாவுக்கு தூக்க மாத்திரை கொடுக்க ஐ.சி.சி பரிந்துரை


சிறில் அலெக்ஸ் said...
டி. ராஜேந்தர் திடீர் பேட்டி

என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை

தங்கச்சி அழாதம்மா..அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.

பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?

மணிகண்டன் said...
எப்பா யாராவது ஷேவாக்குக்கு பேட்டை கீழே வச்சுகிட்டே ஓட கத்துக்குடுங்கப்பா


மணிகண்டன் said...
//how can we watch this match live? //why do you want to watch this match live?


சிறில் அலெக்ஸ் said...
//மக்களே மனசை தளர விடாதிங்க. நமக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு. bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும். //சந்தோஷ்.. என்னது இது.. நம்பிக்கை நாயகமா நீங்க..சைட் பெட்டிங் இந்தியா 200 தாண்டாது..


சிறில் அலெக்ஸ் said...
//Amit is not flustered. "There is hope. No more wickets till we reach 200 and all will be good.Have faith. India will win.from cricinfo //Amit is a match fixer from Mumbaifrom satrumun(fake) news.


சிறில் அலெக்ஸ் said...
கவுண்டமணி: டேய் என்னடா டி.வி முன்னால உக்காந்துகிட்டு அழுதுட்டிருக்கீங்க. காந்தி செத்து பல வருசம் ஆவுதேடா?வடிவேலு: அண்ணே வேணாம் சிரிச்சுருவேன்.. வேணாம்.


சந்தோஷ் aka Santhosh said...
தோனி "ஏற்கனவே விட்டை ஒடச்சிட்டாங்க இப்ப என்ன உடைக்கப்போறாங்களோ தெரியலையே?"அப்படிங்கிற கவலையோட போறாரு.


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(Faking news) தோனி வீடு காலி செய்யப்பட்டது.. காலின்னா 'காலி'


சந்தோஷ் aka Santhosh said...
இந்த கமெண்டேட்டருங்க அடிக்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. போன drinks breakல போயி டிராவிட்டே துணியெல்லாம் pack பண்ணி எடுத்து வெச்சிட்டாரு. இந்த commentators ஜெயிச்சிடுவாங்கன்னு இன்னும் செல்லிட்டு இருக்காங்க.


சந்தோஷ் aka Santhosh said...
எனக்கு தெரிஞ்சி உத்தப்பாவோட பேரை மாத்தினா சரியாப்போயிடும்மு நினைக்கிறேன். எல்லாரும் அவரோட பேரை ஊத்தப்பா ஊத்தப்பான்னு சொல்றாங்க அதனால அவரு விளையாடுற மேட்சு எல்லாம் ஊத்திகிதோ? பேரை மாத்து பேரை மாத்து.


அவந்திகா said...
''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''இது என்னமோ அம்மா சொல்லீட்டு சிரிச்சாங்க..எழுதி வாங்கீட்டு வந்து டைப் பன்ணி இருக்கேன்..உங்களுக்கு புரிஞ்சா சிரிங்கஇப்ப இதுக்கு meaning கேட்டா அடிக்க வந்துடுவாங்க


சந்தோஷ் aka Santhosh said...
//நாமக்கட்டி விலை குறையும்//-- தினமலர் செய்தி.இதுக்கும் மேட்சுக்கு எந்த சம்மந்தமும் இல்ல சாமி.


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(Faking news) சச்சினின் டூத் ப்ரஷ் காணவில்லை. வீட்டுக்கு பொருட்களை அடுக்கி வைக்கும்போதூ தேடினார். 'ஊத்த'ப்பாவை சந்தேகிக்கிறார்கள்.


அவந்திகா said...
Anna even if India looses..SATRUMUN has won...everyday it strikes a centuryCONGRAAAAAAAATS SATRUMUN..:--)))....


சிறில் அலெக்ஸ் said...
பஞ்ச் லைன்ஸ்:

ரஜினி: நான் ஒரு ரன் எடுத்தா நூறு ரன் எடுத்தது மாதிரி.
கமல்: அவன நிறுத்தச் சொல்லு.. சும்மா விக்கட் எடுத்துகிட்டே இருக்கானே அவன நிறூத்தச் சொல்லு.
விஜயகாந்த்: தெருவுல வெளயாடிட்டு டீமுக்கு வர்றவனுக்குத்தான் தெரியும் சும்மா ரெக்கமெண்டேசன்ல வந்தவனுக்கெல்லாம் இப்படிதான்.
சத்யராஜ்: அட கிரிக்கட்டையே புரிஞ்சிக்கமாட்டீங்குறீங்களே.. அவுட்டு அவுட்டு(தகடு தகடு ஸ்டைல்ல).
வடிவேலு: இத்தன விக்கட் விழுந்தும் நின்னு 4 அடிக்கிறாரே இவரு எவ்வளோ நல்லவருடா.:))

கவிதா said...
Boost is the secret of our Energy !!!


Anonymous said...
இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?



சற்றுமுன்னின் முயற்சியில் பங்கெடுத்த பதிவர்களுக்கும் அனானிகளுக்கும் நன்றி . இந்த முயற்சியை துவக்கியவர் சற்றுமுன் உறுப்பினர் பதிவர் சிந்தாநதி. பாராட்டுக்கள்.

அப்டியே போய் நம்ம மனிகண்டன் விரக்தில ஒரு பதிவு போட்டு கலாஞ்சிருக்காரு படியுங்க.
அப்படி என்ன தாண்டா பேசுவீங்க?

.

10 comments:

ஆதிபகவன் said...

மாட்ச்சைவிட இந்த பின்னூட்டங்கள் அருமையாவே இருக்கு:)))))))

மணிகண்டன் said...

கலக்கிட்டிங்க சிறில்.

அப்போ இருந்த மனநிலைல எழுதுன கமெண்ட்ஸையெல்லாம் இப்போ படிக்கும் பொழுது வர சிரிப்பை அடக்க முடியலை.

Great Work!!!

Radha Sriram said...

உங்க ராஜேந்தர் ஜோக்கெல்லாம் இப்பதான் படிக்கரேன்......!!!

ஹ்ம்....எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டிய டையலாக்ஸ்!!

SurveySan said...

இவ்ளோ மேட்டர் நடந்திருக்கா. கவனிக்காம போயிட்டேனே. ரெண்டு வார பி.ஸில நேரமில்லாம போயிடுத்து.

அது சரி, டாப் 8ல இருக்கர டீம்ல எதுக்காவது, food poison ஆச்சுன்னா, நம்மள திரும்ப சேத்துப்பாங்களா?

சிறில் அலெக்ஸ் said...

//
ஆதிபகவன் said...
மாட்ச்சைவிட இந்த பின்னூட்டங்கள் அருமையாவே இருக்கு:)))))))
//

உண்மை.. நல்ல எஞ்சாய் பண்ணோமே... நீங்களும்தான்
:)

சிறில் அலெக்ஸ் said...

நன்றி மணி.

உண்மையிலேயே திரும்ப கமெண்ட்ட படிக்கும்போது ஜாலியா இருந்துச்சு... அதான் பதிச்சுட்டேன்.

:))

சிறில் அலெக்ஸ் said...

/ஹ்ம்....எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டிய டையலாக்ஸ்!! //

:))
விவேக் மாதிரி ஆயிட்டோமே... தனியா பொலம்பவிட்டுட்டாங்களே.

:)

சிறில் அலெக்ஸ் said...

/ SurveySan said...
இவ்ளோ மேட்டர் நடந்திருக்கா. கவனிக்காம போயிட்டேனே. ரெண்டு வார பி.ஸில நேரமில்லாம போயிடுத்து.//

சர்வே..
ரெம்ப நல்லாயிருந்துச்சு. மிஸ் பண்ணிட்டீங்க

//அது சரி, டாப் 8ல இருக்கர டீம்ல எதுக்காவது, food poison ஆச்சுன்னா, நம்மள திரும்ப சேத்துப்பாங்களா?
//

ஏன்? குண்டு வச்சு கொன்னுட்டா நம்மள சேத்துக்குவாங்களான்னு கேளுங்களேன்.

:))

மணிகண்டன் said...

//அது சரி, டாப் 8ல இருக்கர டீம்ல எதுக்காவது, food poison ஆச்சுன்னா, நம்மள திரும்ப சேத்துப்பாங்களா?

//

சர்வேசா , ஏன்யா இந்த கொல வெறி. நாங்கள்ளாம் இப்பத்தான் கொஞ்சம் நார்மலுக்கு வந்திருக்கோம். திரும்ப எரிச்சலை கிளப்பாதப்பா.

-L-L-D-a-s-u said...

சிறில் ,

நண்பர்களோடு கமெண்டுகள் அடித்துகொண்டே கிரிக்கெட் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று!! அதே அனுபவம் சற்றுமுன் மூலம் கிடைத்தது . இந்த சந்தோஷம் அல்ப ஆயுசில் போனதுதான் ரொம்ப ஏமாற்றமாய் உள்ளது ..

கிரிக்கெட்டும் விஜய்காந்த் படம் மாதிரி. கூட்டத்தோடு பார்க்க சுவையாயிருக்கும் . விஜய்காந்த் படத்துக்கு தொட்டுக்க பீரும் இருந்தால் இன்னும் டேஸ்டா இருக்கும் .

சிறில் அலெக்ஸ்